3 மார்., 2011

தீ மிதிக்கும்போது ஏன் சுடுவதில்லை?...


தீ மிதித்தல் என்பது இந்துமத மக்களின் வேண்டுதல்களில் முக்கியமான ஒன்று. பதினைந்து நாட்கள் விரதமிருந்து திரவ்பதி அம்மனுக்காக தீ மிதிப்பதாக வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த தீ மிதித்திருவிழா என்பது இந்துக்கள் மட்டுமல்லாது முஸ்லீம்களும் மொகரம் பண்டிகையின்போது செய்வார்கள்.

எங்கள் தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் கழகத்தினர் அதிகம். என் பள்ளிப்பருவத்தில் இவர்கள் அடிக்கடி கடவுள் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்துவார்கள். அப்போது காவடி எடுப்பது, கன்னங்களில் அலகு குத்திக்கொள்வது. தீ மிதிப்பது என நம் கடவுள் நம்பிக்கைகளை தகர்ப்பார்கள். ஆரம்பத்தில் தீவிர முருகபக்தனாக இருந்த நான் மெல்ல மெல்ல நாத்திகனாக மாறியதற்கு முதல் காரனம் இவர்களின் இந்த பிரச்சார உத்திதான். அதன்பின் பெரியார் பற்றி தீவிரமாக படிக்க ஆரம்பித்தபோதுதான், ஒரு கம்யூனிஸ்ட் தோழர் ராகுல சான்க்ருத்யாயனின் 'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற புத்தகத்தை தந்து படிக்க சொன்னார்.

அந்தப் புத்தகம்தான் என் கடவுள் நமபிக்கைகளை மொத்தமாக தகர்த்து ஏறிந்தது. அதன்பின் நானும் ஒருநாள் இப்படி கடவுள் மறுப்பிற்காக தீ மிதித்தேன். முதலில் மனதில் இருந்த பயத்தால் வேகமாக ஓடி வந்துவிட்டேன். அதன்பிறகு நான் ஓடி வந்ததை நண்பர்கள் கிண்டல் செய்யவே, மீண்டும் ஒருமுறை நிதானமாக நடந்து காட்டினேன்.

சுமார் 1000  டிகிரிக்கு மேல் வெப்பம் அதன் மேற்ப் பரப்பில் இருக்கும் . நல்ல மதிய வெயிலில் தார்ச் சாலையில் செருப்பின்றி நடக்கும்போது இருக்கும் அளவுக்கு நம் பாதங்களில் வெப்பத்தை உணரலாம். அதன்மேல் நடந்து முடிந்தவுடன் வெறுங்காலுடன் நடக்கும்போது கால்கள் கூசும். மற்றபடி விரல்களுக்குள் சாம்பல் துணுக்குகள் இருந்தால், அந்த இடத்தில் மட்டும் லேசாக கொப்பளிக்கும். 

சில இடங்களில் தீ மிதிக்கும்போது பயத்தில் அல்லது அவசரத்தில் விழுந்து உடல் வந்தவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களின் சரிவர விரதம் இருக்கவில்லை அதனால்தான் கடவுள் அவர்களை தண்டித்துவிட்டதாக கேலி செய்வார்கள். ஆனால் உண்மை என்னவெனில் நம் பாதங்கள் சில வினாடிகளுக்கு சூட்டை தாங்கும் வல்லமை கொண்டவை. அந்த சில வினாடிகளுக்கு மேல் பாதங்கள் நெருப்பின் மேல் இருந்தால் அது வெந்துவிடும் அவ்வளவே. 

டிஸ்க்கவரி சேனலில் Time Warp எனும் நிகழ்ச்சியில் அதிவேக கேமராக்களைக் கொண்டு இந்த தீ மிதிக்கும் காட்சியினை படமாக்கியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்தால், உங்களுக்கே அது தெரியும்.. 



தொடர்புடைய சுட்டிகள் :


20 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

தீ மிதித்தல் ஒரு ஏமாற்று நாடகம் -- உண்மை எப்படியோ அதை நம்பும் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்..

dheva சொன்னது…

ஏன் செந்தில்..........நம்ம ஊர்ல எங்க தீ மிதிச்சு நடக்குறாங்க.......ஒரே ஓட்டம்தானே?

அத்திவெட்டி பகுதியை சேர்ந்த திராவிடர் கழக தோழர்கள்...அம்பாசடர் காரையே ஹூக் போட்டு முதுகுல மாட்டி இழுத்து நிறைய தடவை மதுக்கூர்ல பார்த்து இருக்கேன்.....

நம்ம சனம்தான் இன்னும் நம்பிகிட்டு இருக்கு தெய்வ அனுக்கிரகம்னு....

வேலிட் போஸ்ட் செந்தில்...!

பாட்டு ரசிகன் சொன்னது…

தீ மிதிப்பது என்பது மதச்சடங்காக காலம் காலம் நடந்து வருகிறது..
ஆனால் அது எதற்கு என்றும் அந்த சமயத்தை பின் பற்றுபவர்களால் கூட சொல்லமுடியாது..
இருந்தாலும் இன்னும் அந்த மூடப்பழக்கம் நம்நாட்டில் மட்டுமின்றி பல உலக நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது..

டைம் வர்ப் - நிகழ்ச்சியில் நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்..

இதை மூடத்தனம் என்று கூறும் அரசுகள் கூட இதை தடைச்செய்ய தயக்கம் காட்டுவது என் என்று தெரியவில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இதை பார்த்தாவது...
சிலர் திருந்தட்டும்..
சமூக விழிப்புணர்வு பதிவு
வாழ்த்துக்கள்..

tamilan சொன்னது…

சொடுக்கி படிக்கவும்.

==> இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.
இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
<===



.

Madhavan Srinivasagopalan சொன்னது…

நீச்சல் கத்துக்கறோம்.., கராத்தே கத்துக்கறோம்..
எதுக்கு.. ?
சமத்துல, அதாவது தேவைப் பட்டா உபயோகமா இருக்கும்..

அதுபோல.. தவறிப் போயி நாம இருக்குற இடத்தில தீ பரவினா, தீ பிடிச்ச தரையில நடந்து ஓடிப் போயி தப்பிக்க உதவுமே இந்த யுக்தி (தீ மிதிச்சு பழக்கமிருந்தால்) ..

--- ஹி. ஹி.. எதையுமே பாசிடிவா, வாழ்க்கைக்கு பயன்படுறமாதிரி எடுத்துக் கொள்வோர் சங்கம்..

Unknown சொன்னது…

நல்ல பதிவு. தீ மிதிப்பதை நான் பார்த்ததோ அல்லது அனுபவித்ததோ இல்லை என்றாலும் இது ஒரு தேவையில்லாத சாகச்ம் என்றே தோன்றுகிறது.

அன்பரசன் சொன்னது…

காணொளி அருமை

ஹேமா சொன்னது…

சாமி பேர்ல இன்னும் எத்தனை ஏமாத்து வேலை இருக்கு !

கால்கரி சிவா சொன்னது…

I do not have tamil in this computer and hence in English.

Western Researchers are "discovering" the Fire Walking is good to beat the depression!!

We knew it 1000s of years ago. Alas in the name of Pseudo Rationalism we are forgetting the science behind the "Fire Walking" Please see below

http://ehealthforum.com/videos/9603/firewalking-helps-others-overcome-fears

http://www.hypnotherapychico.com/FIREWALKwithClaudia.en.html

Very soon our fellows will pay hefty amount to learn Fire Walking from a Westerner to beat the Depression :)

கால்கரி சிவா சொன்னது…

Why don't we do a "Myth Buster" kind of experiments on our rituals before we hate them.

ராஜ நடராஜன் சொன்னது…

காணொளிகள் பெரியார் காலத்திலேயே கிடைச்சிருந்தா இன்னும் நல்லாவே விளக்கியிருப்பாருல்ல!

Unknown சொன்னது…

அண்ணே நீங்க சொன்னா ஓகே

சொல்லச் சொல்ல சொன்னது…

'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற புத்தகத்தை 6 மாதத்திற்கு முன்பு தான் படித்தேன். தேவையில்லாத பயம், செண்டிமெண்ட் எல்லாம் பறந்தோடி விட்டன. இந்த நல்ல நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தடர்க்கு நன்றி. நல்ல பதிவு

அஞ்சா சிங்கம் சொன்னது…

கரகாட்டகாரன் படத்தில் ராமராஜன் நடுவில் நின்று டான்ஸ் எல்லாம் ஆடுவார் .............
டைம் வார்ப் காரர்கள் அதையும் முயற்சித்திருக்கலாம் இல்லை என்றால் கரகாட்டகாரன் படத்தை டிஸ்கவரியில் போட செய்யலாம்....................

sathishsangkavi.blogspot.com சொன்னது…

)))

Jayadev Das சொன்னது…

யாரோ தீ மிதித்தார்கள், அது சுளுவு எல்லோரும் மிதிக்கலாம். அதனால் இறைவன் இல்லை- இது கவுண்டமணி வடிவேலு காமெடியை விட பெரிய காமடியாக உங்களுக்கே தோன வில்லையா? உண்மையிலே இந்த அண்டத்தை உருவாக்கி காத்து நடத்தி அழிக்க வல்ல ஒருவன் இருந்தால், அதை இந்த தீ மிதிக்கும் செயல் இல்லை என்றாக்கி விடுமா? என்ன லாஜிக்கை பயன்படுத்துகிறீர்கள் ஐயா? உங்கள் நாத்தீகர்களும் மூட நம்பிக்கையாளர்கள் தான் என்பதை இஸ்லாம் மத நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர். அவர்களின் கேள்விகளுக்கு, நாத்திகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களும், மருத்துவம் படித்த நாத்தீகர்களும் பதில் சொல்லத் தெரியாமல் தவிடு தின்னுவதைப் பார்த்து நகைப்பாக இருந்தது. கிட்டத் தட்ட நாற்ப்பது வீடியோக்கள் உள்ளன. நான் ஒன்றிரண்டு பார்க்க நினைத்தேன், ஆனால் அத்தனையும் பார்க்கும் படி அழகாக அவர்கள் விவாதம் செய்து உமது நாத்தேகத்தை தவிடு பொடியாக்கியுள்ளனர். முடிந்தால் நீங்களும் பாருங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் போட்டு பதிவு போடுங்கள்.

http://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E&feature=related

varagan சொன்னது…

Jeyadeva Das சொன்ன Video வைப் பார்த்த பின் TNJ ன் பணியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கண்டிப்பாக ஒவ்வொரு பகுத்தறிவு வாதியும் பார்க்க வேண்டிய வீடியோபதிப்பு.
நன்றி Jeyadeva Das.

நிலவு சொன்னது…

ஐ.ஏ.எஸ் க்கு வெளியே நல்லவர்களை தேடுங்கள் - உச்சநீதி மன்றம் - http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_7385.html

ஈரோடு கதிர் சொன்னது…

காணொளி பகிர்விற்கு நன்றி!