2 செப்., 2010

பீப்லி (Live ) .. - பார்த்தே தீரவேண்டிய படம்...

முதல் காட்சியில் படத்தின் நாயகன் உயிர் பிழைப்பதற்காக அதிவேகமாக ஓடி வருவதில் இருந்து இப்படம் ஆரம்பிக்கிறது. அவர் அங்கிருந்து ஓடி வந்து நகரத்தை நோக்கி செல்லும் ஆட்டோ ஒன்றில் ஏறும் கிளைமாக்ஸ் காட்சி அது. அவர் அப்படி ஏன் ஓடி வரவேண்டும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை மிக சீரியஸாக பதிவு செய்திருக்கிறார்கள். படம் முழுக்க பிளாக் ஹியூமரில் பின்னியிருக்கிறார்கள்.

ஆமிர்கான் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இப்படம் விவசாயிகளின் தற்கொலை பற்றியும் ஏன் அவர்கள் விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்தை நோக்கி நகர்கிறார்கள், அரசியல்வாதிகள், மீடியாக்கள் தங்கள் சுயநலத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் படம்.
                             
நத்தா, அவரின் அண்ணன், நத்தாவின் மனைவி, இரண்டு குழந்தைகள், நத்தாவின் வயதான தாயார் இந்த சிறிய குடும்பம் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது கடனில் தத்தளிக்கிறது. வீட்டில் தினந்தோறும் நடக்கும் சண்டையால் நத்தாவும் அவர் சகோதரர் புடியாவும் உதவி கேட்டு உள்ளூர் அரசியலவாதி ஒருவரை பார்க்க செல்கிறார்கள். அங்கு நெருங்கும் தேர்தலுக்காக ஆலோசனையில் ஈடுபடும் அரசியல்வாதியும் அவரது எடுபிடிகளும் நத்தாவை கிண்டல் செய்ய அங்கிருக்கும் ஒருவர் விவசாயி தற்கொலை செய்துகொண்டால் அரசாங்கம் அவர்களுக்கு லட்ச ரூபாய்  தருகிறது என்று சொல்ல அதைகேட்டு நத்தா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்க அவர்கள் பேசுவதை கேட்ட உள்ளூர் நிருபர் அதனை செய்தியாக்க அது சிறிய பிரச்சினை ஆகி கலெக்டர் வரை போகிறது. கலெக்டர் அந்த பத்திரிகை ஆசிரியரை கூப்பிட்டு அவரின் லைசென்சை கேன்சல் செய்வதாக சொல்கிறார். மேலும் கலெக்டர் தன் உதவியாளர் மூலம் நத்தாவுக்கு ஒரு அடி பம்பை அனுப்பி வைக்கிறார். நத்தா கலெக்டர் உதவியாளரிடம் பிட்டிங் சார்ஜ் கேட்க அதற்கு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
                                                                   
இதே நேரம் பெரிய மீடியாவில் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்ளும் விவசாய மந்திரி விவசாயிகளின் தற்கொலை பற்றிய கேள்விக்கு தொழிற்மயமாக்கலே அதற்கு சரியான தீர்வு என்கிறார். அன்றைய நாளில் மீடியா தன் TRP ரேட்டிங் பற்றிய பிரச்சினையில் தனக்கு ஒரு பரபரப்பான செய்தியை தேடுகிறது. இதே நேரம் நத்தாவின் தற்கொலை செய்தியும் வெளிவந்து, செய்தியை பரபரப்பாக்க மீடியாகாரர்கள்அந்த குக்கிராமத்துக்கே  வந்து நத்தாவை நேரடி ஒளிபரப்பில் காட்ட இந்த செய்தி மேலும் பரபரப்பாகி அனைத்து ஊடகங்களும் நத்தாவின் கிராமத்தில் குழுமி அவர் எப்போது தற்கொலை செய்து கொள்வார் என காத்திருக்கிறது. 

மாநில அரசுக்கு நெருங்கும் தேர்தல் நத்தா மரணம் அடைந்தால் எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பதால் அவருக்கு மிகுந்த போலிஸ் பாதுகாப்பை அளிக்கிறது. போலிஸ் நத்தா டாய்லெட் போனால் கூட பின்னாடியே போகிறது. மத்திய அரசோ கோர்ட் முடிவுக்காக காத்திருப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறது.
                                                                          
இதற்கிடையில் ஒரு கேரக்டர் இது எதைபற்றியும் கவலைபடாமல் கிணறு ஒன்றை தோண்டுவதையே தன் முழுநேர வேலையாக செய்கிறது. அதனை தொடர்ந்து கவனித்த உள்ளூர் நிருபர் அவரை கேள்விகள் கேட்க அவரோ தனக்கு எது தேவையோ அதனை தானே தேடுவதாக சொல்ல அதனால் மனம் மாறிய உள்ளூர் நிருபர் தான் வேலைக்கு சேர விரும்பும் மீடியா நிருபரிடம் அவர்களின் செயலுக்காக சண்டை போடுகிறார். ஆனால் மீடியா பெண்ணோ நாம் பரபரப்புக்காக அலைபவர்கள், நம் வேலை இதுதான், நீ நம் வேலையை மதிக்காவிட்டால் நிருபராக லாயக்கில்லை என்று சொல்கிறாள். 
                                                                
இதற்கிடையில் எதிர்க்கட்சி வேட்பாளர் தன் ஆட்கள் சூழ கிராமத்துக்கு வந்து நத்தாவின் குடும்பத்துக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டியும் தன் சின்னமான பிரஷர் குக்கரையும் தந்து வாக்கு சேகரித்துவிட்டு செல்கிறார். டிவி வந்ததாலும், அடி பம்ப் வைத்திருப்பதாலும் வீட்டுக்குள் படுக்க இடம் கிடைக்கவில்லை. வீட்டிற்கு வெளியிலோ மொத்த மீடியாவும் தங்கிவிட நத்தாவின் வீட்டை சுற்றியும் திருவிழா போல சிறு வியாபாரிகள் வந்து கூடி வியாபாரம் பார்க்க ஆரம்பிக்கின்றனர்.

நத்தா ஒரு நாள் டாய்லெட் போகும்போது காணாமல் போகிறார், மீடியா இந்த விஷயத்தை மேலும் பெரிதாக்க, நாடு முழுவதும் நத்தாவை காப்பாற்ற பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் உள்ளூர் அரசியல்வாதிதான் போலிஸ் உதவியுடன் நத்தாவை அடைத்து வைத்திருக்கிறார். இதனை உள்ளூர் நிருபர் மோப்பம் பிடிக்க தன் மீடியா தோழியிடம் விஷயத்தை சொல்கிறார். இதனை படம் பிடிக்க அவர் குழு மட்டும் ரகசியமாக கிளம்ப மொத்த மீடியாவும் ஏதோ முக்கியமான விசயம்தான் என அவரை பின்தொடர்கின்றனர்.

இதற்கிடையில் நத்தாவை உயிருடன் மக்களுக்கு காட்டவேண்டிய அவசியம் மாநில அரசுக்கு வந்து அவரை ஒப்படைக்கும்படி உள்ளூர் அரசியல்வாதியை கேட்க அவரும் சில அரசு அதிகாரிகளும் நத்தாவின் இடத்திற்கு வர நடந்த களேபரத்தில் பெட்ரோமாக்ஸ் லைட் வெடித்து அந்த இடம் தீப்பற்றிக் கொள்கிறது. அதில் மாட்டி உள்ளூர் நிருபர் இறந்து விடுகிறார். ஆனால் இறந்தது நத்தாதான் என முடிவு செய்து அதனை மீடியாவும் செய்தியாக்க நத்தாவுக்கு நிவாரண நிதியை அறிவிக்கிறது அரசு.

எல்லாம் முடிந்தபின் ஒவ்வொருவராக கிராமத்தை காலி செய்ய கடைசியாக காலி செய்யும் மீடியா பெண்ணும் உள்ளூர் நிருபரின் மரணம் தெரியாது அவர் போன் வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அப்போது அந்த இடம் முழுக்க இறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் நகர மயமாக்கலின் கோரத்தை நமக்கு காட்டுகிறது. அதன்பின் கேமரா அங்கிருந்து கிளம்பி படிப்படியாக மும்பைக்கு வருகிறது. படத்தில் இந்த இறுதி ஷாட்டுகள் அபாரம். மும்பையின் ஒரு கட்டிட வேலையில் ஓய்வாக இருக்கும் நத்தாவை காட்டுவதுடன் படம் முடிகிறது.. 

நத்தவைபோல என்பது மில்லியன் விவசாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள்.. அதில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தனி...

ஆனால் படம் முடிந்தபின் நம் மனங்களில் எழும் கனத்த மவுனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை கிடையாது...

எனக்கு ஹிந்தி தெரியாது. நம் கேபிள் சங்கர்தான் இப்படத்திற்கு என்னை கூட்டிப் போனார், அவரின் விமர்சனம் மற்றும் விக்கிபீடியா தகவல்கள் எனக்கு இந்தப் படத்தை புரிந்துகொள்ள உதவியது, நான் ஒரு விவாசாயி என்கிற வகையிலும் என்னை மிகவும் பாதித்தது இத்திரைப்படம்..

இதில் Samman Nattajee யாக நடித்த Omkaar Das Manikpuri, Budiya nattaajee யாக நடித்த Raghubir Yadav, Dhuniyaa nattaajee யாக நடித்த Shalini Vista, அந்த வயதான அம்மா Farookh Zafar, கிணறு தோண்டும் கிழவர் மனதை விட்டு அகலாத பாத்திரங்கள்..

நத்தாவும், புடியாவும் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எதார்த்தமாக அமைந்திருக்கும் பாத்திரங்களை ஈடு செய்திருப்பார்கள்..ஒளிபதிவு, எடிட்டிங், இசை என அனைத்தும் பிரமாதம். . தமிழில் இதனை மொழி மாற்றினால் சிறப்பாக போகும்...

கேபிள் சங்கரின் விமர்சனத்துக்கு ...
விக்கிபீடியா தகவல்களுக்கு ...
படத்தின் ட்ரைலர் ....
படத்தின் இணையதள முகவரி..
படத்தின் பாடல் ....

IMdb ratings...
  8.4/10   


24 கருத்துகள்:

Prathap Kumar S. சொன்னது…

விளக்கமான விமர்சனம். படம் ரொம்பவே பாதித்தது... ம்ஹும் தமிழ்ல இதுமாதிரி ஒண்ணு வந்தா அதை ஆர்ட்படம்னு முத்திரிக்குததி ஓரங்கட்டிடுவானுங்க...

அன்பரசன் சொன்னது…

விவசாயிகளை பற்றிய படமா?
கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்..

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

விமர்சனம் நல்லாயிருக்கு.

வினோ சொன்னது…

enakkum hindi theriyaathu.. sub titludan irunthaal parkkiren anna... link irunthal theriyaa paduththavum..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ் டப்பிங் எங்கயாவது ஓடுதா. வழக்கம் போல படங்களின் தொகுப்பு அருமை...

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

கண்டிப்பா பாத்துடுவோம் ...

ருத்ர வீணை® சொன்னது…

அருமை. சீக்கிரமா பாத்துடுவோம்!!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பாத்துடுவோம்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

விமர்சனம் நல்லாயிருக்கு. கண்டிப்பா பாத்துடுவோம் ...

செல்வா சொன்னது…

//தமிழில் இதனை மொழி மாற்றினால் சிறப்பாக போகும்.//
எனக்கும் இந்தி தெரியாது .. தமிழில் வந்தா சிறப்பாக இருக்கும் ..
//ஒருவர் விவசாயி தற்கொலை செய்துகொண்டால் அரசாங்கம் அவர்களுக்கு லட்ச ரூபாய் தருகிறது என்று சொல்ல அதைகேட்டு நத்தா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்க அவர்கள் //
படிக்கும் போது அப்படியே உடம்பு சிலிர்க்குது ..!!

ஜெயந்தி சொன்னது…

உங்கள் விமர்சனத்தைப் பார்க்கும்போது அவசியம் பார்க்க வேண்டிய படம் என்று புரிகிறது.

வடுவூர் குமார் சொன்னது…

பார்த்திடுவோம்.

அலைகள் பாலா சொன்னது…

cable அண்ணன் விமர்சனமும் படித்தேன். பார்க்க வேண்டிய படம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பார்க்கிறேன் .

settaikkaran சொன்னது…

பார்க்கணும் அண்ணே, எல்லாரும் சொல்றாங்க!

Riyas சொன்னது…

நல்ல படம் நல்ல விமர்சனம்.. தமிழ்சினிமாவிலும் இப்படியான கதைகளை எதிர்பார்க்கலாமா..

Karthick Chidambaram சொன்னது…

கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்..

புரட்சித்தலைவன் சொன்னது…

//எனக்கு ஹிந்தி தெரியாது. நம் கேபிள் சங்கர்தான் இப்படத்திற்கு என்னை கூட்டிப் போனார், அவரின் விமர்சனம் மற்றும் விக்கிபீடியா தகவல்கள் எனக்கு இந்தப் படத்தை புரிந்துகொள்ள உதவியது//

but விளக்கமான விமர்சனம்.
விமர்சனம் நல்லாயிருக்கு.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

விமர்சனம் நல்லா இருக்குதுங்க..

பவள சங்கரி சொன்னது…

விமர்சனம் பார்த்து படம் பார்க்கும் ஆசை வந்து விட்டது....... அது தானுங்களே நல்ல விமரிசனம்........? நன்றிங்க.......

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

விவசாய தற்கொலைக்கு அரசியல்வாதிகள் தான் காரணம் என்று சொல்லமுடியாது . உலகமயமாக்கலின்
காரணம் மிகவும் முக்கியம் . ஏன் அமீர் கான் அதை சொல்லவில்லை . விதர்பா விவசாய படுகொலைக்கும்
கோக் நிறுவனத்துக்கும் எதோ ஒரு இணைப்பு இருக்கிறதே. இதை சரியாக சித்தரிக்காமல் முதலாளித்துவத்தின்
குரலாய் படம் இருப்பதால் விதர்பா விவசாயிகள் அமீர் கான் கொடும்பாவி எரித்தார்களே . நுனிப்புல்
மேய்வதை போல் பரபரப்பிற்காக ஒரு படம் eduppathu sariyaa

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

http://vidarbhatimes.blogspot.com/2010/08/farmer-suicide-joke-falls-flat-for-some.html இந்த சுட்டியை பார்க்கவும் , நாம் அந்தவிடயத்தை பார்ப்பதை விட அந்த மக்கள் எப்படி பார்க்கிறார்கள்
அந்த படம் உண்மையில் எப்படி இருக்கிறது என்று இன்னும் ஆழமான விமர்சனத்தை thangalidam irunthu
ethirpparkkir

vinthaimanithan சொன்னது…

//ம்ம்ம்.... சரி சரி ஏதாவது ஒரு மால்ல மேட்னி ஷோ பாத்துட்டு சின்ன்ன்னதா ஒரு பெருமூச்சு விட்டுட்டு... டிஃபனுக்கு சரவணபவன் போயிடலாம்... //

இது பீப்லி (லைவ்) பற்றிய கேபிளின் விமர்சனத்துக்கு எனது கமெண்ட்...

இதைத் தவிர வேறெந்த பாதிப்பையும் படம் ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை.

வெற்றி நமதே சொன்னது…

"பீப்லி (Live ) .. - பார்த்தே தீரவேண்டிய படம்..."


அப்பா போய் பாரு, யார் வேணாம்னு சொன்னா ?