ஒரு நதி
ஒரு பயணம்
ஒரு வாழ்க்கை ...
ஒரு காலத்தில் கூவத்தில் குளிப்பார்கள்
ஒரு காலத்தில் வசதியாக இருந்தோம்
ஒரு காலத்தில் அவள் என் உயிர்
ஒரு காலத்தில் அவர்கள் யாரும்
சாகவில்லை....
ஒரு நல்லவன்
ஒரு கெட்டவன்
ஒரு நடுநிலையாளன்
ஒரு ரெண்டுங்கெட்டான்...
ஒரு வேலை
ஒரு வீடு
ஒரு குடும்பம்
நிறைய உறவு
நிறைய பிரச்சனை...
ஒரு பார்வை
ஒரு காதல்
ஒரு முத்தம்
ஒரு பிரிவு
ஒரே.. வலி
இன்னொரு பார்வை...
ஒரு நான்
ஒரு நீ
என் கவிதை
படித்து முடித்ததும்
என்ன செய்வீர்கள்...
ஒரு நீ
என் கவிதை
படித்து முடித்ததும்
என்ன செய்வீர்கள்...
26 கருத்துகள்:
//படித்து முடித்ததும்என்ன செய்வீர்கள்...//
இது என்ன கேள்வி அண்ணாச்சி! படிச்ச பின்னாடி ஓட்டு போடுவோம்!
என் வலைபக்கம் வந்தாலும், நீங்களும் இதை தானே செய்ய போறீங்க!
/படித்து முடித்ததும்என்ன செய்வீர்கள்...//
நல்ல கேள்வி...
முதலா ஒட்டு போடுவேன்... அப்புறமா கமெண்ட் போடுவேன்... அதுக்கப்புறமா கவிதைய திரும்பவும் படிப்பேன்..
கவிதை ஒரு மாதிரி இருக்கே.... என்ன கமெண்ட் போடலாம்னு யோசிப்பேன்
அண்ணே ... இருண்மை கவிதைகளாக எழுதுகிறீர்களா... அல்லது ... அத்தகைய கவிதைகள் வரும் பொழுது நான் எட்டிப் பார்க்கின்றேனா... திங்கள் இரவு உங்களிடமும் விந்தை மனிதரிடமும் அலை பேசுகிறேன் ... என் மீது கோபம் இல்லையே தோழர்!
அதுக்கப்புறம்...அதுக்கப்புறம்... என்று கேட்டுச் செல்லும் போது எஞ்சியிருப்பது ஏதுமில்லை தான் ..கவலைகளுமில்லை ... மகிழ்ச்சிகளுமில்லை ... பரமானந்தம் என்று அவர்கள் சொல்வது அது தானோ...
ஒரு கவிதையா இருக்குறதால ஒரு கமெண்ட் மட்டும் போடுவேன்.
கமென்ட் போட்டுட்டு, அடுத்த வேலைய பார்க்கப் போவோம் ! ! !
படித்ததுக் கிழித்துவிடவும்...
12 வது வகையை மூடிக்கொண்டு படித்தால் இது இன்னும் கூடுதல் சிலிர்ப்பைத்தருகிறது.இருந்தும் எடுத்துப்போட்டுவிட்டு படிக்கலாம். மிக அருமையான இந்த உத்தியை.
//ஒரு காலத்தில் அவள் என் உயிர்
ஒரு காலத்தில் அவர்கள் யாரும்
சாகவில்லை....
//
ஒருத்தரை ஒருத்தர் பிரிந்த பின்னும் உயிருடன் இருக்கிறார்கள் அதானே.... புரியுது...புரியுது...
காதல் காதல் மட்டுமே உயிர் இல்லை.
திரும்பவும் படித்தேன்...
ஒரு சிந்தனை
ஒரு கேள்வி
ஒரு தூக்கம்
ஒரு வாழ்க்கை .....ஒரு இறப்பு!
ஒரு நான்
ஒரு நீ
என் கவிதை
படித்து முடித்ததும்
என்ன செய்வீர்கள்...
----
ரசித்தேன்...
ரசிப்பேன்...
ரசித்து கொண்டே இருப்பேன்...
ஒரு வோட்டு தமிழ்மணத்தில்,
ஒரு வோட்டு இண்ட்லியில்,
ஒரு பாராட்டு பின்னூட்டமாக....
//ஒரு பிரிவு
ஒரே.. வலி
இன்னொரு பார்வை...//
நெஞ்சம் தொடும் வரிகள்!
ஒரு கவிதை
ஒரு தரம் படித்து
ஒரு ஓட்டு போட்டு
ஒரு கமெண்ட் போட்டு
ஒரு குளோஸ் செய்வேன்
இத்தனை 'ஒரு' இருக்கிறதா...?
சரிதான் இதுவும் நல்லாத்தான் இருக்கு.
//என் கவிதை
படித்து முடித்ததும்
என்ன செய்வீர்கள்...//
இது என்ன கேள்வி.
ஒரு ஓட்டுப் போடுவோம்
ஒரு பின்னூட்டம் போடுவோம்.
யோசிக்க வைக்கிறீங்க. கவிதை "படித்து முடிந்ததும்" யோசித்தேன் நான் வாழ்க்கை பற்றிய புரிதலின் இசைவுகளோடு இயல்பாகவே இருக்கிறேனா அல்லது இயல்பாக இருக்க "முயற்சி" செய்கிறேனா என்று!!!!!
நன்றி.
ஒரு செந்தில்...
ஒரு கவிதை..
ஒரு பார்வையாளன்
பல நினைவு....
நல்லாஇருக்கு .....
அன்புடன் ஆர்.வி.எஸ்.
இன்னொரு வாட்டி முழுகி முக்குளிக்கிறதுதான் உங்க கவிதைன்னா:)
ஒரு பீரோ, மோரோ வாங்கி குடிச்சிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்... :-)
ஒரு கவிதை
ஒரு மீள்கவிதை
ஒரு மனிதன்
ஒரு சோம்பல்
ஒரு பின்னூட்டம்
ஒரு ஓட்டு
ஒருமுறையில்
இல்லையே ஏன்?
ஒரு மனிதன்
ஒரு கலாச்சாரம்
ஒரு உடன்பாடு
ஒரு கடப்பாடு
ஒரு...
ஒரு...
ஒரு...
படிச்சு முடிச்சு.....ஒருமையில் எல்லாத்தையும் சொல்லியிருக்கும் செந்திலை நினைத்துக் கொண்டே....ஒரு மாதிரியான வாழ்க்கைதான் என்ற தளத்தை சொல்லியிருப்பது அருமை செந்தில்....!
ஒரு தடவை படிச்சி
ஒரு தடவை ஓட்டு போட்டு
ஒரு தடவை கவிதை புரிந்ததா
ஒரு தடவை யோசித்து விட்டு போய் கொண்டே இருக்கணும்
ஒரு
ஒரு
ஒரு
//
[[படித்து முடித்ததும்என்ன செய்வீர்கள்..]]
வெறும்பய said
நல்ல கேள்வி...
முதலா ஒட்டு போடுவேன்... அப்புறமா கமெண்ட் போடுவேன்... அதுக்கப்புறமா
//
வழிமொழிகிறேன்..
கருத்துரையிடுக