17 மே, 2010

ROBIN HOOD - ஆங்கிலப் படம்


இது ராபின் ஹூடின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய கதைஅதாவது ராபின் ஹூட் ஆவதற்கு முன்அதை சரியாக செய்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சரியான நடிகரைஒரு சரியான இயக்குனர்மோசமான திரைக்கதையால் வீணடித்து விட்டார்அதுவும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நம் ஆயிரத்தில் ஒருவன் அளவு கூட இல்லை( நம்மாளுங்க ஜோரா கை தட்டுங்க)இத இந்திய மொழிகள்ல டப்ப போறாங்களாம்டிவி க்கு உதவும்மற்றபடி ஹாலிவுட்டுக்கு உரித்தான பிரமாண்டங்கள் உண்டுபாராட்டும்படி ஒரு அம்சம் கூட இல்லையா? இருக்கு .. அது அம்சமான கதாநாயகிக்கும்நாயகனுக்கும் மெல்ல அரும்பும் காதல், அருமை. ராபின் ஹூட் ஏன் மாறினான் என்பதற்கான சரியான விளக்கம் முன் வைக்கப்படவில்லை, ஒரு புரட்சியாளனாக தோன்றிய ராபின் ஹூடின் சிறுவயது வாழ்க்கை படத்தில் சிறிய புகை கனவுகளால் நிரப்பியிருப்பது போதாது, இங்கிலாந்து மன்னனின் சகோதரனாக நடித்திருப்பவர், நன்றாக செய்திருக்கிறார், அது போலவே அந்த கண் தெரியாத பெரியவர் பாத்திரம் நமக்கு அனுதாபத்தை தருகிறது.

 RIDLEY SCOTT : ALIEN, LEGEND, GLADIATOR, AMERICAN GANGSTER போன்ற படங்களை இயக்கியவர்இந்த படத்தை அவரின் உதவியாளரைக் கொண்டு இயக்கியுள்ளார் என நினைக்கிறேன். சொதப்பல் திரைக்கதைகிலடியேட்டரில் இருக்கும் உயிரோட்டம் இந்த படத்தில் சுத்தமாக இல்லைதமிழ் சினிமா பார்த்து கேட்டுப் போய்விட்டார். தயாரிப்பும் இவரேரஸ்ஸலுடன் சேர்ந்து .. செலவு US$474 MILLION.


 RUSSELL CROWஎனக்கு மிகவும் பிடித்த ஹீரோ இவர் நடித்த அநேகம் படங்களை பார்த்திருக்கிறேன்அசாத்தியமான நடிப்பில் நம்மை கவர்ந்தவர்இந்த படத்தில் இவரின் பாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். அப்புறம் அடுத்த படத்தில் பாப்போம் தல..


 CATE BLANCHETT: படத்தில் நம்ம தலையை தூக்கி சாப்பிட்டுவிட்டார்இவரை மைய்யமாக கொண்டு ஒரு திரைகதை செய்திருந்தால் நன்றாக வந்திருக்கும்காட்டுவாசிகள் தங்கள் உழைப்பை திருடும்போது வருகிற கோபம்நாயகன் மீது மெல்ல அரும்பும் காதல்வில்லன் ஆள் தன்னை நெருங்கும்போது காட்டும் வீரம்தன்னைக் காப்பாற்றிய காட்டு வாசிகளிடம் காட்டும் கருணை, இவரின் முந்தைய படங்களை போலவே, இந்த படத்திலும் தனித்தன்மையுடன் நடித்திருக்கிறார்.


MARK STRONG: இவரின் நடிப்பும் பாராட்டுக்கு உரியது ரஸ்ஸல் அம்பு பட்டு கிழிந்த வாயின், தைத்த வடுக்கள் ( ஒரு காண்டத்தை ஒட்டியிருப்பார்கள்) மேக்-அப் செலவு இல்லை, படத்தில் இவரின் பங்கை சரியாக செய்திருப்பார், இவர் வில்லன், ஆனால் பிரான்ஸ் மன்னனின் கையாளாக காட்டியிருப்பார்கள்.


MARC STREITENFELD: படத்தின் கம்போசர், தேவையான இடங்களில் சரியான இசைக்கோர்வைகளை பயன்படுத்தி இருப்பார், படத்தின் இறுதியில் டைட்டில் போடுகையில் மெல்ல ஆரம்பித்து பரவும் இசை அற்ப்புதம்.




JOHN MATHIESON: ஒளிப்பதிவு இயக்குனர், படத்தில் இவரின் பங்கும் சிறப்பானதே, படத்தின் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருக்கும். கி.பி.1019 ல் நடக்கும் கதை களத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.

மற்றபடி இப்படத்தின் கதை பற்றிய விரிவான தகவல்களுக்கு நண்பர் கனவுகளின் காதலனிடம் அனுப்பி வைக்கிறேன், மற்ற படங்களையும் விரிவாக விமர்சனம் செய்திருக்கிறார்.

12 கருத்துகள்:

Chitra சொன்னது…

Yet to watch the movie.......

VELU.G சொன்னது…

புதிய தகவல்கள் நன்றி செந்தில்

Unknown சொன்னது…

//Yet to watch the movie.......//

பார்க்கலாம் சித்ரா , போரடிக்காமல் போகும் (கதை பற்றி அலட்டிகொள்ளாமல் இருந்தால்)

Unknown சொன்னது…

//புதிய தகவல்கள்//

நன்றி வேலு

Karthick Chidambaram சொன்னது…

Ungal Karuththai aamothikkiren. Intha padam paarththapin Robin Hood image miga periya hype endre thonriyathu ... Better luck next time.

Unknown சொன்னது…

நன்றி கார்த்திக்

ஹேமா சொன்னது…

விமர்சனம் தொகுத்துத் தந்த விதம் படம் பார்க்கச் சொல்கிறது செந்தில்.நன்றி.

Unknown சொன்னது…

//விமர்சனம் தொகுத்துத் தந்த விதம் படம் பார்க்கச் சொல்கிறது //

நன்றி ஹேமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

OK.நான் பாத்துட்டனே

நான் சிவப்பு மனிதன்
வில்லன் படங்களோட ரீமேக் தான?

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

அழகான விமர்சனம். என் பதிவிற்கு சுட்டி தந்ததிற்கு உளமார்ந்த நன்றிகள்.

Unknown சொன்னது…

//அழகான விமர்சனம். என் பதிவிற்கு சுட்டி தந்ததிற்கு உளமார்ந்த நன்றிகள்.//



நான் உங்கள் ரசிகன் ...

Jay சொன்னது…

அடியேன் இன்றுதான் ரொபின் பற்றி விமர்சனம் இட்டேன். அதையும் காணவும். ;)

http://hollywood.mayuonline.com/2010/08/robin-hood-tamil-review.html