நான் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்பவன். பொதுவாகவே எரிச்சலான பயணங்கள் விமானப் பயணங்கள்தான். முதன் முறை போகும்போது மட்டுமே நமக்கு அதிக ஆர்வமாக இருக்கும்.. அதுவும் இப்போதிருக்கும் பட்ஜெட் விமானங்கள் காசு மட்டுமே மிச்சம் பிடிக்க உதவும். மற்றபடி அது நம்ம ஊரில் ஆம்னி பஸ்சுக்கும், கார்பரேசன் பஸ்சுக்கும் உள்ள வித்தியாசம்தான்.. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் விமானப் பயணத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமானது.
பொதுவாகவே ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் இருக்கும் தரைவழி இணைப்புகள் சற்று பரபரப்பாகவே இருக்கும்.. கண்காணிப்பு அதிகம் தேவைப்படும் இடம் என்பதால் எல்லோரையும் திருடனைப்போல்தான் விசாரிப்பார்கள்.. காரணம் இரு நாட்டிருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளி. ஏன் நம்ம ஊர் காரைக்காலையே எடுத்துக் கொண்டால் அதன் பார்டர் ஊரான வாஞ்சியூரில் நம்ம ஆளுங்க சரக்கடிக்க போவதில்லையா அது மாதிரிதான்.
அமெரிக்காவில் மெக்சிகோ பார்டர், ஆப்பிரிக்க நாடுகளின் பார்டர், சிங்கப்பூர் - மலேசியா மற்றும் இந்தோனேசியா பார்டர், மலேசியா- தாய்லாந்து பார்டர், இந்திய- பக்கத்து நாடுகளின் பார்டர் போன்றவை பிரிசித்தி பெற்றவை.
நான் சிங்கப்பூரில் இருந்தால் அடிக்கடி மலேசியாவின் ஜோஹூர் பாருவுக்கு செல்வேன் அங்கு எல்லாமே சிங்கப்பூரின் விலைகளைவிட பாதி விலையில் கிடைக்கும். என் நண்பர் இரு நாட்களுக்கு ஒருமுறை காய்கறி உட்பட அங்கு சென்றுதான் வாங்குவார். அவர் வசிப்பது சிங்கப்பூர் பார்டர் வூட்லாண்ட்ஸ் ஏரியா அதனால் தேக்கா என்று அழைக்கப்படும் குட்டி இந்தியாவுக்கு சென்று வருவதை விட இது மிகப் பக்கம்.
நம் ஊர்க் காரர்கள் சிங்கப்பூரில் விசிட் விசாவிலேயே சென்று வியாபாரம் பார்ப்பார்கள், முன்பெல்லாம் இப்போது மாதிரி ஒரு மாத தங்கும் விசா தரமாட்டார்கள். குத்து மதிப்பாக குடுப்பார்கள், அதிகபட்சமாக பதினான்கு நாட்கள்தான் கொடுப்பார்கள். ஆனால் நம்ம ஆட்கள் செய்த நிறைய தவறுகளால் ஒரு நாள் தங்கும் விசா கூட கொடுப்பார்கள்.
இதுக்கெல்லாம் நம்ம ஆட்கள் சளைத்தவர்களா என்ன? அவர்கள் மலேசியா சென்று மீண்டும் சிங்கப்பூர் வந்து நிறைய டகால்டி வேலைகள் பார்ப்பார்கள். ஆனால் மலேசியாவில் எல்லோருக்கும் ஒரு மாத தங்கும் விசாதான். அங்கு உள்ள குடி நுழைவு அதிகாரிகள் அனைவரும் லஞ்சம் வாங்குவார்கள், அவர்களுக்கு நம்ம ஆட்கள் நிறைய கொடுத்துப் பழக்கி விட்டனர், அதனால் அவர்களும் யாராக இருந்தாலும் கோப்பி மணி ( காபி குடிக்க காசு ) கேட்பார்கள், சிங்கப்பூர் காரர்கள் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் ஆட்களிடம் கேட்க மாட்டார்கள். மட்றபடி பாகுபாடு பார்க்காது ஐரோப்பியர், அமெரிக்கர் என அனைவரிடமும் வாங்குவார்கள்.
நான் பெரும்பாலும் இரண்டு நாளைக்கு ஒரு முறை மலேசியாவுக்கு செல்வேன், என் பாஸ்போர்ட்டை பார்ப்பவர்கள் என்னிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். காரணம் விசா ஸ்டாம்பிங் அடிக்க இடமே இருக்காது. அதனால் அடிக்கடி வருபவன் எதுவும் தேறாது என வெறுப்பாக விட்டுவிடுவார்கள். இப்படியாக ஒரு நாள் நான் போகும்போது ஒரு புது ஆபிசர் என்னை கடுமையாக விசாரித்தார். என்னைப் பொறுத்தவரை அவர்களை காமெடி பீசாகத்தான் பார்ப்பேன் என்பதால், சிரித்துக் கொண்டே ஏடாகூடமாக பதில் சொல்வேன்.
கடைசியில் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு என்று கேட்டார். நான் வெறும் ஐம்பது மலேசியா ரிங்கிட்டுகள் மட்டுமே இருக்கு, மேற்க்கொண்டு எதுவும் தேவை என்றால் என கடன் அட்டைகளை பயன் படுத்திக் கொள்வேன் என்றேன். அவரோஉனக்கு நான் விசா தர முடியாது நீ பெரிய ஆபிசரை பாரு என்று சொல்லி அங்கு அனுப்பி வைத்தார்.
அங்கு சென்றதும் அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் உன் கடன் அட்டைகளைக் காட்டு என்றார். என கடன் அட்டைகளுடன் பான் கார்டும் இருந்தது, முதலில் அதனைப் பார்த்த ஆபிசர் உடனே எழுந்து எனக்கு கை கொடுத்து விட்டு சாரி சார், நீங்க இந்திய அரசாங்கத்தில் வேலை செய்பவர் என முன்னமே சொல்லியிருக்கலாமே என வருத்தப்பட்டு உடனடியாக அவரே விசா அடித்து அனுப்பி வைத்தார். எனக்கு முதலில் குழப்பமாக இருந்தாலும் வெளியில் வந்து என் பான் கார்டை மீண்டும் பார்த்தபோது நம் இந்திய அரசை நினைத்து சிரிச்சு மாளலை.
நீங்களும் சிரிக்கனுன்னா ஒரு முறை உங்க பான் கார்டை பாருங்க... அதில GOVERMENT OF INDIA, INCOMETAX DEPARTMENT எனப் போட்டிருக்கும்.
24 கருத்துகள்:
Hahaa
வணக்கம் ஆபீசர்..
NAMMA PAN CARD IPPADIY ELLAM
COMEDY PANNUTHA ???
>அதுவும் இப்போதிருக்கும் பட்ஜெட் விமானங்கள் காசு மட்டுமே மிச்சம் பிடிக்க உதவும். மற்றபடி அது நம்ம ஊரில் ஆம்னி பஸ்சுக்கும், கார்பரேசன் பஸ்சுக்கும் உள்ள வித்தியாசம்தான்.. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் விமானப் பயணத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமானது
I agree 100 %.
ha..ha...haa..
என்னது நீங்க இன்காம் டாக்ஸ் ஆபீசரா? சொல்லவே இல்லை :)))
இமிகிரேஷன் டிபார்ட்மெண்ட்ல அவ்வளவு மோசமான விசயம் தெரியாத ஆளா இருப்பாங்க?
அட பான் கார்ட் வச்சிருப்பதில் இப்படியும் ஒரு சவுரியம் இருக்கா. இது கூட நல்லாதான் இருக்கு.
ஹ ஹா ஹா... ரசித்தேன், சிரித்தேன் , மகிழ்ந்தேன்! உங்களின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு சல்யூட்!
--
அன்பின்
ப. ஜெயசீலன்.
ஹா ஹா.. எப்படியோ PAN கார்ட வச்சு பெரிய மரியாதை கிடைச்சிருச்சு :))
very very interesting
//>அதுவும் இப்போதிருக்கும் பட்ஜெட் விமானங்கள் காசு மட்டுமே மிச்சம் பிடிக்க உதவும். மற்றபடி அது நம்ம ஊரில் ஆம்னி பஸ்சுக்கும், கார்பரேசன் பஸ்சுக்கும் உள்ள வித்தியாசம்தான்.. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் விமானப் பயணத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமானது
//
Agree 200%
கடைசி வரி பஞ்ச்(சுஜாதாதான் ஞாபகத்துக்கு வரார்)
ஆஹா தல.... இனி பான் கார்டை எடுத்து மேல வெச்சிடுறேன்..
ஹி ஹி ஹி அரசு உயர் அதிகாரீனா சும்மா வா,,,,,,,,
தல சீரிச்சிட்டேன் தல
மலேசியர்கள் இவ்வளவு மொக்கையாகவா இருப்பார்கள்...நல்ல காமெடி போங்கள்...
bass sariyana sirippu thaan poonga.
apadiyea singapore,malaisiya suvaraseam pattri oru thotar pathivu potunga.
ithu ellaa tamilarukkum ayal nattai pattri arinthu kollum aaval iruppathai kaanalam.enkkum kooda. adipatai muthal vivarikkavum.
pathivkku nanri.
thala..ithu meelpathivaa??? yerkananve unga blog la itha vasichu irukene...
எந்த நாடாக இருந்தாலும் அரசு துறையில் வேலைக்கு இருப்பவர்கள் எல்லோருமே கேணைகலாகவே இருப்பது அனுபவ உண்மை தான் செந்தில். சிரித்து மாலல :)))
சவூதியிலிருந்து போலீசில் பிடிபட்டு கைரேகை வைத்து யாரும் ஊருக்கு சென்றால் திரும்பி அதே அல்லது போலி பாஸ்போர்ட் யில் 2 அல்லது எத்தனை வருடங்கள் கழித்து யார் வந்தாலும் விமான நிலையத்தில் சோதனை செய்து அவரை திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுவார்கள்.இது சவுதியின் நடைமுறை.இதுமாதிரி எனது சொந்தக்காரர் ஒருவர் ரியாத் (சவுதி) விமானநிலையத்தில் பிடிபட்டு சென்னைக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள் .அவர் சவுதியில் மூன்று நாட்கள் ஜெயில் வாழ்க்கை அனுபவித்துவிட்டு ஊர் திரும்பினால் சென்னை விமானநிலையத்தில் உள்ள ஏர்லைன்ஸ் அதிகாரி அவரிடம் விமான டிக்கெட்க்கு பணம் கட்டவில்லை 15 ஆயிரம் ரூபாய் கேட்டு அவரியின் பாஸ்போர்ட் டை பிடுங்கி வைத்து கொண்டு அவரை ரொம்ப தொந்தரவு செய்து அவர் என்னுடைய டிக்கெட் e டிக்கெட் என்று சொல்லிவும் அவர் கேட்கவில்லை ,அந்த அதிகாரி பணம் கட்டுன ரசீது கேட்டு தொந்தரவு செய்து அவரை ரொம்ப சிரமதிருக்கு ஆளாக்கி வெந்த புண்ணில் வேல் பாச்சின மாதிரி ஆகிவிட்டது .பிறகு இங்கிருந்து ரசீது அனுப்பிய பிறகு தான் அவரை வெளில் விட்டார்கள் .அந்த அதிகாரிக்கு பணம் பறிக்கனும் என்பதே குறிக்கோள் .இப்படி வெளிநாட்டில் வேலை செய்து வரும் தமிழர்களை விமானநிலைய அகாரிகள் பணத்திற்காக சிரமதிருக்கு ஆளக்கிரார்கள். பூனைக்கு மணி கட்டுவது யார் ?
//நீங்களும் சிரிக்கனுன்னா ஒரு முறை உங்க பான் கார்டை பாருங்க... அதில GOVERMENT OF INDIA, INCOMETAX DEPARTMENT எனப் போட்டிருக்கும்.
பார்த்தேன் ... சிரித்தேன் :)))))))))))
I am also IT officer. hiiiiiiiiii
நானும் GOVERNMENT OF INDIA, INCOME TAX DEPARTMENT லதான் WORK பண்றேன். ஹாஹாஹா...
PAN CARD ஐ கையில் வைத்திருப்பதும் இதுபோல ஏதாவது ஒரு நேரத்தில் கை கொடுக்குமே என்பதால் தான்.
கருத்துரையிடுக