31 மே, 2010

பதிவர்கள் - பயோடேட்டா

பெயர்                                   : பதிவர்கள்
இயற்பெயர்                        : 'எலக்கிய’ வியாதிகள் 
தலைவர்                             : தலைவரே என்று எல்லோரும் அழைத்துக் கொள்வதால், எல்லோரும்..
துணை தலைவர்கள்       : தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்கள்
மேலும் துணைத் தலைவர்கள்         : பாலோயர்கள்
வயது                                   : நடைவண்டி தேவைப்படும் வயது
தொழில்                              : மொக்கை போடுவது (உபதொழில்: க்ரூப் சேர்த்து உள்ளரசியல் செய்வது)  
பலம்                                    : தமிழ்மணம், தமிளிஷ்
பலவீனம்                            : தனிமனித தாக்குதல்
நீண்ட கால சாதனைகள்          : எங்களுக்கும் எழுத வரும்ல 
சமீபத்திய சாதனைகள்             : வெகுஜன ஊடகங்களால் கவனிக்கப் படுவது
நீண்ட கால எரிச்சல்                  : அநானி கமெண்ட் மற்றும் போலி டோண்டு வகையறா
சமீபத்திய எரிச்சல்                     : மொக்கை எழுதுபவர்கள் பிரபலம் ஆவது 
மக்கள்                                            : இணையத்தில் படிப்பவர்கள் மட்டும்
சொத்து மதிப்பு                            : ஒரு கணினி அல்லது லேப்டாப்
நண்பர்கள்                                    : ஓட்டு போடுபவர்கள்
எதிரிகள்                                        : எதிர் பதிவு போடுபவர்கள்
ஆசை                                             : பத்து லட்சம் ஹிட்டுகள் 
நிராசை                                         : ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது 
பாராட்டுக்குரியது                      : பதிவர் செந்தில்நாதனுக்கு நிதி திரட்டியது
பயம்                                : அரசியல் பதிவு போடுவதற்கும், அதற்கு பின்னூட்டம் இடுவதற்கும்
கோபம்                                        : சமூக சீரழிவுகள் பற்றி எழுதுபவருக்கு மட்டும் இருப்பது 
காணமல் போனவை              : சபை நாகரீகம்
புதியவை                                    : பதிவர் சங்கம் அல்லது குழுமம்
கருத்து                                        : நாம் பொது வெளியில் உபயோகிக்கும் வார்த்தை பிரயோகங்களை கேட்டு வருத்தப் படுகிறேன்..
டிஸ்கி                            : கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டியெல்லாம் ரொம்பப் பழசு... லேட்டஸ்ட் ட்ரெண்ட் ’யாரால ரொம்ப தூரத்துக்கு துப்ப முடியும்?’

37 கருத்துகள்:

பி.ப. ஆனைமுத்து சொன்னது…

பிரச்சனையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்கவும். நடுவில் நிற்பது ஏமாற்று வேலை.

Unknown சொன்னது…

//பிரச்சனையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்கவும். நடுவில் நிற்பது ஏமாற்று வேலை.//

எப்போதும் நான் நடுவில் நிற்க விரும்புவதில்லை ..

vinthaimanithan சொன்னது…

ஆனைமுத்து ஐயா, ரெண்டு பக்கமும் தப்பு இருந்தா அப்போ என்ன பண்ணலாம்? கொஞ்சம் விளக்குங்களேன்... (நான் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை- நோட் பண்ணுங்கப்பா!)

vinthaimanithan சொன்னது…

//எப்போதும் நான் நடுவில் நிற்க விரும்புவதில்லை ..//

ஏதாச்சும் ஒரு பக்கத்துக்கு வரிஞ்சி கட்டிட்டு அருவா தூக்கித்தான் பழக்கம்!!!!

vinthaimanithan சொன்னது…

சிங்கம்ல!!!

ஜெய்லானி சொன்னது…

//சமீபத்திய எரிச்சல்: மொக்கை எழுதுபவர்கள் பிரபலம் ஆவது //

என்ன பன்னுவது செந்தில் மக்கள் விரும்புவது அதைதானே !! இல்லாட்டி எல்லாருமே சீரியல் பாத்துகிட்டு ஒரு பாடு அழுதுகிட்டுஇல்ல இருப்பாங்க

நேசமித்ரன் சொன்னது…

//விந்தைமனிதன் சொன்னது…

சிங்கம்ல!!! //

:) Surya film ?

ஜெய்லானி சொன்னது…

//நிராசை : ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது //

நெத்தியடி

கோபம் : சமூக சீரழிவுகள் பற்றி எழுதுபவருக்கு மட்டும் இருப்பது //

ஹி..ஹி...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

போட்டுத்தாக்கு மாப்ள....

பனித்துளி சங்கர் சொன்னது…

இது கூட நல்லாதாங்க இருக்கு . கலக்குறீங்க போங்க

ஹேமா சொன்னது…

செந்தில் எப்பிடித்தான் யோசிப்பீங்களோ !

எல் கே சொன்னது…

nach

Karthick Chidambaram சொன்னது…

Kalakkal.

//காணமல் போனவை : சபை நாகரீகம்//

Ithai yaaravathu kavaningappa

Unknown சொன்னது…

//கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டியெல்லாம் ரொம்பப் பழசு... லேட்டஸ்ட் ட்ரெண்ட் ’யாரால ரொம்ப தூரத்துக்கு துப்ப முடியும்?//

Super

aanbu சொன்னது…

super

Bibiliobibuli சொன்னது…

பாத்து நண்பரே யாராவது எதிர் பயோடேட்டா போட்டிடப்போறாங்க.

Unknown சொன்னது…

//ஏதாச்சும் ஒரு பக்கத்துக்கு வரிஞ்சி கட்டிட்டு அருவா தூக்கித்தான் பழக்கம்!!!!//

இல்லீங்க்ணா.. ஓரமா ஒதுங்கிப் போய்டுவேன்னு சொன்னேன் ..

Unknown சொன்னது…

//என்ன பன்னுவது செந்தில் மக்கள் விரும்புவது அதைதானே !!//

நடத்துங்க.. நடுத்துங்க.. சிரிக்க மட்டும் சீரியல் போடுவதால் ..
கூடிய சீக்கிரம் மங்குனி டிவி தான் டாப்புக்கு வரும்..

Unknown சொன்னது…

சிங்கம்ல!!! //

:) Surya film ?//

நேத்துதான் ஆன்லைன்ல பாத்தாரு ..

Unknown சொன்னது…

//போட்டுத்தாக்கு மாப்ள...//

வாங்க மாப்ள.. நீங்க இன்னும் ஆரமிக்கவே இல்லியே...

Unknown சொன்னது…

//கலக்குறீங்க போங்க//

ஏதோ நம்மள முடிஞ்சது ..

Unknown சொன்னது…

//செந்தில் எப்பிடித்தான் யோசிப்பீங்களோ !//

ரூம் போட்டுதான் ..

Unknown சொன்னது…

நன்றி...

LK

Karthick Chidambaram

கலாநேசன்

senthil

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சமீபத்திய எரிச்சல் : மொக்கை எழுதுபவர்கள் பிரபலம் ஆவது //
என்னை அசிங்க படுத்தினதால நான் வெளி நடப்பு செய்யிறேன்.

//தைப் போட்டி, கட்டுரைப் போட்டியெல்லாம் ரொம்பப் பழசு... லேட்டஸ்ட் ட்ரெண்ட் ’யாரால ரொம்ப தூரத்துக்கு துப்ப முடியும்?’ //

நாம வேணா துப்பி துப்பி விளையாடலாமா?

படம் சூப்பர்

Unknown சொன்னது…

//பாத்து நண்பரே யாராவது எதிர் பயோடேட்டா போட்டிடப்போறாங்க//

சீக்கிரம் போடட்டும்.. அப்பதானே நானும் பிரபல பதிவர் ஆக முடியும் ..

Unknown சொன்னது…

//என்னை அசிங்க படுத்தினதால நான் வெளி நடப்பு செய்யிறேன்.//

அண்ணே.. வாங்கன்னே... எங்க போறீங்க.... நான் உங்க ரசிகண்ணே...

இருங்க டீ ஆறுது குடிச்சிட்டு பேசுவோம் ..

சௌந்தர் சொன்னது…

பயோடேட்டா புலி...என்று சொல்லலாம்

Asiya Omar சொன்னது…

அட இவ்வளவு விஷயம் இருக்கா?சரி தான்.

தமிழ் உதயம் சொன்னது…

சொத்து மதிப்பு : ஒரு கணினி அல்லது லேப்டாப்

பல்லாயிரம் கோடி பில்கேட்ஸ் ஸே அடக்கமா இருக்கும் போது, நாமதான் ரெம்ப அல்ட்டிகிறோமோ.

Ahamed irshad சொன்னது…

பயோடேட்டாப்படி பார்த்தா இனிமே நானும் ரவுடிதான்.. நல்லா பார்த்துக்க நானும் ரவுடிதான்... ஹேய் யாராவது வம்புக்கு வாங்கப்பா..வாங்க...

அன்புடன் நான் சொன்னது…

செந்தில்... நான் எந்த அணி?

எனக்கு எதுவும் புரியல.

நறுமுகை சொன்னது…

//லேட்டஸ்ட் ட்ரெண்ட் ’யாரால ரொம்ப தூரத்துக்கு துப்ப முடியும்?’ //

விதி ஒண்ணும் பன்ன முடியாது..


www.narumugai.com
நமக்கான ஓரிடம்

Unknown சொன்னது…

நன்றி ..

சௌந்தர்

ஆசிய ஓமர்

தமிழ் உதயம்

அஹமது இர்ஷாத்

சி. கருணாகரசு

நறுமுகை

தறுதலை சொன்னது…

அசல் டோண்டு, போலி டோண்டு - இதுல யாரு வினை, யாரு விளைவு?

----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்) - 06' 10)

க ரா சொன்னது…

கலக்கல் பாஸ்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//சமீபத்திய எரிச்சல்: மொக்கை எழுதுபவர்கள் பிரபலம் ஆவது //

Nalla irukku :)

ராஜ நடராஜன் சொன்னது…

பயோடேட்டா தேறமாட்டேங்குதே!நான் பதிவனில்லையோ:(