8 மே, 2010

இஸ்லாமியர் ஏற்றுக்கொண்ட பெரியாரிசம்


இன்று சிங்கப்பூர் சிராங்கூன் ரோட்டில் இருக்கும் ஹனீபா டேக்ஸ்டைல்சுக்கு போயிருந்தேன் அங்கு எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எப்போதும் அவர் கடை வாசலில் மலிவு விலையில் நிறைய புத்தகங்கள் கிடைக்கும்.அவைகள் பெரும்பாலும் இஸ்லாம் சம்பந்தபட்ட புத்தகங்கள் ஆக இருக்கும். இன்று அவர் கடையில் பார்த்த புத்தகம் திராவிட கழகத்தின் முன்னாள் பொது செயலாளர் கி.வீரமணியின் "வாழ்வியல் சிந்தனைகள்" அதன் ஆறு தொகுதிகளும் இருந்தன. ஒவ்வொன்றும் இரண்டு சிங்கப்பூர் வெள்ளிகள் மட்டுமே, இந்திய ரூபாயில் சுமார் அறுபத்தி ஆறு மட்டுமே. இது புத்தகத்தின் இந்திய விலையை விட குறைவு.

ஹனிபாவின் முதாலாளி திரு.ஒ.கே.ஹனீபா பெரியாரை பின்பற்றும் வீரமணியின் புத்தகத்தை விற்பது என்பது ஒரு ஆச்சர்யம். ஏனென்றால் பெரியார் இந்து மதத்தை மட்டும் சாடவில்லை அவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களையும் சாடியவர், அதுவும் இஸ்லாம் பெண்ணடிமைத் தனத்துக்கு  ஆதரவான மதம். பெண்களை அவர்கள் எப்படி பார்கிறார்கள், நடத்துகிறார்கள் என கடுமையான விமர்சனங்கள் இஸ்லாமியர்கள் மேல் உண்டு. தீவிர கடவுள் மறுப்பாளர் ஆன பெரியார் அனைத்து விதமான கடவுள் நம்பிக்கைகளை எதிர்த்தவர். அப்படிப்பட்ட பெரியாரின் சிந்தனைகள்தான் வீரமணியின் சிந்தனைகளும்.

உண்மையில் அது இரண்டு விதமான கேள்விகளை என் மனம் எழுப்பியது, ஹனீபாவில் புத்தகங்கள் விற்பதில்லை. கி.வீரமணியின் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தனிப்பட்ட விற்பனை?. அதை அவர்கள் விற்கும் நோக்கம் என்ன?
ஒரு தீவிர கடவுள் மறுப்பாளன் ஆன எனக்கு அது மிகுந்த சந்தோசத்தையே அளித்தது. இந்த மாற்றம் நிச்சயம் வரவேற்கபடவேண்டிய ஒன்று. மேலும் எனக்கு வீரமணியை சுத்தமாக பிடிக்காது, பெரியாரின் கொள்கைகளை தன்னுடைய காலத்திற்குள் வீரமணியும், கருணாநிதியும் நிச்சயம் குழி தோண்டி புதைத்து விடுவார்கள். ஆனால் அவரின் "வாழ்வியல் சிந்தனைகள்" ஒரு நல்ல புத்தகம் என என் நெருங்கிய நண்பர் (இவருக்கும் வீரமணியை பிடிக்காது) பரிந்துரைத்தார். அதனால் குறைந்த விலைக்கு கிடைத்த இந்த புத்தகங்களை வாங்கி விட்டேன். படித்துவிட்டு விமர்சனம் எழுதுவேன்.

பொதுவாக இஸ்லாமியர்கள் வேற்று மதத்தவரின் சமய சடங்குகளில் சாப்பிட மாட்டார்கள்( என் நண்பர்கள் சிலர் விதி விலக்கு) அப்படிப்பட்ட மதத்தை தீவிரமாக பின்பற்றும் திரு.ஒ.கே.ஹனீபா ஒரு தீவிர கடவுள் மறுப்பாளரின் புத்தகங்களை விற்கிறார் எனில் அவர்  நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

47 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

பெரியார் வெடித்துப் பொங்கும் ஊழிக்கால நெருப்பு. வீரமணி வெறும் சாம்பல். அவரை ஆதரித்தால் மட்டும் முற்போக்கு என்றால் என்ன செய்வது? வீரமணி தீவிர கடவுள் மறுப்பாளரா??!!!

“ இந்த உலகம் இன்னுமாடா நம்மள நம்பிட்டு இருக்கு”ன்னு வீரமணி பேசுறது கேக்குதா?

அப்புறம் பெரியார் அனைத்து மதங்களையும் எதிர்த்தார் எனினும் ஒப்பீட்டளவில் இந்து மதத்தை விட இஸ்லாம் பரவாயில்லை என்றே கூறியதாக ஞாபகம்.

Unknown சொன்னது…

//ஒப்பீட்டளவில் இந்து மதத்தை விட இஸ்லாம் பரவாயில்லை என்றே கூறியதாக ஞாபகம்//

மதங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு தேவையில்லை என்பதே பெரியார் கருத்து..

கமலேஷ் சொன்னது…

படித்தவுடன் புத்தகத்தில் இருக்கும் நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழரே...

Aathira mullai சொன்னது…

கொள்கைக்காக வாழ்ந்தவர் பெரியார். வாழ்வதற்காக கொள்கையைப் பிடித்துக் கொண்டிருப்பவர் கீ.வீ. என்று பலர் சொல்லக்கேள்வி. புத்தகத்தை எப்போது படித்து முடிப்பீர்கள் என்று காத்து இருக்கிறோம்..என்னதான் சொல்கிறார் கீ.வீ. என்று அறிய..

ஜெய்லானி சொன்னது…

//பொதுவாக இஸ்லாமியர்கள் வேற்று மதத்தவரின் சமய சடங்குகளில் சாப்பிட மாட்டார்கள்//

அதாவது சிலைக்கு அல்லது போட்டோவுக்கு படைத்ததை தவிர மற்றதை தைரியமா சாப்பிடலாம். செந்தில் இப்படி தான் நிறைய பேர் புரியாமலேயே இஸ்லாத்தை பற்றி பேசுவது.

விந்தை மனிதன் சொன்ன அளவுக்கு கூட நீங்க பெரியாரை சரியா படிக்கலன்னு தோனுது சாரி நண்பா

சாபு சொன்னது…

மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வை பிறப்பின் அடிப்படையில் கற்பிக்காத மதத்தை மனிதர்கள் தேர்ந்தெடுப்பதில் தமக்கு ஆட்சேபணையில்லை என்று இஸ்லாமைத் தழுவிய ஆதிதிராவிடர்களை வாழ்த்தி பெரியார் பேசியிருக்கிறார்.

உங்களைப் போன்றவர்கள் தாம்.... வெங்காயம்

Unknown சொன்னது…

//படித்தவுடன் புத்தகத்தில் இருக்கும் நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழரே...//

நிச்சயம் கமலேஷ்..

Unknown சொன்னது…

/என்னதான் சொல்கிறார் கீ.வீ. என்று அறிய.//

ஆறு தொகுதிகள் முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

seekkiram padichittu sollungal

Hai சொன்னது…

கொள்கைக்காக வாழ்ந்தவர் பெரியார். வாழ்வதற்காக கொள்கையைப் பிடித்துக் கொண்டிருப்பவர் கீ.வீ. என்று பலர் சொல்லக்கேள்வி.

இப்போது மகனுக்காக....

Unknown சொன்னது…

/விந்தை மனிதன் சொன்ன அளவுக்கு கூட நீங்க பெரியாரை சரியா படிக்கலன்னு தோனுது சாரி நண்பா//

நான் ஒரு தீவிர கடவுள் மறுப்பாளன் அதனால் நிறைய விஷயங்களுக்குள் போக விரும்பவில்லை
மேலும் தி.க வை விரும்பாத பெரியாரிஸ்ட், எனக்கு எல்லா மதங்களை சார்ந்த நண்பர்களும் நிறைய உண்டு,
அவர்களுடன் சாதரணமாக பேசினாலே அதனை மத துவேசமாக பார்ப்பார்கள்
எல்லாமும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான், இங்கு சில விசயங்களை மேலோட்டமாக மட்டுமே சொல்ல முடிகிறது.
இன்னும் ஆழமாகப்போனால் அது சங்கடங்களை உருவாக்கலாம்.
எந்த சாதி அமைப்பும் இல்லாத இஸ்லாத்தை தழுவிகொள்ளலாம் என பெரியார் ஆணித்திரமாக சொல்லவில்லை அது உனக்கு ஒரு மதம் தேவைப்பட்டால் அங்கே போ என்றார்.
என்னைப் பொறுத்தவரை மதங்கள் மனிதம் போதிக்கவில்லை, அது நம்மைபோன்ற சாதரான மனிதர்கள் சேர்ந்து உருவாக்கியது.
இந்த உலகிற்கு தேவை மனித நேயம் மட்டுமே.

Unknown சொன்னது…

//உங்களைப் போன்றவர்கள் தாம்.... வெங்காயம்//

இருக்கலாம் சாபு ....

Unknown சொன்னது…

//seekkiram padichittu சொல்லுங்கள்//

கண்டிப்பாக ரமேஷ் ..

Unknown சொன்னது…

//இப்போது மகனுக்காக...//

அடுத்த பொது செயலாளர் அவர் மகன்தான்...

பெரியார் செய்த சில தவறுகளில் வீரமணியும் ஒருவர்.

தருமி சொன்னது…

இனிவரும் பதிவுகளுக்கான எதிர்பார்ப்புகளுடன் ...

Unknown சொன்னது…

//இனிவரும் பதிவுகளுக்கான எதிர்பார்ப்புகளுடன் ..//

நன்றி தருமி ஐயா .

cool சொன்னது…

//எந்த சாதி அமைப்பும் இல்லாத இஸ்லாத்தை தழுவிகொள்ளலாம் என பெரியார் ஆணித்திரமாக சொல்லவில்லை அது உனக்கு ஒரு மதம் தேவைப்பட்டால் அங்கே போ என்றார்.//

//அதுவும் இஸ்லாம் பெண்ணடிமைத் தனத்துக்கு ஆதரவான மதம். பெண்களை அவர்கள் எப்படி பார்கிறார்கள், நடத்துகிறார்கள் என கடுமையான விமர்சனங்கள் இஸ்லாமியர்கள் மேல் உண்டு. //

பெரியார் அப்போ விதவிதமான கடவுள் வழிபாடு பண்றதை மட்டும் தான்
எதிர்த்தாரா?அவர் என்ன சொல்ல வரார்?பெண்ணடிமை தனம் இருக்கும் மதத்தில் இருக்கலாம் ஆனால் இந்து மதத்தில் இருக்க கூடாதுன்னு சொல்ல வராரா?
//எந்த சாதி அமைப்பும் இல்லாத இஸ்லாத்தை தழுவிகொள்ளலாம் என பெரியார் ஆணித்திரமாக சொல்லவில்லை அது உனக்கு ஒரு மதம் தேவைப்பட்டால் அங்கே போ என்றார்//
இப்படி கண்டிப்பா சொல்லிருக்காங்களா?நான் இதுவரை பெரியார் எல்லா விதமான மூட நம்பிக்கை/மத நம்பிக்கையை எத்ர்க்கிரவரென்று நினைத்தேன்.அவரும் சில அரசியல் வாதிகள் போல் விளம்பரத்திர்க்காகவா அறிக்கை கொடுத்தார்?

ஜியா சொன்னது…

இஸ்லாத்தை பற்றி பெரியாரே சொல்றத கீழே உள்ள இணைப்பில் கேளுங்க........

http://www.pudumadamnews.com/2010/04/periyar-talk-about-islam.html

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அய்யாவின் கடவுள் மறுப்பு கொள்கைத் தவிர நிறைய கருத்துக்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அய்யாவை விரும்புகின்றவர்களாகவே இருக்கின்றனர்.இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.


வீரமணியைப் பற்றி என்னால் கருத்து சொல்லமுடியாது.ஆனால் பெரியாரின் கொள்கைகளைக் குழிதோண்டி கலைஞர் புதைப்பதாக நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தொடர்ந்து விவாதிப்போம்.தருமி அய்யாவும் இணைந்தால் மகிழ்வு :)

Unknown சொன்னது…

நன்றி....

cool

Ziya

எம்.எம்.அப்துல்லா

உங்கள் கருத்துகளுக்கு நன்றி, இவற்றை நான் பொது விவாதம் ஆக்க விரும்பவில்லை, ஏனெனில் அது முடிவில்லாமல் நீளும்,
மீண்டும் சொல்கிறேன் நான் மத நம்பிக்கை உள்ளவர்களுடன் விவாதிக்க விரும்பவில்லை, நான் பெரியாரை மட்டும் நேசிப்பவன் அல்ல அத்துணை
மனித பண்பாலர்களையும்தான், தனி மனித விருப்பங்களுக்குள் யாரும் உள் நுழைய முடியாது. ஆனால் மதம் மனிதனை பிடித்துவிட்டால் என்ன ஆகும்,???
மார்க்கம் சொல்லும் நீதியை உங்களில் எத்துனை பேர் பின்பற்றுகிறீர்கள், பாதிரிமார்களின் கைகளில் சிக்கிய கண்ணியாச்த்ரீகளை படிக்கவில்லையா? நித்யானந்தாக்களின் முகமூடி எது? புத்தனை தொடர்கிரவன் கொத்து குண்டுகள் போட்டானே?
நான் நேசிப்பது மனித நேயம் மட்டுமே. பொதுவான விவாதங்களுக்கு வாருங்கள்,....

கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு மீண்டும் நன்றி.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

நண்பரே, தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.கடந்த 5 ஆண்டுகளாக வலைஉலகில் கருத்துரை இடுகின்றேன்.3 ஆண்டுகளாக எழுதவும் செய்கின்றேன். எங்காவது ஒரு இடத்தில் நான் என் மதம் தொடர்பாகவோ அல்லது எந்த ஒரு மதம் தொடர்பாகவோ ஏதேனும் ஒரு இடத்தில்...ஒரே ஒரு இடத்தில் விவாதத்தில் பங்குபெற்றிருக்கின்றேன் எனக் காட்டுங்கள் பார்ப்போம்.நான் போற்றுவதும் மனிதநேயம்தான்.

நான் விவாதிப்போம் என்று சொன்னது கலைஞர் பெரியாரை குழிதோண்டிப் புதைக்கின்றார் என்று சொன்ன கருத்தைத்தான். நான் கலைஞர் இல்லை என்று மறுத்து எழுதி அதன் கீழ்தான் விவாதிப்போம் என்று சொன்னேன்.இதில் மதவிவாதம் என்று எப்படி தவறாகப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொள்ளும்படி என் எழுத்து இருந்ததற்காக வருத்தமும்,மன்னிப்பும் கோருகின்றேன். கலைஞர் ஒரு இயக்கத்தின் தலைவர்,ஒரு மாநிலத்தின் முதல்வர்.அவர் தனி நபரும் அல்ல,அவர் செயல்கள் தனிநபர் செயல்களும் அல்ல.இது பொதுவான விஷயம் என்றே நினைக்கின்றேன். இல்லை என்று நீங்கள் கருதினால் “கலைஞர் பெரியாரின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்கவில்லை” என்ற என் கருத்தை மட்டும் அழுத்தமாகப் பதிந்துவிட்டு செல்கின்றேன்.

உங்களுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தியற்கு மீண்டும் மன்னிப்பு கோருகின்றேன்.

நன்றி.

கார்க்கிபவா சொன்னது…

பெரியாரின் கொள்கைகள் மட்டுமல்ல, எவரின் கருத்துமே காலாத்தால் அழியக்கூடியவையே. கடனே கூடாது என்றார் வள்ளுவர். இன்று கடன் வாங்காமால் வீடு வாங்க முடியுமா?

பெரியார் பெரியார்தான். அவர் அனைவரையும் பகுத்தறிவோடு சிந்திக்க சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு, எந்த ஒரு விஷயத்திலும் என்னறிவு சொல்வதை செய்ய வேண்டுமென்று என்றிருக்கிறேன். நானும் பெரியாரிஸ்ட் தானே?

அப்துல்லா ஒரு மதவாதி என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால் அவர் எந்த மத்ததின் வாதி என்பதில் அவ்வபோது சந்தேகம் ஏறப்டுவதுண்டு

வெண்பூ சொன்னது…

//
நான் மத நம்பிக்கை உள்ளவர்களுடன் விவாதிக்க விரும்பவில்லை
//

இதுல‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌... ம‌த‌ ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ர்க‌ளுட‌ன் விவாதிக்க‌ மாட்டீங்க‌ன்னா, எந்த‌ ம‌த‌த்தையும் ஆத‌ரிக்காத‌ முழு நாத்திக‌ர்க‌ளிட‌ம் ம‌ட்டும்தான் பேசுவீங்க‌ளா? அப்ப‌டி பாத்தா த‌மிழ்நாட்டுல‌ வ‌ற‌ட்டு பிடிவாத்த‌த்தோட‌ இன்னும் 99 பேர் இருப்பாங்க‌, தேடிப் பாத்து பேசுங்க‌..

அப்புற‌ம் அப்துல்லாவோட‌ ம‌த‌ ந‌ம்பிக்கை உங்க‌ளை பாதிக்காத‌ வ‌ரைக்கும் நீங்க‌ ஏன் க‌வ‌லைப்ப‌டுறீங்க‌? அப்ப‌ ம‌சூதிக்கு போற‌ முஸ்லீம், ச‌ர்ச்சுக்கு போற‌ கிறித்துவ‌ன், கோவிலுக்கு போற‌ ஹிந்து யாருமே உங்க‌கிட்ட‌ பேச‌க்கூடாதா? சொல்லிட்டீங்க‌ன்னா, ஒதுங்கியே இருப்போம்...

ஷர்புதீன் சொன்னது…

@GAARGI
அப்துல்லா ஒரு மதவாதி என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால் அவர் எந்த மத்ததின் வாதி என்பதில் அவ்வபோது சந்தேகம் ஏறப்டுவதுண்டு

:)

thalaivan சொன்னது…

Atheists are anti - Islamic .. They can never be tolerated by Islam. Periar did not believe in God. So he is anti Islam.. Calling him Islam friendly is foolish gimmick to attract Tamil Muslims!

Unknown சொன்னது…

நன்றி..

கார்க்கி
வெண்பூ
ஷர்புதீன்
தலைவன்

Unknown சொன்னது…

வணக்கம் அப்துல்லா நான் தவறாக புரிந்துகொள்ளவில்லை நீங்கள் மன்னிப்பும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. கலைஞர் தன் மஞ்சள் துண்டின் மகிமையை முதலில் விளக்குவாரா?.. பெரியாரின் கருத்துகளை நாட்டுடமை ஆக்காமைக்கு காரணம் என்ன? அவை நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அது கூடிய மட்டும் மலிவு விலை பதிப்பாக எல்லோரிடமும் சென்று சேர்ந்திருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் வந்தது. எத்தனை கோவில்களில் அப்படி நடக்கிறது?

இதெற்கெல்லாம் என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள்?

அப்புறம் வெண்பூ அவர்களுக்கு வணக்கம், மத விவாதங்கள் பதிவுலகத்தில் இதுவரை ஆரோக்கியமாக விவாதம் செய்யப்படவில்லை, அதனால்தான் அதை தவிர்க்கிறேன். தனி மனித நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் விவாதங்கள் ஒரு கட்டத்தில் தனி மனித தாக்குதல் ஆக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது.

கார்க்கி சொன்னது மாதிரி இன்று வள்ளுவர் கூட கடன் வாங்கித்தான் வீடு வாங்கவேண்டும், இதுதான் எதார்த்தம்.

எந்த கடவுளும் பசிக்கும் ஒருவனுக்கு உணவு தரவில்லை.

மீண்டும் சொல்கிறேன், நீங்கள் மனிதர்களாக இருந்தால் கடவுள் தேவையில்லை....

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

நண்பர் செந்தில்,

அய்யாவின் கொள்கைகள் பலவற்றைச் சட்டமாக்கிது கலைஞர்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.பொறுப்பில் இல்லாத நேரத்தில் நாம் நினைப்பதைப் பேசுவதற்கும்,நாமே அதிகாரத்தில் இருக்கும்போது அதை நிறைவேற்ற முடியாமல் போவதற்கும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளாய் இருந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கலைஞர் 5 ஆம் முறையாக முதல்வரானபோது சென்ற வருடம்தானே நிறைவேற்ற முடிந்தது.ஏன் அவர் முதல் முறையாக முதல்வரான வருடமே(1969) செய்ய முடியவில்லை??? எத்தனையோ அரசு நடைமுறைகள்,சட்டக் குறுக்கீடுகள்,ஆட்சி மாற்றம் இத்தனையும் தாண்டி இப்போதுதான் இதை சாதிக்க முடிந்திருக்கின்றது. நான் விசாரித்த வரையில் இதுவரை தமிழகம் முழுவதும் 67 பிற சாதியினர் அர்சகர்களாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கோவில்களில் அர்சகர்களாக நியமிக்கப்பட்டு பணிபுரிகின்றர். முதன் முதலில் தமிழகத்தில் இடஒதுக்கிட்டுச் சட்டம் உரியமுறையில் நிறைவேற்றப்பட்டபோது (அதுவும் பெரியார் கொள்கைதான்.செய்தது கலைஞர்தான்.வருடம் 1970)
அப்போது பணியில் இருந்த உயர்சாதியினரை வீட்டுக்குப் போங்கள் என்று அனுப்பிவிடவில்லை.அனுப்பிவிடவும் முடியாது.அவர்கள் பணி ஓய்வு பெற்று அந்த இடம் காலியானபோது இட ஒதுக்கீட்டின்படி, சமூகநீதியின்படி அந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதேதான் இப்போது அர்சகர் விஷயத்திலும். ஒரே நாளில் எல்லாரையும் போங்கள் என்று அனுப்பிவிட முடியாது.காலியாக காலியாக சட்டப்படி நிரப்பப்படும்.

மகளிர் இட ஒதுக்கீடு(1996),மகளிர் சொத்து சம உரிமைச் சட்டம்(1989),அடிப்படைக் கல்வி கட்டாயச் சட்டம்(2009) என்று அய்யாவின் பலநூறு கனவுகளைச் சட்டமாக்கியது கலைஞர் அரசே.

1989 ல் அய்யாவின் எழுத்துக்களை அரசுடமையாக்க கலைஞர் அரசு முயற்சித்தபோது வீரமணி அவர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டார். இன்று அய்யாவின் நூல்கள் அரசுடமையாகாமல் குறுக்கே நந்தியாய் இருப்பது அதுதான்.கலைஞர் அல்ல.

இன்றைக்கு தமிழகத்து வீதிகளெங்கும் பெரியாரின் சிலைகள், அரசுக் கட்டிடங்கள் சரிபாதிக்கு பெரியாரின் பெயர்,அரசின் திட்டங்கள் பலவற்றுக்குப் பெரியாரின் பெயர் என தமிழக மக்களை இன்றும் பெரியாரின் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கச் செய்தது கலைஞர்தான். பெரியாருக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால்கூட இந்த அளவுக்குச் செய்திருப்பாரா என்பது சந்தேகமே!

எங்களுக்கு இவையெல்லாம் தெரிகின்றது.ஆனால் உங்களுக்கு கலைஞரின் மஞ்சள் துண்டு மட்டுமே தெரிகின்றது :)).

பலமுறை சொல்லிவிட்டார்...எம்.ஜி.யாருக்கு கண்ணாடியும்,தொப்பியும்போல, பெரியாருக்கு கண்ணாடியும்,தாடியும்போல எனக்கு கண்ணாடியும் மஞ்சள் துண்டும் ஒரு அடையாளம் என்று. ஒருவாதத்திற்காக அவர் ராசிபார்த்து போட்டார் என்று வைத்துக் கொள்வோம்.அப்படி இருந்தால் 98 நாடாளுமன்றத் தேர்தலிலும்,2001 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்த போது, நிறத்தால் வெற்றிதோல்வி இல்லை என்று தூக்கி எறிந்து இருப்பாரே?? ஏன் இன்னும் அணிகின்றார். அதனால்தான் அவர் அதை அடையாளமாக அணிகின்றார் என நானும் நம்புகின்றேன்.

Unknown சொன்னது…

அன்பு அப்துல்லாவுக்கு,
விரிவாக எழுதி உள்ளீர்கள் . இதை எல்லாம் செய்தது கலைஞரின் கடமை, பெரியாரின் வழிவந்த அவர் இன்னும் செய்யவேண்டிய காரியங்கள் ஏராளம் இருக்கின்றன. பெரியாரின் சிலைகளும், பெயர்களும் வைத்தால் அது பெரியாருக்கு செய்த மரியாதை மட்டுமே. குடிக்க இங்கு நல்ல தண்ணீர் கிடையாது, மின்சாரம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு புழுக்கத்தில் நெளிகிறோம், இலவச தொலைக்காட்சி ஒரு படு மோசமான திட்டம். மோசமான நிர்வாக அமைப்புகளைக் கொண்ட இலங்கையில் கூட அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால் இங்கு காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் அரசு பணம் தனியாருக்கு போகிறது. அந்த பணத்தைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை ஏன் மேம்படுத்தக் கூடாது. இன்னும் ஏராளம் சொல்லலாம் அதற்க்கு தனிபதிவு போடவேண்டியிருக்கும்.

பெரியாருக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பீர்கள்!

தன் வாழ்வின் கடைசி மூச்சுவரை இந்த சமுயாதம் முன்னேற பாடுபட்ட அந்த கிழவன் அத்தனை சொத்துகளுக்கும் கணக்கு சொல்லி, அதனை இந்த சமூகத்திற்கே விட்டுப் போனான்..

கலைஞர் ??????

hariharan சொன்னது…

பதிவாளரின் பதிவைவிட அவரின் மறுமொழிகள் தான் சிறப்பாக இருக்கிறது, ஒரு நாத்திகவாதி ஆத்திகவாதியிடம் மதம் குறித்து தர்க்கம் செய்தால் அது முடிவில்லாதது என்பது மிகச்சரியே!

ஆனால் வீரமணி பற்றி இங்கு விவாதிக்கும் போது பெரியாரின் எழுத்துக்க்ளை நாட்டுடமையாக்க தடைக்கல்லைப் போட்டது வீரமணி தான், அதற்கு துணை போவது மாண்புமிகு முதல்வர் தான்.

Unknown சொன்னது…

//பதிவாளரின் பதிவைவிட அவரின் மறுமொழிகள் தான் சிறப்பாக இருக்கிறது, ஒரு நாத்திகவாதி ஆத்திகவாதியிடம் மதம் குறித்து தர்க்கம் செய்தால் அது முடிவில்லாதது என்பது மிகச்சரியே! //

புரிந்து கொண்டு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஹரிஹரன் ...

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//விரிவாக எழுதி உள்ளீர்கள் . இதை எல்லாம் செய்தது கலைஞரின் கடமை

//


செந்தில் அண்ணா, முதல்ல என்ன செஞ்சாரு?ஒன்னுமே பண்ணலைன்னீங்க. என்ன செஞ்சாருன்னு சொன்னா அதைக் கடமைங்குறீங்க :)

//குடிக்க இங்கு நல்ல தண்ணீர் கிடையாது //


இன்றைக்கு வறட்சி ஊரான இராமநாதபுரத்தில்கூட கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் கிடைக்கின்றது. 15 வருடங்களுக்கு முன்பு எங்கள் புதுக்கோட்டையில் குடிநீர் கிடைக்காமல் இரயில் நிலையம் சென்று இரயில் நிற்கும் 10 நிமிடத்துக்குள் அதில் ஏறி கழிவறைக் குழாயில் பிடித்து வருவோம்.இன்று எங்கள் ஊரில் அந்த நிலை இல்லை.பஞ்சாயத்துதோறும் ஒருங்கினைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்சனை பெரும்பாலும் சரி செய்யப்பட்டு இருக்கின்றது. ஒரு 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடிநீர் பிரச்சனை இன்று அந்த அளவிற்கு இல்லை என்பதை மனசாட்சியுடைய அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.


//மின்சாரம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு புழுக்கத்தில் நெளிகிறோம் //

மின்சாரப் பிரச்சனை இருக்கின்றது.ஆனால் மின்சாரம் தனியாருக்கு எப்போது தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது??? இன்னும் மின்சார வாரியம் அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றது. தண்ணீர் பிரச்சனையோ,மின்சாரப் பிரச்சனையோ அதற்கு ஒட்டுமொத்தமாக கலைஞரை எப்படி குறை சொல்ல முடியும்??? கலைஞர் பொறுப்பேற்ற கடந்த 41 வருடங்களில் 16 வருடமாகத்தான் அவர் ஆட்சியில் இருக்கின்றார்.மற்ற 25 ஆண்டுகள் பிறர் ஆட்சிதான் இருந்திருக்கின்றது என்பதையும் நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது.1996-2001 ல் அவர் மின்சார தயாரிப்புத் திட்டங்களை நிறைவேற்றினார்(மேட்டூர்,எண்ணூர் மின் விரிவாக்கத் திட்டம்) அதனால் 2001-2006 ல் அதிமுக ஆட்சியில் தட்டுப்பாடு இல்லை. அவர்கள் விரிவாக்கத்தை செய்யத்தவறியதன் பலனை இப்போது திமுக அனுபவிக்கின்றது.


//மோசமான நிர்வாக அமைப்புகளைக் கொண்ட இலங்கையில் கூட அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இயங்குகின்றன //

அப்படியா?? அப்படியானால் ஏன் சிரிமாவோ பண்டாரநாயக்கா மூட்டு வலிக்கு வைத்தியம் பார்க்க இங்க வந்தார்??அப்புறம் நம்முடைய அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைகள் கொழும்பு நகரில் பிராஞ்ச் திறந்து எப்படி கொடிகட்டிப் பறக்கின்றது???

//ஆனால் இங்கு காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் அரசு பணம் தனியாருக்கு போகிறது. அந்த பணத்தைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை ஏன் மேம்படுத்தக் கூடாது //

இதைப்பற்றி விரிவாக நம்முடைய பதிவர் மற்றும் அரசு மருத்துவர் டாக்டர்.புருனோ அவர்கள் விரிவாகப் பதிவிட்டு இருக்கின்றார்.மேலதிகத் தகவல்களை அங்கு பெறலாம்.


//இன்னும் ஏராளம் சொல்லலாம் //

எவ்வளவு சொன்னாலும் என் பதில் கலைஞர் ஆட்சியை 16 வருடமாகப் பாருங்கள். 41 வருடமாகப் பார்க்காதீர்கள் என்பதே. அவர் செய்த அனைத்தும் 16 வருட காலத்தில் செய்யப்பட்டதே.

//தன் வாழ்வின் கடைசி மூச்சுவரை இந்த சமுயாதம் முன்னேற பாடுபட்ட அந்த கிழவன் அத்தனை சொத்துகளுக்கும் கணக்கு சொல்லி, அதனை இந்த சமூகத்திற்கே விட்டுப் போனான்..

கலைஞர் ?????? //


அய்யா மறைந்து விட்டார். கலைஞர் இன்றும் இருக்கின்றார்.இருவரையும் தற்போது ஒப்பிட முடியாது.குடியிருக்கும் வீட்டை மருத்துவமனைக்கு தந்துவிட்டார். பணத்தை அறக்கட்டளைக்கு குடுத்து விட்டார். மீதம் செய்ய கலைஞருக்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றது. கலைஞரின் காலத்திற்குப் பின் அய்யாவையும்,கலைஞரையும் இந்த விஷயத்தில் ஒப்பிடுவோம். நீங்கள் சொல்வது சரி என்றால் நான் ஒத்துக் கொள்கின்றேன். நான் சொன்னது சரி என்றால் நீங்கள் ஒத்துக்கொள்ளப் போகின்றீர்கள் :))

நன்றி.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

/பெரியாரின் எழுத்துக்க்ளை நாட்டுடமையாக்க தடைக்கல்லைப் போட்டது வீரமணி தான், அதற்கு துணை போவது மாண்புமிகு முதல்வர் தான்.

//

ஹரிஹரன் அண்ணா,

திரு.வீரமணி அவர்கள் திமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர் அல்ல, கலைஞர் பேச்சைக் கேட்பதற்கு. இந்த விஷயத்தில் கலைஞர் வீரமணியிடம் சொல்லத்தான் முடியும்.உத்தரவிட முடியாது. கேட்பதும் கேட்காததும் அவர் இஷ்டம். இதில் கலைஞர் எப்படி துணைபோக முடியும்?? புரியலைண்ணா எனக்கு :(

Unknown சொன்னது…

நன்றி அப்துல்லா,

ஒரு வகையில் இதை கலைஞரிடம் எதிர்பார்ப்பதற்கு காரணம், இதை மற்றவர்களிடம் யோசிக்க கூட முடியாது என்பதால்தான்.
எப்படியோ நீங்கள் கலைஞரை விட்டுகொடுக்க மாட்டீர்கள், எனக்கும் ஒரு காலத்தில் அவர் ஒரு ஆதர்சம், ஆனால் இப்போ????

குசும்பன் சொன்னது…

அப்துல்லா அண்ணே நீ புள்ளி விவரபுலின்னு தெரியாம பேசிட்டார் போல:)))

//பெரியாருக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால்கூட இந்த அளவுக்குச் செய்திருப்பாரா என்பது சந்தேகமே!
//

கலைஞருக்கு இருக்கும் பிள்ளைகள் கூட இந்த அளவுக்கு விவரமாக புள்ளிவிவரத்தோடு பேசுவார்களா என்பது சந்தேகமே:))) நீ நடத்துன்னே:)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//ஒரு வகையில் இதை கலைஞரிடம் எதிர்பார்ப்பதற்கு காரணம், இதை மற்றவர்களிடம் யோசிக்க கூட முடியாது என்பதால்தான்

//


உண்மைதான்ணே. கலைஞரின் பெரிய பலமும்,பெரிய பலவீனமும் அனைவரும் அவரை நம்மாளுன்னு நினைப்பதுதான்.

இலங்கை பிரச்சனை சமயத்தில் இயக்குனர் சீமானிடம் நான் “தலைவரைத் திட்டுறீங்களே..இப்ப அந்த அம்மா பவரில் இருந்தா இப்படி திட்டுவீங்களான்னு கேட்டேன். அதற்கு அவர் டேய்!உரிமை இருக்குற இடத்தைத்தாண்டா திட்ட முடியும்.அந்த அம்மாவா இருந்தா நான் ஏன் தொண்ட கிழிய இப்படிக் கத்தப் போறேன்னாரு.


//எப்படியோ நீங்கள் கலைஞரை விட்டுகொடுக்க மாட்டீர்கள் //

வேற நாதி எனக்கு :))))


//எனக்கும் ஒரு காலத்தில் அவர் ஒரு ஆதர்சம், ஆனால் இப்போ???? //

ஒரு பத்து நிமிஷம் உங்ககிட்ட பேசினாப் போதும்.மீண்டும் உங்களைப் பழைய ஆளாக்கிருவேன்
:))))))))

Unknown சொன்னது…

//ஒரு பத்து நிமிஷம் உங்ககிட்ட பேசினாப் போதும்.மீண்டும் உங்களைப் பழைய ஆளாக்கிருவேன்//

அண்ணே "தமிழ் என்றால் கலைஞர்" அப்படி நினைத்து வாழ்ந்து வந்தவன் நான், இப்போது நீங்கள் பேசுவது போல அப்போது ரோட்டில் அவருக்காக சண்டை போட்டவன்,
ஆனால் அவர் இப்போது அரசு பள்ளிகளை கண்டு கொள்வதே இல்லை, நூலகங்கள் வளர்க்கபடாமல் கிடக்கிறது, அதன் போன வருட நிதி அனைத்தும் கோட்டூர் புறத்தில் அமையவிருக்கும்
உலகத்தரமான நூலகத்திற்கு திருப்பி விடப்பட்டது. நான் அவருக்கு தலை வணங்கும் ஒரே விஷயம் அவரின் ஒப்பிட இயலா உழைப்பு, அவர் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் அமையும் கட்டிடங்கள்,

அப்புறம் ஜெயாவை இவரோடு ஒப்பிட வேண்டாம், சீமான் சொன்னது மாதிரி அதுக்கு பேசாம இருக்கலாம். அந்த அம்மாவெல்லாம் நம்மை ஆண்டது நம் துரதிர்ஷ்டம்..

Unknown சொன்னது…

//கலைஞருக்கு இருக்கும் பிள்ளைகள் கூட இந்த அளவுக்கு விவரமாக புள்ளிவிவரத்தோடு பேசுவார்களா என்பது சந்தேகமே:))) நீ நடத்துன்னே://

வாங்க குசும்பன் அண்ணே.. அப்துல்லா அண்ணன் கிட்ட இன்னும் நாலு வார்த்தை கேளுங்க ..

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//வாங்க குசும்பன் அண்ணே.. அப்துல்லா அண்ணன் கிட்ட இன்னும் நாலு வார்த்தை கேளுங்க

//

செந்தில் அண்ணே, பேச்சு பேச்சா இருக்கணும். அந்தாள்கிட்ட மாட்டிவுட்டு.....இப்படி வயலண்ஸ் எல்லாம் கூடாது :)))))))

Unknown சொன்னது…

//செந்தில் அண்ணே, பேச்சு பேச்சா இருக்கணும். அந்தாள்கிட்ட மாட்டிவுட்டு.....இப்படி வயலண்ஸ் எல்லாம் கூடாது :)))))))//

அண்ணே ஒண்டி ஆளா என்னால சமாளிக்க முடியல, அதுக்குதான் அவர கூப்பிட்டேன்,
கலைஞர் ஆளுகிட்ட வயலன்சா? ஆட்டோ வருமே அண்ணாச்சி .

கடையநல்லுார் மசூது சொன்னது…

ஸலாம்

நண்பரே!

சற்று பொறுமையாக இதனைப் பார்த்து சிந்தியுங்கள்.

நாத்திகரின் மூட நம்பிக்கை

http://onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/

இறைவன் இருக்கின்றானா?

http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/


குர்ஆன் இறைவேதமா? (நாத்திகருடன்)

http://onlinepj.com/bayan-video/vivathangal/quran_irai_vethama/

இது சம்பந்தமாக தொடர்பு கொள்ளுங்கள்

masoodtntj@gmail.com

Unknown சொன்னது…

//சற்று பொறுமையாக இதனைப் பார்த்து சிந்தியுங்கள்.//

நன்றி நண்பா, கேட்டுவிட்டு வருகிறேன்

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு செந்தில்,

இங்கே உங்களின் டைட்டில்லே தவறு ஐயா!

இஸ்லாமியர் எங்கே பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள்? அவர்கள் ஏற்றுக்கொள்வது பெரியாரின் இந்து மத எதிர்ப்பு மட்டுமே! அது மிக்க
விலாவாரியாக பெரியாரால் செய்யப்பட்டதால், அவரை மற்ற "மத" காரர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது! அவ்வளவே!

ஈ வே ராவின் கடவுள் மறுப்பை "இந்து மத" மறுப்பு என்ற இடத்தில் மட்டுமே வைத்து, வேண்டுமென்று அங்கேயே நிறுத்திக்கொண்டு, அவர் 'எல்லா கடவுள்களையும் "இல்லை" என்று சொல்லவில்லை, சொன்னது " இந்து மதத்தை" மட்டுமே என்று ஒரு புதிய வெங்காய தோசையை சுட்டு , அதற்க்கு இந்து மதத்தை மட்டும் திட்டி "பகுத்தறிவுவாதி" என்று பட்டம் பெற்ற ஏனைய கொள்கை கோமான்களின் கையிலிருந்து எண்ணையை வாங்கி, இதோ பார், எல்லோரும் சொல்லிவிட்டார்கள் இந்து மதம் பொய் மதம், எங்கள் மதமே மெய் மதம் என்று selective ரீடிங் செய்து ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பதுஎந்த விதத்தில் பகுத்தறிவு?

மறுபடியும் சொல்லுகின்றேன், இஸ்லாமியர்களுக்கு ஈ வே ராவை பிடித்த்திருப்பதின் கரணம் அவர் இந்து மதத்தை திட்டியதால் மட்டுமே! அவரின் மற்ற கருத்துகளால் இல்லை!! (ஒரு இஸ்லாமிய பெண் பெரியார் சொன்ன பெண்ணைப்போல இருந்துதான் பார்க்கட்டுமே, இருக்கதான் முடியுமா? விடுவார்களா??)

நண்பர் திரு அப்துல்லாஹ் கோபித்து கொள்ளக்கூடாது - கொடுமை என்னவென்றால், தன் மத அடையாளங்களை அணிந்துகொண்டு, எங்கள கடவுள்தான்
எல்லாம், எங்கள் இறைதூதர் தான் எல்லாம் என்று அடித்துபேசி, தன் குல பெண்களுக்கு திரை இட்டு மூடி அதை பற்றி எல்லாம் சிறிதும் கவலைபடாமல், பொருட்படுத்தாமல், பெரியாரின் அடிபொடிகளை தங்கள் மத்தியில் பேசச்சொல்லி கேட்பது எப்பேர்பட்ட அசட்டுத்தனம்??

அதையும் விடுங்க -

கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணகுபவன் காட்டுமிராண்டி

- மேலே உள்ளதற்கு இஸ்லாமியரின் விளக்கம் என்ன?

இஸ்லாமியர்க்கு கடவுளை யார் கற்பித்தது??? ஆபிரஹாம் (இப்ராகிம்) , மோசேஸ் (மூசா) மற்றும் பலர், அனால் கடைசியாக உங்களின் தூதர் முகமது! அப்போ இவர்களெல்லாம்????
கடவுளை பரப்புகிறவன் - நீங்கள் எல்லாம் தினமும் மைக் போட்டு கூபிடுகிரீர்களே, மேலும் உண்மைமதம் இதுவே என்று பல வெப் சைட் வைத்து பரப்புகிறீர்களே, அவ்வளவு என், உங்கள் இரு தூதரே பரப்பினாரே, அப்பொழுது அவர்களெல்லாம்????
கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி - ஐந்து வேளை கண்டிப்பாக, அப்போ????

இஸ்லாமியருக்கு பெரியாரின் தேவை, அவரின் கருத்துகாளால் அன்று, அவரின் இந்து மத எதிர்ப்பினால் மட்டுமே!

நான் சொல்லுவது ஒன்றுதான் - பெரியார் தாடியின் பின்னால் மறைந்து கொண்டு இந்து மதத்தை இகழ்ந்து பேசும் இந்து அல்லாதவர், அப்படி மறைந்து இருப்பதற்கு அர்த்தம் இந்து மதத்தை தாக்குவதற்கு மட்டுமே! பெரியாரின் கருத்துகளின்பால் கொண்ட பற்றுதலால் இல்லை!

பெரியாரை சிலாகித்து, அவரின் கொள்கைகளை ரசிப்பவர் குறைந்த பட்சம், மதம் மற்றும் அதன் மூலம் வந்த சடங்குகளை நிராகரிப்பு , அதிகபட்சம் கடவுள் மறுப்பு என்ற எல்லைகளுக்குள் இருக்க வேண்டும்! அப்படி இருந்தால், குறைந்த பட்சம் ஒருவரின் "ஒரே உண்மையான" புத்தகங்கள், அவை கூறும் ஆயிரம் சடங்குகள் மற்றும் வழிமுறைகள் புரம்தள்ளப்படும், அதிக பட்சம் கடுவுள் இல்லை இல்லை இல்லை என்று சொல்லப்படும்!

இஸ்லாமியரை பொறுத்தவரையில், சத்தியமாக இந்த எல்லைகளுக்குள் ஒருவர் வந்துவிட்டால் அவர் இஸ்லாமியர் இல்லை என்றே வந்து முடியும்! ஏனென்றால், அவர்கள் ஒரே ஒரு கடவுளையாவது நம்பவேண்டும், அதுவும் உங்கள் இறை தூதர் சொன்ன கடவுளை, அதுவும் அவர் இறை தூதர் என்று முதலில் நம்பவேண்டும், மேலும் அவர் உங்களுக்கு கொடுத்த புத்தகமே உண்மையான புத்தகம், அவர் வாழ்வு நிகழ்வுகளே எல்லாவற்றிற்கும்
எடுத்துக்காட்டு என்று பல "நம்பிக்கைகள்' இருக்கவேண்டும்!

சொல்ல வருவது என்னவென்றால், அப்படி இஸ்லாமியர் கண்டிப்பாக வர முடியாமல் இருக்கும் ஒரு வட்டத்தில் பெரியாரிசம் இருக்கையில், அந்த பெரியாரிசத்தை நாங்கள் சிலாகிக்கிறோம், ஏற்கிறோம் என்று சொன்னால் அதற்க்கு அர்த்தமே இல்லை இந்து மத துவேஷத்தை தவிர!!

நன்றி

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//நண்பர் திரு அப்துல்லாஹ் கோபித்து கொள்ளக்கூடாது //

அண்ணன் நோ, நலமா??

நான் ஏன் கோவிச்சுக்கப்போறேன்?? உங்க கருத்தை நீங்க சொல்றீங்க. ஆனா அண்ணன் செந்திலுக்குச் சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்...
’’கடந்த 5 ஆண்டுகளாக வலைஉலகில் கருத்துரை இடுகின்றேன்.3 ஆண்டுகளாக எழுதவும் செய்கின்றேன். எங்காவது ஒரு இடத்தில் நான் என் மதம் தொடர்பாகவோ அல்லது எந்த ஒரு மதம் தொடர்பாகவோ ஏதேனும் ஒரு இடத்தில்...ஒரே ஒரு இடத்தில் விவாதத்தில் பங்குபெற்றிருக்கின்றேன் எனக் காட்டுங்கள் பார்ப்போம் ‘’

நான் பங்கெடுப்பது இனம்,மொழி மற்றும் நான் சார்ந்த இயக்கம் தொடர்பான விவாதங்களில் மட்டும்தான்.மத விவாதங்களில் அல்ல. காரணம் அண்ணன் செந்தில் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல இரு எதிர் நம்பிக்கைகளின் விவாதம் “முடிவில்லாமல் நீளும்”.அதனால் முடிவுக்கு வருவது நட்புதான் :(

அதனால்தான் நீங்கள் எழுப்பிய சில தவறான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் விரும்பவில்லை.நீங்கள் எழுப்பிய சில நியாயமான கேள்விகளைக் குறிப்பிட்டு அது எது என்று காட்டி ஒத்துக்கொள்ளவும் விரும்பவில்லை :))

தினமும் தொழுகின்றேன்.இறைஅருளால் வருடம் தோறும் மெக்கா செல்கின்றேன்.இருப்பினும் என்னைப் பொறுத்த அளவில் வீட்டிற்கு வெளியே வரும்போது மதம் என்னோடு வர நான் விரும்புவதும் இல்லை.அனுமதிப்பதும் இல்லை. அதனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போவதற்கு வருந்துகின்றேன். புரிதலுக்கு நன்றி.

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு அப்துல்லா,

நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் கூறியது உங்களை பற்றி இல்லவே இல்லை!

நான் சொல்ல வந்தது, ஒரு முழுவதும் இஸ்லாமிய சம்பந்தமான கூட்டத்தில், இஸ்லாமியர் எல்லோரும் தங்கள் முழு அடையாளங்களுடன் கூடி, அங்கே பெரியாரின் வழி நடப்பவர்கள் என்று சொல்லுபவர்களை கூட்டி வந்து அவர்கள் பேசுவதையும் கேட்டு, நாங்கள் இதை ஏற்கிறோம் என்று சொல்லுவதைப்போன்ற பொய்மை இங்கே நடந்து கொண்டிருக்கிறது! அதற்காகதான் நான் கேட்டுது சில கேள்விகள்!

//’’கடந்த 5 ஆண்டுகளாக வலைஉலகில் கருத்துரை இடுகின்றேன்.3 ஆண்டுகளாக எழுதவும் செய்கின்றேன். எங்காவது ஒரு இடத்தில் நான் என் மதம் தொடர்பாகவோ அல்லது எந்த ஒரு மதம் தொடர்பாகவோ ஏதேனும் ஒரு இடத்தில்...ஒரே ஒரு இடத்தில் விவாதத்தில் பங்குபெற்றிருக்கின்றேன் எனக் காட்டுங்கள் பார்ப்போம் ‘’// - முழுவதும் ஒப்புக்கொள்கிறேன்! No doubts.

//நான் பங்கெடுப்பது இனம்,மொழி மற்றும் நான் சார்ந்த இயக்கம் தொடர்பான விவாதங்களில் மட்டும்தான்.மத விவாதங்களில் அல்ல. காரணம் அண்ணன் செந்தில் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல இரு எதிர் நம்பிக்கைகளின் விவாதம் “முடிவில்லாமல் நீளும்”.அதனால் முடிவுக்கு வருவது நட்புதான் :( // - ஒப்புக்கொள்கிறேன்! அதனால்தான் சொல்லுகின்றேன், நான் எழுதியது உங்களைப்போன்றவர்களுக்காக இல்லை!

// அதனால்தான் நீங்கள் எழுப்பிய சில தவறான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் விரும்பவில்லை.நீங்கள் எழுப்பிய சில நியாயமான கேள்விகளைக் குறிப்பிட்டு அது எது என்று காட்டி ஒத்துக்கொள்ளவும் விரும்பவில்லை :))
தினமும் தொழுகின்றேன்.இறைஅருளால் வருடம் தோறும் மெக்கா செல்கின்றேன்.இருப்பினும் என்னைப் பொறுத்த அளவில் வீட்டிற்கு வெளியே வரும்போது மதம் என்னோடு வர நான் விரும்புவதும் இல்லை.அனுமதிப்பதும் இல்லை. அதனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போவதற்கு வருந்துகின்றேன். புரிதலுக்கு நன்றி. // - எனக்கு மிக நெருக்கமான இஸ்லாமிய நண்பர்கள் உண்டு! உங்களையும் என்னையும் போன்ற சராசரி மனிதர்களே அவர்களும்! ஆதலால் அவர்களை பற்றி அல்ல நான் எழுதியது!

உங்களின் நினைப்பு முழுவதுமாக புரிகிறது! ஒன்று மட்டும் சொல்லுகின்றேன். மறைந்த அயோதல்லா கொமேனி அவர்கள் என்னதான் மதவாதி , மத அடிப்படைவாதி என்றாலும், கிருத்துவ அமெரிக்காவை (அவர் சொன்னது அது) அவர் முழுவதும் வெறுத்தாலும், அமெரிக்காவை சோவியத் ரஷ்யா வெறுக்கிறது என்ற காரணத்திற்க்காக ரஷ்யாவை ஏற்றுக்கொள்ளவில்லை, பாராட்டவும் இல்லை! ரஷ்ய ஆளும் சமுதாயமே, கடவுள் இல்லை என்பதை துறந்து விட்டு, எம்மதம் பக்கம் வந்தால் உங்களை ஏற்றுகொள்வேன் என்று கூறினார்! அந்த ஒரு மதவாதியிடம் இருந்த ஒரு அடிப்படை நாணயம் இங்கே பலருக்கு இல்லை! அதை எல்லாம் பொருட்படுத்தாத இவர்கள் மத்தியில் வந்து பேசும் "பகுத்தறிவு புண்ணாக்குகளுக்கு" கூட சுத்தமாக இல்லை! நான் சொல்லவந்தது அதுதான்! இஸ்லாமியர் ஒரு நாத்திக வழிமுறையை (போதிக்க பட்டதில் நாத்தீகம் என்பது பலவிடயங்களில் ஒன்றாக இருந்தாலும்) பாராட்ட எத்தனித்தால்
அதன் காரணம் அந்த நாத்தீகம் தான் சாரா மற்ற மதத்தை மட்டும் பதம் பார்ப்பதால் மட்டுமே!

நன்றி

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அன்பின் அண்ணன் நோ,

நான் தவறாகவெல்லாம் புரிந்து கொள்ளவில்லை.காரணம் நீங்கள் குறிப்பிடுவது என்னை அல்ல என்பதை நான் அறிவேன்.

நானும் பதிலுரைத்தது உங்களுக்கல்ல. இங்கே புதிதாக வரும் சிலர் நான் பதில் சொல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கலாம் அல்லவா?? அவர்களுக்கு என் நிலைப்பாடு புரிய வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் பதில் சொன்னேன்.

கொமேனி - //நீங்கள் எழுப்பிய சில நியாயமான கேள்விகளைக் குறிப்பிட்டு அது எது என்று காட்டி ஒத்துக்கொள்ளவும் விரும்பவில்லை :))

//

நான் போன பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன்..நீங்கள் எழுப்பும் சில கேள்விகளில் நியாயம் இருக்கின்றது என்று :))

vinthaimanithan சொன்னது…

ஆமா எல்லாரும் பெரியாரை வெறும் கடவுள்மறுப்பாளராக மட்டும் சுருக்கிவிட்டீர்களே!!! அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு...