7 செப்., 2010

ஆந்தை இரவுகள் ...

விழித்திருந்து நிறைத்த வருவாயில் 
விந்தின் வீச்சம் மிகுதியாக....

காத்திருக்கிறேன் ஒரு விடியலுக்கு 
வந்து நிறைத்தது மழை...

பின்னிரவில் பருகும் தேநீரில் 
பரவுகிறது 
துரோகத்தின் வாசனை ..

ஒரு காவலரின் விரட்டலில் 
நாடகத்தின் இறுதிக் காட்சி...

கடைசிப் பயணியையும் 
இறக்கிவிட்ட பின்
தள்ளாடிச் சென்றது 
நகரப் பேருந்து... 

20 கருத்துகள்:

வினோ சொன்னது…

Anne Present....

vinthaimanithan சொன்னது…

தள்ளாடி நகரும் நகரப்பேருந்தின்
இறுதிப்பயணியும் இறங்கிய
வெறுமை...

விரட்டும் காவலர் கண்கள்
சுருட்டிய காகிதங்களை நோக்கி

என்றோ நிகழ்ந்த துரோகத்தின்
ஆடை மிதக்கும்
ஊதிக்குடிக்கும் தேநீரில்

நிறைக்கும் பெருமழையில்
எங்கே தேட என் விடியலை

சிவந்திருந்த விழிகளிலும்
சில்லறைக்காய்க் கொடுத்த நோட்டுக்களிலும்
தெரிகின்றதா என்ன
விந்துப் படிமங்கள்?


இதுக்குப் பேரு ரிவர்ஸ் கியர் அண்ணா.... எப்பூடி? (எப்பிடி எளுதுனாலும் கும்முவோம்ல?!)

என்னது நானு யாரா? சொன்னது…

அண்ணனுடைய கவிதையும் புரியல

விந்தைமனிதனின் கவிதையும் புரியல

இப்படி எழுதுவது தான் கவிதையா? பொருள் புரியாமல் இருப்பது சரிதானா?

அல்லது நான் தான் அறிவில்லாத ஜடமாக இருக்கிறேனா? அதுவும் புரியல

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Present Senthil

செல்வா சொன்னது…

உள்ளேன் அண்ணா ,இந்த கோமாளிக்கும் புரியலை ..!!

ருத்ர வீணை® சொன்னது…

ரைட்டு !!

Bibiliobibuli சொன்னது…

கவிதையின் புரிதல் இந்த வரிகளில் தான் உள்ளது போலும்?? "Inspire me dammit that's how I make my living". ஆந்தை இரவுகளின் காட்சிகள் அவை மீட்டும் கசப்பான அனுபவங்கள் கூட inspiration....!!!!

Unknown சொன்னது…

சத்தியமா எனக்கும் புரியல......

vasu balaji சொன்னது…

ரெண்டும் அருமை.

அன்பரசன் சொன்னது…

எனக்கும் சரியான அர்த்தம் புரியல அண்ணா.

அலைகள் பாலா சொன்னது…

கவிதை அருமை. (அப்பாடா புரிஞ்ச மாதிரி சீன் போட்டாச்சு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

saththiyamaa puriyualai

ஹேமா சொன்னது…

ஆந்தைக்கு மட்டுமே தெரியும் இரவின் காட்சிகள் !சரிதானே செந்தில்.

விந்தையாரின் ரிவர்ஸ் கவிதையும் நல்லாத்தானிருக்கு.

வெற்றி நமதே சொன்னது…

இது கவிதைய? போடாங்க.....

வாயல்ல ஏதாவது அசிங்கம்மா வந்துட போகுது

காமராஜ் சொன்னது…

இந்த விடிகாலையில்
ஒரு விடியாத இறவின்
சலனமனைத்தும் கேட்க வைத்துவிட்டீர்களே செந்தில்.
மௌன இறைச்சல் கேட்கிறது கவிதையில்.பின்னிரவு தேநீரில் தெரியும் துரோகம்
ஆந்தையைக்கண்டு மிரள வைக்கிறது.படிக்கப்பயந்து பொத்தி பொத்தி வைத்தது சரியாப்போச்சு.
இது இந்த வாரத்திற்கான க்ளாஸ் கவிதை செந்தில் .பிடியுங்கள் வாழ்த்துக்களை.

காமராஜ் சொன்னது…

மறந்து போனது. விந்தை மனிதனுக்கும் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துட்டு வரும்போது தோணின கவிதைதான இது அண்ணா? :)
//துரோகத்தின் வாசனை//
ஒரே தும்ம்மல்....

vasan சொன்னது…

The Reverse GEAR ride was a bit more thrilling than the TOP gear drive.(reverse drive had a limited vision)

"உழவன்" "Uzhavan" சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு

Sriakila சொன்னது…

எனக்கு ஒன்றுமே புரியவில்லை...