27 ஜூலை, 2010

THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..

நட்சத்திர பதிவர் ஆனதற்கு உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..

பொதுவாகவே உலகில் அதிகம் பயன்படுத்துவது திருட்டு பொருட்களே .. சீனா முழுவதுமே எந்த பொருள் வந்தாலும் உடனே காப்பியடித்து மலிவு விலையில் தந்து விடுவார்கள். உலகின் பெரும்பான்மை மக்களுக்கு எல்லாமே மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைப்பதையே விரும்புகிறார்கள். அதிலும் இலவசம் என்றால் ஏழைகளை விட பணக்காரர்களே அதைப் பெறுவதில் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள்.

பொதுவாகவே இலவசமாக எதையும் கொடுக்க முடியாது.. அமெரிக்காவில் NO FREE LUNCH எனும் புகழ் பெற்ற பழமொழியே உண்டு.. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் இலவசங்களின் அடிமை.. ஆட்சியாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஒட்டு போடும் முட்டாள்கள் நாம். 

இந்தக் கட்டுரை INTELLECTUAL PIRACY பற்றியது.. MICROSOFT CORPORATION தன் OPERATING TOOL களை திருட்டுத்தனமாய் உபயோகபடுத்துவதை முதலில் அனுமதிப்பார்கள்.. அதற்கு நாம் அடிமையானபின் அதன் மேம்படுத்தப்பட்ட SOFTWARE களை  காசு கொடுத்து வாங்கும்படி சொல்வார்கள்.. நாம் எவ்வளவு பெரிய ஜித்தன்கள் அதனையும் ஆட்டைய போட்டு பயன்படுத்துவோம்..

பொதுவாகவே சினிமா அடிமைகள் நாம்.. கட்டற்ற இணைய உலகில் சுடச்சுட அனைத்து மொழி படங்களும் கிடைக்கின்றன.. அதிகம்பேர் பயன்படுத்தும் ஒரு இணையத்தளம் TORRENT இணையதளம்.. உங்களுக்கு என்ன தேவைபட்டாலும் நொடிப் பொழுதில் தந்துவிடம் இணையதளம் அது.. இதற்க்கு மட்டுமல்ல இதைபோல் திருட்டு விசயங்கள் பெரும்பான்மையானவை அனைத்திற்கும் பொதுவான பின்புலமாக இருப்பவர்கள் இந்த THE PIRATE PAY காரர்கள்தான்.

ஸ்வீடனை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த தளம். அந்த அரசாங்கத்தின் சட்டப்படி தடை செய்யப்பட முடியாத தளம். ஆனால் உலகின் மிக முக்கியமான அனைத்து SOFTWARE நிறுவனங்களும் அமெரிக்காவை தலைமை இடமாக அல்லது அமெரிக்கர்களால் நடத்தப் படுபவை. பொறுக்குமா அமெரிக்கா, தன் வல்லரசு பலத்தால் இந்த தளத்தை நடத்துபவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தியது. குற்றத்தை ஏற்றுக் கொண்டு US $ 30 மில்லியன் அபராதம் கட்டினார்கள்.ஜெயில் வாழ்கையும் அனுபவித்தார்கள்.

இவர்களின் முக்கிய சம்பாத்தியமே இலவசங்களை தேடி வருவோரை ஈர்க்க போடும் விளம்பர வருவாய்தான்.

ஆனால் இன்றுவரை இவர்கள் அதனை நிறுத்தவில்லை. இவர்கள் தில்லுக்கு நிறைய சான்றுகள் உள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்களை, வழக்குரைஞர் நோட்டீஸ்களை வரிக்கு வரி கிண்டல் செய்து அனுப்பும் பதில் கடிதங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம் தருபவை.

இங்கு தமிழகத்தில் சவுக்கு இணையதள நண்பர்கள் உண்மையான திருட்டுகளை பதிவேற்றியதற்கு உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர்கள் வெளியிட்ட தகவல்கள் பற்றி அந்த முறைகேடான அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

WIKI LEAKS எனும் இனைய தளத்தில் சவுக்கு தளத்தில் வெளியிட்ட தகவல்களைப் போல் எதனைப் பற்றி வேண்டுமானாலும் வெளியிடலாம், வெளியிட்டவர்களின் தகவல்கள் மிகுந்த ரகசியமாக வைக்கப்படும். உலகம் முழுவதும் நம் இந்தியா உட்பட உள்ள ரகசியத் தகவல்கள்  இதில் உள்ளன. எனவே அரசாங்கத்தை பற்றிய விமர்சனம் இருந்தால் இதில் தைரியமாக வெளியிடலாம்.

உலகம் முழுதும் ஒரே விஷயம்தான் ஜெயிக்கிறது அது " வல்லான் வகுத்ததே வாய்க்கால்"

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. கடலில் ஒரு சின்ன மீனை பெரிய மீன் விழுங்கப் போகிறது அப்போது அந்த சின்ன மீன் பெரிய மீனிடம் நானும் உன் இனம்தானே நீ என்னையே சாப்பிடுவது நியாயமா எனக் கேட்க, பெரிய மீனோ உன்னால் முடிந்தால் என்னை சாப்பிடு என்று சொல்லி விட்டு சின்ன மீனை விழுங்கி விட்டது.

பின் குறிப்பு: பதிவின் நீளம் கருதி PIRATES PAY மற்றும் அவர்கள் பதிவிட்ட வக்கீல் நோட்டீஸ் அனைத்தும் இணைப்பாக தந்துள்ளேன். ஆர்வமுள்ளோர் படித்து வயிறு வலிக்க சிரித்துக் கொள்ளுங்கள்.

53 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

பதிவும் , கொடுத்திருக்கும் இணைப்புகளும் அருமை . அதிலும் இறுதியில் சொல்லி இருக்கும் மீன் கதை சிந்திக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

Cable சங்கர் சொன்னது…

சீக்கிரமே ஒரு நல்ல டவுன்லோட் சைட் லிங்க் கொடுக்கவும்..

Cable சங்கர் சொன்னது…

பைரேட்டுகளை, பைரஸியை வெறுப்போர் சங்கம்..

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல அருமையான இடுகை. பகிர்வுக்கு நன்றி. உங்கள் சமூக சிந்தனை இடுகைக்கு வாழ்த்துக்கள்

Jackiesekar சொன்னது…

ரொம்ப நல்ல பயனுள்ள இடுக்கை

Prasanna Rajan சொன்னது…

முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள். Motion Picture Association of America (MPAA) பைரேட் பே மேல் வழக்கு தொடர்ந்த போது, ஒனக்கும் பே பே ஒங்கப்பனுக்கும் பே பே என்று தாறுமாறாக அவர்கள் கொடுத்த பதில் நோட்டீஸ் அமெரிக்க மீடியாக்களில் இன்றளவும் மிக பிரபலம்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உலகம் முழுதும் ஒரே விஷயம்தான் ஜெயிக்கிறது அது " வல்லான் வகுத்ததே வாய்க்கால்"
நல்ல சமூக சிந்தனை தெறிக்கும் கருத்த்து.தெரியாத தகவல்கள்.நன்றி+வாழ்த்துக்கள்

வினோ சொன்னது…

தெரிந்த விசயம், புதிய வடிவில்... மிக்க நன்றி அண்ணே...

நேசமித்ரன் சொன்னது…

pirate bay ?

Unknown சொன்னது…

தமிழ் மணம் நட்சத்திரம்...இப்போதான் பார்த்தேன்...வாழ்த்துக்கள் !

ஜோதிஜி சொன்னது…

நட்சத்திரம் ஜொலிக்கிறது.

காமராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு.உபயோகமாந்தும் கூட.

நீச்சல்காரன் சொன்னது…

நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

நடசத்திரப் பதிவரானதற்கு நல்வாழ்த்துகள்

இடுகையின் மையக் கருத்து அருமை - சிந்தனை அருமை

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

பெயரில்லா சொன்னது…

தமிழ்மனம் நட்சத்திர பதிவர்க்கு வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு செந்தில்.

Karthick Chidambaram சொன்னது…

உங்க கொடகைளும் கலவானிதான் ஓடுதா ?

Thamiz Priyan சொன்னது…

we are the die-hard fans of pirate pay... :)

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

Prathap Kumar S. சொன்னது…

அருமையான பதிவு செந்தில்... இணைப்புகளை வீட்டுக்குப்போய் பார்க்கிறேன்...

Chitra சொன்னது…

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. கடலில் ஒரு சின்ன மீனை பெரிய மீன் விழுங்கப் போகிறது அப்போது அந்த சின்ன மீன் பெரிய மீனிடம் நானும் உன் இனம்தானே நீ என்னையே சாப்பிடுவது நியாயமா எனக் கேட்க, பெரிய மீனோ உன்னால் முடிந்தால் என்னை சாப்பிடு என்று சொல்லி விட்டு சின்ன மீனை விழுங்கி விட்டது.


....... அட, அட, அட..... இதுக்கு மேல கேள்வி, ஏன் வருது?

Jey சொன்னது…

உங்களின் சமூகப்பார்வை தொடரட்டும்...,

ஜில்தண்ணி சொன்னது…

வித்யாசமான சிந்தனை அண்ணே

லிங்குகளும் செம செம

நட்சத்திரமாய் ஜொளித்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணே :)

vinthaimanithan சொன்னது…

நிஜமாவே இது ஒரு நட்சத்திரப் பதிவு தான். கதை, பழமொழி எல்லாமே மிக அருமை.

வினவு சொன்னது…

தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

தமிழ் உதயம் சொன்னது…

உலகம் முழுதும் ஒரே விஷயம்தான் ஜெயிக்கிறது அது " வல்லான் வகுத்ததே வாய்க்கால்"

காலங்காலமாக இது தான் நடந்தது. இனியும் இது தான் நடக்கும்.

அருண் பிரசாத் சொன்னது…

அருமையான பதிவு அண்ணே! கலக்கல் போங்க.

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ சிந்த‌னை... ப‌கிர்விற்கு ந‌ன்றி செந்தில் அண்ணே..

ஹேமா சொன்னது…

பலாப்பழம் பார்க்கவே வாயூறுது செந்தில்.நடத்திரம் முதல் பதிவிலேயே பிரயோசனமான பதிவோடு மின்னுகிறது.

சின்னப்பயல் சொன்னது…

பதிவு சிறிய நட்சத்திரமாக மினுக்கவில்லை...
சூரியனாக ஒளிருகிறது.....!
வாழ்த்துக்கள் தோழரே,,,!

பெயரில்லா சொன்னது…

இலவசம் னாலே நம்மாளு எல்லாத்தையும் மறந்துடுவான்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

மாப்ள, விக்கிலீக்ஸ் பத்தி இன்னிக்கு டைம்ஸ்ல படிச்சேன். ஆஃப்கான் சண்டைக்கு பாக்கிஸ்தான்தான் காரணம்ங்ற ஆதிகாலத்து உண்மையை ஆதாரத்தோட சொல்லியிருக்காங்களாம்.

பலா - சுவை!

ராசராசசோழன் சொன்னது…

எங்க பிடிக்கிறீங்க இந்த தளங்களை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

பதிவும் , கொடுத்திருக்கும் இணைப்புகளும் அருமை.

எங்க பிடிக்கிறீங்க இந்த தளங்களை..?

பெயரில்லா சொன்னது…

நகைச்சுவையும் பொழுதுபோக்கும் நிறைந்த நிறைய ப்ளாக் பார்த்துள்ளேன்..

அதையெல்லாம் அகற்றிவிட்டு சிந்திக்க வைக்கும் ப்ளாக் அவற்றில் ஒரு சில தான் உள்ளது..

அதில் உங்களுடையதும் ஒன்று..

இறுதியில் வரும் மீன் கதை அருமை..

வாழ்த்துக்கள்..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையான இடுகை சார்.

//பொதுவாகவே இலவசமாக எதையும் கொடுக்க முடியாது.. அமெரிக்காவில் NO FREE LUNCH எனும் புகழ் பெற்ற பழமொழியே உண்டு//

முற்றிலும் உண்மை.

இலவசங்களை பெரும்போதே , இதற்கு பகரமாக எவ்வளவு அடிக்கப்போகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

VELU.G சொன்னது…

நல்ல பதிவு நிறைய தெரிந்து கொண்டேன்

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

//குற்றத்தை ஏற்றுக் கொண்டு US $ 30 மில்லியன் அபராதம் கட்டினார்கள்.ஜெயில் வாழ்கையும் அனுபவித்தார்கள். //

ரொம்ப கஷ்டமா கீது தோழர் ...

செல்வா சொன்னது…

நல்லா இருக்கு அண்ணா ...
இன்னும் நிறைய இந்த மாதிரி தகவல்களை சொல்லுங்க ...!!

dheva சொன்னது…

தகவல் களஞ்சியமாய் இந்த பதிவு.....! ஏதோ டோரண்ட வச்சுதான் எங்க பொழுது ஓடிக்கிட்டு இருக்கு செந்தில்...ஹா..ஹா..ஹா..!

சசிகுமார் சொன்னது…

சூப்பர் நண்பா அசத்துங்க

ஜீவன்பென்னி சொன்னது…

டோரண்ட் இல்லன்னா என் வாழ்க்கையே சூன்யமா ஆகிடுமே.

மீன் கதை கலக்கல்.

மார்கண்டேயன் சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்,

இன்றைய உலக கணக்கு, வல்லவனாக இரு, முடியவில்லையா ?, வல்லவனோடு சேர்ந்து இரு,

இது தான், Survival Tactics,

இந்த சூழலில் மற்ற அனைத்தும் அடிபட்டு போவது இயல்பே,

குறை சொல்லியோ, குறை கண்டுபிடித்ததோ ஒன்றும் ஆகப்போவதில்லை . . .
முடிந்தால், ப்ளாகில் பதிவிடலாம், அதைத் தாண்டி, ஏதாவது செய்ய முடியுமா ? முயன்று பார்க்கலாம் . . .

பெயரில்லா சொன்னது…

//இன்றைய உலக கணக்கு, வல்லவனாக இரு, முடியவில்லையா ?, வல்லவனோடு சேர்ந்து இரு, //


மார்கண்டேயன் சார் அருமையா சொன்னிங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//திருட்டு ராசாக்கள்.. //

nalla velai. ennai sollala...

காமராஜ் சொன்னது…

நட்சத்திர பதிவரா ? அடடா கவனிக்கவில்லை செந்தில்.
அன்பின் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க தோழரே.

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்.

ஆதவா சொன்னது…

என்னால் வாங்கமுடியாத, கிடைக்காத அரிய படங்கள், மென்பொருட்கள் இதன்மூலம் பெற்றிருக்கிறேன்.

ஆகவே நான் பைரேட்பேக்கு ஆதரவு...

மற்றபடி உங்கள் பதிவு சிந்திக்க வேண்டியதுதான்... (பைரேட் பே எதிர்கள்!:)


நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பயனுள்ள இடுக்கை..
மிக்க நன்றி அண்ணே...

ச.சத்தியதாஸ் சொன்னது…

migavum nanraga ullathu ungal pathivu
ungal pathivuku nanri

Visit my blog : maatramvalaipoo.blogspot.com