23 செப்., 2011

"தி.மு.க" இனி...

சமீபமாக நடந்த தேர்தலில் பலத்த அடி வாங்கிய தி.மு.க வின் பெருந்தலைகள் சிலர் உள்ளே போன நிலையில் உள்ளாட்சி தேர்தல் வந்திருக்கிறது. காலம் கடந்து தனித்து தேர்தலை சந்திக்கப்போவதாக கலைஞர் சொன்னாலும். உள்ளாட்சி தேர்தல் என்பது பெரும்பாலும் வேட்பாளரின் சொந்த செல்வாக்கால் ஜெயிக்கும் திறமைதான். ஆனால் மிகப்பெரிய இயக்கமான தி.மு.க வில் தோல்விக்கான பொறுப்பேற்று கலைஞர் ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்டாலினை வழி நடத்த சொல்லியிருக்கவேண்டும். இப்போதும் பிடிவாதமாக பதவியை தக்கவைத்துக்கொண்டிருப்பது அவருக்கோ, ராஜாத்தி அம்மாளுக்கோ, அழகிரிக்கோ உவப்பை ஏற்படுத்தலாம் ஆனால் முப்பது வயதிற்குள் இருக்கும் இன்றைய இளையோர் விஜயகாந்த் அணியிலோ, சீமான் பின்னாடியோ, திருமாவளவன் பின்னாடியோ இருக்கிறார்கள் அவர்களை ஈர்ப்பதற்கான முன்னோடிகள் தி.மு.க வில் யாருமே இல்லை. சென்ற தேர்தலில் குஷ்பூவும் வடிவேலுவும் ஸ்டார் பேச்சாலர்களாக களம் இறக்கப்பட்டபோது தன் வாழ்நாளை தி.மு.க வுக்காகவும் கலைஞருக்காகவும் அர்பணித்த தொண்டர்களின் வேதனையை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஆழமான அரசியல் வரலாற்றை அறியாதாவன் தி.மு.க தொண்டனாகவே இருக்க முடியாது. கலைஞருக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கோ அதே அளவு ஞாபகமும் அரசியல் பேசும் திறமையும் கொண்ட அடிமட்ட தி.மு.க தொண்டர்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

விருப்பு வெருப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவனாக பார்கப்பட்ட, பூஜிக்கப்பட்ட தலைவராக அவரைத்தான் நாம் முன்னிருத்தினோம். ஆனால் பதவி சுகத்துக்காகவும், குடும்பத்தினரின் ஆசைக்காகவும் ஒட்டுமொத்த இனமும் அவர்முன் நின்றபோது மூன்று மணி நேர உண்ணாவிரத்தோடு ஈழத்தில் அமைதியை நிலைநாட்டியதாக ஊரெங்கும் வண்ண சுவரெட்டிகளில் சிரித்தபடி அறிவித்து. இனத்தின்மேல் மரியாதையும் பாசமும் வைத்திருந்த அத்தனைபேரின் குல எதிரியாக மாறிப்போனார். ஒவ்வொரு தி.மு.க தொண்டனுமே கலைஞரை நெஞ்சில் சுமந்துகொண்டு பிரபாகரனை தங்கள் சொந்த சகோதரராக பார்ப்பவர்கள்தான். ஆனால் பிரபாகரன் தன்னை மதிக்கவில்லை என்கிற ஒரே காரனத்திற்காக ஈழத்தமிழன் எவனையும் மதிக்கவில்லை கலைஞர். ஒரு தி.மு.க தொண்டன் என்னிடம் சொன்னார், முத்துக்குமார் தன்னையே எரித்துக்கொண்டபோது எழுதிய கடிதத்தில் கலைஞரை திட்டாமல் பாராட்டி ஏதாவது எழுதியிருந்தால் கலைஞர் ஏதாவது செய்திருப்பார் என. சாவுல கூட அவரை பாராட்டினால்தான் நடவடிக்கை எடுப்பார் கலைஞர் என அவரின் அடிமட்ட தொண்டன் அவரை அறிந்தே வைத்திருக்கிறான்.

இன்னொரு தொண்டர் அடிக்கடி சொல்வார் சினிமாவில் வாரிசு வரலாம், வியாபாரத்தில் வாரிசு வரலாம், அரசியலில் மட்டும் வந்தால் என்ன என்றார். இப்போதும் கலைஞரின் வாரிசான ஸ்டாலின் கட்சியின் தலைவராக வருவதை யாருமே குறைசொல்லவில்லை,ஆனால் அழகிரி, தயாளு, கனிமொழி, தமிழரசு, தயாநிதி மாறன், அழகிரியின் பெண் இன்னும் உற்றார் உறவினர் என எத்தனை அதிகார மைய்யங்கள் செயல்பட்டன. இதுக்கெல்லாம் மொத்தமாக தன் வாக்கை பயன்படுத்தி நீங்கள் எதிர்கட்சியாக இருப்பதைகூட நாங்கள் விரும்பவில்லை என ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவைத்தபின் அவரின் அரசியல் வாரிசுகளில் ஸ்டாலினை தவிர மற்றவரெல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை.  

தலைவர் கட்சியின் உயர்மட்டத்தை எப்படி ஆக்கிரமித்து வைத்திருக்கிறாரோ அதேபோலத்தான் மாவட்ட செயலளர்களும் சாவுற வரைக்கும் தன் பதவியை தக்கவைத்துக்கொண்டதுடன் மட்டுமல்லாது தன் வாரிசுகளையும் களம் இறக்குகின்றனர். புதியவர்களுக்கான வாய்ப்பு அது கலைஞர் குடும்பத்தினராக இருந்தால் மட்டுமே. ஏன் இந்த ஆளு இன்னும் பதவியை விடாப்பிடியா பிடிச்சுட்டு தொங்கறார்ன்னு யாரும் கேக்கமுடியாது கேட்டா எம்.ஜி.ஆர், வைகோ மாதிரி கட்டம் கட்டப்படுவோன்னு பயந்தே யாரும் வாயை தொறக்கிறதே இல்லை. நம்மை மாதிரி ஆளுங்க சொன்னா இந்தியாவிலேயே என் தலைவனுக்கு ஈடு இனை யாருமே இல்லைன்னு கூமுட்டை தொண்டனுங்க கூவுவாங்க. நாம் கலைஞரைப் பற்றி பேசினால் அவர்களின் தலைவர் மாதிரியே ஏன் ஜெயலலிதாவையோ, விஜயகாந்தையோ பற்றி பேசமாட்டேன்னு சொல்றீங்கன்னு எதிர்பாட்டு பாடுவார்கள்.

தமிழின் மீதும் தமிழ் மக்களின் மீதும் நாந்தான் மாறாத பற்று வைத்துள்ளேன் என வக்கனையா பேசவும், எழுதவும் செய்ற அதே கலைஞருக்கு சொந்தமான தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு தமிழ் அறிஞர்களுக்கே வெளிச்சம், தேர்தலில் தோற்றுவிட்டோம் என்றபோதே மானாட மயிலாட போட்டு பார்த்துக்கொண்டிருந்தவர்தானே கலைஞர். பாராட்டு கூட்டம் நடத்தியே தன்னைத்தானே மகிழ்வித்துக்கொண்டும் மாமன்னன் ராஜாராஜான் சத்ய விழாவில் பட்டுவேட்டி பட்டு சட்டையுடன் தன்னையே மகாராஜாவாக நினைத்துக்கொண்டு வலம் வருவதில் கவனம் செலுத்திய கலைஞர். எம்மக்கள் அழிந்தபோது பதவிக்காக பேரம் பேசிய கலைஞர். தன் வாழ்நாள் சாதனையாக இன்னோர் மகத்தான விசயத்தையும் செய்து காட்டிவிட்டார் அது போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என ஈழப்போருக்கு சப்பைகட்டு கட்டிய ஜெயலலிதாவை. எதிர்கட்சியாக இருந்தபோதும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத ஜெயலலிதாவை, அடிமட்ட தொண்டன் உட்பட ஈழம் என்றால் என்னவென்றே அறியாத அதன் மேல்மட்ட தலைவர்கள் வரைக்கும் உள்ள அ.தி.மு.க வின் நிரந்தர செயலாளரான ஜெயலலிதாவை பெரும்பான்மை இடத்தை கொடுத்து அமரவைத்தும், தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள அத்தனை தமிழர்களாலும் போற்றப்படும் இடத்திற்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டதற்கும் கலைஞரே காரனம்.

இனியும் உங்கள் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுக்காமல் போனால், கடந்த தேர்தல் முடிந்தபின் ஊருக்குப் போகும்போது ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருந்த தி.மு.க கரை வேட்டி கட்டியிருந்த ஒரு நபரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்றபோது இரட்டை இலைக்கு தம்பி என அதிர்ச்சியை கிளப்பினார். அவர் கரை வேட்டியை நான் மீண்டும் உற்றுப்பார்த்ததும், நான் தி.மு.க காரந்தான் தம்பி, அந்த அம்மாவாச்சும் ஒரு டீக்கடைக்காரரை முதல்வர் ஆக்குனுச்சு, தலைவர் அப்படியா? அதனாலதான் என்றார். இதுதான் இப்போதைய தி.மு.க வின் தொண்டனின் மனநிலை.

எந்த இயக்கம் அடிமட்ட தொண்டனை மதிக்கவில்லையோ அந்த இயக்கம் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது. தன் வாழ்நாளில் கட்சியை மிக கட்டுக்கோப்பாகவும், எத்தனையோ இடர்கள் வந்தபோதும் சலைக்காமல் போராடிய கலைஞர் அவரின் கடைசி காலங்களில் கட்சியை தடுமாற்றத்தில் வைத்திருக்கிறார். இது இளையோருக்கான காலம் ஆகவே  ஓய்வெடுங்கள் கலைஞரே .

17 கருத்துகள்:

Unknown சொன்னது…

மு.க வை இனி ஒரு காலமும் உண்மையான தமிழன் மன்னிக்கவே மாட்டான்.அவர் பாவத்தோடுதான் விலக முடியும்.

நாய் நக்ஸ் சொன்னது…

நல்ல கருத்து
நல்ல ஆய்வு

பெயரில்லா சொன்னது…

எல்லாம் அடுத்த பொதுத்தேர்தல் வரை தான்...அதற்கு முன் ஜெ தன தலையிலே மண்ணள்ளி போடுவார்..வேறு வழியில்லாமல் மு க இல்லாட்டி ஸ்டாலின்...

BTW,நல்ல அலசல்...-:)

Unknown சொன்னது…

மரியாதை கொடுக்கப்படுபவர் மனிதனாக இருக்கப்பட வேண்டும்...அந்த மனிதத்தை வைத்தே அரசியல் செய்தவ(னை)ரை மரியாதையாய் விளிப்பதே கொடுமை என்பேன்!

rajamelaiyur சொன்னது…

//
மிகப்பெரிய இயக்கமான தி.மு.க வில் தோல்விக்கான பொறுப்பேற்று கலைஞர் ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்டாலினை வழி நடத்த சொல்லியிருக்கவேண்டும்.
//

ரொம்ப சரி

SURYAJEEVA சொன்னது…

போன தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் குளறுபடி என்று கூவிய தமிழக முதல்வர் இந்த முறை மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

திமுகவில் இருக்கும் பிரச்சனையை கலைஞரோ அல்லது குடும்பத்தினரோ இன்னும் உணர்ந்தது போல் தெரியவில்லை...

கோகுல் சொன்னது…

இளையோர் விஜயகாந்த் அணியிலோ, சீமான் பின்னாடியோ, திருமாவளவன் பின்னாடியோ இருக்கிறார்கள் அவர்களை ஈர்ப்பதற்கான முன்னோடிகள் தி.மு.க வில் யாருமே இல்லை.//

உண்மைதான்!ராகுல்காந்தியின் பப்பு எல்லாம் இங்கு வேகவில்லை.ஸ்டாலின் தலைமை ஏற்றால் தி.மு.க.கொஞ்சம் புது ரத்தம பாய்ச்சினாற்போல் தெரியும்.

Yoga.s.FR சொன்னது…

இது இளையோருக்கான காலம் ஆகவே ஓய்வெடுங்கள் கலைஞரே.///கேட்டுட்டாலும்!!!!!!!!????

Yoga.s.FR சொன்னது…

அவர் ஒரு முடிவுடன் தான் "இருக்கிறார்"!

NiceGuy சொன்னது…

//இனியும் உங்கள் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுக்காமல் போனால், கடந்த தேர்தல் முடிந்தபின் ஊருக்குப் போகும்போது ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருந்த தி.மு.க கரை வேட்டி கட்டியிருந்த ஒரு நபரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்றபோது இரட்டை இலைக்கு தம்பி என அதிர்ச்சியை கிளப்பினார். அவர் கரை வேட்டியை நான் மீண்டும் உற்றுப்பார்த்ததும், நான் தி.மு.க காரந்தான் தம்பி, அந்த அம்மாவாச்சும் ஒரு டீக்கடைக்காரரை முதல்வர் ஆக்குனுச்சு, தலைவர் அப்படியா? அதனாலதான் என்றார். இதுதான் இப்போதைய தி.மு.க வின் தொண்டனின் மனநிலை.//

நல்ல கற்பனை!

Sivakumar சொன்னது…

தி.மு.க.வில் இத்தனை தகிடுதத்தங்கள் நடந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஸ்டாலினை நீங்கள் உயர்த்திப்பேசுவது கொஞ்சம் ஓவர்தான். சுரேகா அண்ணனும் இதையேத்தான் சொல்கிறார். சென்டர்ல நின்னு பேசுங்க 'தலைவா'!!

Santhose சொன்னது…

//இன்றைய இளையோர் விஜயகாந்த் அணியிலோ, சீமான் பின்னாடியோ, திருமாவளவன் பின்னாடியோ இருக்கிறார்கள்//

Vijayakanth OK. Thiruma OK atleast dalit young are supporting him.

Seeman ?????????

Are you joking ??????

I know you are supporting Seeman, but don't think that he is a hero. He is now a Joker.

அஞ்சா சிங்கம் சொன்னது…

கலைஞ்சருக்கு இருப்பது பதவி ஆசை அல்ல விட்டு விலகி விட ............
அவருக்கு இருப்பது பதவி வெறி அப்படியெல்லாம் விலகிவிட முடியாது ...................
அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை பதவி எனக்கு மேல் துண்டு மாதிரி ............
தமிழக மக்கள் அவர் மேல்துண்டு கழற்றி பார்த்ததே இல்லை .................

aotspr சொன்னது…

"இது இளையோருக்கான காலம் ஆகவே ஓய்வெடுங்கள் கலைஞரே."

உடனே கேட்டுடாலும்...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

IlayaDhasan சொன்னது…

தி மு க ...தி பி க ஆகி ரொம்ப நாளாச்சோ

ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?

ராவணன் சொன்னது…

அது என்ன ஸ்டாலின்? திமுக கருணாநிதியின் குடும்பச்சொத்தா?

திமுகவில் வேறு யாருமே இல்லையா?

இளமையாக குஷ்பு இருக்கும் போது தாத்தா ஸ்டாலின் எதற்கு?

துரைமுருகன் இல்லையா?

கருணாநிதியின் மகன் என்பதைத் தவிர்த்து ஸ்டாலினிடம் என்ன உள்ளது?

அது ஒரு கூமுட்டை...........