9 மே, 2010

வெளிநாட்டில் வாழ்பவன்






முகம் மறந்து போன 
மகனும் 
மகளும் 
அலுவலக மேஜையின் மீது 
சிரித்துக் கொண்டிருக்க 

ஒரு வருடம் கடன் 
ஒரு வருடம் வீடு 
ஒரு வருடம் தங்கையின் திருமணம் 
ஒரு வருடம் அப்பாவின் பை பாஸ்
ஒரு வருடம் பிள்ளைகளுக்கு 


வாழ்வியல் சந்தர்ப்பங்கள் 
விடுமுறைகளை தள்ளிப்போட 

உழைத்துக் கொண்டே இருக்கிறேன் 


கண் கானா தூரத்தில் இருந்து 
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் 
அலைபேசிகளில் 
வழியும் ஏக்கங்கள் 

என் தாகத்தை சுலபமாக 
தீர்க்கும் பாட்டில்கள் 
உன் ஏக்கத்தை எப்படி தீர்த்து கொள்கிறாய் 
என் பிரியமானவளே?

25 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான கவிதை. உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

மரா சொன்னது…

என்ன செய்ய? உங்களோட தஊரமா இருக்கிறவர்களை பார்த்து ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டியதுதான்

Unknown சொன்னது…

//அருமையான கவிதை. உணர்வுகளை பிரதிபலிக்கிறது//

மிக்க நன்றி ஸ்டார்ஜன்

மரா சொன்னது…

என்ன செய்ய? உங்களோட தூரமா இருக்கிறவர்களை பார்த்து ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டியதுதான்

Unknown சொன்னது…

//என்ன செய்ய? உங்களோட தஊரமா இருக்கிறவர்களை பார்த்து ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டியதுதான்//

நன்றி..மயில்ராவணன்

கமலேஷ் சொன்னது…

இந்த கவிதைக்கு கமெண்ட்ஸ் எழுதுறதே ஒரு கஷ்டமான காரியம்தான்...உண்மையில் கஷ்டம்தான்...

Unknown சொன்னது…

//இந்த கவிதைக்கு கமெண்ட்ஸ் எழுதுறதே ஒரு கஷ்டமான காரியம்தான்...உண்மையில் கஷ்டம்தான்//

நன்றி..கமலேஷ்

ஹேமா சொன்னது…

இந்தக் கவிதைக்கு பதில் "கண்ணீர்"தான் !

Unknown சொன்னது…

//இந்தக் கவிதைக்கு பதில் "கண்ணீர்"தான்//

கிட்டத்தட்ட பதினெட்டு வருட வாழ்க்கை எனக்கு வெறுமையை மட்டுமே தந்திருக்கிறது..

நன்றி ஹேமா ...

vinthaimanithan சொன்னது…

கடைசி வரியில் இருக்குங்க கவிதை...

பசலையைப் பாடும் சங்கப்பாடல்களால்கூட அந்தத் துயரத்தை காட்சிப்படுத்த முடியுமா? தெரியவில்லை

யாநிலாவின் தந்தை சொன்னது…

"உன் ஏக்கத்தை எப்படி தீர்த்து கொள்கிறாய்
என் பிரியமானவளே?"
வலி நிரம்பிய வரிகள்.............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கவிதை அருமை. வெளிநாட்டு நன்பர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

Unknown சொன்னது…

//கடைசி வரியில் இருக்குங்க கவிதை...//

நன்றி..விந்தைமனிதன்

Unknown சொன்னது…

//வலி நிரம்பிய வரிகள்..//

நன்றி..யாநிலாவின் தந்தை

Unknown சொன்னது…

// வெளிநாட்டு நன்பர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.//

நன்றி..ரமேஷ்

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

கிட்டத்தட்ட பதினெட்டு வருட வாழ்க்கை எனக்கு வெறுமையை மட்டுமே தந்திருக்கிறது.. ]]


பலருக்கு அப்படியே..

நெகிழ வைக்குது கவிதை...மற்றவரை மகிழ செய்யும் மெழுகுவர்த்தியாய்..

Unknown சொன்னது…

//நெகிழ வைக்குது கவிதை...மற்றவரை மகிழ செய்யும் மெழுகுவர்த்தியாய்.//

நன்றி சாந்தி

Aathira mullai சொன்னது…

//என் தாகத்தை சுலபமாக
தீர்க்கும் பாட்டில்கள்
உன் ஏக்கத்தை எப்படி தீர்த்து கொள்கிறாய்
என் பிரியமானவளே?//
பெண்ணுக்கும் ஏக்கம் உண்டு.. ஆணின் ஏக்கம் பாட்டிலில் அடங்க பெண்ணின் ஏக்கத்திற்கு வழி கேடும் ஆதங்கம் அருமை செந்தில்..

Unknown சொன்னது…

நன்றி...ஆதிரா

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

என்ன கமெண்ட் போடறது செந்தில்...ஒளி..விரைவில் தெரியும்..என்று நம்புங்கள்..

Unknown சொன்னது…

//என்ன கமெண்ட் போடறது செந்தில்...ஒளி..விரைவில் தெரியும்..என்று நம்புங்கள்//

மிக்க நன்றி ஐய்யா

Unknown சொன்னது…

verumaithaan aanaal varungaalam nallaathaan irukku.kavalaippadaatheenga

Unknown சொன்னது…

நன்றி மயில் வேல்

Ahamed irshad சொன்னது…

What a....Words Weldon...

திருமூர்த்தி. சி சொன்னது…

18 varushama?