12 ஆக., 2013

மது விலக்கு சாத்தியமே! # கிராம சபை முடிவெடுக்கலாம்...

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தந்து தமிழ்நாட்டில் மதுவால் சீரழியும் மக்களை காப்பாற்ற முடியும் எனும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.


விருதுநகர் மாவட்டம் வடமலாபுரத்தில் புதிய மதுக்கடை திறக்கப்பட இருப்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, மதுக்கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், அதை மதிக்காத தமிழக அரசு வடமலாபுரத்தில் மதுக்கடையை திறக்க ஜூலை 24-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்த நீதிபதிகள் பால் வசந்த குமார், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘ ஓர் ஊரில் மதுக்கடை திறக்கக் கூடாது என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை முறையான கோணத்தில் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, வடமலாபுரத்தில் புதிய மதுக்கடையை திறக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.  

 மதுக்கடைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்து விட்டு, விருப்பம் போல புதிய மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வரும் நிலையில், மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு எதிராக அந்த கிராம சபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால், அந்த மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்ற சட்டம் மராட்டியத்தில் உள்ளது. - நன்றி:  Manivannan R G Manivannan.

தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை நடத்துகிறது. ஆனால் அரசின் மிக மோசமான நிர்வாக அமைப்புகளில் முதன்மையானது என்றால் அது டாஸ்மாக்தான். மக்களுக்கு மிக முக்கியாமான அவசியமான தேவைகளில் ஒன்று சுகாதாரமான கழிப்பிடம்தான். ஆனால் அதனைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களை குடிக்க வைத்து அதனால் வரும் வருமானத்தை கொண்டு இலவசங்களை வாரி வழங்கி மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறது.

பொதுவாக அரசாங்கம் நடத்தும் ரேஷன் கடைகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என எல்லோரும் அறிவோம். இலவசமாக கொடுக்கிறோம் என்கிற அலட்சியம் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரைக்கும் இருக்கும். அதேபோல டாஸ்மாக் கடைகளில் எல்லா கடைகளிலுமே பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அதிகம் வாங்குகிறார்கள். பில் என்று ஒரு விசயமே கிடையாது. பார்களோ சுத்த மோசம். தினம் தினம் புதிய புதிய பெயர்களில் சரக்குகள் விற்கப்படுகின்றன. அதிலும் எதிலுமே குவாலிட்டி கிடையவே கிடையாது. அருகிலிருக்கும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரியில் கிடைக்கும் அதே பிராண்டுகளை நாம் தமிழ்நாட்டில் வாங்கினால் சுத்த மோசம். அங்கெல்லாம் தரமாக தரும் அதே நிறுவனங்கள்தான் இங்கு மட்டமான சரக்கை கொடுக்கின்றன. தெருவுக்கு தெரு கடைகளை திறந்து வைத்து எல்லோரையும் குடிகாரர்கள் ஆக்குவதில் கவனம் செலுத்தும் அரசை வெகு சிலரே கண்டிக்க செய்கின்றனர். 

லாட்டரியை, பான்பராக்கை சுத்தமாக தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்திய ஜெயலலிதா இந்த விசயத்தில் மட்டும் ஏன் அக்கறை செலுத்தவில்லை என்பது புதிராக இருக்கிறது?. மதுக்கடைகளை மூடினால் கோடிகளில் கொழிக்கும்  மதுபான ஆலை அதிபர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். ஆனால் விலைவாசி உயர்வால் மன உளைச்சலின் உச்சத்தில் குடித்து சீரழியும் கோடிக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

கிராமசபைகளின் மூலம் இப்போது ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. எனவே ராமதாஸ் வேண்டுகோளின்படி ஒவ்வொரு கிராமத்து இளைஞர்களும் தங்கள் கிராமத்தினரை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் ஒரு நல்ல முடிவை எட்டலாம். முயற்சியை இன்றே துவங்குவோம்.

3 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கே.ஆர்.பிஜி,

கிராமசபையின் அதிகாரத்தினை அதாவது மக்களின் அதிகாரத்தினை வலியுறுத்தும் ஒரு முக்கியமான தீர்ப்பு, கிராம சபைகளுக்கு இருக்கும் அதிகாரத்தின் வீச்சினை அவ்வமைப்பின் தலைவர்களோ மக்களோ உணர்வதில்லை, ஒரு கிராம சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை தடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு கூட அதிகாரம் இல்லை என பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் உள்ளதாக படித்துள்ளேன், முன்னர் இதனை ஒட்டி கூடங்குளம் பிரச்சினைக்கு ஒரு பின்னூட்டம் இட்டப்போதும் அதனை வலியுறுத்தினேன்.

கிராம சபை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அலகு, ஒரு சிறு தொழிற்சாலை,அணு உலை எதுவாக இருப்பினும் உள்ளாட்சி அமைப்பின் சபையில் ஒரு ஆதரவு தீர்மானம் இயற்றப்பட்டால் மட்டுமே செயல்ப்படுத்த முடியும், வேண்டாம் என சொல்லிவிட்டால் ,உச்ச நீதிமன்றம் கூட தலையிட முடியாது,அத்தகைய சக்தி வாய்ந்த உள்ளாட்சி அமைப்பின் சக்தியை மக்கள் உணர்வதில்லை, பெரும்பாலும் அரசியல் தலைமையின் உத்தரவுப்படியே செயல்ப்பட்டு விடுவார்கள்.

தென்காசி பகுதியில் கொக்கோ கோலா தொழிற்சாலை வர ஆதரவு தீர்மானம் இயற்றிவிட்டு ,பின்னர் ,மக்கள் எதிர்க்கவே பஞ்சாயத்து தலைவர் ,மீண்டும் தீர்மானத்தினை ரத்து செய்ய முயன்றதால் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது,காரணம் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் , அப்புறம் தொழிற்சாலையே துவங்க முடியாது என்பதால் தான்.

//In Sivaganga District of Tamil Nadu state there were several protests and rallies opposing the proposed Coca-Cola bottling plant in fear of water depletion and contamination. The president of the Gangaikondan panchayat, Mr. V. Kamson died under mysterious circumstances two days after going back and forth in his resentment against the upcoming Coca-Cola bottling plant in the village. When asked about the conflicting statements, he said: “I am under immense pressure from the public, police and other quarters. So I have issued this statement.//

http://uturnfoundation.org/wputurn/coca-cola-expoiting-the-villages-of-india/

அமெரிக்க போன்ற நாடுகளிலும் உள்ளூர் அமைப்புகளுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளது, ஒரு மேயர் நினைத்தால் அமெரிக்க அதிபரையே ஊருக்குள் வரக்கூடாதுனு தடை செய்ய முடியும்,அதிபரும் அதனை மதிப்பார், இப்படி ஒரு சம்பவம் நடந்த செய்தி சென்ற ஆண்டு கூட வந்தது.

நம்ம ஊரிலும் மக்கள் இத்தகைய தீர்ப்புகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தினை உணர துவங்க வேண்டும்.

Avargal Unmaigal சொன்னது…

///ஒவ்வொரு கிராமத்து இளைஞர்களும் தங்கள் கிராமத்தினரை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் ஒரு நல்ல முடிவை எட்டலாம். முயற்சியை இன்றே துவங்குவோம்.///

கூடிய விரைவில் கிராமத்தலைவர்கள் வாக்கிங்க் போகும் போது மர்மமான நபர்களால் வெட்டிக் கொல்லப்படும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும் என எதிர்பார்க்கலாம்

vels-erode சொன்னது…

அந்த கடைகாரனுங்க காசு தரல்ல.அத்னால பான் பராக்கை ஒழிச்சாச்சு.