30 டிச., 2010

பயோடேட்டா - நக்கீரன் ...


பெயர்                        : நக்கீரன் 
இயற்பெயர்                    :     'முரசொலி' வெர்சன் 2          
தலைவர்                   : கோபால் 
துணைத் தலைவர்              : காமராஜ் 
மேலும்
துணைத் தலைவர்கள்            : வீரப்பன், நித்தி, ஜெகத் கசுப்பர் மற்றும் சிலர்  
வயது                        : 'சமூக சேவை' செய்து வீடு வாங்கும் வயது
தொழில்                    : பத்திரிக்கை நடத்துவது மட்டுமல்ல           
பலம்                        : நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும் 

                                     ஏமாளி வாசகர்கள்           
பலவீனம்                    :  என்னதான் பில்டப் செஞ்சாலும் கொண்டை 
                                            தெரிந்து போவது     
நீண்ட கால சாதனைகள்            : வீரப்பன் கேசட்டுகள் 
சமீபத்திய சாதனைகள்            : சி.பி.ஐ ரெய்டு அளவுக்கு 'தொழிலை' 
                                                                 விரிவுபடுத்தியது  
நீண்ட கால எரிச்சல்            : வால்டர் தேவாரம், ஜெ. ஜெ.. 
சமீபத்திய எரிச்சல்                : சவுக்கு சாட்டையைச் சுழற்றுவது   
மக்கள்                        : மஞ்சள் பத்திரிகை படிப்பவர்கள்       
சொத்து மதிப்பு                : அரசியல்வாதிகள் பொறாமைப்படும் அளவுக்கு  
நண்பர்கள்                    : முன்பு மனித உரிமை பேசுவோர்,இப்போது
 
                                              காக்கிகள், வெள்ளைகள்       
எதிரிகள்                    : சவுக்கு, சி.பி.ஐ         
ஆசை                        :No.1 நடுநிலை புலனாய்வு இதழ்         
நிராசை                    : ஜூனியர் விகடன் தட்டிப் பறித்து விட்டது   
பாராட்டுக்குரியது                :ஜெயலலிதாவை எதிர்த்தது        
பயம்                        :மீண்டும் ஜெ (Return the Dragon?!)
கோபம்                    : ஈழ ஆதரவு முகத்திரையை  கிழித்தவர்கள் மீது
காணாமல் போனவை            : நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே  
புதியவை                    :(அநீதி கண்டு ) இரண்டு கண்களையும் மூடினால் 
                                         செல்வம் கொட்டுமே
கருத்து                    : மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும் 
                                      வளத்ததுதான்........            
டிஸ்கி                        : தன்நெஞ்சு அறிவது பொய்யற்க!

44 கருத்துகள்:

க ரா சொன்னது…

கலக்கல் :)

ராஜ நடராஜன் சொன்னது…

நக்கீரன் கோபால் கண்ணில் படட்டும்!

ஒரு பத்திரிகையாளனின் சரிவை கண்கூடாக காண்கிறேன்.

நக்கீரா!கண்ணை மூடிக்கொண்டாலும் பயோடேட்டா பயோடேட்டாதான்:)

சண்முககுமார் சொன்னது…

"மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும் வளத்ததுதான்........ "


கலக்கல் :)



இதையும் படிச்சி பாருங்க

இருட்டில் கட்டிய தாலி

RK நண்பன்.. சொன்னது…

inimel meesai ungalayum Enemy list la potruvaru...

Thiruttu Rascals...

Pechukku onnum korachal illa.. panam thinni naaikal..

vinthaimanithan சொன்னது…

'பய'டேட்டா!!! (அடுத்தாப்புல எவனைத் தாளிக்கப் போறாரோ... பயோடேட்டாங்கிற பேர்ல!) :)))))))))

செங்கோவி சொன்னது…

சரியான விளாசல்..எப்படி இருந்தவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள்.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

தமிழனின் மரணத்தை
வியாபாரம் புரிந்த இந்த நக்கீரன்,
தருமியின்(கருணாநிதி )
மனம் கோணாமல்
சாமரம் வீசும் சேவகன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும்
வளத்ததுதான்........
//

இது மேட்டரு... கலக்கல் பாஸ்.

ஹேமா சொன்னது…

நக்கீரன் என்றாலே குற்றம் குற்றமேதான் ஞாபகம் வரும்.
இப்போ மீசையும் !

வினோ சொன்னது…

/நிராசை : ஜூனியர் விகடன் தட்டிப் பறித்து விட்டது /

உண்மை தான் அண்ணா...

Philosophy Prabhakaran சொன்னது…

// நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும்
ஏமாளி வாசகர்கள் //

இவங்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு... சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாங்க...

மாணவன் சொன்னது…

//காணாமல் போனவை : நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே
புதியவை :(அநீதி கண்டு ) இரண்டு கண்களையும் மூடினால்
செல்வம் கொட்டுமே//

அண்ணே நச்சுன்னு சொல்லியிருக்கீங்க

பயோடேட்டா கலக்கல்........

ரோஸ்விக் சொன்னது…

நெற்றிக்கண்ணை யாரும் நோண்டிட்டாய்ங்களோ?

Indian சொன்னது…

கலக்கல் இடுகை.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கலக்கல்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சூப்பர் .சூப்பர் .

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அடுத்தவங்க பயப்படுற டேட்டாவா இருக்கு

சௌந்தர் சொன்னது…

பயம் :மீண்டும் ஜெ (Return the Dragon?!)///

கலக்குறிங்க அண்ணா ரொம்ப நாளைக்கு பிறக்கு ரசித்த பயோடேட்டா...

வைகை சொன்னது…

நெற்றிகண்ண பிடரில வச்சுட்டாரோ?!!

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு செந்தில் வணக்கம். உங்களின் சுய குறிப்பு பட்டைய கிளப்புது... நக்கீரனா இப்படி...? நாடு முன்னேறுது ...ரைட்டு ... நடக்கட்டும்...... பேசாம நீங்க ஒரு பத்திரிகை ஆரம்பிங்க செந்தில்... இவனுங்க முகத்தை சரியான கோணத்துல கிழிப்போம்.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

நக்கீரன் இப்ப செக்ஸ் இன்வெஸ்ட்டிகேசன் பத்திரிக்கையாக மாறிவிட்டது . இது பயோ டேட்டா இல்ல இவர்களை பயமுறுத்தும் டேட்டா!

மங்குனி அமைச்சர் சொன்னது…

என்னதான் பில்டப் செஞ்சாலும் கொண்டை தெரிந்து போவது ///

இந்த கொண்டை மேட்டர் சூப்பர் சார்

அருண் பிரசாத் சொன்னது…

ரைட்டு... அண்ணணுக்கு ஒரு ஆட்டோ அனுப்புங்கப்பா

Unknown சொன்னது…

சூப்பர் and knock out

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

vasan சொன்னது…

ஆர்கேபி செந்தில், இந்த‌ ப‌யோடேட்ட‌வின் சிற‌ப்பு அந்த‌ "தொங்கு(ம்)மீசை" ப‌ட‌ம் தான்.
எது எதையோ சொல்கிற‌து, எதையிம் சொல்லாது.

THOPPITHOPPI சொன்னது…

///துணைத் தலைவர்கள் : வீரப்பன், நித்தி, ஜெகத் கசுப்பர் மற்றும் சிலர் /////////

ஹஹாஹா உண்மைதான்


-----------------------
ஆசை :No.1 நடுநிலை புலனாய்வு இதழ்
------------
ஆசை இல்லை லட்ச்சியம்

வானம் சொன்னது…

//தொழில் : பத்திரிக்கை நடத்துவது மட்டுமல்ல ////
இப்படி பாதியிலேயே விட்டுறக்கூடாது.’ இணையத்தில் நீலப்படம் விற்பது’,`மஞ்சள் துண்டுக்கு மாமா வேலை பார்ப்பது’ அப்படீன்னு முழுசா எழுதனும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

சாட்டை அடி . ஆனால் உரைகப்ப்வதில்லை.அவர்களுக்கு வேண்டுவது கிடைத்தாகி விட்டது.
இனி யார் எக்கேடு கேட்டால் என்ன.முடிந்தவரை லாபம்தான்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

super post.

>>>சமீபத்திய எரிச்சல் : சவுக்கு சாட்டையைச் சுழற்றுவது

good one

Unknown சொன்னது…

என்னதான் பில்டப் செஞ்சாலும் கொண்டை தெரிந்து போவது //
சரியாக சொன்னீர்கள்.

Unknown சொன்னது…

//நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும் ஏமாளி வாசகர்கள்//
:-)
super thala! :-)

செ.சரவணக்குமார் சொன்னது…

அடி பின்னியிருக்கீங்க.

ஈரோடு கதிர் சொன்னது…

அவைற மீசை முடிய பிடுங்குற மாதிரி சுருக்குன்னுதான் இருக்கு இந்த பயோடேட்டா!

சசிகுமார் சொன்னது…

//மக்கள் : மஞ்சள் பத்திரிகை படிப்பவர்கள் //

உண்மை உண்மை உண்மை.

அம்பிகா சொன்னது…

மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும் வளத்ததுதான்........ "
:)

raja சொன்னது…

பாலுணர்வு பத்திரிகைகளுக்கு மாற்றாக இருக்கும் நக்கீரன் பத்திரிகையை இப்படி கிழத்து தொங்கவிட்டு விட்டிர்களே.

Hai சொன்னது…

காணாமல் போனவை : நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே
புதியவை :(அநீதி கண்டு ) இரண்டு கண்களையும் மூடினால் செல்வம் கொட்டுமே//


அருமை.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

டெம்ப்ளேட் கமன்ட் தான் போடறமாதிரி இருக்கு.
சூப்பர்.

Bibiliobibuli சொன்னது…

வேலைத்தளத்திலிருந்து பின்னூட்டம் போட நேரமில்லாமல், இப்போதான் முடிகிறது.

ஆமாங்க தமிழ்நாட்டு ஜனங்களே இந்த நக்கீரன்ல ஈழத்துச்செய்திகளை படிக்கும் போது சொல்லமுடியாத எரிச்சல் தான் மிஞ்சுது.

//ஜெகத் கசுப்பர்//

:))))

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

என்ன அப்பு.. இப்புடி கவுத்துபுட்டீவ! பயோடேட்டான்ன பேருல கோவாலுடைய கோவணத்த அவுத்துபுட்டீவலே!

மணிஜி சொன்னது…

முதல் போணிக்கு காரணம் : நடிகர் ராஜ்குமார்...

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

ராசா பதவி போன பிறகு , கோவை ஏர்போர்ட் ல மக்கள் அழுதாங்களாம் , புரண்டாங்கலாம்
ங்கொய்யால, நக்கீரன் பதிலா டுபாக்கூரன் ன்னு பேரு வைக்கலாம்
--

புலிகுட்டி சொன்னது…

//இயற்பெயர் :'முரசொலி'வெர்சன் 2 //அது இயற்பெயர் அல்ல புனைப்பெயர்.நக்கீரனை நார் நார்ராக்கிடிங்க.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பலம் : நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும்
ஏமாளி வாசகர்கள்