1 ஜூலை, 2010

தலைகீழ் விதிகள்...(தொடர் பதிவு)

மாப்ள வசந்த் தொடர் பதிவுக்கு கூப்பிட்டதும்(நம்ம குழந்தையா பிறந்து படிச்சு வேலைக்கு போயி கல்யாணம் பண்ணி குழந்த பெற்று அதுங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சு கடைசில செத்துடறோம் ரொடேசனா போயிட்டு இருக்கு இதுவே தலைகீழா இறக்கும்போது இருக்குற வயசுல பிறந்து ஒவ்வொரு நாளும் பின்னோக்கி வர்றீங்க கடைசியில இறக்குறது அம்மாவோட மடியிலன்னு வச்சுட்டு இடையில என்ன சம்பவங்கள் நடக்கும்ன்னு எழுதப்போறவர்( கொஞ்சம் கஷ்டம்தான் மாப்ள ஆனாலும் நாமெல்லாம் யாரு எழுதுவோம்ல)  நம்ம கே ஆர் பி செந்தில்... தலைப்புதலைகீழ் விதிகள்...) அவர் கொடுத்த தலைப்பிற்கு சிறுகதை எழுதலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் என் வழக்கமான கவிதைதான் சரியென்று முயற்சி செய்துள்ளேன்.. இது கட்டுமானங்களை மீறிய கவிதை..

ஆழ விழும் காட்டு நதியென 
அருவியாய் மாறும் வாழ்வில் 
உறவுகள் அருங்கோன வடிவுடையவை..

கைபிடித்து நடத்திய தந்தையும் 
உயிர் கொடுத்து வளர்த்த தாயும் 
உறவுகளாய் கூட வந்த சுற்றமும் 
உதவிக்கு ஓடோடிவரும் நட்பும் 

பாவ வரவுகளும் 
புண்ணிய  செலவுகளும் 
பூத்த காதலை 
புதைத்த ஞாபகமும் 

திருமண நாள் முதலாய் 
நறுமண வாழ்வை தந்த 
அருணா என்னவளும் ..

மகன்கள் இரண்டு இருந்தாலும் 
இப்போதும் என் வார்த்தை தட்டாத 
மூத்த மகன் தமிழும் 

எப்போதும் தன் கருத்தே சரியென்று 
ஒற்றைக்கால் தவமிருக்கும் 
இளையமகன் இலக்கியனும் 

இப்போதும் தோள்மீது சாய்ந்தழும் 
செல்லமகள் செங்கொடியும்

என்னை யானையாய்,
குதிரையை இன்னும் பல விலங்குகளாய் 
உருமாற்றி கதை கேட்கும் 
பேரக் குழந்தைகளும்  

சற்றே தூர இருங்கள் 
நான் 
நீண்ட ஓய்வுக்கு செல்கிறேன் 
.
உயிர் தந்து, உடல் தந்து 
இவுயரம் தந்து 
உன் இறுதி நாளில் மீண்டும் 
என் மடியில் உயிர் விட்ட தாயே..
உன் மடி தேடி உயரே வருகிறேன் 
மீண்டும்..

ஊரும், உறவும் 
இப் பேருலகும் விட்டுப் 
போவேன் நான்..
தாய் மடியில் மகிழ்வாய்....

மாப்ள வசந்த் நான் இரண்டு நண்பர்களை தொடர் பதிவுக்கு அழைக்கவேண்டும் என்பதால்..

என் ஆன்மீகம் பயணம்  என்ற தலைப்பில் நண்பர் WARRIOR தேவா அவர்களையும் 

அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன? எனும் தலைப்பில் சகோதரி தேவியர் இல்லம் ஜோதி கணேசன் அவர்களையம் அழைக்கிறேன்..

தொடர் பதிவின் விதிகளின் படி நீங்களும் இருவரை புதிய தலைப்புகளில் அழைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் 

23 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

நல்ல பதிவு

அருமை.....

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

சௌந்தர் சொன்னது…

ரொம்ப நன்றி Delivered by FeedBurner வைத்ததற்கு

Karthick Chidambaram சொன்னது…

//உயிர் தந்து, உடல் தந்து
இவுயரம் தந்து
உன் இறுதி நாளில் மீண்டும்
என் மடியில் உயிர் விட்ட தாயே..
உன் மடி தேடி உயரே வருகிறேன்
மீண்டும்..//
வரிகளில் கணம்

தமிழ் உதயம் சொன்னது…

சுயசரிதை ஒன்றை கவிதைக்குள் சுருக்கினாலும்... அதன் அழகு, உண்மை மாறாமல். அருமையான கவிதை.

Chitra சொன்னது…

Change is not Death - Fear of Change is Death

..... Super!

////உயிர் தந்து, உடல் தந்து
இவுயரம் தந்து
உன் இறுதி நாளில் மீண்டும்
என் மடியில் உயிர் விட்ட தாயே..
உன் மடி தேடி உயரே வருகிறேன்
மீண்டும்..////


....Superb! கவிதையில் - கருத்தும் வார்த்தை பிரயோகமும் அருமை..... :-)

நாடோடி சொன்னது…

ஒரே நாளில் தொட‌ர்ப‌திவை எழுதியாச்சி.. அதுவும் க‌விதை வ‌டிவில்.. வாழ்த்துக்க‌ள் செந்தில் அண்ணா..

சசிகுமார் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே, தொடர்ந்து அசத்துங்க. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தொடர்பதிவில் முதலில் எழுதிய செந்தில் அண்ணனுக்கு nanri. kavithai nallaa irunthathu brother.

ஜெயந்தி சொன்னது…

முடிவ மேல கொண்டுபோய் துவக்கமாக்கியிருப்பது நன்றாக இருக்கிறது.

ஜெய்லானி சொன்னது…

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

ஹேமா சொன்னது…

வாழ்வையே சுருக்கித் தலைகீழாக்கிக்
கவிதையில் சொன்ன விதம்
பாராட்டுத்தான் செந்தில்.

ஆகா...தொடருக்குக் கூப்பிட்டு இருக்கிறவங்க ரெண்டு பேரும் ....சொல்லமாட்டேன்.
பாத்திட்டு இருக்கேன் அவங்க பதிவுக்காக !

ஜோதிஜி சொன்னது…

செந்தில்

சகோதரன் தான். முன்னால் உள்ள பெயரை வைத்து மாற்றி புரிந்து இருப்பீர்கள்.

சென்ற இடுகைக்கே பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்தது இப்போது எதிர்பாராத விதமாக உள்ளே வந்தால் மற்றொரு ஆச்சரியம்.

கோவிகண்ணன் போலவே ஆன்மீகத்தை அலசலாய் வெறுப்பற்ற நிலையில் பார்ப்பது நல்ல புரிந்துணர்வு இருப்பவர்களால் மட்டுமே முடியும். உங்களால் முடிந்துள்ளது. இந்த கவிதை கூட அருவி போல் தான். குழந்தைகளின் பெயர்கள் அற்புதம்.

தொடக்கப்பள்ளியில் அறிவொளி இயக்கம் எப்படி நடக்கிறது என்பதை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் முன்னால் நின்று (குரல் சப்தமாக இருக்கும் என்பதோலே) தலைமையாசிரியர் பேச வைத்தார். அவர்கள் சொல்லிக்கொடுத்தபடியே அவஸ்யம் தேவை என்றேன்.

ஆனால் இந்த பெயர் உங்கள் இடுகையில் பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது. சுத்தமாக பெயரே மறந்து விட்டது. சமீப காலங்களில் நான் எதிலும் படிக்கவில்லை என்பதால். நான் பார்த்தவரைக்கும் கிராமப்புறங்களில் முடிந்தவரைக்கும் அத்தனை குடும்பங்களிலும் குழந்தைகள் படிக்கிறார்கள். 10 வரைக்கும் நிச்சயம். 12 வரைக்கும் 60 சதவிகிதம். பெற்றோர்கள் மேல் குறையே சொல்ல முடியாது. நாதாரிகள் தானாக திமிர் எடுத்து கெடுத்துக்கொண்டால் தான். அதுவும் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை வரைக்கும் பெண் குழந்தைகள் கல்வியில் உள்ள ஆர்வம் மெச்சக்கூடியது.

என்னுடைய அக்கா மகள் பத்தாம் வகுப்பில 465 மகன் பனிரெண்டில் 1119. ஆனால் இவர்கள் கற்ற கல்வி மூலம் அறிவு ஓளியாக இவர்களிடம் இருக்கிறதா? என்பதை கேட்கக்கூடாது? அது கல்வி திட்டத்தில் உள்ள குறைபாடு.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை எந்த விதத்தில் வேண்டுமானலும் குறை செர்ல்லலாம். புண்ணியவான்கள் கல்வியில் மட்டும் எவரும் குறைவைக்கவில்லை.

எல்லா புகழும் கர்மவீரருக்கே.

அழைப்புக்கு நன்றி செந்தில். முழுமையாக இப்போதைய அறிவொளி இயக்கம் பற்றி எதுவும் தெரியாமல் எழுதுவது தவறு.

ஜோதிஜி சொன்னது…

எல்லா புகழும் கர்மவீரருக்கே.

அழைப்புக்கு நன்றி செந்தில். முழுமையாக இப்போதைய அறிவொளி இயக்கம் பற்றி எதுவும் தெரியாமல் எழுதுவது தவறு.

ஜோதிஜி சொன்னது…

ஆகா...தொடருக்குக் கூப்பிட்டு இருக்கிறவங்க ரெண்டு பேரும் ....சொல்லமாட்டேன்.
பாத்திட்டு இருக்கேன் அவங்க பதிவுக்காக !

ஹேமா ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. நான் சிக்க மாட்டேனே...............

Unknown சொன்னது…

நன்றி சகோதரா.(தவறாகத்தான் புரிந்து கொண்டேன்)

இப்போது வேறு தலைப்பு தருகிறேன் திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள்?
இதைபற்றி எழுதுங்கள்...

Unknown சொன்னது…

நான் தந்த அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?எனும் தலைப்பு சகோதரி ஜெயந்திகானது ( தயவு செய்து தவறுக்கு மன்னிக்கவும்)
எனவே ஜெயந்தி எழுத வாருங்கள்..

http://paadiniyar.blogspot.com/

க ரா சொன்னது…

அருமை செந்தில அண்ணே. பின்றீங்க.

dheva சொன்னது…

செந்தில்...............@ உசுப்பேத்தி விட்டுட்டீங்க...பாஸ்....! நான் தொடர எழுதாம...ஒரு பதிவா இத முடிச்சுடணும்னு நினைக்கிறேன்....! அழைப்புக்கு நன்றி செந்தில்...உங்கள் பதிவும் அருமை!

ஜோதிஜி சொன்னது…

இல்லை செந்தில் இப்போது திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் 90 சதவிகிதம் இல்லை. ஒரே காரணம் நம் நாட்டின் சட்ட திட்டங்கள் அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சான்றிதழ்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள் பெற வேண்டுமென்றால் கட்டாயம் பல விதிமுறைகளை கடைபிடித்தே ஆக வேண்டும். அடுத்து எழுத இருப்பதே இந்த பன்னாட்டு நிறுவனங்களின் சாதக பாதகங்களைப் பற்றித்தான்.

ஜோதிஜி சொன்னது…

நீங்கள் அறிமுகபடுத்திய தேவா இத்தனை நாளும் தவற விட்டோமே என்ற ஆச்சரியப்படுத்திய ஆளுமை.
அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

கவிதை எழுதி அசத்திட்டீங்க செந்தில்..

நன்றி எழுதியதற்க்கு

கொடுத்த தலைப்பையும் கொஞ்சம் கிரியேட்டிவா கொடுத்திருக்கலாம் தப்பான தலைப்பு கொடுத்து எழுதப்போறவரையும் பின் வாங்க வச்சுட்டீங்க.,...

ரமேஷ் வீரா சொன்னது…

ஊரும், உறவும்
இப் பேருலகும் விட்டுப்
போவேன் நான்..
தாய் மடியில் மகிழ்வாய்


அருமையான வரிகள் அண்ணா , ஒரு வரலாற்று கட்டுரைக்குள் எழுத முடியாத தங்களின் கதையை ஒரு கவிதைக்குள் எழுத முயற்சி செய்திருகிருர்கள் ............. தொடருங்கள் அண்ணா தங்களின் முயற்சியை ........................

சஞ்சயன் சொன்னது…

உங்கள் கவிதையை ரசித்தேன் நண்பரே!தொடருங்கள்.
வாழ்த்துக்கள்