23 நவ., 2010

பயோடேட்டா - கலாசாரம் ...


பெயர்                        :  கலாச்சாரம்                                      
இயற்பெயர்                    : கற்புநிலை                     
தலைவர்கள்                     : மதவாதிகள், குருமார்கள்                        
துணைத் தலைவர்                : மேல்சாதிக்காரர்கள்        
மேலும்
துணைத் தலைவர்கள்            : எல்லா ஆண்களும் 
வயது                        : வேட்டைச் சமூகம் விவசாயம் செய்யத் துவங்கிய 
                                    காலம் முதல்                 
தொழில்                    : ஸ்கூல் வாத்தியார் மாதிரி கையில் குச்சியுடன் மிரட்டுவது              
பலம்                        : சமூகக் கட்டமைப்பு                  
பலவீனம்                    : நவநாகரீகம் பேசும் அரைவேக்காட்டுக் கலாச்சாரப் 
                                        புரட்சியாளர்கள்            
நீண்ட கால சாதனைகள்            : சமூகம் அடுத்தடுத்த படிகளில் ஏற ஏணியாய் இருந்தது
சமீபத்திய சாதனைகள்            : மாற்றங்களை ஏற்றுக் கொள்வது (வேறு வழியே இல்லை!) 
நீண்ட கால எரிச்சல்            : கிளர்ச்சியாளர்கள் (பெரியாரிஸ்டு, கம்யூனிஸ்டு 
                                                  இன்ன பிற இஸ்ட்டுகள்...)    
சமீபத்திய எரிச்சல்                : லிவிங் டுகெதர்     
மக்கள்                        : செம்மறியாடுகள்                 
சொத்து மதிப்பு                : செவ்விலக்கியங்களும், காலத்தால் அழியாத 
                                              கலைச் செல்வங்களும்         
நண்பர்கள்                    : ஆமாஞ்சாமிகள், கலாச்சாரக் காவலர்கள் (சிவசேனா, 
                                         அல்-கொய்தா, பெந்தகோஸ்தே, வஹாபிகள்)            
எதிரிகள்                    : சினிமா, பப் மற்றும் டிஸ்கொதே ஹால்கள்             
ஆசை                        : உடல் மறைக்கும் ஆடை                
நிராசை                    : அங்கங்கள் மின்ன மின்ன...               
பாராட்டுக்குரியது                : காட்டுமிராண்டிகளை நாகரீகமாக்கியது       
பயம்                        : கலாச்சாரக் கலப்புகள்                 
கோபம்                    : எதிர்த்துக் கேள்வி கேட்பது    
காணாமல் போனவை            : குடும்ப ஒற்றுமை மற்றும் உறவு முறைகள்     
புதியவை                    : கலப்புத் திருமணங்கள்               
கருத்து                    : லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை அமெரிக்கா இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குப் போலிக் கலாச்சாரப் புரட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?                 
டிஸ்கி                        : நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்
--  

83 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

கலாச்சாரத்தின் ஓட்டைகளுக்கு ஒட்டுப்போட முயலும் கலாச்சாரக்காவலர்களுக்கும், சமூகத்தின் இன்னபிற குறைபாடுகளைக் களைய முயலாமல் வெறுமனே லிவிங் டுகெதர் எனக்குதிக்கும் தவளைகளுக்கும் நல்ல கவுண்டர் அட்டாக்! ( குதர்க்கமாவே பேசணும்னு நெனக்கிறங்க செட்டியார் அட்டாக், முதலியார் அட்டாக், தேவர் அட்டாக்னு கூட வெச்சிக்கலாம்!)

ஹரிஸ் Harish சொன்னது…

நச் பாஸ்..

vinthaimanithan சொன்னது…

//லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை அமெரிக்கா இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குப் போலிக் கலாச்சாரப் புரட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?//

கலாச்சார மாற்றம் என்பது மிக நுண்மையாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். குடும்பம் என்பது அரசியலின் நுண் அலகாக இருப்பது. ஒட்டுமொத்த அரசியல், சமூக மாற்றம் நிகழாமல் குடும்பம் என்ற அமைப்பில் மட்டும் புரட்சியைப் புகுத்துவது என்பது அரை வேக்காட்டுத்தனம் மட்டுமல்ல ஆபத்தானதும்கூட... இதை அரைகுறைக் கலாச்சாரப் புரட்சியாளர்கள் புரிந்து கொள்வதில்லை. லிவிங் டுகெதர் என்ற கலாச்சார மாற்றம், தனிச் சொத்துரிமை அழிப்பு என்கிற சமூக மாற்றத்தின் by-product ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது இயங்கியல் விதி. அப்படி இல்லாமல் சமூகத்தின் மற்ற சீரழிவுகளைக் கருத்தில் கொள்ளாமல் வெறுமனே தனிமனிதச் சுதந்திரம் எனக் குதித்துக் கொண்டிருந்தால் அதன் பை ப்ராடக்ட் ஆக உண்டாகும் வன்முறைக்கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். தனிமனிதன் என்பவன் சமூகத்தின் ஒரு உறுப்பு மட்டுமே!

லிவிங் டுகெதரில் அடுத்தடுத்து பார்ட்னர்களை மாற்றியபின் ஒரு வெறுமையும் மன அழுத்தமும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன என்பதை சில காலம் முன் பெங்களூரில் நடந்த சர்வேயின் முடிவு காட்டுகின்றது.

லிவிங் டுகெதரை ஆதரிக்கும் அதே நேரம் அது நிகழ வேண்டிய களமும் காலமும் இதுவல்ல என்பதையும் உணர வேண்டும்.

யப்பா! இந்த கமெண்டை டைப்புறதுக்குள்ள நொர தள்ளுது போங்க! வர வர வள்ளுவர் மாதிரி ஆயிட்டீங்கண்ணா! நாலைஞ்சு பதிவுல எழுத வேண்டியதை ஒத்தைவரில சொல்லிட்டு போயிட்டீங்க!

vinthaimanithan சொன்னது…

அட சீக்கிரம் யாராச்சும் வாங்கப்பா! எவ்ளோ நேரம்தான் தனியா கச்சேரி நடத்திட்டு இருக்குறது?

vasu balaji சொன்னது…

/லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை /

கமான் செந்தில். இது மட்டுமேவா காரணம்? ஏன் இந்தியாவில் இது இன்னும் மூக்கைக் கூட நுழைக்கவில்லை. மாணவிகளோடு பஸ்ஸை கொளுத்தியது இப்படி வளர்ந்தவர்களா? மன்னிக்கவும். லிவிங் டுகெதரில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க, ஐரோப்பியச் சட்டங்களில் பாதுகாப்பு உண்டு. தாயும் தந்தையும் நிராகரிக்கும் வேளையில் உதறிவிட்டு போக முடியாது. இங்கே, திருமணம் செய்துவிட்டு குழந்தை பிறந்தபின் காணாமல் போகிறவர் எத்தனை பேர்.

vasu balaji சொன்னது…

மெரீனா பீச்சின் குடைக்கலாசாரத்தில் எப்படி வந்தது. தி.நகர். மரம் முழுக்க மேரி ஸ்டோப்ஸ் விளம்பரம் சொல்லுவது என்ன? இந்த முறைகேடுகளில் ஒரு சிறிதாவது ஒழுக்கமாய், ஒரு ஒப்பந்தத்தோடு மட்டுமே லிவிங் டுகெதர் இருக்கமுடியும் பட்சத்தில் அதையும் ஒரு சொட்டைக் கலாச்சாரமாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது இருக்கும் சார். ஒரு காலகட்டத்தில் பதிவுத் திருமணம் போல் அதற்கும் ஒரு ஷரத்து வரலாம்.

vasu balaji சொன்னது…

காலம் காலமாய் இருந்து வந்த தாலிக்கு அங்கீகாரம் நம்நாட்டில் எப்போது சட்ட பூர்வமாக கிடைத்தது தெரியுமா?:)

அன்பரசன் சொன்னது…

//சமீபத்திய எரிச்சல் : லிவிங் டுகெதர்
பலவீனம்: நவநாகரீகம் பேசும் அரைவேக்காட்டுக் கலாச்சாரப் புரட்சியாளர்கள்//

:)

vinthaimanithan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vinthaimanithan சொன்னது…

//லிவிங் டுகெதரில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க, ஐரோப்பியச் சட்டங்களில் பாதுகாப்பு உண்டு. தாயும் தந்தையும் நிராகரிக்கும் வேளையில் உதறிவிட்டு போக முடியாது. இங்கே, திருமணம் செய்துவிட்டு குழந்தை பிறந்தபின் காணாமல் போகிறவர் எத்தனை பேர்//

அய்யா! சட்டரீதியான அல்லது பொருளாதாரரீதியான பாதுகாப்பு மட்டுமே ஒரு குழந்தையை முழுமையான பக்குவமடைந்த மனிதனாக வளர்க்க முடியாது. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் பற்றிய வரலாற்றைத் தயைகூர்ந்து முழுமையான அலசலோடு படித்துப் பாருங்கள். ஹிப்பிக் கலாச்சாரமும் துப்பாக்கிக் கலாச்சாரமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருப்பதை... நானல்ல... உளவியல் ஆய்வாளர்கள் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.லிவிங் டுகெதர் தவறு என்று நாங்கள் (இந்த இடத்தில் விந்தைமனிதன், கேஆர்பி செந்தில் எனக் கொள்க) சொல்லவில்லை. நாங்கள் பெரியாரின் வழிவந்தவர்கள். வெறுமனே பாலுறவுக் குறிகளுக்குள் மட்டுமே கலாச்சாரம் வாழ்கிறது என்பதை நாங்கள் எப்போதுமே நம்பியதில்லை. ஆனால் சமூகமாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய லிவிங் டுகெதரை, சமூகத்தின் பிற பிற்போக்குத் தனங்களைத் தவிர்த்துவிட்டு ஆதரிப்பதோ வளர்த்தெடுப்பதோ மிகவும் ஆபத்தானதாகவே முடியும் என்கிறோம்.

திருமண அமைப்பில் இருக்கும் பிற்போக்குத் தனங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் லிவிங் டுகெதர் சரியான மாற்று அல்ல.

dheva சொன்னது…

செந்தில்...@ ஆங்கிலத்திலேயே சொல்லிடுறேன்.....


This is a fantastic stroke.........from your end.........!!!!!!!!

I really enjoyed...it.....!!!!!!!

vinthaimanithan சொன்னது…

//ஆங்கிலத்திலேயே சொல்லிடுறேன்.....
//
நம்மூரு பேச்சாளர்கள்லாம் "ஆங்கிலத்திலே மிக அழகாகச் சொல்வார்கள்" அப்டீம்பாங்களே? அதே மாதிரியா தேவாண்ணா?!
(ஒண்ணுமில்ல... இன்னிக்கு ஃபுல் ஃபார்மில இருக்கேன்.. அதான்! கோச்சுக்காதிய!)

dheva சொன்னது…

விந்தை மனிதன்....@ தம்பி.....தமிழ்லயே சொல்லிடுறேன்.....

@ செந்தில்......செம சாத்து சாத்தியிருக்கீங்க செந்தில்.. .உங்க ஸ்டைல்ல.....!!!!


ஹா...ஹா...ஹா... இது எப்டி இருக்கு.....!!!!!

vasu balaji சொன்னது…

இது மாற்று என்று யாரும் சொன்னார்களா என்ன? இதில் குறை கூற வேண்டுமானால் இதை விட மற்றது பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு ஏதாவது இருக்க வேண்டும். அது மெஜாரிட்டி ஒன்றை மட்டுமே கொண்டதல்ல. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரமென்றால் நம்மூரில் வீச்சரிவாள் கலாச்சாரம். பொதுவாகப் பார்த்தால் நம்ம ஊரில் வருமுன் காப்பது என்பது எதிலும் கிடையாது. ரெகுலேட்டரி சட்டங்களே பிரதானம். வரதட்சணைக் கொடுமை சட்டம் சரியாகவா பயன்படுகிறது? ஒரு புறம் காதல் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் வேறு வழியின்றி பெரும்பாலும் அங்கீகரிக்கப் பட்டு வரும் நேரத்தில், டேட்டிங்கும், ஃப்ளிர்ட்டிங்கும், வந்து விட்டதே. அன்றியும் லிவிங் டு கெதர் குறித்து செந்தில்,ராஜாராமிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. இது காலம் காலமாக நம் சமூகத்தில் இருந்து வந்தது. ஆதிகாலத்தைச் சொல்லவில்லை. மிகச் சமீபம் வரை. அதற்கு இப்போது ஒரு வழிகாட்டல் வந்திருக்கிறது அவ்வளவே. மேலும் நாமெல்லாம் செண்டிமெண்ட் மனிதர்கள். உறவே அத்துப்போச்சு என்று விஷம் குடிக்கப் போனவர்கள் பேரனோ பேர்த்தியோ பார்த்தால் ஒழியுது கழுதை என்று சேர்ப்பவர்கள்.

இதில் தன் ரத்தம், தன் பிள்ளை என்றான பிறகு, திருமணம் செய்து கொள்ளபவர்கள் அதிகம் இருக்கும். I dun need any attributes for senthil and rajaraman. I talk here coz i respect you ppl. and i know you are reasonable, rational etc. etc.

vinthaimanithan சொன்னது…

//அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரமென்றால் நம்மூரில் வீச்சரிவாள் கலாச்சாரம்//
தவறான புரிதல் அய்யா! துப்பாக்கிக் கலாச்சாரத்தின் வேர் வேறு... வீச்சரிவாள் கலாச்சாரத்தின் வேர் வேறு... கொஞ்சம் கூகிளிட்டுப் பாருங்கள்... அமெரிக்க ஆய்வுகளை! யானையும் கருப்பு; காக்காவும் கருப்பு... எனவே யானையும் காக்காவும் ஒன்றுதான் என்பதுபோலுள்ளது உங்கள் வாதம்! சட்டரீதியான அங்கீகாரம் மட்டுமே எல்லாவற்றையும் நியாயப் படுத்திவிட முடியாது. நானோ செந்திலோ லிவிங் டுகெதரை குறைமட்டும் சொல்லவில்லை.
//மேலும் துணைத் தலைவர்கள் : எல்லா ஆண்களும்// என்ற வரியையும்
//தொழில்: ஸ்கூல் வாத்தியார் மாதிரி கையில் குச்சியுடன் மிரட்டுவது// என்ற வரியையும் கவனிக்கவும்...
//லிவிங் டு கெதர் குறித்து செந்தில்,ராஜாராமிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. // நாங்கள் கலாச்சாரக் காவலர்கள் அல்ல அய்யா! செந்திலண்ணன் தாலிகட்டாமல் திருமணம் செய்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் வெறுமனே கலாச்சாரமாற்றம் என்றில்லாமல் நிஜமான சமூகமாற்றத்தை விரும்புகிறவர்கள்.

மேலும் பின்னூட்டத்தில் நான் துவக்கத்திலேயே குறிப்பிட்ட கருத்துக்களுக்கான தங்கள் பதில் என்னவோ?

குடுகுடுப்பை சொன்னது…

லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை அமெரிக்கா இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குப் போலிக் கலாச்சாரப் புரட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?//

இந்தக்கருத்து உங்களுடையது.

எனக்கு லிவிங் டுகெதரில் நம்பிக்கையில்லை, ஆனால் நம்பிக்கை உள்ள இரண்டு பேரு லிவிங் டுகெதர்ல வாழ்ந்தால் அவர்களை இருக்கக்கூடாது என்று எப்படி தலையிடுவது.அதற்கான நடைமுறை என்ன?

ஜீவன்பென்னி சொன்னது…

ரொம்ப சூப்பாரா இருக்கு இன்னைக்கு பயோடேட்டா, வேற என்னாத்த சொல்ல கலக்கல். நச்சுன்னு நெத்தி அடிச்ச மாதிரி சின்ன சின்ன வார்த்தைகள்ல புட்டு புட்டு வச்சிருக்கீங்க.

vinthaimanithan சொன்னது…

//I dun need any attributes for senthil and rajaraman. I talk here coz i respect you ppl. and i know you are reasonable, rational etc. etc. //
நம்பிக்கைக்கு நன்றி அய்யா! இங்கு கருத்துக்களுக்கான பதில் மட்டுமே இருக்கும்!

குடுகுடுப்பை சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
/லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை /

குப்பைத்தொட்டில போட்டா நல்லா வளருவாங்கன்னு நினைக்கிறேன்.

குடுகுடுப்பை சொன்னது…

திருமணம், லிவிங் டுகெதர் கருமாந்திரம் எல்லாத்திலேயும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அவைகளை களையவும் மனிதன் வழி கண்டுபிடிப்பான் அதுதான் கலாச்சாரம்.

குடுகுடுப்பை சொன்னது…

சமீபத்திய சாதனைகள் : மாற்றங்களை ஏற்றுக் கொள்வது (வேறு வழியே இல்லை!)

எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு.

vinthaimanithan சொன்னது…

//ஆனால் நம்பிக்கை உள்ள இரண்டு பேரு லிவிங் டுகெதர்ல வாழ்ந்தால் அவர்களை இருக்கக்கூடாது என்று எப்படி தலையிடுவது.அதற்கான நடைமுறை என்ன? //

கள்ளக்காதல்ல நம்பிக்கையுள்ள இரண்டு பேரு கள்ளக்காதல்ல வாழ்ந்தா அவங்களை இருக்கக்கூடாது என்று எப்படி தலையிடுவது. அதற்கான நடைமுறை என்ன? :)))))

vinthaimanithan சொன்னது…

லிவிங் டுகெதர் என்பது பொதுவுடைமைச் சமுதாயத்தின் கூறு! அப்படிப்பட்ட சமூகத்தில்தான் அது இயல்பாக இருக்கும்! ஏனெனில் அங்கு தனிச் சொத்துடைமைக்கு இடமில்லை.

பெண்ணின் கற்புநிலையின் ஆணிவேர் என்பது தனிச்சொத்துடைமைதான் என்பது வரலாறு.

முழுமையான சமூகப்புரட்சிக்கு சாத்தியமற்ற சமூகத்தில் லிவிங் டுகெதர் என்பது உடலில் ஒரு உறுப்பு மட்டும் அதீத வளர்ச்சி பெறுவதுபோல! துருத்திக்கொண்டுதான் நிற்கும். (குறிப்பிட்ட செல்கள் மட்டும் அதீதமாய் வளர்வதை கேன்சர் என்பார்கள் விஞ்ஞானிகள்)

லிவிங் டுகெதர் தவறல்ல! அதை எம்மாதிரியான சமூகத்தில் வரவேற்கிறோம் என்பதுதான் முக்கியமாகிறது

ராஜ நடராஜன் சொன்னது…

//நண்பர்கள் : ஆமாஞ்சாமிகள், கலாச்சாரக் காவலர்கள் (சிவசேனா,
அல்-கொய்தா, பெந்தகோஸ்தே, வஹாபிகள்) //

மொத்தத்தில் என்னைக்கவர்ந்தது.

vinthaimanithan சொன்னது…

விவாதத்துக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி போலத் தோன்றினாலும் சமூக வரலாறு, சமூகத்தில் தனிமனிதப்பாத்திரம் போன்றவற்றுக்கும் எனது விவாதங்களுக்கும் தொடர்பான ஒரு கேள்வி:

ஒரு மனிதன் ஒரு ஆட்டையோ, மாட்டையோ ஏனைய விலங்குகளையோ கொன்றால் அது மிகப்பெரிய குற்றமல்ல... ஆனால் இன்னொரு மனிதனைக் கொன்றால் அது மிகக் கடுமையான குற்றம்! ஏன்?

பதிலளிக்க வேண்டும் என்றில்லை.... கொஞ்சம் யோசிக்கலாமே?

vasu balaji சொன்னது…

Oops. Sorry rajaraman. செந்திலிடமிருந்தும், ராஜாராமனிடமிருந்தும் நான் இதை எதிர்பார்க்கவில்லை என்று சொன்னது
/ஆனால் சமூகமாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய லிவிங் டுகெதரை, சமூகத்தின் பிற பிற்போக்குத் தனங்களைத் தவிர்த்துவிட்டு ஆதரிப்பதோ வளர்த்தெடுப்பதோ மிகவும் ஆபத்தானதாகவே முடியும் என்கிறோம்./ இதற்காகத்தான். சரியாகச் சொல்லாதது என் தவறும் கூட.

இது யார் ஆதரிப்பதாலும் வளர்ந்து விடாது. யார் தடுத்தாலும் நின்றும் விடாது என்பது உங்களுக்குத் தெரியும்தானே. விடுமுறை நாட்களிலும் தேங்கிவிட்ட கேஸ்களை முடிக்க குடும்ப நலக் கோர்ட்டுகள் செயல்படும் சூழ்நிலையிலிருக்கிறது சமூகம்.
டைவர்ஸீ பிள்ளைகளுக்கும், இவர்களின் பிள்ளைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? முக்கியமாக ‘என்னமோ சேர்ந்து இருக்கலாமாமே. அப்படி இருந்துக்கலாம்டி’ என்ற நிலையில் அமைவதில்லை இது. இந்த முடிவை எடுக்கக் கூடியவர்கள் அதன் சாதக பாதகங்களை அலசி, அதன் பிறகு துணிந்து எடுக்க வேண்டிய முடிவு. எப்படிக் காதல் திருமணம் புரிபவர்கள், தங்களுக்குத் தாங்களே பொறுப்பாக இருக்க வேண்டும். நாளை சிறு சறுக்கலில் கூட குடும்பத்தாரின் எள்ளலுக்கு ஆளாக நேரும் என்ற புரிந்துணர்வோடு இருக்கிறார்களோ அதை விட கூடுதல் எச்சரிக்கையாய் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

இன்னொன்று, முன்பே சொன்னபடி இதை மாற்றாகவோ, ஆதரிக்கவோ சொல்லவில்லை. இதை எதிர்க்கவோ, தடுக்கவோ நாம் யார் என்பது என் புரிதல். அது அவரவர் சுய விருப்பம். கலாச்சாரத்தைச் சுட்டி இதை எதிர்ப்பேனென்றால் இப்போதிருக்கும் ஓட்டை உடசலுக்கு பதில் சொல்லும் பொறுப்பும் இருக்கிறது. அதெல்லாம் களைய நாளாகும் என்றால் புதிது புதிதாகத் தோன்றும் சீரழிவுக்கு என்ன பதில்?

ராஜ நடராஜன் சொன்னது…

//ஏன் இந்தியாவில் இது இன்னும் மூக்கைக் கூட நுழைக்கவில்லை.//

பாலாண்ணா!அப்புறமென்ன வாசகர் பரிந்துரையில் போட்டு வறுத்துகிட்டு?

ராஜ நடராஜன் சொன்னது…

//காலம் காலமாய் இருந்து வந்த தாலிக்கு அங்கீகாரம் நம்நாட்டில் எப்போது சட்ட பூர்வமாக கிடைத்தது தெரியுமா?:)//

ஸ்மைலி போட்டா!சொன்னாத்தானே தெரியும்?

vinthaimanithan சொன்னது…

//இந்த முடிவை எடுக்கக் கூடியவர்கள் அதன் சாதக பாதகங்களை அலசி, அதன் பிறகு துணிந்து எடுக்க வேண்டிய முடிவு. எப்படிக் காதல் திருமணம் புரிபவர்கள், தங்களுக்குத் தாங்களே பொறுப்பாக இருக்க வேண்டும். நாளை சிறு சறுக்கலில் கூட குடும்பத்தாரின் எள்ளலுக்கு ஆளாக நேரும் என்ற புரிந்துணர்வோடு இருக்கிறார்களோ அதை விட கூடுதல் எச்சரிக்கையாய் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.//

இல்லீங்கய்யா! அப்டி நெனச்சா அவங்க பதிவுத் திருமணம் கூட பண்ணிட்டு இருந்திடலாம்! தாலி என்பது பிற்போக்குத்தனம் என்று அய்யா பெரியார் சொல்லிட்டுப் போயிருக்காரு. லிவிங் டுகெதரில் வாழ முடிவு செய்யும்போது எல்லா பொறுப்புணர்வுகளுடனும், புரிதலுடனும் முடிவு செய்தாலும் பிரதானப் பாத்திரம் வகிப்பது 'எப்ப வேணாலும் பிரிஞ்சுடற நிலை வரலாம்'ங்குற அவநம்பிக்கையும் ( நீங்க இதை 'எச்சரிக்கை உணர்வு'னு சொல்வீங்கனு நெனக்கிறேன்!) பிரிய முடிவு பண்ணா பார்ட்னர் ஞாயம் பேசப்படாதேங்குற உணர்வும்தான் இருக்க முடியும்.

அது மட்டுமல்லாம பதிவு செய்யப்பட்ட திருமணங்கள்லயும் பிரியிறது கஷ்டமான விஷயமில்லையே! ம்யூச்சுவல் கன்ஸெண்ட் அப்டீங்குறது இப்பல்லாம் கோர்ட்ல ஈஸியான நடைமுறைகள்லதான் நடக்குது!

ஸோ, சேர்ந்து வாழும்போது சக ஜீவன்மேல புரிதலும் விட்டுக்கொடுத்தலும் இன்றைக்கு நடைமுறையில இருக்குற குடும்ப அமைப்புல சாத்தியமான விஷயம்தான். suppose பிரியணும்னா கூட mutual consent அப்டீங்குறது சிரமமான விஷயம் இல்ல. பின்ன லிவிங் டுகெதரின் நோக்கம்தான் என்ன? கொஞ்சம் யோசிக்கணும். திரும்பவும் சொல்றேன்... நான் எல்லா லிவிங் டுகெதர் couple ஐயும், அந்த முறையையும் குறைமட்டுமே சொல்லத் தயாரில்ல... அது வழங்குற அதீத சுதந்திரம் இருமுனைக் கத்திபோலன்னு சொல்றேன். (சாமியோவ்! அந்த மனுஷன் பாட்டுக்கு இடுகையை போட்டுட்டு போயிட்டாரு! ஒவ்வொரு கமெண்டையும் டைப் பண்றதுக்குள்ள வெரலெல்லாம் நோகுது போங்க)

vinthaimanithan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vinthaimanithan சொன்னது…

//இதை எதிர்க்கவோ, தடுக்கவோ நாம் யார் என்பது என் புரிதல். அது அவரவர் சுய விருப்பம். //

சரிதான்!எதிர்க்கவோ, தடுக்கவோ வேண்டாம்!இன்னொருவருடைய வாழ்க்கையில் தலையிடவோ, விமர்சிக்கவோ நமக்கு உரிமையில்லைதான்.ஏற்கிறேன். ஆனால்...

சமூகத்தில் நிகழும் எந்தவொரு மாற்றத்தையும் சீர்தூக்கிப்பார்த்து அதன் நன்மை, தீமைகள், அவசிய அநாவசியங்கள் போன்றவற்றை அலசி ஆராய வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின், அறிவுசார்ந்து இயங்குபவனின் கடமையல்லவா?
"ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன?" என்பது போன்ற மனநிலை ஏற்கத்தக்கதா?

Bibiliobibuli சொன்னது…

//By the second bottle we have solved all the world's problems. We rock.//

This is cool!!! :)

ஒரு பின்னூட்டத்தையும் இன்னும் படிக்கவில்லை. ஆனால், இந்த "Living Together" என்கிற வார்த்தை அடிக்கடி இப்போ பதிவுலகில் கண்ணில் படுகிறது. ஐயா சாமிகளா, ஒண்ணே ஒண்ணு மட்டும் கேட்கிறேன். நம்ம தமிழ் பொண்ணுகளுக்கு மிச்ச கிடைக்க வேண்டிய எல்லா உரிமையும் கிடைத்துவிட்டதா?? இப்போ "Living Together" ங்கிற இந்த விஷயம் மட்டும் தான் பாக்கியா?

செந்தில் கலக்குறீங்க. என்றாவது ஒருநாள் உங்கள் எழுத்துக்குரிய என் சிறிய பரிசு உங்களை தேடி வரும்.

இன்னும் தொடர்வேன், பின்னூட்டங்களைப் படித்த பின்.

K.MURALI சொன்னது…

Nice one.
For follow up

ஹேமா சொன்னது…

செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை !

குடுகுடுப்பை சொன்னது…

கள்ளக்காதல்ல நம்பிக்கையுள்ள இரண்டு பேரு கள்ளக்காதல்ல வாழ்ந்தா அவங்களை இருக்கக்கூடாது என்று எப்படி தலையிடுவது. அதற்கான நடைமுறை என்ன? :)))))
//
சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்வார்கள். நான் அப்போதும் பொத்திக்கொண்டுதான் இருப்பேன்.

வினோ சொன்னது…

அண்ணா நீங்க கலக்குங்க... (living together - நீங்களுமா ? ;))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

பின்னூட்டம் பெறும் பொருட்டு..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

:)

Unknown சொன்னது…

டிஸ்கி சூப்பர்

RMD சொன்னது…

சம்பிரதாயத் திருமணம்‍‍‍‍,சுய மரியாதை திருமணம்,காதல் திருமணம்,பதிவுத்திருமணம் என்பதில் இருந்து இப்போது சேர்ந்து வாழ்தல் என்ற கட்டத்திற்கு வரப் பார்க்கிறது வாழ்க்கை முறை.

திருமணம் என்பது ஒன்றாக வாழ்தல் ,பொருளாதார பகிர்வு,குழந்தை பெறுதல்,அதன் வளர்ப்பு,உணவு பழக்க வழக்கங்கள், சாதி மதங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் என்ற பல பரிமாணங்களை உடையது.


இதில் சேர்ந்து வாழ்தல் என்பது என்ன? தெளிவாக வரையறுக்க முடியாது.

ஒரு வயது வந்த ஆண் பெண் சேர்ந்து வாழ விரும்பினால் அதை வேறு யாரும் என்ன காரணத்தினாலும் தடுக்க முடியாது.நமது இந்திய சட்டங்கள் என்ன சொல்கின்றது என்று யாராவது எழுதினால் நலம்.

ஒரு கடவுள் மறுப்பு பதிவுத் திருமணத்திற்கும் சேர்ந்து வாழ்வத்ற்கும் என்ன வித்தியாசம்?

சட்ட ரீதியான பதிவோ,பாதுகாப்பு வேண்டாம் என்பதுதானே. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களும் அத்ற்கான தீர்வுகளும் கூட விவாதிக்கப் படும் என்று எதிர்பார்க்கலாம்

மாணவன் சொன்னது…

”கலாச்சாரம்”

சரியான சாட்டையடி...

//டிஸ்கி: நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்//

மிகச் சரியாக சொன்னீர்கள் அருமை,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Philosophy Prabhakaran சொன்னது…

மொத்த பயோடேட்டாவை விட கடைசியாக சொன்ன கருத்து கச்சிதம்... அங்க தான் நீங்க நிக்கிறீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

Superb

பெயரில்லா சொன்னது…

இன்னது தான் நல்லது என்பதை மறந்த சமூகத்தில். இன்னவை தான் நல்லது என்ன நாம் கூறினால், நம்மை பார்த்து சிரிக்கும் இந்த சமூகம். இது தான் யதார்த்தம். ஒரு பக்கம் பழமை வாதம், இன்னொரு பக்கத்தில் புதுமை வாதம். இரண்டுக்கும் நடுவில் நாம்.

ஜோதிஜி சொன்னது…

செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை !

பதிவுலகத்தில் மட்டும் முகவரி முகம் காட்டாமல் தங்களது நப்பாசைகளை கொட்டி தீர்க்க ஆட்கள் இருப்பதால்(?)

காமராஜ் சொன்னது…

இந்த சுயவிபரத்தை ஒரே நேர்கோட்டுக்குள் அடக்க முடியாது.சார்புத்தன்மையும் தட்டுப்படவில்லை. எல்லவற்றையும் விமர்சிக்கிற ஒரு றெக்கை அமைந்திருக்கிறது.அது தான் இந்தப்பதிவுகளின் வீர்யமாகக்கருத வைக்கிறது.முகப்பில் எல்லோரையும் நம்புவதாகச்சொல்லிவிட்டு ...செந்தில் தழல் குறையாமல் கொண்டு போங்க. வாழ்த்துக்கள்.

//தொழில் : ஸ்கூல் வாத்தியார் மாதிரி கையில் குச்சியுடன் மிரட்டுவது //

இப்படி இடங்களில் வேதனையைச் சிரிப்பு இலகுவாக்குகிறது.

Unknown சொன்னது…

பதிவு super,

என்ன சார் இது test match ல 6 அடிச்சாப்புல இருக்கு.

நன்றி

எல் கே சொன்னது…

@ஜோதிஜி

:)))

@செந்தில்
உங்கள் பாணியில் அடிச்சு ஆடி இருக்கீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்ன சொன்னாலும் அதை புரிஞ்சிக்காம நா பிடிச்ச மைலுக்கு ஆறு காலுன்னு சொல்றவங்க இன்னும் இருக்காங்க. :) நீங்க அடிச்சி ஆடுங்க . பயோடேட்டா செம நெத்தி அடி..

காமராஜ் சொன்னது…

விந்தை மனிதன் ( ராஜாராமனா ?)பாலாண்ணா ரெண்டு பேர் விவாதமும் இந்த பதிவுக்கு பெரிய களத்தை விரித்துக்கொடுத்திருக்கிறது.

போலிக்கலாச்சாரம் விமர்சனத்திற்குட்பட்டதும் அகற்றப்படவேண்டியதுமாகும். ஆனால் லிவிங் டுகெதர் கணினி மாதிரி,பீட்சாமாதிரி,ஐடி மாதிரி பொலம்பிக்கொண்டே ஏற்றுக்கொள்ளத்தான் முடியும்.அது மாற்றத்தின் விளைவு.வாழ்க்கை மீதும்,உறவுகள் மீதும் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால் போதும் பாசத்தை தனியாக ஊட்டி வளர்க்கத்தேவை இல்லை. நாள் நட்சத்திரம் பார்த்து சாங்கியப்படி கல்யாணம் பண்னியவன் விட்டுட்டு ஓடிப்போவதில்லை?. ரெண்டு கணவன் செத்துப்போனப்பிறகு மூன்றாவதாக சேத்துக்கொண்டவன் சாகும் வரை கூடவருகிற கதை கேள்விப்பட்டதில்லை?.

இது தான் விதி என்று உறவில்,காதலில், ஏதுமில்லை.

பாலாண்ணா சொல்லுகிற வாதம் ஏற்புடையது போலத்தோன்றுகிறது.

vinthaimanithan சொன்னது…

தோழர்,
லிவிங் டுகெதர் என்பது பெண்ணின் மீதான ஆணின் உடைமை மனோபாவத்தை தீவிரமாக மறுப்பதுதான். இது நிச்சயம் முற்போக்கான கூறுதான். ஆனால் அது ஒட்டுமொத்தமாக தனிச் சொத்துரிமை ஒழிப்பு என்பது நிகழும்போதுதான் இயல்பானதாக இருக்கும். ஆனால் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் லிவிங் டுகெதர் என்பது வெறுமனே வாழ்வை நுகர்வதற்கான எளிதான வழி என்பதாகவே இருக்கும்.

இயங்கியல், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விதிகள் நீங்கள் அறியாததா என்ன?

'அறுத்துக் கட்டுதல்' என்கிற ஒரு சமூக வழக்கம் ஏற்கனவே நம் கலாச்சாரத்தில் உள்ளது. பிடிக்கவில்லை எனில் தமக்கான நியாயங்களை எடுத்துக்காட்டி பிரிந்துபோதல் நம் சமூகத்தில் ஆதரிக்கப் பட்டே வந்துள்ளது. இது எளிதான வழக்கமும்கூட.

'அறுத்துக்கட்டும்' வழக்கு பஞ்சாயத்துக்கு வரும்போது ஊர்ப்பஞ்சாயத்து பெரும்பாலும் பெண்ணின் நியாயத்துக்கு மதிப்பு கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. பிரிவதற்கான நியாயங்களோடு சேர்ந்தே வாழ்வதற்கான சாத்தியங்களும் ஆராயப்பட வேண்டுமல்லவா?

நான் கற்புநிலையை வலியுறுத்தும் பழம்பஞ்சாங்கக் கோட்பாடுகளை ஆதரிப்பவன் அல்லன். ஆனால் எதற்கும் ஒரு கட்டுப்பாடின்றித் திரிய இயலாது. சமூகத்தின் ஒழுங்கை, கட்டமைப்பை முன்னோக்கிய பாதையில் இழுத்துச் செல்வதாக கலாச்சார மாற்றங்கள் இருக்கலாமேயொழிய சில படிகள் பின்னிழுப்பதாக இருக்கக்கூடாது அல்லவா?

புதுமை தன் கிளைகளை ஆகாயத்தில் விரிக்கலாம். ஆனால் அதன் வேர் பழமையில்தான் நிலை கொண்டுள்ளது!

சௌந்தர் சொன்னது…

பலவீனம் : நவநாகரீகம் பேசும் அரைவேக்காட்டுக் கலாச்சாரப்
புரட்சியாளர்கள் /////


ஹா ஹா ஹா ஹா



: நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்///

என்ன இப்படி ஒரு கலாச்சாரம் வருமா..? அப்போ குழந்தையே வேண்டமா

Unknown சொன்னது…

லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை அமெரிக்கா இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குப் போலிக் கலாச்சாரப் புரட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

கடைசீல வச்சிங்க பாருங்க ஆப்பு! அது! அது...மெசேஜ்! :))

THOPPITHOPPI சொன்னது…

////நண்பர்கள் : ஆமாஞ்சாமிகள், கலாச்சாரக் காவலர்கள் (சிவசேனா, அல்-கொய்தா, பெந்தகோஸ்தே, வஹாபிகள்)//////////////


எப்புடி இந்த மாதிரிலாம்?

பெந்தகோஸ்தே-இவர்கள் சொல்லும் காரணம் கலாச்சாரம் இல்ல.இருந்தாலும் இவர்களையும் இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம்

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

செந்தில் உங்களுக்கும் எனக்கும் பல விசயங்களில் ஒரே மாதிரி சிந்தனை. நச் பயோடேட்டா .http://www.grajmohan.blogspot.com

dheva சொன்னது…

இப்போ கல்யாணம் பண்ணிகிட்டு...ஒண்ணா வழ்றது கூட...

லிவ்விங் டூ கெதர்தானுங்களே....???????

தாலிகட்டி வாழும் போது வர்ற சமுதாயம்...

சும்மா சேர்ந்து வாழும் போது வராதா?

இல்லை இவர்களே சேர்ந்து வாழும் போது.....

சமுதாயம்தான் தேவையில்லையா????? சும்மா டவுட்டு:)))))

dheva சொன்னது…

1) திருமணம் செஞ்சுக்கிட்டு வாழ்றதுல என்ன பிரச்சினைகள் இருக்கு...

(சும்மா பழைய காலத்து பெண்ணடிமை உதாரணம்......எல்லாம் எடுத்துட்டு வரப்பிடாது..இப்போ எல்லாம் பெண்கள் ஃபினான்சியலி அன்ட் மென்ட்டலி லிப்பரேட்டட்)

2) திருமண பந்தம் இல்லாம சேர்ந்து வாழும் போது என்ன ஒரு பெரிய திருப்தி இருக்கு அதாவது எந்த வகையில் இது நாகரீகத்தின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.....?

vinthaimanithan சொன்னது…

//திருமண பந்தம் இல்லாம சேர்ந்து வாழும் போது என்ன ஒரு பெரிய திருப்தி இருக்கு அதாவது எந்த வகையில் இது நாகரீகத்தின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.....? //

திருப்திங்குறது தனிமனிதனின் மனம் சார்ந்த விஷயம் தேவாண்ணா! நான் வலியுறுத்த விரும்புவது, மனமொத்துப் பிரிந்து போவதற்கான சட்டப்பூர்வமான நடைமுறைகள் எளிதாகவே இருக்கும்போது (Mutual Consent) தமது சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற மறுப்பது ஏன்?

கொசுறாக ஒரு தகவல்:

சமீபத்தில் mutual consent ஆக விவாகரத்துக்கு மனுச்செய்திருந்த எனக்குத் தெரிந்த தம்பதிக்கு ஒரே ஹியரிங்கில் டைவர்ஸ் கிடைத்தது. மொத்த வேலையும் ஒரே வாரத்தில் முடிந்தது. பிரிவு எளிதான சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும்போது சேர்ந்து வாழ்வதையும் சட்டப்பூர்வமான ஒன்றாக மாற்றிக் கொள்ளத் தடையாக இருப்பதன் பின்னுள்ள Attitude என்ன? "சட்டம் எங்களுக்குத் தேவையில்லை" என்று சொல்லும் புரட்சியாளர்களா இவர்கள்?

எனக்குத் தெரிந்தும் அற்புதமாக வாழ்ந்து கொண்டிருக்கும் லிவிங் டுகெதர் தம்பதிகள் இருக்கிறார்கள். அவர்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த முறையை மதிப்பிட நான் தயாரில்லை.

பெயரில்லா சொன்னது…

//காணாமல் போனவை : குடும்ப ஒற்றுமை மற்றும் உறவு முறைகள்//

உண்மையிலும் உண்மை

dheva சொன்னது…

விந்தை மனிதன் @ உண்மைதான் தம்பி....


கலாச்சாரம் என்பது எப்போதும் ஒரு குட்டையைப் போல தேங்கிக் கிடக்கும் வரைமுறைகளுக்கு உட்பட்ட ஒரு படிவம் அல்ல...அதன் இயல்பே மாற்றங்களை வாங்கிக் கொண்டு அதை அந்த சமுதாயத்திற்கு தகுந்த படி ஆட்டோ அட்ஜஸ்ட் செய்து மேற் கொண்டு நகர்வது....இது முதலில் தெளிவிற்கு வரவேண்டும்.....

இது போக கலாச்சாரத்தின் ஆணி வேர்கள் என்று சில செந்தில் சொல்வது போல பொக்கிஷங்களும் நாம் பெற்றிருக்கிறோம்..புராதனமான அவை.. தான் இந்த சமூகத்தின் பிளாட்பார்ம்...அதன் மீதுதான்..நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்....

அந்த பிளாட்பார்ஃப் உருவப்பட்டால்... நமக்கென்ற சுய அடையாளத்தை தொலைத்து விடுவோம்....

சேர்ந்து வாழும் ஒரு விசயம் கலாச்சார முன்னகர்வாக இருக்கும் பட்சத்தில் அதுவும் நீ சொல்வது போல.....அந்த அந்த நாடுகளின் சட்டவரை முறைகளுக்கு வந்து விட வேண்டும்....

தாலியும், அதை கட்டிவைத்த சமுதாயமும் ....கொஞ்சம் முன்னேறி..கால மாற்றத்தால் அரசாங்கமாகவும்....சட்டமாகவும் மாறப்போகிறது...சரிதானே.....

இதற்கு முன் நாம் பின்பற்றிய நமது தொன்மையான தாலி கட்டுதலும் சமுதாய நிர்ப்பந்தங்களும்....அரசு மற்றும் சட்டம் என்று ஒன்று தனியாக வருவதற்கு முன்னால் நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது...சரியா??? அதை குற்றம் சொல்வதும் தவறு......

இப்போ இவ்ளோ புரிதலோட இந்த விசயத்தை அலசும் அதே தருணத்தில் எல்லாம் நம்முடையெ மொத்த பேஸே தப்பு....மேலும் ஒரு காட்டுமிராண்டி சமுதாயம் போல.. நமது இன்ன பிற விசயங்களையும் சாடும் போதுதான் கொஞ்சம் சூடு வாங்கின புலியாக... சீற்றப்பார்வையை பார்க்க வைக்கிறது....!

vinthaimanithan சொன்னது…

//சேர்ந்து வாழும் ஒரு விசயம் கலாச்சார முன்னகர்வாக இருக்கும் பட்சத்தில் அதுவும் நீ சொல்வது போல.....அந்த அந்த நாடுகளின் சட்டவரை முறைகளுக்கு வந்து விட வேண்டும்....//

ஆமோதிக்கிறேன்!

vinthaimanithan சொன்னது…

இந்தப்பதிவில் பின்னூட்டங்கள் தரமாகவும் நாகரீகமாகவும் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். இருந்தும் ஏன் வலிமையான எதிர்க்கருத்தாளர்கள் இன்னும் வரவில்லை எனப் புரியவில்லை. கருத்துக்களின் மோதலால் செழுமைப்படுத்தப் பட்டுத்தான் சமூகம் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறது.

dheva சொன்னது…

//இந்தப்பதிவில் பின்னூட்டங்கள் தரமாகவும் நாகரீகமாகவும் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். இருந்தும் ஏன் வலிமையான எதிர்க்கருத்தாளர்கள் இன்னும் வரவில்லை எனப் புரியவில்லை. கருத்துக்களின் மோதலால் செழுமைப்படுத்தப் பட்டுத்தான் சமூகம் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறது. //

தம்பி...வலைப்பூக்களும் கருத்துக்களும் இப்படித்தான் தம்பி இருக்க வேண்டும்...இது ஆரோக்கிய நிகழ்வு....

ஆனால்...யாரிடம்...???????????

Chitra சொன்னது…

very interesting topic.

சசிகுமார் சொன்னது…

அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பின்னியெடுத்திட்டீங்கண்ணே!

ஜெயந்தி சொன்னது…

பயோடேட்டா சூப்பர். பின்னூட்ட விவாதங்கள் நல்லாவே போய்க்கிட்டிருக்கு.

Unknown சொன்னது…

இன்னொன்று, முன்பே சொன்னபடி இதை மாற்றாகவோ, ஆதரிக்கவோ சொல்லவில்லை. இதை எதிர்க்கவோ, தடுக்கவோ நாம் யார் என்பது என் புரிதல்//
மிகவும் சரி. அங்கீகரிக்கப்ப்ட்ட விஷயங்களில் தப்பு நடக்கிற போது பொறுப்பேற்காத நாம் இதற்க்கு போய் ஏன் மல்லுகட்டவேண்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயோடேட்டா அருமை....

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

superb well said friend... .

NONO சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
NONO சொன்னது…

//லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை அமெரிக்கா இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது
எதிலும் முடிந்தவரை தெழிவு வேண்டும்//

அமேரிக்கா அது ஒரு கண்டம். வன்முறைக் கலாச்சாரம், வட அமேரிக்காவை விட தென் அமெரிக்காவில் தான் அதிகம். உ+ம்: கரிபியதீவு Jamaica, Kingston, ஏன் பல ஆபிரிக்க நாடுகளின் இன்னும் அதிகம் Liberia, Monrovia (VBS.TV the vice guide to liberia (பாக்கவும்)) வன்முறைக்கும் "live together"-ருக்கும் எள்ளவும் சம்பந்தம் இல்லை.
என்னுடைய கருத்தை வால் பையனின் "மனிதன், மிருகம், கலாச்சாரம்!" பதிவில் சொல்லிவிட்டேன், விரும்பினால் படித்து பாக்கவும்.

Unknown சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க..

செல்வா சொன்னது…

//நான் எல்லா லிவிங் டுகெதர் couple ஐயும், அந்த முறையையும் குறைமட்டுமே சொல்லத் தயாரில்ல... அது வழங்குற அதீத சுதந்திரம் இருமுனைக் கத்திபோலன்னு சொல்றேன்.//

@ விந்தைமனிதன்
நான் உங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன் ..!!

Santhappanசாந்தப்பன் சொன்னது…

டைமிங்ல பதிவு போடறதில அண்ணனை அசைச்சுக்க யாரும் கிடையாது.

சூப்பர்...

Thenammai Lakshmanan சொன்னது…

செம நச் பதிவு செந்தில்..

பயோடேட்டா எல்லாமே பய டேட்டாவா இருக்கு

Unknown சொன்னது…

//செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை ! //

ரோஸ்விக் சொன்னது…

அண்ணே நல்ல பயோடேட்டா... :-)

விவாதங்கள் சிறப்பான முறையில் இருப்பதில் மகிழ்ச்சி. விந்தை மனிதன், தேவா, வானம்பாடிகள் பாலா அண்ணே வாழ்த்துகள்.

ரோஸ்விக் சொன்னது…

//டிஸ்கி : நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்//

(கள்ளக்)காதலுக்காக சொன்னா - சரி.

புள்ளைகுட்டிகளுக்காக சொன்னா - தவறு. புள்ளைகுட்டிகள் கண்டிப்பாவேணும். அது அரசாங்கம் சொன்னாலும் கேட்கமாட்டோம். :-)

Unknown சொன்னது…

திருமணமே செய்து கொள்ளாதீர்கள். எல்லாரும் சேர்ந்து மட்டும் வாழுங்கள் என்று நான் சொல்லவில்லை.

ஆனால் சேர்ந்து வாழ முடிவெடுத்த இருவரின் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பது என் கருத்து.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

தலைவரே நீங்க பதிவு எழுதரதவிட உங்களுக்கு கமென்ட் போடறவங்கதான் அதிகம்....சூப்பர்

BoobalaArun சொன்னது…

//நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்//

இப்படியே போன இனி தன் கையே தனக்கு உதவிதான்..

ஹி ஹி ஹி ...

durairaj சொன்னது…

super anna