14 ஜன., 2011

நம்பிக்கைத் துரோகம்...

கணந்தோறும் நிகழும்
கணக்கற்ற துரோகங்கள்
வழியும் குருதியும்
சிந்தும் கண்ணீரும்
இரக்கம் தேடியல்ல..

துரோகச் சித்திரங்களை
வரைய
வன்முறையில் மூழ்கடிக்கப்படும்
வாழ்க்கை..

வலியது ஜெயிக்க
எளியது பிழைக்க 
நியாயமாகும் சில
துரோகங்களின் உடன்பாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறது 
உலகில் மனிதம் ..

வலியை
ஈனஸ்வரத்தில்
வழியவிட்டபடி
முற்றுப்புள்ளி இன்றி
இந்தக் கவிதை

42 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

//வலியது ஜெயிக்க
எளியது பிழைக்க நியாயமாகும் சில
துரோகங்களின் உடன்பாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறது உலகில் மனிதம் ..//

நிகழ்வுகளை உணர்வுகளுடன் சொல்லியிருக்கீங்க அண்ணே அருமை

மாணவன் சொன்னது…

உங்களுக்கு குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

ஆர்வா சொன்னது…

நம்பிக்கை தூரோகத்தின் வலியை வார்த்தைகளில் சுமந்த கவிதை.

VELU.G சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க

பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

எனக்கு அநீதி என்பது
இங்கே பலருக்கு சரி என்று தோன்றுகிறது,
நீதியின் கால்கள் முடக்கப்பட்டதை
சிலர் அவர்களின் திறமை என்றே
பறைச்சாற்றுகின்றனர்.

தர்மம் என்பதின்
மௌன அழுகை
அவர்களின் சந்தோஷ கூச்சலில்
புறக்கணிக்கப்படுகிறது.

இங்கே துரோகங்களின்
வலிமை
என்பது வாய்மையை
தோற்கடிப்பதோடு
நின்று விடுவதில்லை.

பொய்மையை
மிகச்சிறந்தது என்று
நிரூபித்தல் வரை
தொடர்கிறது.

தீதும் நன்றும் பிறர்தர வார...

உண்மை தான்
இப்போதெல்லாம்
மற்றவர்களுக்கு
நன்று செய்ய,
தீது மட்டும்
மீதம் இருக்கிறது
என்னிடம்.

ஒரு கவிதையில் சொல்லி விட
முடியுமா
நான் எளியவன் என்பதால்
நசுக்கப்பட்ட
வேதனையை..

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vinthaimanithan சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்
(நானும் முற்றுப்புள்ளி வைக்கல!)

Unknown சொன்னது…

நல்ல கவிதை என்பது, இன்னொரு கவிதைக்கு தாயாக இருக்க வேண்டும். உங்கள் கவிதையின் தாக்கம் இதற்கு முந்தைய பின்னூட்ட கவிதை.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஹேமா சொன்னது…

முற்றுப்புள்ளி இல்லையென்றால்....இன்னும் வலி தொடரும் அப்படித்தானே செந்தில் !

vinthaimanithan சொன்னது…

இறைவா! கவிஞர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! துரோகிகளை நான் கவனித்துக் கொள்கிறேன் :))))

Unknown சொன்னது…

உங்கள் வலைப்பூவில் உள்ள அகில் & மகிழ் என்பது யாருடைய புகைப்படங்கள்?

vinthaimanithan சொன்னது…

//அகில் & முகில் என்பது யாருடைய புகைப்படங்கள்? //

வருங்கால கேஆர்பீஸ்!!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

Unknown சொன்னது…

அகில் & மகிழ்........ வலைப்பூ வரை வந்த வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள்.
குட்டிகள் எத்தனை அடி பாயும்?

வினோ சொன்னது…

தொடரும் துரோகங்களின் வலி :(

கவி அழகன் சொன்னது…

சாட்டை அட்டி கொடுகிறது வரிகள் அருமையான படைப்பு பொங்கல் வாழ்த்துக்கள்

vasu balaji சொன்னது…

எப்பவும் போல குட் ஒன் அகெய்ன்:)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>துரோகங்களின் உடன்பாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறது
உலகில் மனிதம் ..


டச்சிங்க் லைன் சார்

RVS சொன்னது…

நல்ல கவிதை. பொங்கல் நல்வாழ்த்துக்கள் செந்தில்!!! ;-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

வலி வழிந்தோடும் கவிதை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

பெயரில்லா சொன்னது…

இனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ! பொங்கல்!!

பெயரில்லா சொன்னது…

எளிமையான நடையில் அருமையாக எழுதுகிறிர்கள்.கேபிள் ஜி இயக்க போகும் படத்திற்கு நீங்கள் பாடல் எழுதலாம்.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இளங்கோ சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

நல்ல வரிகள்...ஆனாலும் இதற்கு பின்னூட்டமாக உங்களின் இந்த பதிவின் http://krpsenthil.blogspot.com/2010/12/blog-post_24.html இறுதி பாராவின் வரிகளை படிக்க கேட்டு கொள்கிறேன்..அருமையான சமூகத்திற்க்கான படைப்புகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்..

பெயரில்லா சொன்னது…

கவிதை தொடருகிறது, தொடரும் துரோகங்கள் போல!

தமிழ் உதயம் சொன்னது…

உலகிலேயே கொடூரமானது நம்பிக்கை துரோகம்.

செங்கோவி சொன்னது…

பொங்கல் வாழ்த்துகள்...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள். அகிலுக்கும் மகிழுக்கும் சொல்லிடுங்க.

ஜோதிஜி சொன்னது…

செந்தில் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

14.1.2010

ஜெய்லானி சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்.

Sivakumar சொன்னது…

//கணந்தோறும் நிகழும்
கணக்கற்ற துரோகங்கள்// ..பொங்கல் நேரம் பார்த்து பூ மற்றும் பேருந்து பயணச்சீட்டு விலைகளை ஏற்றி நடுத்தர, ஏழை மக்கள் என்றோ ஒரு நாள் பண்டிகை கொண்டாடுவதிலும் மண் அள்ளிப்போடும் களவாணிகள்...!!!

அன்புடன் நான் சொன்னது…

கவிதை கணக்கிறது....

தோழருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

karthikkin kirukkalkal சொன்னது…

கவிதை கனத்தாலும் மணக்கிறது .




இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

raja சொன்னது…

நண்பர் செந்தில் அவர்களுக்கு, ஆகப்பெரும் கவிஞர்கள் எனப்பட்ட பெரும்பாலான தமிழ் கவிஞர்கள் மூளையை சொரண்டி சொரண்டி கவிதை எழுதும் சமயம் நீங்கள் இதயத்திலிருந்து இந்த கவிதையை எழுதியிருக்கிறீர்கள் உங்கள் வாசகன் எனச்சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையே. நன்றி தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வுகளுடன் சொல்லியிருக்கீங்க அண்ணே .

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

"வலியது ஜெயிக்க
எளியது பிழைக்க நியாயமாகும் சில
துரோகங்களின் உடன்பாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறது உலகில் மனிதம்"

உண்மை.. அருமை

பாரதசாரி சொன்னது…

தொடக்கத்திலேயே முழுமைப் பெற்ற இந்த கவிதை முடிவில் தொடங்குகிறது போல் தோன்றுகிறது!!!!அருமை :-)