15 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் -21

கடந்த மூன்று வாரங்களாக சிங்கபூரில் இருந்தேன். சிங்கபூர் எனக்கு சொந்த ஊர் மாதிரி அங்கு சென்றால் எனக்கு எந்த செலவும் இல்லை. பயண செலவுகளை தவிர்த்து அனைத்தும் நண்பர்கள் பார்த்துகொள்வார்கள். அங்கு கணேசன் அண்ணன் வீட்டில்தான் தங்குவேன். என்னை பொறுத்தவரை அது என் சொந்த அண்ணன் வீடு, அங்கு எப்போது சென்றாலும் நான் அங்குதான் தங்குவேன். கணேசன் அண்ணனின் பெண் சுஜனி எனக்கு வளர்ப்பு குழந்தை மாதிரி ஒன்றரை வயதில் இருந்து அதனை நான் பார்த்திருக்கிறேன். இப்போது மிகசிறந்த அறிவும், அன்பும் கொண்ட சுஜனி இப்போதும் எனக்கு நான்கு வயது குழந்தை மாதிரிதான். அண்ணனும் அண்ணியும் என் மேல் கொண்ட அன்பு அளவிட முடியாத ஒன்று. நான் சிரமப்பட்ட காலங்களில் இவர்களின் அன்பு மறக்கமுடியாதது. இந்தமுறை தினேஷ், மற்றும் தென்றல் இருவரின் அறிமுகம் அண்ணன் வீட்டில் கிடைத்தது, தம்பிகள் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்தமுறை கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் சிங்கப்பூர் சென்றேன். அங்கு தற்போது என் பழைய நிறைய நண்பர்கள் ஊருக்கு வந்துவிட்டதால் சற்று போரடிக்க செய்தது, நண்பரும் நடிகருமான சிங்கப்பூர் துரைராஜ் "நான் அவனில்லை" இரண்டாம் பாகத்தில் நடிக்க ஊருக்கு வந்துவிட்டார், அதனால் அவரும் இல்லாததால் சற்று சீக்கிரமே ஊருக்கு வந்துவிட்டேன்.

சிங்கப்பூர் வழக்கமான ஊராக இல்லை, இந்தமுறை வெயில் போட்டு தாக்கியது, வியாபாரம் எங்கும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. மலேசியாவுடன் ஒப்பிட்டால் சிங்கப்பூர் இந்த பொருளாதார பின்னைடைவால் சற்று பாதிக்கபட்டுதான் உள்ளது, அதனால் சிங்கபூரில் ஒரு உணவகம் துவக்கும் முடிவில்தான் சென்றோம், ஆனால் மலேசியாவில் துவக்கலாம் என முடிவு செய்தோம்.

மலேசியா சற்று மாறியிருக்கிறது அதன் சற்று வெகுளித்தனம் கலந்த முரட்டு மக்கள் பணத்தின் தேவையும், வெளிநாட்டு மக்களின் அருமையும் உணர்ந்து நிறைய மாறியிருக்கின்றனர். அவர்கள் முன்பெல்லாம் ஏதாவது கேட்டால் அலட்சியமாக பதில் சொல்வார்கள், ஆனால் இப்போது சிங்கபூரர்கள் மாதிரி பணிவாக பேசுகிறார்கள்.

நான் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் சிங்கபூர்தான் ஏதாவது ஒரு வழியில் என் அடுத்த பாதையை காட்டும், அவ்வகையில் இந்தமுறை சிங்கபூரின் "Harbridge Edu College" ன் இந்திய முகவராக ஒப்பந்தம் போட்டோம், ஒரு வகையில் அதன் இந்திய பிரநிதி நான்தான், எனவே இனி சிங்கபூரில் படிக்கவேண்டும் எனில் என்னை அனுகலாம்.

சிங்கப்பூரில் என் அனுபவங்கள் மிகவும் அற்புதமானவை அதனை இப்போது என்னால் மிக விபரமாக எழுத முடியவில்லை, இந்த தொடரை புத்தகமாக வெளியிட என் நண்பரும் அண்ணனும் ஆன காந்தி அண்ணன் அனுமதி கேட்டுள்ளார், இந்த தொடர் முடிந்தவுடன் தமிழ்குறிஞ்சி அனுமதியுடன் நிறைய பகுதிகளை மீண்டும் திருத்தி வெளியிடலாம் என்றிருக்கிறேன், ஏனென்றால் இந்த தொகுப்பில் நான் சொன்னவை இருபது சதவீதம் மட்டுமே மீதம் என்பது சதவீதம் நாகரீகம் கருதி, மற்றவர் மனது புண்படக்கூடாது என்பதற்காக எழுதவில்லை. அவற்றில் முடிந்தவரை பலவற்றை சேர்க்க முயற்சி செய்கிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

1 கருத்து:

தமிழ். சரவணன் சொன்னது…

நானே தங்கள் சிங்கப்பூர் பயணத்தை கேட்டகலாம் என்று நினைத்தேன்... அதற்குள் தாங்களே வெளியிட்டுவிட்டிர்கள்,,,