2 ஆக., 2010

அமெரிக்கா - பயோடேட்டா


அன்புள்ளம் கொண்ட சக வலைபதிவு நண்பர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும், தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் இந்த நட்சத்திர வாரத்தில் நீங்கள் தந்த மிகுந்த ஆதரவிற்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...

பெயர் 
                                  : அமெரிக்கா 
 

இயற்பெயர்                        : செவ்விந்தியர்களின் தேசம் 
 

தலைவர்                             : இப்ப ஒபாமா 
துணை தலைவர்              :யூதர்கள் 
மேலும் 
துணைத் தலைவர்கள்    :C.I.A 
வயது                                   : 234 வது வருடம் 
தொழில்                              : பணம் பண்ணுவது , நாட்டாமை பண்ணுவது 
பலம்                                     : உலக வல்லரசு 
பலவீனம்                             : யாரைப் பார்த்தாலும் பயம் 
நீண்ட கால சாதனைகள்        : உலத்தின் தலைவன் 
சமீபத்திய சாதனைகள்           : கருப்பரை ஜனாதிபதி ஆக்கியது 
நீண்ட கால எரிச்சல்                : இந்தியா , சீனா , கியூபா  
சமீபத்திய எரிச்சல்                   : ஈரான்
மக்கள்                                          : அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மட்டும்  
சொத்து மதிப்பு                          : சீனாவின் கையில் இருக்கிறது 
நண்பர்கள்                                  : நாட்டோ கூட்டணி 
எதிரிகள்                                      : இஸ்லாமியர்கள் அல்ல 
ஆசை                                           : தொடர்ந்து வல்லரசு 
நிராசை                                       : சீனா  முந்துகிறது
பாராட்டுக்குரியது                    : யாரை வேண்டுமானாலும் விமர்சிக்க கூடிய ஜனநாயக அமைப்பு 
பயம்                                             : இல்லாத மாதிரி நடிப்பது 
கோபம்                                        : எதிர்க்கும் முன்பே காட்டுவது 
காணமல் போனவை              : ஏகாதிபத்தியம் 
புதியவை                                    : விகிலீக்ஸ் 
கருத்து                                        : உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு...
டிஸ்கி                                          : இன்னைய வரைக்கும் ஆட்டம் காட்டும் பிடலை நீங்கள் பாடமாக படிக்கலாம்.
(இப்போ லிஸ்ட்ல புதுசா ஹியுகோ சாவேஸ்-வெனிசுலா அதிபர்)
.

32 கருத்துகள்:

Jey சொன்னது…

/// உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு.///

ஹஹஹா:)

நேசமித்ரன் சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்


பதிவு செம ஹாட் !

:)

வினோ சொன்னது…

இன்னைக்கு அமெரிக்கவா?
கலக்கல் அண்ணே...

Unknown சொன்னது…

விசா முடிந்து தங்குபவர்களை சிங்கப்பூர் போல் நிர்வாணமாக ரத்தம் வரும்வரை அடிக்க அமெரிக்க சட்டத்தில் ஒரு துளி இடம் இல்லை.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அண்ணே "அமெரிக்கா - பயோடேட்டா" சூப்பர்...

Chitra சொன்னது…

பாராட்டுக்குரியது : யாரை வேண்டுமானாலும் விமர்சிக்க கூடிய ஜனநாயக அமைப்பு


...... இந்த உரிமை, எவ்வளவு மகத்தானது...... இந்தியாவிலும் இருந்தால், "ஆட்டோ"வுக்கு வேலை ஏது? ம்ம்ம்ம்.....

ஜோதிஜி சொன்னது…

எல்லாவிஷயங்களிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறீர்கள் செந்தில். பாராகவன் உருவாக்கிய டாலர் தேசத்தின் மொத்த பக்கங்களையும் ஒரு சிறு குறிப்பு மூலம் அடக்கி விட்டீர்கள்.

அழகான ராட்ஸ சன்.

Unknown சொன்னது…

//உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு//

கலக்கல்

Karthick Chidambaram சொன்னது…

/// உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு.///

ரசித்தேன் :) :)

//யாரை வேண்டுமானாலும் விமர்சிக்க கூடிய ஜனநாயக அமைப்பு//



கருத்து உரிமையில் அமெரிக்கா கொஞ்சம் மேலதான்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

அருமையான கருத்துகல் அடங்கிய அறிமுகம் - அமெரிக்கா பற்றிய அறிமுகம்

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கலக்கல்

வெங்கட் சொன்னது…

இன்னிக்கு அமெரிக்காவா..!!

கலக்கலா இருக்கு..

// தொழில் : பணம் பண்ணுவது , நாட்டாமை பண்ணுவது., //

Side Business தான் சொல்லி இருக்கீங்க..
Main Business-ஐ சொல்லலியே..
அது...,

சண்டை மூட்டுவது , ஆயுதம் விற்பது..

ஜில்தண்ணி சொன்னது…

அண்ணே வழக்கம் போல் பயோடேட்டா செம செம :)

vinthaimanithan சொன்னது…

மிகவும் கூர்ந்த அவதானிப்புடன் எழுதப்பட்டிருக்கின்றதண்ணா.

எதிரிகள் இஸ்லாமியர்கள் அல்ல என்ற வரியைத்தொடர்ந்து சிந்தனைகளக் கிளைத்துக்கொண்டே போனால் எழும் 'பின்னே யார்?' என்ற கேள்விக்கு விடையாக வரும் எண்ணெய்ப் பொருளாதார அரசியலும், தனது பொருளாதாரச்சுரண்டலுக்கு எதிர்நிற்கும் அனைவருமே எதிரிகள்தான் என்கிற அவர்களின் மனப்பான்மையும் மேலும் இதே இஸ்லாமிய அடிப்படைவாதிகளை வளர்த்துவிட்ட நரித்தனமும் நெஞ்சைக் கரிக்கச் செய்கின்றன. கூர்ந்த அரசியல் நோக்கர் ஆகிவருகிறீர்கள்...

விக்கிலீக்ஸ் பற்றிய விவாதம் உங்கள் பதிவுக்குப்பின் அதிகரித்து வருவரைக் கண்டீர்களா?

ஹியுகோ சாவேஸ்.... வெல்டன் அண்ணா ஒரு புதிய கலகக்காரனின் அறிமுகத்துக்கு!

ஜெட்லி... சொன்னது…

//பயம் : இல்லாத மாதிரி நடிப்பது
//


பார்த்தா அப்படி தான் தெரியுது....

அருண் பிரசாத் சொன்னது…

//உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு//

செம பாயிண்ட்

மங்குனி அமைச்சர் சொன்னது…

கருத்து : உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு...///


ஹா.,ஹா.,ஹா.,

vasan சொன்னது…

The best part of the BIO-DATA is the Photo of George.W.Bush.(SYMBOLIC & SUPER.US Handles everything in a WRONG WAY)
India ONCE was an irretation but NOW a SLAVE.

vasu balaji சொன்னது…

நச்சு நச்சுன்னு உச்சி மண்டையைல இடி:). ஒபாமாக்கு தமிழ் தெரிஞ்சா?:))

எல் கே சொன்னது…

USla irunthu autop varap pothu

'பரிவை' சே.குமார் சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்


பதிவு செம ஹாட் !

பெயரில்லா சொன்னது…

//பயம் : இல்லாத மாதிரி நடிப்பது
கோபம் : எதிர்க்கும் முன்பே காட்டுவது //

உண்மை தான் செந்தில்

Paleo God சொன்னது…

செந்தில் டச்!! :))

சசிகுமார் சொன்னது…

அருமை நண்பா கலக்கிடீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

சரிதான்...உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு.

இனிய நண்பர்கள் தின
வாழ்த்துகள் செந்தில்.

vinthaimanithan சொன்னது…

இப்போதாண்ணே ஃபோட்டோவ உத்து பாத்தேன்... புஷ்ஷு நல்லாத்தான் ஃபோன் பேசினுகீறாரு... ஒருவேளை நம்ம மண்ணுமோகன் கிட்டருந்து வந்த call ஆ இருக்குமோ?

aavee சொன்னது…

பதிவு நல்லா இருந்தது. அமெரிக்காவின் நிலையை தெளிவாக காட்டியுள்ளீர்கள். இப்போதான் புஷ்-ஐ வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே, இன்னும் அவர் போட்டோ எதுக்கப்பா???

வால்பையன் சொன்னது…

//உலகின் பயம் மிகுந்த துணிச்சலான நாடு.//


டாப்பு

செல்வா சொன்னது…

//பயம் : இல்லாத மாதிரி நடிப்பது ///
:-) அருமை ...!!

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

நட்சத்திர வாரத்தில் நாள் தோறும் கலக்கினீர்கள் ...
சிறந்த பதிவுகளை தொடர்ந்து இட்டது மட்டுமல்லாமல் தொடர்ந்து அனைவருக்கும் பின்னூட்டமும் இட்டீர்கள் ...
இது பெரும்பாலான பதிவர்களிடம் காணக் கிடைக்காத ஒன்று ...
ஒன்று தோழர் ...
எந்நேரமும் இணையமே கதி என்று இருந்தால் பெரு வணிகன் ஆவது எப்படி ...
உரிமையில் கேட்கிறேன் !

Unknown சொன்னது…

தோழர் நோயோ அவர்களுக்கு, தங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி.. என் வேலையே எப்பொதும் இணையத்தில் அதனால் வேலை போரடிக்கும் போதெலாம் பதிவுகள் படிப்பேன், பிடித்துவிட்டால் காட்டாயம் கமெண்ட் எழுதுவேன். ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேர உணவு இடைவேளை உட்பட உழைக்கிறேன் மொத்தமாக ஆறு மணி நேரம் மட்டுமே தூக்கம்,, அதனால் நிச்சயம் பெருவணிகன் ஆவேன்.. அன்பிற்கு என் வணக்கமும் நன்றியும்...
2

theerppavan சொன்னது…

nalla adi......super!