17 செப்., 2011

தேநீர் தயாரிப்பவன்...

நகரத்தின் நெரிசல் சாலைகளில்
காலம் வெகு சீக்கிரமாய்
என்னை இழுத்துச்சென்றுகொண்டிருக்கிறது..


எல்லோரையும் போலவே
எனக்கும் கோடிகளில் வாழ்த்தான் ஆசை
எல்லோர் போலவும்
எதார்த்தம் எதுவென புரிந்த பின்னரும்..

பினத்தின் முன்
தன் அத்தனை முகமூடிகளையும்
கழட்டியபடி ஆடிச்சென்ற ஒருவன்
விதியின் சக்கரத்தை
இன்னொருமுறை சுழற்றுகிறான்..

ஒரு தேநீர் தயாரிப்பவனின்
தினசரிகளைப்போல் கடந்து போகிறது
வாழ்க்கை
சபிக்கமுடியாத பாவனைகளோடு
தயாரிக்கப்படும் தேநீர் குவளைக்குள்
இருக்கும் சொற்பமாய்
எனக்கான தருணங்களை மீட்டெடுக்கிறேன்..

14 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மீண்டும் மீண்டும் படித்து மகிழத் தக்க பதிவு
வார்த்தைகள் மிக அழகாக
படைப்புக்குள் நர்த்தனமிடுகின்றன
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

rajamelaiyur சொன்னது…

//
ஒரு தேநீர் தயாரிப்பவனின்
தினசரிகளைப்போல் கடந்து போகிறது
வாழ்க்கை
சபிக்கமுடியாத பாவனைகளோடு
தயாரிக்கப்படும் தேநீர் குவளைக்குள்
இருக்கும் சொற்பமாய்
எனக்கான தருணங்களை மீட்டெடுக்கிறேன்..

//

அருமையானா வரிகள்

rajamelaiyur சொன்னது…

tamilmanam connected

Philosophy Prabhakaran சொன்னது…

ஒன்றும் விளங்கவில்லை... வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

// பினத்தின் //

பிணத்தின்...

குறையொன்றுமில்லை. சொன்னது…

அழகான சொற்பிர்யோகம் நல்லா இருக்கு

சசிகுமார் சொன்னது…

super

'பரிவை' சே.குமார் சொன்னது…

Kavithai Arumai...

SURYAJEEVA சொன்னது…

நடைமுறை எதார்த்தம் இரண்டும் கலந்த நடை, கை கோர்த்து அருகில் நடக்க அருமையாய் இருந்தது கவிதை... சாமானியன் குறித்து கவிதைகள் படித்து வெகு நாட்களாகி விட்டது தெருவாசகத்துக்கு பிறகு..

Unknown சொன்னது…

சூப்பர்

Jana சொன்னது…

ஒரு தேநீர் தயாரிப்பவனின்
தினசரிகளைப்போல் கடந்து போகிறது
வாழ்க்கை

nice :)

Unknown சொன்னது…

யதார்த்தம் நல்லா இருக்கு.

அம்பாளடியாள் சொன்னது…

சபிக்கமுடியாத பாவனைகளோடு
தயாரிக்கப்படும் தேநீர் குவளைக்குள்
இருக்கும் சொற்பமாய்
எனக்கான தருணங்களை மீட்டெடுக்கிறேன்..

அருமையான கவிதைவரிகள் வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு ......

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணம் 4