25 நவ., 2010

அறுத்துக்கட்டிய " அகமுடையார்கள்"...

தேவர் இனமக்கள் பொதுவாக மூன்று உட்பிரிவுகளில் அடங்குவார்கள் முக்குலத்தோர் என அழைக்கப்பட்ட கள்ளர், மறவர், அகமுடையார் என இம்மூன்றும் அதன் உள்ளடக்கங்களும் கொண்ட இவர்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த இனத்தின் திருமணங்கள் அதன் தனிபிரிவுகளுக்கு உள்ளேதான் பெரும்பாலும் நடக்கும் என்றாலும் கொஞ்சம் நகர வாழ்க்கைக்கு பழகிய பிறகு மற்ற பிரிவுகளிலும் இப்போது பெண் கொடுத்து, எடுக்கிறார்கள், தென் தமிழகம் முழுவதும் பரவலாக வாழும் இம்மக்களில் கள்ளர்கள் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மிகுதியாகவும், அகமுடையார்கள் திருவாரூர், புதுக்கோட்டை , மதுரை மாவட்டங்களில் மிகுதியாகவும், மறவர்கள் திருநெல்வேலி பகுதிகளில் மிகுதியாகவும் வசிக்கின்றனர். இவர்கள் ஜாதி ரீதியாக தங்கள் சார்ந்த ஜாதியின் மீது ஆழ்ந்த பற்றுகொண்டவர்கள். இந்த ஜாதியில் மறுமணங்கள் பரவலாக நடைபெறும், ஆனால் எங்கள் ஊரில் மறுமணம் என்பது மிக அதிகம். அதனால் எங்கள் ஊர்க்காரர்களை மட்டும் சில வருடங்கள் முன்புவரைக்குமே அறுத்துகட்டிய ' அகமுடையார்கள்' என்றுதான் சுற்றுவட்டாரத்தில் அழைப்பார்கள்.

திருவாரூர் மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம் எங்கள் ஊரான பரவாக்கோட்டை கிராமம். சிங்கபூர்வரை தன் புகழை பரப்பியுள்ள இக்கிராம வாசிகள் அதன் சுற்றுவட்டார மக்களாலும் சற்று பயத்துடன் பார்க்கபடுகிறவர்கள். இதற்க்கு பலமான காரணம் ஒரு ஆளை கைவைத்தால் அவனுக்காக அந்த ஊரே திரண்டு வரும். அதனால் இந்த ஊர் ஆட்கள் என்றால் யாரும் வம்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மிகவும் பாசக்கார மக்கள் மிகுந்த ஊரும் இதுதான். இருபது வருடங்களுக்கு முன்புவரைக்கும் இத ஊர்காரர்கள் வெளியூர்களில் பெண், கொடுத்து எடுப்பது என்பது வெகு அபூர்வமான விசயம் அதிலும் அப்படி நடந்த திருமணங்களும் எங்கள் ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று குடியேறியவர்கள், அல்லது அப்படி குடியேறியவர்கள் பார்த்துவைத்த மணமக்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். எல்லோரும் எங்கள் ஊருக்குள்தான் சம்பந்தம் வைத்துகொள்வார்கள். பெண் பெரியவளானவுடன் மாப்பிள்ளை முடிவு செய்யப்பட்டுவிடும். காதல் திருமணங்களும் அதிகம் நடக்கும் இதுவும் உறவு முறைக்குள்தான் என்பதால் பெரிய எதிர்ப்பெல்லாம் இருக்காது. நான் திருமணம் செய்ததும் என் மூத்த சகோதரியின் மகளைத்தான், என் மனைவி கர்ப்பம் அடைந்தபோது நான் அவளை மருத்துமனைக்கு அழைத்து சென்றேன், அங்கு மருத்துவர் படிச்சவங்க நீங்களே நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளலாமா? எனக்கேட்டார். நான் எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாக இப்படிதான் நடக்கிறது, ஆரோக்கிய குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது வெகு அபூர்வம் என்றேன். இப்போது எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்றுவரைக்கும் அவர்தான் மருத்துவர்.

பெரியாரின் கொள்கைகளை மிகத்தீவிரமாக பின்பற்றியவர்கள் எங்கள் கிராம மக்கள், அதுவும் பெரியார் பிறப்பதற்கு முன்பிருந்தே. விதவைகள் என்பது வெகு அபூர்வம், அதுவும் பிள்ளைகள் நிறைய பிறந்தபின் கணவர் இறந்தால் மட்டுமே. மற்றபடி சிறிய வயதில் கணவர் இறந்துவிட்டால் உடனே மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெரும்பாலும் இறந்த கணவரின் தம்பி, அப்படி தம்பி இல்லையென்றால் கணவரின் பங்காளி வீட்டில் உள்ள ஒரு ஆண் என எல்லோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். இது ஒரு பிரச்சினையாக அங்கு இன்றுவரைக்கும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் என் பள்ளிதோழனுக்கு திருமணம் நடந்தது, திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியுடன் பிணக்கு ஏற்ப்பட்டு தற்கொலை செய்துகொண்டான், ஆனால் மருமகள் பக்கம் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட நண்பனின் குடும்பத்தினர், சிங்கப்பூரில் வேலை பார்த்துகொண்டிருந்த நண்பனின் தம்பியை வரவழைத்து திருமணம் செய்து வைத்தனர்,. இருவரும் மிக சந்தோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இப்போதும் அங்கு அய்யர் வைத்து மந்திரம் சொல்லி நடக்கும் திருமணங்கள் வருடத்திற்கு ஐந்துக்கும் குறைவாகத்தான் நடக்கும். எல்லாத் திருமணங்களும் தலைவர்கள் வைத்துதான் நடக்கும், தலைவர்களும் உறவு முறைக்கரர்களே, அரசியல் சார்ந்த சிலர் மட்டும் கட்சித் தலைவர்களை வைத்து நடத்துவார்கள். இப்படி ஒரு  விதவைத்திருமணம் செய்வது என்பது ஒரு சமுதாய புரட்சி என்பது அவர்களுக்கு தெரியாமலே இதனை செய்துவந்தார்கள். அதேபோல விவாகரத்து செய்வதும் எளிது பங்காளிகள் உள்ளடக்கிய பஞ்சாயத்தில் கூப்பிட்டு வைத்து பேசுவார்கள், பெரும்பாலும் வழக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஒன்று சேர்த்து வைத்து விடுவார்கள். முந்தய காலத்தில் விவாகரத்து செய்வதற்கு இரண்டு வீட்டுக் கூரையிலும் கொஞ்சம் பிய்த்து எடுத்துவந்து அதனை துண்டுகள் ஆகிவிட்டால் பிரிந்துவிட வேண்டியதுதான். சொத்துக்களும் சூழநிலைக் கேற்ப பிரித்து கொடுத்துவிடுவார்கள், அது அனைவரும் ஏற்றுக் கொண்ட தீர்ப்பாகவே எப்போதும் இருக்கும். ஆனால் சமீப வருடங்களாக ஒரு சில விவாகரத்து பிரச்சினைகள் நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறது.

அதேபோல் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது, சாதி மாறி திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாகத்தான் எப்போதாவது நடக்கிறது. சாதி மாறிய திருமணங்களை இப்போதுதான் லேசாக அங்கீகரிக்க துவங்கினாலும், அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் ஏனோ நகரங்களுக்கு நகர்ந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் எங்கள் ஊர்ப் பெண்களை பக்கத்து ஊர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். பெண் எடுப்பதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கும் காரணம் மொரட்டு பசங்க நம்ம புள்ளைய அடிப்பானுகன்னு கொஞ்சம் பயம்தான். வரதட்சினை என்பதும் கட்டாயமாக இதுவரை இல்லை, பெண் வீட்டார் என்ன கொடுத்தாலும் ஏற்றுகொள்வார்கள். அதே போல இப்ப படிச்ச பொண்ணுங்க அதிகமா இருக்காங்க, ஆனா குறைந்த படிப்பு மாப்பிளை படிச்சிருந்தா அதனையும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை பையனின் குடும்பமும், பையனின் திறமையும்தான் அளவுகோலே. முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் பெண்களை படிக்க வைப்பார்கள் ஆனால் இப்போது கல்லூரி வரைக்கும் அனுமதி தருகிறார்கள், படிப்பு முடிந்து சில பெண்கள் சென்னைவரைக்கும் வந்து வேலை பார்கிறார்கள். இப்படி வெளியில் அனுப்புகிறவர்களிடம் கட்டாயம் வாங்கபடும் சத்தியம் போகிற இடத்தில் காதல், கத்தரிக்கானு எதுவும் இருக்ககூடாது, ஒருவேளை யாரையாவது புடிச்சிருந்தா அவன் தேவர் சமூகத்தில் பிறந்தவனா இருக்கணும் என்பதுதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் எத்தனை வருடம் தாங்கும் எனத் தெரியவில்லை.

நான் காதலித்த பெண் வேளாளர் வகுப்பை சேர்ந்தவள், அவள் விபத்தில் இறந்தபின் திருமணமே வேண்டாம் என்று இருந்த என்னை மிகவும் கட்டயபடுத்திதான் என் சகோதரியின் மகளை திருமணம் செய்து வைத்தார்கள். என் மனைவியிடம் என் கடந்த கால வாழக்கை பற்றி விபரமாக எடுத்து சொல்லி அவள் சம்மதம் பெற்றபின்தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் தாலி கட்ட மாட்டேன் என சொன்னேன். அதனால் மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில்தான் பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். அன்றைக்கு மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். தாலி கட்டவில்லை, இன்றுவரைக்கும் என் மனைவி மெட்டி கூட அணிவதில்லை . என் வீட்டின் பூஜையறை தேவையற்ற பொருட்களை போட்டுவைக்கும் இடமாகத்தான் இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு சாமி, கோவில், கடவுள், பூஜை இந்த விசயமெல்லாம் மேலோட்டமாக மட்டுமே தெரியும், மத சம்பந்தமான சடங்குகள் எதுவுமே நான் செய்வதில்லை. நாங்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாள் மட்டுமே. இன்றுவரைக்கும் ஆன்மிகம் சம்பந்தமான அத்தனை விசயங்களையும் தேடித்தேடி படிக்கிறேன், அடிக்கடி திருவண்ணாமலை போவேன், நமக்கு மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று கூட நான் நம்பவில்லை. இன்றிவரைக்கும் அந்த சக்தி மற்றும் கடவுள் பற்றி எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை, எல்லாமே போலியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் இங்கு போலியாக வாழ்வதைதான் அத்தனை பேரும் விரும்புகின்றனர். அப்படி வாழாதவர்களை கடவுள் தண்டிப்பான் என சாபம் விடுகின்றனர். தங்களுக்கு மாறான கொள்கை உடையவர்களை தாங்களே கடவுள் பெயரில் சாபம் விடும் அறியாமைக்காரர்கள் அவர்கள்.

நான் பெரியாரிஸ்ட்டுதான், கம்யூனிசத்தை ஆதரிக்கும் கேப்பிடலிஸ்ட்டுதான் ஆனால் இந்த சமுதாய ஒழுங்கில் இருந்து நான் ஒருபோதும் வெளியில் சென்றதில்லை.  அதன் உள்ளேயே இருந்துகொண்டுதான் அதனை விமர்சிக்கவும், ஒழுங்குபடுத்தவும் செய்கிறேன். என் வேர்களின் ஆழம்தான் என் கிளைகளின் நீளமும். தலைமுறைகளாக விதவைத் திருமணத்தை ஆதரித்த  ஒரு சமூகத்தின் கிளையே நானும்..

மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்..

61 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

கலாச்சாரம்- பயோடேட்டாவின் தொடர்பதிவுமாதிரி தெரியுது!!!
அறுத்துக்கட்டும் வழக்கம் பெண்ணுரிமையை முழுதாக ஆதரிக்கும் ஒரு வழக்கம்...சில மரபுகளுக்கு உட்பட்டு!

தொ.பரமசிவன்னு நெனக்கிறேன்... இதைப்பத்தி தெளிவா விரிவா எழுதி இருப்பாரு. பெண்ணை ஒரு இனக்குழு எந்தளவு அடிமைப் படுத்துகிறதோ அந்தளவு அந்த இனக்குழு உயர்வாகக் கருதப்படும் கொடுமையை சனாதன இந்து 'தர்மம்'தான் துவங்கியது...

இன்றோ இந்து 'தர்மம்' மட்டுமே இந்தியக் கலாச்சாரமாகப் பார்க்கப்படும் அறியாமை, கொடுமை!

மறுதலையாக, எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று சொல்லும் சில கலாச்சாரங்கள்...

இரண்டும் இரண்டு எக்ஸ்ட்ரீம்கள்... எக்ஸ்ட்ரீமிஸ்ட்டுகள்!

Philosophy Prabhakaran சொன்னது…

// ஆனால் தாலி கட்ட மாட்டேன் என சொன்னேன். அதனால் மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில்தான் பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். அன்றைக்கு மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். தாலி கட்டவில்லை, இன்றுவரைக்கும் என் மனைவி மெட்டி கூட அணிவதில்லை . என் வீட்டின் பூஜையறை தேவையற்ற பொருட்களை போட்டுவைக்கும் இடமாகத்தான் இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு சாமி, கோவில், கடவுள், பூஜை இந்த விசயமெல்லாம் மேலோட்டமாக மட்டுமே தெரியும், மத சம்பந்தமான சடங்குகள் எதுவுமே நான் செய்வதில்லை. //
இந்தப் பத்தி அருமை... உங்கள் மனைவி பாராட்ட பட வேண்டியவர்...

// மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்.. //
அப்படி எதுவும் இல்லை... சரியாதான் சொல்லியிருக்கீங்க...

Unknown சொன்னது…

சொந்தத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது என்பதைத் தவிர மிக நல்ல பழக்கம், அறுத்துக் கட்டுதல்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

தெளிவு பிடிச்சிருக்கு.. கிராமமும்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

பின்னூட்டங்கள் பெறும் பொருட்டு..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//தங்களுக்கு மாறான கொள்கை உடையவர்களை தாங்களே கடவுள் பெயரில் சாபம் விடும் அறியாமைக்காரர்கள் அவர்கள்.//

அறியாமை ;)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

பிறர் சார்ந்த ஒழுக்கத்துடன் தனி மனித ஒழுங்கும் இருத்தல் மிகச் சிறப்பு.. ஆயினும், தனி மனித ஒழுங்கிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பிற மனிதர்கள் சார்ந்த விஷயங்களுக்கும் கொடுக்கிறோமா? இங்கு நாம் என்பதை தமிழ் மக்கள் அனைவரும் எனக் கொள்க..

இன்னும் ஒன்று.. எது தனி மனித ஒழுங்கு என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும்.. குடிப்பது கூட என்னைப் பொருத்தவரை தனி மனித ஒழுங்கில் இருந்து விலகும் செயல்.. ஒப்புக்கொள்வீர்களா??

pichaikaaran சொன்னது…

"அப்படி வாழாதவர்களை கடவுள் தண்டிப்பான் என சாபம் விடுகின்றனர் "

இப்படி சொல்வது 1 சதவிகிதம்தான் இருக்கும்... மற்றபடி ஆன்மீகம் என்பது பெரிய கடல்..
உன்னை தண்டிக்க கடவுள் என யாரும் இல்லை... நீயேதான் கடவுள் என சொல்லும் கோட்பாடும் இருக்கிறது.. அதற்காக எல்லோருமே இதை ஏற்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது..

பெயரில்லா சொன்னது…

உள்ளேன் அண்ணா!

காமராஜ் சொன்னது…

இது முழுக்க சரி அல்லது தவறு என்கிற ஏதும் இல்லை.இன்னும் கிராமங்கள் அப்படியே தான் இருக்கின்றன.இன்னும் நட்டாமை( ஊர்த்தலைவர்- செம்பு வைத்துக்கொண்டு இல்லை)தாலி எடுத்துக்கொடுக்க திருமணங்கள் நடக்கின்றன.ரெண்டு மூனுதரம் அறுத்துக்கட்டிய பெண்கள் சந்தோசமாக ஆறெழு பெத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.வெள்ளைச்சேலை இல்லாத கிராமங்கள் எங்கள் பகுதியில் ஏராளம் உண்டு.ஊர்களுக்குள் ஜாதிகளுக்குள் ஏற்படும் பிணக்குகள் கூட சுமூகமாக முடித்துக்குள்ளும் புரிதல் இருக்கிறது.சுத்துப்பட்டு கிராமங்களில் எனக்குத்தெரிந்து ஒரு கொலை கூட நடந்ததில்லை என்கிற பெருமிதம் ஒரு ஆவணப்படத்துக்கானது.

அன்பரசன் சொன்னது…

மறுமணம் என்பது நல்ல விசயம்தான்.
இன்னும் எங்க ஏரியாவில் மறுமணம் என்பது ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது.

ஹரிஸ் Harish சொன்னது…

//இங்கு போலியாக வாழ்வதைதான் அத்தனை பேரும் விரும்புகின்றனர். //

உண்மையான வரிகள்..இன்று மறுமணங்கள் பரவலாக நடக்கிறது...

dondu(#11168674346665545885) சொன்னது…

சமீபத்தில் 1968-ல் நான் ஒரு கதை படித்தேன்.

அறுத்துக் கட்டும் வழக்கம் உடைய ஒரு சமூகத்தில் நடந்த நிகழ்வாக அக்கதை அமைந்திருந்தது.

காதலர்கள் விதிவசத்தால் பிரிகின்றனர். அதாவது அப்பெண்ணை இன்னொருவன் அவள் அப்பனுக்கு ஆசைகாட்டி மணம் செய்து கொள்கிறான். ஆனால் அவன் கொடுமை தாங்காது அவள் அறுத்து கொள்கிறாள். பிறகு காதலனையே மணம் முடிக்கிறாள். அவனிடம் பிள்ளையும் பெறுகிறாள்.

ஆனால் அந்த இன்னொருவன் பிறகு இறந்து போக, இந்த அறுத்துக் கட்டியவள் தற்போதைய கணவனுடன் வாழ்ந்தாலும் விதவை கோலம் பூண வேண்டும் என ஊர் கட்டாயம் நேர்கிறது. அது ஊர் வழக்கமாம்.

அவள் மாட்டேன் எனக்கூறிவிட்டு எதிர்த்து நிற்பதுதான் கதை.

இந்த வழக்கம் நிஜமாகவே ஏதேனும் அறுத்துக் கட்டும் ஜாதியில் வற்புறுத்தப்பட்டதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

KANA VARO சொன்னது…

நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி

குடுகுடுப்பை சொன்னது…

சோழ நாட்டில் நாடு என்னும் (பைங்காநாடு) அமைப்பில் வளநாட்டுக்காரர்கள் மட்டும் அறுத்துக்கட்டமாட்டார்கள், மற்றவர்கள் அறுத்துக்கட்டும் வழக்கம் தொன்று தொட்டே உண்டு. என அப்பாவின் தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள் அவற்றில் ஒருவர் ஒரு மாதத்தில் விதவையானவர்.இன்னும் சில உதாரணம் என் குடும்பத்திலே உண்டு ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெறவேண்டியுள்ளது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கலாச்சாரம்- பயோடேட்டாவின் தொடர்பதிவுமாதிரி தெரியுது!!!///

repeattu

a சொன்னது…

பல புதிய விவரங்கள் உங்கள் பதிவில்.........

துளசி கோபால் சொன்னது…

விதவைத் திருமணம் போற்றப்படவேண்டியது. அதற்காகவே உங்க ஊருக்கு ஒரு சல்யூட்.

குடுகுடுப்பை சொன்னது…

நாடு பற்றிய நான் எழுதிய பழைய பதிவு ஒன்று
தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

Chitra சொன்னது…

வித்தியாசமான ஆளுதான், நீங்க......!

Unknown சொன்னது…

தெளிவாக இருக்கிறீர்கள்! மாற்றுக்கருத்து ஏது? :)
ஆமா பாசக்கார பயலுகளா நீங்க?...:))
நீங்களும் சினிமா எடுக்கிறீர்களா? அப்போ ஒரு மன வாசனைப்படம் எதிர்பாக்கலாமா?
வாழ்த்துக்கள்!! :))

sathishsangkavi.blogspot.com சொன்னது…

உங்க ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு... இப்படி முற்போக்கு சிந்தனை உள்ள ஊர் நிறைய இருந்தால் பிரச்சனைகள் இருக்காது...

Unknown சொன்னது…

நான் பெரியாரிஸ்ட்டுதான், கம்யூனிசத்தை ஆதரிக்கும் கேப்பிடலிஸ்ட்டுதான் ஆனால் இந்த ////சமுதாய ஒழுங்கில் இருந்து நான் ஒருபோதும் வெளியில் சென்றதில்லை. அதன் உள்ளேயே இருந்துகொண்டுதான் அதனை விமர்சிக்கவும், ஒழுங்குபடுத்தவும் செய்கிறேன். என் வேர்களின் ஆழம்தான் என் கிளைகளின் நீளமும். தலைமுறைகளாக விதவைத் திருமணத்தை ஆதரித்த ஒரு சமூகத்தின் கிளையே நானும்..////
இதுதானே ஒரு உண்மையானா அமைதியான சமூகத்தின் அடிப்படை....இதில் தவறு ஏதும் இல்லை..

Arun Prasath சொன்னது…

ஓ நீங்க எல்லாம் அப்பவே அப்டியா.... சூப்பர்

மீன்துள்ளியான் சொன்னது…

the reason behind this this caste people were warriors in ancient days..
So obviously many people used to die.. because of this , they have this good habit..

dheva சொன்னது…

செந்தில்...சப்தமில்லாமல் ஒரு மூலையில் நின்று உரக்க என் கைகளை தட்டி உற்சாகமாய் நின்று கொண்டிருக்கிறேன்....!!!!!

I don't think something is really required here to expand something.......! I just love it Senthi......!

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

மறுமணம் நல்ல விஷயம் ..பாராட்டுகள்.ஊருக்கு

தமிழ் அமுதன் சொன்னது…

good post..!

ராஜ நடராஜன் சொன்னது…

//நான் திருமணம் செய்ததும் என் மூத்த சகோதரியின் மகளைத்தான், என் மனைவி கர்ப்பம் அடைந்தபோது நான் அவளை மருத்துமனைக்கு அழைத்து சென்றேன், அங்கு மருத்துவர் படிச்சவங்க நீங்களே நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளலாமா? எனக்கேட்டார். நான் எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாக இப்படிதான் நடக்கிறது, ஆரோக்கிய குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது வெகு அபூர்வம் என்றேன்.//

மருத்துவ ரீதியா உறவில் திருமணம் செய்து கொள்ளக்கூடாதென்கிறார்கள்.நான் இதே வழி.ஆனால் அண்ணன் தாய்மாமன் மகளையே திருமணம் செய்தார்.ஆரோக்கிய குறைபாடுகள் எதுவும் இல்லை.

VELU.G சொன்னது…

//நமக்கு மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று கூட நான் நம்பவில்லை. இன்றிவரைக்கும் அந்த சக்தி மற்றும் கடவுள் பற்றி எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை, எல்லாமே போலியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் இங்கு போலியாக வாழ்வதைதான் அத்தனை பேரும் விரும்புகின்றனர். அப்படி வாழாதவர்களை கடவுள் தண்டிப்பான் என சாபம் விடுகின்றனர். தங்களுக்கு மாறான கொள்கை உடையவர்களை தாங்களே கடவுள் பெயரில் சாபம் விடும் அறியாமைக்காரர்கள் அவர்கள்.

//

நல்ல கருத்து நான் வழிமொழிகிறேன்

விதவைத்திருமணங்கள் பாராட்டப்பட வேண்டியவை

VELU.G சொன்னது…

//நமக்கு மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று கூட நான் நம்பவில்லை. இன்றிவரைக்கும் அந்த சக்தி மற்றும் கடவுள் பற்றி எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை, எல்லாமே போலியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் இங்கு போலியாக வாழ்வதைதான் அத்தனை பேரும் விரும்புகின்றனர். அப்படி வாழாதவர்களை கடவுள் தண்டிப்பான் என சாபம் விடுகின்றனர். தங்களுக்கு மாறான கொள்கை உடையவர்களை தாங்களே கடவுள் பெயரில் சாபம் விடும் அறியாமைக்காரர்கள் அவர்கள்.

//

நல்ல கருத்து நான் வழிமொழிகிறேன்

விதவைத்திருமணங்கள் பாராட்டப்பட வேண்டியவை

http://rkguru.blogspot.com/ சொன்னது…

வேர்களின் ஆழம்தான் என் கிளைகளின் நீளமும்.

arumai....

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

அன்பு செந்தில் உங்களைபோலவே நானும் பெரியார் கொள்கைகளையும் கம்யுனிஷ கொள்கைகளையும்
பின்பற்றுபவன் . உங்களுக்கும் எனக்கும் 100 % சதவீதம் ஒத்துப்போகிறது.
http://www.grajmohan.blogspot.com

Unknown சொன்னது…

//தலைமுறைகளாக விதவைத் திருமணத்தை ஆதரித்த ஒரு சமூகத்தின் கிளையே நானும்..//

நானும் ஒரு கிளை மற்றும் இந்த ஊர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

குட் ஒன் மாப்ள..

THOPPITHOPPI சொன்னது…

//நமக்கு மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று கூட நான் நம்பவில்லை. இன்றிவரைக்கும் அந்த சக்தி மற்றும் கடவுள் பற்றி எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை, எல்லாமே போலியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது///

நானும் இந்த மாதிரி பல முறை யோசித்து குழம்பி இருந்ததுண்டு. ஆனால் நம்மால் முடியாத கடினம்மான ஒரு காரியம் நடக்கவேண்டும் என்றால் மனம் முதலில் துணைக்கு தேடுவது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்த்தியைதான், இது நம் முன்னோர்கள் காட்டிய பயத்தால் வருகிறதா இல்லை நமக்கு நாமே ஒரு துணை/ஆறுதல் தேடிக்கொள்ள இப்படி செய்கிறோமா? என்பது தான் கேள்வி

சசிகுமார் சொன்னது…

இப்படியும் ஒரு கிராமமா. ஒரு குக் கிராமத்தில் இவ்வளவு முற்போக்கு சிந்தனையுள்ள மக்களா. அந்த கிராம மக்களுக்கு ஒரு சல்யுட்.

RK நண்பன்.. சொன்னது…

Taali Kattavillai, Poojai pannavillai aanal thiruvannamalai poringa, aanmigam thodarba theduthalil irukeenga...


Romba Aacharyama irukku anna, Nijamakave neengal thanithuvamana aalthan anna....

Ongalukkum onga oor makkalukkum oru Royal Salute..

Keep it up anna...


Lat 20 days konjam lock aayiten thats y not able to pass my comments....

Thanks & Regards,
RK Nanban

தினேஷ்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு அண்ணே
மறுமணம் கண்டிப்பா வரவேற்க்க வேண்டிய ஒன்று

'பரிவை' சே.குமார் சொன்னது…

// மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்.. //
அப்படி எதுவும் இல்லை... சரியாதான் சொல்லியிருக்கீங்க...

Ravichandran Somu சொன்னது…

//விதவைகள் என்பது வெகு அபூர்வம், அதுவும் பிள்ளைகள் நிறைய பிறந்தபின் கணவர் இறந்தால் மட்டுமே. மற்றபடி சிறிய வயதில் கணவர் இறந்துவிட்டால் உடனே மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள்//

உங்கள் ஊர் அடி தடிக்கு பெயர் பெற்ற ஊர் என்பது நன்றாக தெரியும். ஆனால்... விதவைத் திருமணங்கள் செய்யும் புரட்சிகரமான ஊர் என்று தெரியாது. பரவாக்கோட்டைக்கு என் பாராட்டுகள்.

பெயரில்லா சொன்னது…

இந்த முற்போக்கு சிந்தனை அனைவரிடமும் பெருக வேண்டும்.

RVS சொன்னது…

செந்தில் எனக்கு ராஜகோபாலசுவாமி சூர்யப்ரபை (அகமுடையார்கள்) மண்டகப்படி ஞாபகம் வந்தது. ;-)
வெட்டுங்குதிரையும், சூர்யப்ரபையும் இரு முக்கிய திருவிழாக்கள். என்னுடைய மன்னார்குடி டேசில் எழுத உள்ளேன். ;-)

ஈரோடு கதிர் சொன்னது…

வாசிக்கும் போது பெருமைப்பட்ட இடுகையில் இது முக்கியமானது!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

nalla pthivu annaa..

Unknown சொன்னது…

செந்தில் அண்ணே,
நானும் பக்கத்து ஊர் மதுக்கூர் தான்.
இந்த பதிவிலே உங்க ஊரை பற்றிய
சமத்துவம் தெரிந்தது. வாழ்த்துக்கள்.

வினோ சொன்னது…

ஐயா நானும் உள்ளேன்...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கலாச்சாரத்தின் இன்னொரு பதிவு அண்ணா ...
.மற்றபடி நீங்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை ......எங்கள் ஊரில் சிங்கம்பட்டி ஜமீன் தேவர் இனத்தவர்கள் தான்.கிளைகள் கிடையாது . நங்கள் எல்லாம் சகோதிரி பெண்ணை திருமணம் செய்ய மாட்டோம் மாறாக மாமன் மகளை தான் திருமணம் செய்து கொள்வோம் ........

அம்பிகா சொன்னது…

மிக அருமையான பகிர்வு செந்தில். வாசிக்கும் போதே சந்தோஷமாய் இருக்கிறது.

silandhy சொன்னது…

எதையோ எதிர்ப்பார்த்து நோண்ட வந்த டோண்டுவை ஏமாற்றாதீர்கள்.யாராவது,ஏதாவது பதில் சொல்லுங்கப்பூ.

vinthaimanithan சொன்னது…

//எங்கள் ஊரில் சிங்கம்பட்டி ஜமீன் தேவர் இனத்தவர்கள் தான்.கிளைகள் கிடையாது . //

ஆஹா! தேவருங்க எல்லாம் ஒண்ணுகூடி பாலிடிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா! சரி சரி! நம்ம அடுத்ததா ஜாதி எதிர்ப்பை மையமா வெச்சி பதிவு எழுதிட வேண்டியதுதான். எப்படியும் ஒரு ஏழெட்டு தேத்தலாம்னு நெனக்கிறேன்.

ஹேமா சொன்னது…

எப்போதுமே ஒரு புரட்சி !

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல தகவல்கள்.

இரா.ச.இமலாதித்தன் சொன்னது…

வணக்கம்,

எனக்கு சம்பந்தப்பட்ட, எனக்கு அருகாமையில் உள்ள, என் உறவுகள் வாழும் ஊரை பற்றிய உங்களது இந்த "அறுத்துக்கட்டிய அகமுடையர்கள் " பதிவை படிக்கும்போது, எனக்கு தெரியாத பல தகவல்களை அறிந்துகொண்டேன்.புது தகவல்களை எனக்கு அறிய தந்ததற்கு நன்றி.

நீங்கள் சொல்வது போல பரவாக்கோட்டையில் உள்ளவர்கள் யாருமே வெளியூரில் சம்பந்தம் வைப்பது மிக குறைவே.பெண்ணை கொடுத்தாலும் நீங்கள் சொன்ன சிக்கல் இருக்குமென அஞ்சுகிறார்கள்.

//பெண் எடுப்பதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கும் காரணம் மொரட்டு பசங்க நம்ம புள்ளைய அடிப்பானுகன்னு கொஞ்சம் பயம்தான்.//
- இது எல்லாரது மனதிலும் இருக்கிறது என்பதை வாய்சொல்லாகவே என் கேட்டறிந்து கேட்டிருக்கிறேன்.

என் தாய் மாமாவுக்கு(அம்மாவின் அண்ணன்) பரவாகோட்டையில் தான் பெண் எடுத்தார்கள்.இது இப்போதல்ல.என்பதுகளிலேயே(1982-83) திருமணம் நடந்தது.அதுவும் பெண்ணை எடுத்தார்களே தவிர, பெண்ணை கொடுக்கவில்லை.ஆனால், இந்த பெண் எடுப்பதில் கூட உளிருக்கும் இன்னொரு உண்மை என்னவென்றால், அந்த பொண்ணுக்கு தான் நாம் கணவனாக இருக்க முடியும்;மாறாக அந்த பொண்ணு நமக்கு மனைவியாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க கூடாது. இதுதான் உண்மையும் கூட.அதனால் தான் எங்களது அம்மா வீட்டின் பெரிய குடும்பத்தின்(மூன்று தங்கை,ஒரு தம்பி) மூத்த ஒரே மகனை பரவாகோட்டைக்கு மாப்பிளையாக தாரை வார்த்துவிட்டார்கள். ;)))

அவருக்கு திருமணம் நடக்கும்போது அவர் காவல்துறை அதிகாரியாக நல்லதொரு பதவியில் தான் இருந்தார்.அவரை பணியில் இருந்து விலக சொல்லி, கட்டாயபடுத்தி வெளிநாட்டுக்கு வழி அனுப்பி வைத்தார் அவரது மனைவி.இந்த வருடத்தோடு இருபதெட்டு வருடங்கள் நிறைவு பெற்று விட்டது.அவரது வாழ்நாளில் வெளிநாட்டிலேயே பாதிக்கும் மேற்பட்ட நாட்களை கழித்து விட்டார்.அவர் எப்போதாவது இந்தியா பக்கம் வருவார்.அப்போதும் தன்னை வளர்த்த, தன் சகோதர சகோதரிகளை கூட கண்டு நலம் விசாரிக்க வந்ததில்லை.கல்யாணத்திற்கு முன்பு வரைக்கும் மிகவும் பாசதுக்குரியாய் பையனாக வாழ்ந்தவர் இவர் என்பது குறிப்பிட தக்க விஷயம்.

தன் தாய், தந்தை, தன் தங்கைகள் இருவரது இறப்பு உள்ளிட்ட எந்தவொரு சுப,துக்க நிகழ்வுகளுக்கு கூட தலை காட்ட முடியாதபடி செய்தது பரவாகோட்டையின் மற்றொரு சிறப்பம்சம்.

நன்றி.

இரா.ச.இமலாதித்தன் சொன்னது…

வணக்கம்,

எனக்கு சம்பந்தப்பட்ட, எனக்கு அருகாமையில் உள்ள, என் உறவுகள் வாழும் ஊரை பற்றிய உங்களது இந்த "அறுத்துக்கட்டிய அகமுடையர்கள் " பதிவை படிக்கும்போது, எனக்கு தெரியாத பல தகவல்களை அறிந்துகொண்டேன்.புது தகவல்களை எனக்கு அறிய தந்ததற்கு நன்றி.

நீங்கள் சொல்வது போல பரவாக்கோட்டையில் உள்ளவர்கள் யாருமே வெளியூரில் சம்பந்தம் வைப்பது மிக குறைவே.பெண்ணை கொடுத்தாலும் நீங்கள் சொன்ன சிக்கல் இருக்குமென அஞ்சுகிறார்கள்.

//பெண் எடுப்பதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கும் காரணம் மொரட்டு பசங்க நம்ம புள்ளைய அடிப்பானுகன்னு கொஞ்சம் பயம்தான்.//
- இது எல்லாரது மனதிலும் இருக்கிறது என்பதை வாய்சொல்லாகவே என் கேட்டறிந்து கேட்டிருக்கிறேன்.

என் தாய் மாமாவுக்கு(அம்மாவின் அண்ணன்) பரவாகோட்டையில் தான் பெண் எடுத்தார்கள்.இது இப்போதல்ல.என்பதுகளிலேயே(1982-83) திருமணம் நடந்தது.அதுவும் பெண்ணை எடுத்தார்களே தவிர, பெண்ணை கொடுக்கவில்லை.ஆனால், இந்த பெண் எடுப்பதில் கூட உளிருக்கும் இன்னொரு உண்மை என்னவென்றால், அந்த பொண்ணுக்கு தான் நாம் கணவனாக இருக்க முடியும்;மாறாக அந்த பொண்ணு நமக்கு மனைவியாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க கூடாது. இதுதான் உண்மையும் கூட.அதனால் தான் எங்களது அம்மா வீட்டின் பெரிய குடும்பத்தின்(மூன்று தங்கை,ஒரு தம்பி) மூத்த ஒரே மகனை பரவாகோட்டைக்கு மாப்பிளையாக தாரை வார்த்துவிட்டார்கள். ;)))

(இதன் தொடர்ச்சி கீழே...)

இரா.ச.இமலாதித்தன் சொன்னது…

(அதன் தொடர்ச்சி)

அவருக்கு திருமணம் நடக்கும்போது அவர் காவல்துறை அதிகாரியாக நல்லதொரு பதவியில் தான் இருந்தார்.அவரை பணியில் இருந்து விலக சொல்லி, கட்டாயபடுத்தி வெளிநாட்டுக்கு வழி அனுப்பி வைத்தார் அவரது மனைவி.இந்த வருடத்தோடு இருபதெட்டு வருடங்கள் நிறைவு பெற்று விட்டது.அவரது வாழ்நாளில் வெளிநாட்டிலேயே பாதிக்கும் மேற்பட்ட நாட்களை கழித்து விட்டார்.அவர் எப்போதாவது இந்தியா பக்கம் வருவார்.அப்போதும் தன்னை வளர்த்த, தன் சகோதர சகோதரிகளை கூட கண்டு நலம் விசாரிக்க வந்ததில்லை.கல்யாணத்திற்கு முன்பு வரைக்கும் மிகவும் பாசதுக்குரியாய் பையனாக வாழ்ந்தவர் இவர் என்பது குறிப்பிட தக்க விஷயம்.

தன் தாய், தந்தை, தன் தங்கைகள் இருவரது இறப்பு உள்ளிட்ட எந்தவொரு சுப,துக்க நிகழ்வுகளுக்கு கூட தலை காட்ட முடியாதபடி செய்தது பரவாகோட்டையின் மற்றொரு சிறப்பம்சம்.

நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இமலாதித்தன் , புரிய முடிந்தது...எங்க ஊர் நெல்லை பக்கம் உள்ள இவர்களை பற்றி எழுதினாலே ஊர் போக முடியாது...:)

இப்ப என்ன நிலைமைன்னு தெரியலை..

மற்றபடி வேற்று சாதியினரை காதலித்ததால் தன் வீட்டு பெண்ணையும் கொலை செய்த சம்பவமுண்டு.

ஆனாலும் எங்க கூட பழகியவர்கள் தாயா பிள்ளையா பழகியவர்கள்..

PB Raj சொன்னது…

செந்தில் ,

நல்ல பதிவு,,

உங்கள் ஊருக்கும் அருகில் உள்ள ஒரே இன மக்கள் கொண்ட ஊருக்கும் நிறைய
முரண்பாடுகள் உள்ளன..என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்..

முன்கோபம்,பின் விளைவுகளை யோசிக்காதே குணம் ,முக்கியமாக பயன்படுத்தும் வார்த்தைகள் இப்படி பரவாகொட்டை கொஞ்சம் மற்ற ஊர்களிடம் முரண்படிகிறது..

பரவகோட்டை ஆண்கள் உங்கள் ஊர் பெண்களுக்கு பயப்படுவார்கள் என்பது உண்மையா?)வீட்டில் எலி வெளியே புலி )

தவறாக இருத்தால் மண்னிக்கவும்.

ச்சும்மா... சொன்னது…

நானும் ஒரு கிளை மற்றும் இந்த ஊர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

Super anna.

ALHABSHIEST சொன்னது…

"ஆஹா! தேவருங்க எல்லாம் ஒண்ணுகூடி பாலிடிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா! சரி சரி! நம்ம அடுத்ததா ஜாதி எதிர்ப்பை மையமா வெச்சி பதிவு எழுதிட வேண்டியதுதான். எப்படியும் ஒரு ஏழெட்டு தேத்தலாம்னு நெனக்கிறேன்"
ஏழெட்டு தேத்தலாம்னு நெனக்கிறேன்னா தலையாய் இருக்காதுன்னு நெனைக்கேன்.
மதார்,சுரேஷ் கண்ணன்,ஜாக்கி சேகர்னு முடிஞ்சு பதிவுலகம் இப்பத்தான் அமைதியாயிருக்கு.பிடிக்கலையா? ஆரம்பிக்க வேண்டியதுதான.

phantom363 சொன்னது…

fascinating reading sir. thank you. we all know so little of our fellow tamil extended family... each one of us hardly know our own caste these days. wonderful post and i enjoyed reading every bit of it. wishing you, yours and your village the best in the coming years.. :)

devarsrini சொன்னது…

nama thevar innathai evanalum onum panna muttiyathu...singa thevan....mukkulam na summa geathu thevan daaaaaaaaa