5 செப்., 2010

குடிகாரர்கள் - பயோடேட்டா ...




பெயர்                                  : குடிமகன்(ள்)
இயற்பெயர்                       :அப்பிடீல்லாம் ஒன்னுமில்லீங்கோ..
தலைவர்                            : எல்லா மாநில முதல்வர்களும்
துணை தலைவர்கள்       : மதுபான ஆலை முதலாளிகள்
மேலும்
துணைத் தலைவர்கள் 
   : உள்ளூர் அரசியல்வாதிகள். உள்ளூர் போலிஸ்
வயது                                  : சோம, சுராபானம் காலம் தொட்டே...
தொழில்                             : காசு பறிப்பது..
பலம்                                   : குடிப்பவர்கள் அதிகம் ஆனது..
                      
பலவீனம்                           : மதுவிலக்கு கொள்கை 
நீண்ட கால சாதனைகள்        :உழைக்கும் மக்களின் களைப்பை போக்கியது
சமீபத்திய சாதனைகள்          :இலவசங்களுக்கு உதவுவது
நீண்ட கால எரிச்சல்                : விஷ சாராய சாவுகள்
சமீபத்திய எரிச்சல்                  : பத்து மணிக்கு மேல் அதிக பணம் கொடுத்து வாங்க 

                                                        வேண்டியிருப்பது..
மக்கள்                                         : குடிமக்கள்..
சொத்து மதிப்பு                         : வாங்குன கூலியையும் பறித்துக்கொள்வது...
நண்பர்கள்                                 : பாண்டிச்சேரிக்கு அழைத்து செல்பவர்கள்..
எதிரிகள்                                     :வெளியில் காந்தியம் பேசிக்கொண்டு வீட்டி ரகசியமாக 

                                                       குடிப்பவர்கள்...
ஆசை                                          : வெளிநாடுகளைப்போல் எல்லாக் கடைகளிலும் கிடைக்கணும்
நிராசை                                       : கள்ளுக்கு அங்கீகாரம்..
பாராட்டுக்குரியது                     : மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது..
பயம்                                            : நள்ளிரவில் வழி மறிக்கும் போலிஸ் 
கோபம்                                        : டாஸ்மாக்லயும் கலப்படம்
காணாமல் போனவை             : பெரியவர்களுக்கு மரியாதை..
புதியவை                                    : டாஸ்மாக் குப்பைக்குள் குடிக்க பழகியது
கருத்து                                         : போதை வஸ்துக்கள் எப்போதும் அரசாங்கத்துக்கு மட்டும்  

                                                        உதவுவது என்ன தியரி?..
டிஸ்கி                                          : குடி குடியைக் கெடுக்கும். குடிப் பழக்கம் உடல் நலத்தை 

                                                        கெடுக்கும் என் போர்ட் வைக்கும் அரசாங்கம் மக்களை 
                                                         கெடுக்கத்தான் மதுச் சாலைகளை திறந்திருக்கிறதா?...

25 கருத்துகள்:

Robin சொன்னது…

//குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட் வைக்கும் அரசாங்கம் மக்களை கெடுக்கத்தான் மதுச் சாலைகளை திறந்திருக்கிறதா?...// நியாயமான கேள்வி.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

குடிமகன்(ள்)//

:-)

//நீண்ட கால சாதனைகள் :உழைக்கும் மக்களின் களைப்பை போக்கியது// அதுமட்டுமா?

//பத்து மணிக்கு மேல் அதிக பணம் கொடுத்து வாங்க
வேண்டியிருப்பது..//

சீக்கிரம் பத்து மணிக்கு முன்னாடியே போய் வாங்கிகிட வேண்டியதுதானே!

//சொத்து மதிப்பு : வாங்குன கூலியையும் பறித்துக்கொள்வது..//

சூப்பரு சமயத்துல அதுக்கும் மேலயும் கடனாளி ஆகுற அளவுக்கு

//ஆசை : வெளிநாடுகளைப்போல் எல்லாக் கடைகளிலும் கிடைக்கணும்//

இது பேராசை

//பாராட்டுக்குரியது : மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது..//

இது கண்ணதாசனுக்கும் பொருந்துமா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாத்தானே இருக்கு குடிமகன் முகவிலாசம்.

vasu balaji சொன்னது…

:)) நல்லாருக்கு டாடா:))

அலைகள் பாலா சொன்னது…

உல்லாலா உல்லாலே லாலே ஒ!

Bibiliobibuli சொன்னது…

//குடிமகன்(ள்)//

எதிர்பாராத இடத்தில் பெண்ணுக்கு சமவுரிமை.:(

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தத்துவம் தான் பெருங்குடிமகன்களுக்கும் பொருந்தும்.

Alcohol, Standard Recreational Drug or Coping Mechanism எப்படி கொண்டாலும் விளைவு ஒன்றுதான்.

ஜாலியான ஓர் பதிவுக்கு நான் ரொம்ப serious ஆக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன் போலுள்ளது.

ப.கந்தசாமி சொன்னது…

ஆஜர்.

Unknown சொன்னது…

குடிப்பழக்கத்தின் தீமையையும் தெளிவாய்ச் சொல்லியிருக்கலாம். முந்தநாள் இங்கே ஒருவன் குடித்துவிட்டு காரோட்டி வழியில் சென்ற ஒருவரை அடித்து 600 மீட்டர் தரதரவென இழுத்துச் சென்று கொன்றான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அண்ணே தலைப்ப மாத்துங்க ப்ளீஸ்.குடிகாரர்கள் - பயோடேட்டா ... இல்லை கே.ஆர்.பி.செந்தில் பயோடேட்டா. ஹிஹி

நாடோடி சொன்னது…

குடிம‌க்க‌ளின் ப‌யோடேட்டா.. :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை....


TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED = TASMAC

நன்றி: http://tasmac.tn.gov.in/

சௌந்தர் சொன்னது…

உங்கள் அனுபவம் நல்லா இருக்கு அண்ணா :)

Sriakila சொன்னது…

ஒரு பெண்ணாக இதைப் பற்றி எழுதவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. குடிப்பவர்கள் அனைவரும் சொல்லும் ஒரு டயலாக்: "என்னோட லிமிட் எனக்குத் தெரியும்", இது குடிப்பதற்கு முன்னாடி வரை. ஆனால் குடித்த பின்பு அவர்கள் லிமிட் என்ன என்று மற்றவர்களுக்குத்தான் தெரியும்.

குடிப்பவர்கள் அனைவருமே அவர்கள் வாழ்க்கையில் பெரிதாக ஏதாவது கஷ்டத்தை சந்திக்கும் போதுதான் அதைத் தானாக உணர்வார்கள். அதுவரை யார் சொன்னாலும் அது அவர்கள் தலையில் ஏறவே ஏறாது.

vasan சொன்னது…

என்ன‌, ஆட்ட‌த்துல‌ ஆளைக் காணோம்?
//பாராட்டுக்குரியது : மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது..//

சைனாவின் 'ஓபிய‌ புர‌ட்சி' நினைவில் வ‌ந்த‌து.

vinthaimanithan சொன்னது…

குடியைக் கொண்டாட்டமாக நோக்கிய தொல்குடிச் சமூகம் தமிழ்ச்சமூகம்....

"சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரிய கட் பெறினே
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!"

என்ற அவ்வையின் பாடல் உணர்த்தும் இதை!

இன்று குடி என்பதும் வழமைபோல சீரழிந்துபோன வாழ்க்கைமுறை, நுகர்வுக் கலாச்சாரத்தின் கேடுகள் போன்றவற்றால் குடிகெடுக்கும் விஷயமாகிவிட்டது.

கள் முதலானவை பரவலாக்கப்பட வேண்டும். குடி தவறானது என்ற நடுத்தர வர்க்க மனப்பான்மை மாற்றப்பட வேண்டும். 'தமான குடி' என்பதை வலியுறுத்த வேண்டும்.

பின்னூட்டத்தில் என் கருத்துக்களை வலியுறுத்தும் வாதங்களைத் தெளிவாக வைக்க இயலவில்லை. முடிந்தால் இது பற்றி தனிப் பதிவு எழுதுகிறேன்.

வாருங்களண்ணா நாம் சொல்வோம்.... "சீயர்ஸ்!"

மார்கண்டேயன் சொன்னது…

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த 'குடி'யாகிய தமிழ்க் 'குடி'யை பகடி செய்வதை வன்மையான கண்டனங்களுடன் பதிவு செய்கின்றேன்,
தமிழ்க் 'குடி'தாங்கிகளும், இடிதாங்கிகளும் அணி திரள்வீர் !

Hai சொன்னது…

//தொழில்: காசு பறிப்பது..

பாராட்டுக்குரியது: மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது..//

இது குடியின் பயோடேட்டாவா இல்லை குடிகாரர்களின் பயோடேட்டாவா. சிறு குழப்பம் ஏற்படுகிறது.

செல்வா சொன்னது…

//பெயர் : குடிமகன்(ள்)///
பேரு அருமையா வச்சுட்டீங்க ..

ருத்ர வீணை® சொன்னது…

எத்தனை பேர இண்டர்வியூ நடத்தி எழுதுனதுங்கோ ?

எம் அப்துல் காதர் சொன்னது…

// குடி குடியைக் கெடுக்கும். குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட் வைக்கும் அரசாங்கம் மக்களை கெடுக்கத்தான் மதுச் சாலைகளை திறந்திருக்கிறதா?...//

இல்லியே, அவர்களுக்கு கிடைக்கும் காண்ட்ராக்ட், ஓட்டு எல்லாமே கை மீறிப் போகக் கூடாதூங்குரதுக்காக
...,, வேலை செய்யும் தொழிலாளிகள் அதை எல்லாம் நினைத்து விடக் கூடாது என்பதற்காக..!!

நேசமித்ரன் சொன்னது…

குடி- அரசு,
அரசு- குடி,குடி மக்கள்

:)

எஸ்.கே சொன்னது…

குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கூட அந்த குடியை விட மறுக்கிறார்கள் என்பதுதான் வேதனையான உண்மை.

அப்புறம் இப்பெல்லாம் வெளிநாடு போல் இந்தியாவிலும் சில பெண்களும் குடிகிறார்களாமே?

வெற்றி நமதே சொன்னது…

krp sendhil eppudra irukka?

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

ஓட்டுக்கு ஒரு க்வாட்டர்
ஓட்டுவதற்கும் க்வாட்டர்
நகைச்சுவை கலந்த கருத்துகள் - நன்றி

வால்பையன் சொன்னது…

//குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட் வைக்கும் அரசாங்கம் மக்களை கெடுக்கத்தான் மதுச் சாலைகளை திறந்திருக்கிறதா?...//


இதை கேட்டதுக்கு நான் ஒரு பெட்டி கேஷ்க்கு ஃபைன் கட்டினேன்!

பெருசா ஒன்னுமில்லை, புடிச்ச போலிஸ்காரன்கிட்டயே கேட்டேன்!