16 ஆக., 2010

விலைவாசி - பயோடேட்டா


பெயர்                                   : விலைவாசி 
   

இயற்பெயர்                        : வயிற்றெரிச்சல்
   

தலைவர்                             : தொழில் அதிபர்கள் 
துணை தலைவர்              :அரசியல் வாதிகள் 
மேலும் 
துணைத் தலைவர்கள்    :அதிகாரவர்க்கம் 
வயது                                   : பண்டமாற்று போய் பணம் பிறந்த நாள் முதல் 
தொழில்                              : பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குவது 
பலம்                                     : நுகர்வுக் கலாச்சாரம்
பலவீனம்                             : ஏறி இறங்கும் பங்குச்சந்தை  
நீண்ட கால சாதனைகள்        : உயர்ந்து கொண்டே இருப்பது 
சமீபத்திய சாதனைகள்           : மக்கள் கேள்வி கேக்காதது 
நீண்ட கால எரிச்சல்                : போராட்டம் செய்பவர்கள் 
சமீபத்திய எரிச்சல்                   : தேர்தல் நெருங்குவது 
மக்கள்                                          : அடிமைகள் 
சொத்து மதிப்பு                          : சுவிஸ் வங்கிகள் திணறுகின்றன 
நண்பர்கள்                                  : அதிகார வர்க்கத்தினர் 
எதிரிகள்                                      : எப்போதும் கம்யூனிஸ்டுகள் 
ஆசை                                           : இந்தியாவை அமெரிக்காவாக மாற்ற 
நிராசை                                       : தண்டகாரண்ய மக்களால் வருவது 
பாராட்டுக்குரியது                    : மக்களை இன்னும் பொறுமைசாலிகளாக வைத்திருப்பது (எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாங்கய்யா!)
பயம்                                             : இலவசங்களைத் தருபவர்கள் 
கோபம்                                        : எளியவர்களுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது 
காணமல் போனவை              : மானியங்கள் 
புதியவை                                    : கோடிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது 
கருத்து                                        : விமானப் பயணங்களையே தொழுவம் என்று சொல்பவர்களை நிர்வாகம் செய்ய சொன்னால் நாடு குட்டிச்சுவராகத்தான் போகும் 
டிஸ்கி                                          : இந்திய அரசியல் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் மற்றும் தேசியத்தில் ஒற்றை ஆட்சியாக மாறிவருவது கவலை அளிக்கிறது.
.

35 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

"கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதுன்னும் புரியலே"

அப்டீங்கிற பட்டுக்கோட்டையாரோட வரிகள் காதுல ஒலிச்சிட்டு இருக்கு...

Cable சங்கர் சொன்னது…

ஏங்க விந்தைமனிதன்.. ஏன் நீங்க.. உங்கள் கருத்துக்கு பதிலாய் பட்டுக்கோட்டை பிரபாகர் பாடிய பாட்டெல்லாம்சொல்கிறீர்கள்..:)

vasu balaji சொன்னது…

டிஸ்கி டாப்:(

vinthaimanithan சொன்னது…

//ஏங்க விந்தைமனிதன்.. ஏன் நீங்க.. உங்கள் கருத்துக்கு பதிலாய் பட்டுக்கோட்டை பிரபாகர் பாடிய பாட்டெல்லாம்சொல்கிறீர்கள்..:) //

அட எவ்ளோ நாள்தாங்க சுயமா சிந்திக்கிறது? மூளை வலிக்காதா?!

vinthaimanithan சொன்னது…

//பட்டுக்கோட்டை பிரபாகர் பாடிய//
என்னது பிரபாகரா? அவரு நல்லா கதை எழுதுவாருன்னு தெரியும்... சினிமால பாட்டு வேற பாடுறாரா? அட கருமமே!

( குசும்பு வேலை பாத்தாக்க மட்டும் யூத்தாயிட முடியுமா?!)

வினோ சொன்னது…

/ பாராட்டுக்குரியது : மக்களை இன்னும் பொறுமைசாலிகளாக வைத்திருப்பது (எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாங்கய்யா!) /

பதிலே இருக்காதுன்னு நினைக்கிறேன் எப்படி, ஏன் என்று கேள்விகள் கேட்டா...

பதவி சுப்பர் அண்ணே...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

செந்தில்..இதை எல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா?...சூப்பர்..

Asiya Omar சொன்னது…

அருமை.250 க்கும் மேலே பின்தொடர்கிறாங்கன்னா சும்மா?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//கருத்து : விமானப் பயணங்களையே தொழுவம் என்று சொல்பவர்களை நிர்வாகம் செய்ய சொன்னால் நாடு குட்டிச்சுவராகத்தான் போகும் //
சரியா சொன்னீங்க .

thamil சொன்னது…

அருமை செந்தில் சார்....

Sriakila சொன்னது…

அடி மனதில் அனைவருக்கும் ஏற்படும் குமுறலை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

உசிலை மணி சொன்னது…

//Sriakila கூறியது...
அடி மனதில் அனைவருக்கும் ஏற்படும் குமுறலை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.//

நல்ல பின்னூட்டம்...அண்ணே போட்டோ சூப்பர்.

சௌந்தர் சொன்னது…

அண்ணா நம்ம விந்தை மனிதனுக்கு ஒரு பயோடேட்டா ரெடி பண்ணுங்கோ அதிவேகத்தில் வளர்ந்து வருகிறார்...

பெயரில்லா சொன்னது…

அருமை அண்ணே!
நவீன இந்தியாவ தோலுரித்து காட்டி இருக்கீங்க!

Jey சொன்னது…

சூப்பர் செந்தில். இன்றைய யதார்த்தம்.

ஜில்தண்ணி சொன்னது…

///இந்திய அரசியல் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் மற்றும் தேசியத்தில் ஒற்றை ஆட்சியாக மாறிவருவது கவலை அளிக்கிறது.. //

கடைசியா சொன்னாலும் கலக்கலா சொன்னீங்க தல

பக்கா பயோடேட்டா

நாடோடி சொன்னது…

இதுதான் இன்றைய‌ ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ளுக்கு ச‌வாலாக‌ இருப்ப‌து ... ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணே.

Unknown சொன்னது…

சூப்பரா இருக்கு.. வாழ்த்துக்கள்..

நேரமிருக்கும் போது எனது வலைப்பதிவையும் வாசியுங்கள்..
http://abdulkadher.blogspot.com

dheva சொன்னது…

விலைவாசியின் அசல் முகம் பயோடேட்டாவை....அருமை செந்தில்!

Chitra சொன்னது…

டிஸ்கி : இந்திய அரசியல் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் மற்றும் தேசியத்தில் ஒற்றை ஆட்சியாக மாறிவருவது கவலை அளிக்கிறது.


..... correct!

சரியாக சொல்லிட்டீங்க.....

vinthaimanithan சொன்னது…

//அண்ணா நம்ம விந்தை மனிதனுக்கு ஒரு பயோடேட்டா ரெடி பண்ணுங்கோ அதிவேகத்தில் வளர்ந்து வருகிறார்... //

எங்கப்பா! பின்னூட்ட அரசியல் பண்ணாமலேயே பிக்கப் ஆவலாம்னு பாத்தா.. ம்ஹூம்... இன்னும் செல்ஃப் எடுக்க மாட்டேங்குது!

ஈரோடு கதிர் சொன்னது…

சுளீர்னு அடிக்குது

S.M.Raj சொன்னது…

டிஸ்கி : இந்திய அரசியல் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் மற்றும் தேசியத்தில் ஒற்றை ஆட்சியாக மாறிவருவது கவலை அளிக்கிறது.


..... correct!

சரியாக சொல்லிட்டீங்க.....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இன்றைய யதார்த்தம்.

சசிகுமார் சொன்னது…

//சமீபத்திய சாதனைகள் : மக்கள் கேள்வி கேக்காதது//

நாங்க எப்பதான் கேட்டோம் இப்ப கேக்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

//டிஸ்கி : இந்திய அரசியல் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் மற்றும் தேசியத்தில் ஒற்றை ஆட்சியாக மாறிவருவது கவலை அளிக்கிறது.//


டாப்.....

கமலேஷ் சொன்னது…

அருமையான புகைப்படம்...
நல்ல தேர்வு.

செல்வா சொன்னது…

//பாராட்டுக்குரியது : மக்களை இன்னும் பொறுமைசாலிகளாக வைத்திருப்பது (எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாங்கய்யா!)
///
அது நம்ம திறமைல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

heheee

அன்பரசன் சொன்னது…

பிரமாதம்ண்னே

அருண் பிரசாத் சொன்னது…

இன்றைய நிலமையை அப்படியே கூறி இருக்கிறீர்கள் அண்ணா

வால்பையன் சொன்னது…

அருமை

s சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Bibiliobibuli சொன்னது…

முத்திரை பதிக்கிறீர்கள், செந்தில். Excellent. எனக்குப் பிடித்த இன்னோர் பயோடேட்டா.

காமராஜ் சொன்னது…

பயோடேட்டா வா ?. தப்பு தம்பி தப்பு. தயை கூர்ந்து மாற்றிக்கொள்ளுங்கள். எரிதழல்,அல்லது கவிதை.