சதுரங்கப் பலகையில்
எதிரெதிர் அமரும்போது
நீ கவனமாக
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை
நான் விரும்பித் தோற்பதை ..
.
குதிரைகள் வீழும்போது
உன் கண்களுக்கு தப்புவதில்லை
எனது பிஷப்புகளும்
ஆமென்..
கொடுத்தாலும் வாங்கினாலும்
முத்தங்களுக்காய் பலியான
சிப்பாயாக மாறியவன்
நான்..
செக் வைத்த இறுமாப்பில்
நீ
வெற்றிச் சிரிப்பை காற்றில் பரவவிட்டபோது
உறைந்துபோன முத்தங்களால்
இந்த கவிதை தன்னையே
இன்னொரு முறை
எழுதத்துவங்கியது ..
அடுத்த ஆட்டம்
இன்னும் சிறிது நேரத்தில்
ஒரு
செவ்வகப் பலகையின் மேல்..
நான் ராஜாவாகவும்
நீ ராணியாகவும்
நான் ஜெயிக்க நீ தோற்க
நீ ஜெயிக்க நான் தோற்க..
9 கருத்துகள்:
உங்கள எல்லாம் பாராட்டி பாராட்டி போர் அடிச்சிருச்சுண்ணா :-)
வார்த்தைகள் விளையாடிய கவிதை அருமை...
இன்னக்கி என்ன ஒரே கில்மா கவிதையா போட்டு எல்லாரும் தாக்குறாங்க ?
இப்போதான் பிரபா கவிதையை படித்தேன் ....
ஆம் அது தான் வாழ்க்கை... பெற்ற பிள்ளைகளுக்காக ஒருவரிடம் ஒருவர் வாழ்நாள் முழுவதும் தோற்றபடி
அருமை அருமை
சிந்தனைச் சதுரங்கத்தில் நீங்கள்
வார்த்தைக் காய்களைக் கொண்டு
ஆடும் ஆட்டம் அற்புதம்
வல்லவனுக்கு புல் மட்டுமா
சதுரங்க பலகை கூடத்தான் எனச்
சொல்லத் தோன்றுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
நான் ராஜாவாகவும்
நீ ராணியாகவும்
நான் ஜெயிக்க நீ தோற்க
நீ ஜெயிக்க நான் தோற்க..
அழ்கான சதுரங்கம்.
//@ அஞ்சாசிங்கம்
இன்னக்கி என்ன ஒரே கில்மா கவிதையா போட்டு எல்லாரும் தாக்குறாங்க ?
இப்போதான் பிரபா கவிதையை படித்தேன்//
எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் திரியறாங்க. என்ன லேக்கியம் சாப்டாங்கன்னு தெரியலியே?
அசத்தல் கவிதை..
கருத்துரையிடுக