28 மார்., 2009

"விஜயகாந்தின் பம்மாத்து"

தற்போதைய தமிழக அரசியலில் நடக்கும் உச்சபச்ச கோமாளித்தனம் விஜயகாந்த் செய்வதுதான், காங்கிரசுடனும், அதிமுகவுடனும் மாறி மாறி பேரம் பேசி படியாமல் இப்போது மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என்கிறார், இதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லியிருந்தால் வந்துட்டாருய்யா நம்மை ஆளப்போகும் பெருந்தகை என்று ஒரு ஓட்டை போட்டிருக்கலாம். இப்ப ரொம்ப கஷ்டம் சார்.

அப்புறம் இப்பதான் இலங்கை பிரச்சினை அவருக்கு தெரிய வந்தது போல, ஈழ பிரச்சினையில பிரனாப்பும், கலைஞரும் ஒண்ணுமே பண்ணல பாருங்க, நம்பல எல்லாம் ஏமாத்துறாங்கன்னு சொல்றார், அண்ணே தமிழண்ணா ஒங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா... நீங்கதான் தூங்கிட்டிருக்கீங்கன்னா நாங்க முழிச்சு ரொம்ப நாளாச்சு. அதனாலே இலங்கை தமிழன் செத்து சுண்ணாம்பு ஆகட்டும், தயவு செய்து நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். கிடைக்கிற கொஞ்ச ஓட்டையும் இழந்துராதீங்க.

எல்லா தொகுதிலயும் ஆள நிறுத்த வேண்டியதுதானே, அத விட்டுட்டு ஏன் ஒன்பது தொகுதிகள்ல மட்டும் நிறுத்தி இருக்கீங்க.. மத்த தொகுதிகள்ல உங்க கட்ச்சிகாரங்க யாரும் இல்லையா? சரி பின்னாடி அறிவிப்பீங்க...

ஆந்திராவில் உங்களுக்கு பின்னாடி கட்சி ஆரம்பிச்ச சிரஞ்சீவிக்கு இருக்கிற துணிச்சல்ல பாதியாவது உங்ககிட்டே இருக்கா, உங்க வீரமெல்லாம் சினிமாவுக்கு மட்டுந்தானா?

ஒரு நல்ல எதிர்கட்சியாக செயல்படக்கூடிய வாய்ப்பை நீங்கள் இலங்கை பிரச்சனையில் இழந்து விட்டீர்கள், அதான் நாங்க கருப்பு கொடி குத்திகிட்டோமே, என் பையனுக்கு பிரபாகரன்னு பெயர் வச்சோமேன்னு சொல்றிங்க.. உங்களின் பூர்வீகம் தெலுங்காக இருக்கலாம், உங்களை நாங்கள் அப்படி பிரித்து பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் பேசும் அத்தனை பெரும் எங்களை பொறுத்தவரை தமிழன்தான். ரொம்ப நாளா பிறந்த நாள் கொண்டாடாம இருக்கீங்க, இப்படி தமிழ்நாட்டுல எல்லாரும் பிறந்தநாள கொண்டாடாம இருந்த சீக்கிரமா ஈழம் கிடைச்சிடும், ஆனால் உங்க அளவுக்கு எங்களுக்கு தெளிவில்ல, அதனால்தான் பொழப்பு இல்லாம போராட்டம் பண்றோம்.

உங்க திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதே உங்கள் மக்கள் பற்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அப்பவே என் திருமண மண்டபத்தின் இடம் மக்களுக்கு தேவை என்றால் அதனை நான் இலவசமாகவே வழங்குகிறேன் என்று அறிவித்திருந்தால், நீங்கள் எங்கள் மனதில் ஆழமாக இடம்பெற்று இருப்பீர்கள். ஆனால் இன்றுவரை அதே பொலப்பம்தான். என்னோட மண்டபத்த இடிச்சிட்டாங்க என்னை பழிவாங்கிட்டாங்கன்னு எல்லா கூட்டத்துலயும் சொல்றீங்க. நீங்க எப்படி பொதுநலன் பத்தி பேசுறிங்க? அத நாங்க வேற நம்பனுன்னு நெனைக்கிறீங்க.

அடுத்து வடிவேலு பிரச்சினை, வடிவேலே உங்க ஆளுங்ககிட்டே பிரச்சினை பண்ணியிருந்தால் கூட நீங்க நேரா போய் வடிவேலுகிட்டே பேசி இருந்தா உங்கள தூக்கி வச்சி கொண்டாடி இருப்போம். நீங்களோ சும்மா இருந்திட்டிங்க, அத சரியா பயன்படுத்திக்கிட்டு வடிவேல ஆளும்கட்சி தூண்டிவிட்டப்ப கூட போய் பேசி இருக்கணும், தவற விட்டுட்டீங்க...

இப்ப பிரச்சனை என்னன்னா இப்படி நீங்க ஈழ பிரச்சனையில் திடீரென காட்டும் அக்கறை, கொஞ்சம் ஜெயலலிதாவுக்கு முன்னாடி காட்டியிருந்தால் கூட, அட இவருக்கும் நடிக்க வருதுப்பான்னு சந்தோசப்பட்டிருப்போம்.

ஆனா நீங்க நல்லது செய்வீங்கன்னு மாபா பாண்டியராஜன் கூட நம்புராரு பாருங்க, அவர நெனச்சாதான் வருத்தமா இருக்கு. ஜோசியக்காரனையும், சாமியாரையும் நம்பி களத்தில நிக்கிறீங்க, நீங்க எதிர்ப்பது அரசியல்ல மிகுந்த அனுபவம் மிக்க கலைஞரையும், தன்னை அப்பட்டமாக நம்பும் ஒரு கோடி முட்டாள்களை கொண்ட ஜெயலலிதாவையும், யார் குட்டிசுவரானால் எனக்கென்ன எனக்கு என் சொந்த நலனே முக்கியம் என அரசியலில் சரியாக காய் நகர்த்தும் ராமதாசையும், என்பதை மறந்து விடாதீர்கள். ஆனா நீங்க எல்லாரும் மறந்தது மக்கள் ஒட்டு போட்டாதான் ஜெயிக்கமுடியும் என்பதை. தேர்தல் கமிசன் ஒரே நாள்ல இந்த தேர்தல தமிழகத்துல வச்சதால், திருமங்கலம் போல பணத்த பாதாளம் வரைக்கும் பாய்ச்ச முடியாது,

இப்போது போகட்டும் வரும் சட்டமன்ற தேர்தலிலாவது ஒரு தெளிவான முடிவோடு, தனியாக களத்தில் நில்லுங்கள், உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துங்கள், உங்களுக்கு என் ஒட்டு நிச்சயம் உண்டு. ஆனால் இந்த தேர்தலில் என்னால் உங்களுக்கு ஒட்டு போட முடியாது விஜயகாந்த்....

5 கருத்துகள்:

நான் தகுதியானவனா சொன்னது…

விஜயகந்த் என்ற சுயநலவாதிக்கு நண்பர் குட்டு வைத்ததற்கு என் நன்றி

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

"விஜயகந்த் என்ற சுயநலவாதிக்கு நண்பர் குட்டு வைத்ததற்கு என் நன்றி "

வருகைக்கு நன்றி நண்பரே...

இனிமேல் விஜயகாந்த் மாதிரி ஆட்களால் மக்கள் செல்வாக்கு பெறமுடியாது
ஒரு தெளிவான கொள்கை இல்லாமலே கட்சி நடத்தும் விஜயகாந்த் எப்படி எதிர்கால தமிழகத்தை முன்னெடுப்பார்..

பெயரில்லா சொன்னது…

VIJAYKANTH IS THE ONLY ALTERNATIVE FOR DMK AND ADMK - HE IS ATLEAST HONEST ABOUT EVERYTHING - U PEOPLE ARE JEALOUS AND ARE USED TO LIVE UNDER DMK/ADMK ATROCITIES

வேடிக்கை மனிதன் சொன்னது…

"VIJAYKANTH IS THE ONLY ALTERNATIVE FOR DMK AND ADMK - HE IS ATLEAST HONEST ABOUT EVERYTHING - U PEOPLE ARE JEALOUS AND ARE USED TO LIVE UNDER DMK/ADMK ATROCITIES"

இந்த ஹொனெச்ட் எல்லாம் முதல்வர் சிம்மாசனத்தை பிடிப்பதர்கான வேசம் என்று போகப்போக தெரிந்துவிடும், மற்றும்
திமுக, ஆதிமுகவிற்கு ஆதரவாக திரு செந்தில் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. அவர் நடுநிலையோடு கருத்து சொல்லி இருபதாகவும், விஜயகாந்தின் நல்லவர் என்ற முகமூடியை உரித்து காட்டி இருப்பதாகவும் நான் கருதுகிரேன்.பொறாமை படுகிர அளவிற்கு முதலில் விஜயகாந்த் வளரட்டும்.........

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நான் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பவன் இல்லை..
மேலும் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததை வரவேற்றவன்...
ஆனால் வந்தபோது இருந்த ஆர்வமும் துணிச்சலும் அவருக்கு இப்போது இல்லை..
என்னை பொறுத்தவரை திமுக, அதிமுக , காங்கிரஸ் , பாமக, விசிக எல்லோரும் சுயநலமிகளே...
என்ன செய்வது நம் தலைவனை சினிமாவில் தேடுகிறோம்...
அதன் பலனை நாம் அனுபவித்தே ஆகவேண்டும்..

எனக்காக பதில் சொன்ன நண்பர் "நான் தகுதியானவனாவுக்கு " என் நன்றி