20 செப்., 2010

தீராக்காதல் - 5 - கீதாஞ்சலி.....

அன்று இரவோடு என் கதை முடிந்திருந்தால், இந்த கதையை நீங்கள் படிக்க நேர்ந்திருக்காது.. என் செய்ய உங்கள் தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்.


காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான். 


அன்று அத்தான் வந்து என்னை எழுப்பி,

/என்ன மாப்புளே இந்த நேரத்துலே/ என்றார்.. 

அவரை பார்த்ததும் நான் அழுதேன், /

என்னடா முட்டாளா நீ/ 

எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம் சிலபேர் முன்னாடி, சிலபேர் பின்னாடி அவ்வளவுதான், நீ நடந்ததையே நினைச்சுகிட்டிருந்தா! நல்லதில்ல மாப்ள.. ராஜசேகர் சொன்னான் இப்படியே போனா நீ செத்துடுவேன்னு.. கேட்கவே சங்கடமா இருக்கு.. உன் குடும்பத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு,முதல்ல உங்க அக்கா பிள்ளைகள பாரு அவங்க ரெண்டு பெரும் உன்னைநம்பிதானே இருக்காங்க,( என் அக்காவும், அக்கா கணவரும் ஒரு விபத்தில் இறந்ததால், அவர்களின் இரு குழந்தைகளும் எங்கள் பராமரிப்பில்தான் இருந்தன) கண்ணனோ (என் அண்ணன்)குடிகாரன் ஆயிட்டான், அப்புறம் யாரு உங்க குடும்பத்த காப்பாத்தறது.. ஒரு ஆறுமாசந்தான் இருக்கும் அந்த பெண்ணோட பழகி, அவளுக்கு உன்னோட வாழ கொடுத்து வக்கல... அதுக்கு இப்படி தாடி வச்சிக்கிட்டு,.. தண்ணி அடிச்சிட்டு திரியறது நல்லால்ல மாப்ள... சரி நீ செத்துட்டதாவே வச்சுக்க உன் குடும்பத்துக்கு ஏதாவது செஞ்சுட்டு அப்புறம் என்னவேனாலும் செய் மாப்ள.. என நான் மௌனமாக அழுதுகொண்டிருக்க சொல்லிகொண்டேபோனார்... நான் எதுவும் பேசவில்லை.. கடைசியாக மாப்ளே நாளைக்கு வந்து என்கிட்டே பணம் வாங்க்கிக்க கொஞ்ச நாளைக்கு மெட்ராசுக்கு போய் இருந்துட்டு வா.. அப்புறம் என்ன செய்றது என முடிவு செய்யலாம் என் டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார். 

வீட்டிற்க்கு வந்து மதுவையும், விசத்தையும் திறந்து வைத்தேன்... அத்தானும், அஞ்சலியும் மாறி மாறி என்னை வதைத்தனர்.. பொழுது விடிய ஆரம்பித்தது, அப்போது எங்கள் வீட்டில்தான் எல்லோரும் மாட்டை ஓட்டிவந்து பால் கறப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. குடும்பத்துக்காக கொஞ்சநாள் வாழ்வது என முடிவெடுத்தேன், விசத்தை குப்பையில் கொட்டிவிட்டு, மதுவை குடித்துவிட்டு மாட்டுகொட்டகையிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம்தான் எழுந்தேன், அம்மாவிடம் மெட்ராஸ் போகிறேன் என சொல்லிவிட்டு குளிக்கசென்றேன். அப்பா ஏன் இப்ப மெட்ராஸ் போறே என்றார்.. போய் ஏதாவது வேலைப்பார்ப்பேன் என்றதும், மாலை கிளம்பும்போது நூறு ரூபாய் கொடுத்தார்.. மன்னார்குடி வந்து அத்தானை பார்த்தேன், அவர் எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். மறுநாள் காலை மெட்ராஸ் வந்தேன், அதிகாலை அக்கா வீட்டு கதவை தட்டியபோது திறந்தவள் காமாட்சி.. 

அன்றைக்கு தெரியவில்லை அவள்தான் என் மனைவியாக போகிறவள் என்று.. அம்மா மாமா வந்திருக்காங்க என அக்காவை எழுப்பிவிட்டாள்.. அக்கா என்னடா சொல்லாம வந்திருக்க.. பரவாயில்லை தூங்கு, சாயந்தரம் பேசிக்கலாம் என்று சமைக்க போய்விட்டது, .. 

மெட்ராஸ் வந்துவிட்டேனே தவிர என்னால் எங்கும் வேலை தேட முடியவில்லை, இடையில் அக்கா வீட்டுக்காரர் எனக்காக பார்த்து கொடுத்த வேலையால் வந்த பிரச்சினை பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன், ஆறு மாதங்கள் இப்படியே போனது ஒரு கம்பெனியில் வேலைக்கு போவது இரண்டு நாளிலேயே பிடிக்காமல் வந்துவிடுவது இப்படியே போய்க்கொண்டிருந்தது அக்கா இரண்டு நாளைக்கு ஒருமுறை பத்து ரூபாய் தரும் அதற்க்கு புத்தகங்கள் வாங்கிவிடுவேன், மற்றபடி எங்கு போனாலும் நடைராஜாதான். வாரவாரம் செவ்வாய் அன்று தி.நகரில் வேலை செய்த நண்பன் செல்வகுமாரை பார்க்க வருவேன், அவன் ஜி.ஆர்.டியில் வேலை செய்தான், அந்த நேரத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.. 

அண்ணன் பாண்டியன் எனக்கு தமிழ்நாடு தாதா மருந்து கம்பெனியில் வேலை வாங்கி தந்தார், நல்ல வேலை ஆனால் ஒரு வாரம்தான் போயிருப்பேன்.. வீட்டில் இருந்து ஊருக்கு வரும்படி கடிதம் வந்தது.. ஊருக்குபோனால் இருந்த கடைசி நிலத்தையும் விற்றுவிட்டு அண்ணனுக்கு, கடனுக்கு போக அப்பா என் பங்காக எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் போக பதினெட்டாயிரம் வேண்டும், சிகாமணி சித்தப்பா இருக்கிறத கொடு மிச்சத்த சிங்கப்பூர் வந்து சம்பாதிச்சு கொடு என்றார்.

எத்தனையோ அனுபவங்களை இன்றுவரை சந்த்தித்து இருக்கிறேன், ஆனால் இன்றைக்கு ஒரு நல்ல திறமையாளனாக நான் இருப்பதற்கு காரணம் சிங்கப்பூர்தான். பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், இன்று வரையில் யாருக்காவது உதவி செய்துகொண்டுதானிருக்கிறேன், காரணம் ஒருமுறை இப்படி ரவுடித்தனமாக இருக்கிறாயே.. அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர். 

1995 ஆம் ஆண்டு ஊருக்கு வந்தபோது பெங்களூர் சென்றேன். அங்கு கீதாஞ்சலி அடிபட்டு இறந்த இடத்தில் சாலையோரம் இரண்டு நாள் இருந்தேன். காலை முதல் நள்ளிரவு வரைக்கும் அங்கேயே திரிந்தேன். அப்போது ஒரு நண்பர் அறிமுகமானார், அவர் வாழ்வின் இன்னொரு கோணத்தை புரிய வைத்தார். 

இப்படியாக நகர்ந்த வாழ்க்கையில் என்னையும் இரு பிள்ளைகளையும் மட்டுமே உலகம் என நினைத்து வாழும் மனைவி. என் தொழிலில் எத்தனயோ தோல்விகள், நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருக்கிறேன். சில சமயங்களில் பத்து ரூபாய் கூட இல்லாமலும் இருந்திருக்கிறேன். ஆனால் என்னை சரியாக புரிந்துகொண்டு எனக்கு மிகவும் ஆறுதலாக இருப்பவள் என் மனைவி. சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன். நள்ளிரவுக்கு பின் வரும் எனக்கு கதவு திறந்து விடும் அவள் கேட்க்கும் ஒரே கேள்வி சாப்டீங்களா என்பது மட்டுமே. என் திருமணத்துக்கு முன்பே இந்தக் காதலை அவளிடம் சொல்லிவிட்டேன்.

இடையில் ஒரு நாள் சிங்கப்பூரில் இருந்தபோது எங்கள் திருமண நாள் கடந்து போனதை மறந்து விட்டேன். அடுத்த வாரத்தில் போன் செய்தபோது அவள் நினைவு படுத்தினாள். அவளுக்கு உடனே ஒரு வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தேன்.அது ஹேராமில் கமல் சொல்வது.

"நான் என்றோ செய்த புண்ணியம் 
நீ எனக்கு மனைவியாக அமைந்தது"
"நீ என்றோ செய்த பாவம் 
நான் உனக்கு கணவனாக அமைந்தது."
இதை எழுதிக் கொண்டிருக்கிற வினாடி வரைக்கும் இதுதான் உண்மை. இதுவரை படித்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள். இது என்னுடைய சொந்தக் கதைதான். இதனை தொடராக தமிழ்குறிஞ்சி இணைய பக்கத்தில் எழுதி இருக்கிறேன். என்னை பற்றி அதில் ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன். நேரமிருந்தால் அங்கு சென்று படியுங்கள். முப்பது அத்தியாங்கள் அதில் இருக்கிறது.

தொடர்ந்து எட்டு பதிவுகளாக மீள் பதிவுகளாக பதிவேற்றியிருக்கிறேன். நான் பிரபலம் ஆகாத போது எழுதியது அதனால்தான் நிறைய பேருக்கு தெரியவில்லை. நாளை முதல் வழக்கம் போல் எழுதுவேன். 

28 கருத்துகள்:

நசரேயன் சொன்னது…

//
நாளை முதல் வழக்கம் போல் எழுதுவேன். //

சரி

என்னது நானு யாரா? சொன்னது…

வாழ்க்கை எத்தனை அனுபவங்களை தந்து செல்கிறது!

உங்களின் ஃப்ளாஷ்பேக் கதை எல்லோரிடமும் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

அன்பரசன் சொன்னது…

//இதை எழுதிக் கொண்டிருக்கிற வினாடி வரைக்கும் இதுதான் உண்மை. இதுவரை படித்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள். இது என்னுடைய சொந்தக் கதைதான்.//
நான் முதலிலேயே கணித்திருந்தேன்.

அருமையான பகிர்வு.

வினோ சொன்னது…

சரி அண்ணே...

Ravichandran Somu சொன்னது…

செந்தில்,

வேலைப்பளுவால் இன்றுதான் இந்த தொடரை படித்தேன். கண்களில் நீர்....

கனத்த மனத்துடன்,
-ரவிச்சந்திரன்

Asiya Omar சொன்னது…

காமாட்சிக்கு ஒரு குறைவும் வராது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

முடியும் தருணத்தில் கண் கலங்கி விட்டது.. பகிர்வு அருமை.. சோகத்தை தாண்டி வந்து விட்டீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது..

Anisha Yunus சொன்னது…

//"நான் என்றோ செய்த புண்ணியம் நீ எனக்கு மனைவியாக அமைந்தது""நீ என்றோ செய்த பாவம் நான் உனக்கு கணவனாக அமைந்தது."//

செந்தில் ண்ணா,

எல்லாரும் முன்னமே சொல்லியிருப்பாங்க. இருந்தாலும் இந்த பதிவுலக நண்பர்கள் சார்பா நான் கேட்பதெல்லாம். மேற்கண்ட வாக்கியங்களை மாற்ரும் விதமாக, இருவருமே ஒருவருக்கொருவர் கிடைக்க புண்ணியம் செய்தவர்களாக வாழ முயற்சியுங்கள். பிள்ளைகளும் வந்த பிறகு குடியோ அல்லது இன்னும் அந்த காதலின் தாக்கமோ குடும்பத்தில் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. எல்லாருமே ஒரு வகையில் காதலிக்காமல் வாழ்க்கையை கடப்பதில்லை. ஆனால் அதற்காக் இருக்கும் ஒரு நல்ல மனைவியை அவர்களின் அன்பை, கரிசனத்தை Take it for grantedஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். மற்ற்படி வேறெதுவும் சொல்ல எனக்கு வயதோ பக்குவமோ கிடையாது. புரிந்து கொண்டு வாழவை மாற்றிக் கொள்வீர்கள் என்றெண்ணுகிறேன். வாழ்த்துக்கள்!!

பெயரில்லா சொன்னது…

தன்னுடைய சொந்த வாழ்க்கையையும் பொது வெளியில் வைக்க மிகுந்த தைரியம் வேணும்..
உங்க மன தைரியத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

மனதை கணக்க செய்து விட்டது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

enna solrathunnu theriyalai..

சிவராம்குமார் சொன்னது…

\\சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன். நள்ளிரவுக்கு பின் வரும் எனக்கு கதவு திறந்து விடும் அவள் கேட்க்கும் ஒரே கேள்வி சாப்டீங்களா என்பது மட்டுமே\\

இந்த பழக்கம் வேணாமே செந்தில்... தினமும்ன்கிறது ரொம்ப அதிகம்....

அருண் சொன்னது…

அது என்னமோ தெரியல உங்கள் பக்கத்தை வாசிக்கும் போது மனது கனக்கிறது.சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துக்கள்.

தமிழ் உதயன் சொன்னது…

அன்பின் செந்தில்,

உங்கள் இந்த தொடர் வாழ்வில் பல அர்த்தங்களை உணர்த்தியது என்றால் மிகையாகாது... ஆனால் ஒரு சின்ன கோரிக்கை.. குடிப்பது பற்றி எழுதியுள்ளிர்கள் அதை அளவோடு உங்கள் கட்டுக்குள் வைத்துருங்கள்... குடியால் வீணான வாழ்வைபற்றி நான் நன்கு அறிவேன். ஏன் என்றால் என்னுடைய வாழ்வில் அதனால் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம்நஞ்சமல்ல

அலைகள் பாலா சொன்னது…

ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா.

விஷத்தை விட்டெறிந்து மதுவை எடுத்தது போல, இன்று மதுவை விட்டு, நல்ல முடிவை எடுங்கள்.

பெயரில்லா சொன்னது…

//
நாளை முதல் வழக்கம் போல் எழுதுவேன். //

சரி

பவள சங்கரி சொன்னது…

எத்தனை அனுபவங்கள்.........நல்ல பகிர்வுங்க......நிறைய எழுதுங்க....வாழ்த்துக்கள்.

PB Raj சொன்னது…

செந்தில்,

நம்முடைய சொந்த கதையை எழுதுவதற்கு ரொம்ப தைரியம் வேண்டும்,சுயசரிதையை கூட யாரும் உண்மையாக எழுதுவது இல்லை

If close one door other door will open

செல்வா சொன்னது…

// பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது,//
அது என்னவோ உண்மைதான் ..!!

ரோஸ்விக் சொன்னது…

//பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்//

அண்ணே அது “இரக்கப்பட்டால்” என நினைக்கிறேன். மாற்றிவிட்டு எனது இந்த கமெண்ட்டை அழித்துவிடவும்.

தனி காட்டு ராஜா சொன்னது…

அனுபவ களஞ்சியமாக உங்கள் வாழ்க்கை இருக்கிறது செந்தில் அண்ணா.....

முனியாண்டி பெ. சொன்னது…

காமாட்சி அக்காவா தங்கச்சியா தெரியல... தங்கச்சியாத்தான் இருக்கணும்... அவங்க மனசுக்கு எல்லாரும் நல்ல இருக்க வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

வாசித்து முடிக்கையில் உங்கள் மனைவிக்கு என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள் செந்தில் என்று மட்டுமே சொல்ல வருகிறது.சொல்லிவிடுங்கள் !

Tirupurvalu சொன்னது…

அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர்.

Senthil You cross all your negative time in your life.So be happy with your wife and kids .Drink monthly once or at least weekly once .Almost my story was related your story but i am not spoil my health or family in drink.Take a challenge in your life to earn more money to your kids .Money is kick than drink

AKM சொன்னது…

டியர் செந்தில்
கொஞ்சம் கண்ணீரும் மனவெளியில் நிறைய அழுத்தமுமாய் இருந்ததது .. காதல் எப்போதுமே தீர்ந்து போவதில்லை.. யாருக்கும்..தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..ஆனால் கொஞ்சம் குடியுங்கள்..
(குடி நம்மை குடிக்காதவரை..குடியை நம் ஆளுமையில் வைக்கும் வரை.. குடி ஜாலிதான்..) குடி.. மிக்க நண்பன்தான் என்னைப்பொறுத்தவரை..ஆனால் ஆபத்தானவன்.. ஜாக்கிரதையாய் பழகினால் பாதகமில்லை..

பெயரில்லா சொன்னது…

இந்த தொடரைப் படித்த பின்னர், தங்கள் மனைவி மீது மிகுந்த மரியாதை வருகிறது அண்ணா... மனதை கனக்கச் செய்கிறது இந்த கதை. நட்பு, பிரிவு, காதல் எல்லாம் உள்ளது தான் வாழ்வு. ஆனால் எது நடந்தாலும் வாழ்வை வாழத்தான் வேண்டும்.

vasan சொன்னது…

"I love you too much to ask your hand to marry me" ‍ உங்க‌ளின் ப‌ழைய‌ கோவில் காத‌ல் தெய்விக‌க் காத‌ல் தான். எல்லாம் அறிந்தும், பாதியாய், முக்காலாய், முழுதாய் கிர‌ங்கி இர‌வில்
வீடடையும் போது, 'சாப்பிடுரிங்க‌ளா' வில் தான் இருக்கிற‌து வாழும் ம‌னித‌க் காத‌ல். ம‌னித‌ம் போற்றுவோம். மானிட‌க்காத‌ல் போற்றுவோம்.

krishna சொன்னது…

உங்களது காதலில் நானும் கரைந்து போனேன்... மிக உருக்கமான பகிர்வு...
மேலும் என்னால் எழுத முடியவில்லை...கனக்கிறது மனம்..