8 ஏப்., 2011

ஊழலோ! ஊழல்!!...


இந்திய தேசம் வரலாறு காணாத அளவுக்கு இப்போது ஊழலை சந்தித்து இருக்கிறது. இப்படி ஊழல் மலிந்து போனதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருப்பது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம். இதற்க்கு முன் ஊழலே ஊழலே நடைபெறவில்லையா என முதலிரண்டு வரிகளைப்படித்துவிட்டு சொம்பை தூக்கிக்கொண்டு வருகிறவர்களே! இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பொதுவான கட்டுரை. இதன் மொத்த சாரம்சமுமே ஊழலுக்கு துணைபோன ஊழல்வாதிகளையும் தோலுரிப்பதுதான் என்பதால் சொம்பை தூர எறிந்துவிட்டு நியாயமான விவாதத்தில் கலந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

நாம் எல்லோருக்குமே அரசு அலுவலகத்தில், காவல் நிலையங்களில், அரசு மருத்துவமனைகளில் ஒரு சாதாரணனுக்கு நேரும் அவமானங்களை பார்க்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்திருக்கும். நாம் எல்லோருக்கும் இருக்கும் பொதுபுத்தியே நமக்கென்ன என ஒதுங்கிகொள்வதுதான். இப்படி நாம் நமது தலையை ஆமை போல பிரச்சினை வரும்போதெல்லாம் ஓட்டுக்குள் புதைத்துக்கொள்ளும் முடிவை எடுக்கும் காரணத்தால் எல்லா இடங்களிலும் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போகவே நமக்கு சேவை செய்வதற்கு நமது வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொள்ளும் நமது ஊழியர்கள் முதலாளிகளான நம்மை அடிமைகள் மாதிரி நடத்தும் சூழல் மிகுந்துவிட்டது. 

சென்னையில் மோட்டார் பைக்குள் நிறுத்துவதற்கு எந்த இடத்திலும் அரசாங்கம் ஏற்ப்பாடுகள் செய்யாத சூழ்நிலையில் உங்கள் பைக்கை அவசரமாக நிறுத்திவிட்டு திரும்பிவந்து பார்த்தால் அது அருகில் உள்ள போக்குவரத்து காவல்நிலைய காவலர்களால் தூக்கிச்செல்லப்பட்டு இருக்கும். அங்கு சென்றால் நிதானமாக நம்மை எரிச்சலயடைய வைப்பார்கள். பின் கெஞ்சலுக்கு தகுந்த அளவு அபாரதம் போட்டு( சமயங்களில் கொடுத்ததை வாங்கிக்கொண்டு) அனுப்புவார்கள். நிலைமை என்னன்னா இப்படி வேர்வை சிந்த வேலைபார்க்கும் அவர்களையும் நாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என காட்டிகொடுத்தா உடனே சஸ்பென்ட் பண்ணிருவாங்க. ஆனா இன்றைக்கு இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளுமே கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கின்றனர். ஓட்டாண்டியாக அரசியலுக்கு வந்த இவர்கள் இப்படி கோடிக்கணக்கில் அடித்துவிட்டு பிரச்சினை வந்தால் ராஜினாமா நாடகத்துடன் கொடுக்க வேண்டியதை கொடுத்த மூடவேண்டியத்தை மூடிவிடுவார்கள்.

இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட இந்திய தேசத்தில் இணையம் வெகுவாக எல்லோராலும் பயன்பாட்டுக்கு வந்தபிறகே ஊழலுக்கான எழுச்சி ஆங்காங்கே வெளிப்பட ஆரம்பித்தது. அதற்குமுன் வரைக்குமே பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களும் அரசியல்வாதிகளின் கையில்(இன்றுவரைக்கும்) இருந்ததால் நம்மை முட்டாளாக்கி சம்பாதித்தனர். ஆனால் டெகல்காவிற்கு பிறகு சமீபத்தில் விக்கிலீக்ஸ் வந்தபிறகு எகிப்தில் தோன்றிய மறுமலர்ச்சி லிபியாவுக்கு தொற்றிக்கொண்டு இந்தியாவிலும் உற்சாக காற்றடிக்க ஆரம்பித்து இருக்கிறது. 

சமீபத்திய மீனவர் பிரச்சினையில் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக டிவிட்டரில் ஒரு மாபெரும் கவன ஈர்ப்பினை பெற்றார்கள். இது இந்திய இணைய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல். இப்போது இவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக ஒரு 71 வயது இளைஞர் தனது போராட்டத்தை துவக்கி இருக்கிறார். இந்த மாபெரும் முன்னெடுப்பு வெற்றிபெற இணைய தோழர்கள் ஒன்றிணைந்து குறைந்தபட்சம் ஆளுக்கொரு பதிவாவது போடலாம். இதற்குள்ளாகவே சில தேசாபிமானிகள் திரு. அண்ணா ஹசாரே அவர்களையும், நம்மைபோன்ற ஆதரவாளர்களையும் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அடிமைகள் எல்லா தேசத்திலும் வாழவே செய்கின்றனர். அவர்களுக்கும் சேர்த்து இந்த மாபெரும் முன்னெடுப்பில் இணையுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்..

28 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம் வாத்தியாரே..

Unknown சொன்னது…

ஊழல் என்ற பேய்க்கு யாராவது வேப்பிலை அடித்துத்தான் ஆக வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்திருக்கிறது அண்ணா ஹசாரே அவர்களால்... துணை நிற்க வேண்டியது நம் கடமை.

Unknown சொன்னது…

இப்போது பாருங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியெல்லாம் கிலியடித்து நிற்கிறார்கள்.

Unknown சொன்னது…

எகிப்து புரட்சி, லிபியா புரட்சி என்பதை போல இந்திய புரட்சிக்கான வித்து என்றே இதனை கொள்ளலாம்.

K.MURALI சொன்னது…

"I support Anna Hazare. Its TIME to make a CHANGE!"

Unknown சொன்னது…

ஆனாலும் கூட ஹிந்தி சினிமா நடிகர்கள் ஆதரவு குரல் எழுப்பிய பின் தான், வெகுஜன மக்கள் ஈர்ப்பை அண்ணா ஹசாரே அவர்களின் போராட்டம் பெற்றுள்ளது என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

Unknown சொன்னது…

இந்தி சினிமா நடிகர்கள் நம் தமிழகத்தை சொந்த பிரச்சினைக்காக அரசியல் கட்சியிடம் காசுவாங்கிக்கொண்டு மாறடிப்பவர்கள் அல்ல... அதிலும் அமீர் கான் மட்டுமே முதலில் ஆதரவு தெரிவித்தார்.

Chitra சொன்னது…

இப்படி நாம் நமது தலையை ஆமை போல பிரச்சினை வரும்போதெல்லாம் ஓட்டுக்குள் புதைத்துக்கொள்ளும் முடிவை எடுக்கும் காரணத்தால் எல்லா இடங்களிலும் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போகவே நமக்கு சேவை செய்வதற்கு நமது வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொள்ளும் நமது ஊழியர்கள் முதலாளிகளான நம்மை அடிமைகள் மாதிரி நடத்தும் சூழல் மிகுந்துவிட்டது.


.....உண்மைதான்.... அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, மக்கள் - நாம் எல்லோருமே - இந்த அவல நிலைக்கு காரணமானவர்களே.

Sivakumar சொன்னது…

அண்ணா ஹசாரேவின் போராட்டம் வென்றே தீரும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தெரியாத, புரியாத சில விஷயங்களை அனைவருக்கும் புரியவைக்கும் நல்லதொரு பதிவு.

சக்தி கல்வி மையம் சொன்னது…

பாராட்டுக்கள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தலைவரே......யார் என்ன சொன்னாலும் போகட்டும் நல்லதட்க்கே!

hariharan சொன்னது…

ஹசாரேவின் போராட்டம் வெல்க...

71 வயதான ஒரு மனிதர் ஏதாவது செய்யவேண்டும் என்று முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்.

இந்தியமக்கள் பெருவாரியாக விரும்புகிற கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், சினிமா நடிகர்கள் ஒரு சமூக முன்னேற்றத்திற்க்காக ஒரு சின்ன கல்லைக்கூட தூக்குவதில்லை, பதிலாக சொம்பு துக்குகிரார்கள்.

முனுசாமி சொன்னது…

join 'India Against Corruption' to show yourself supporting Mr.Anna Hazare

முனுசாமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

ஊழலை எதிர்க்க மறுபடியும் ஒரு காந்திய போராட்டமும் காந்தியவாதியும்தான் தேவைப்படுகிறார், நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அந்தளவு பயம் பிடித்து ஆட்டுகிறது, இந்த வயதிலும் நாட்டுக்காக, நாட்டின் முன்னேற்றதுக்காக ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரே அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தோள் கொடுப்போம்

அஞ்சா சிங்கம் சொன்னது…

அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு நம் அனைவரின் ஆதரவும் உண்டு .........
வெல்க அவரது போராட்டம் ..........

அருண் பிரசாத் சொன்னது…

அண்ணே நேத்தைக்கே நான் பதிவு போட்டுட்டேன்....

ராஜ நடராஜன் சொன்னது…

முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் பேச்சை இன்று தொலைக்காட்சியில் கண்டேன்.

அண்ணா ஹசாரேவுக்காக
தமிழகத்திலும் போராட்டத்துக்கான ஆதரவு திரள்கிறது.வரவேற்போம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

தோள் கொடுப்போம்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹசாரேக்கு மளமளவென ஆதரவு குவிஞ்சிட்டே இருக்கு புதிய புரட்சி வெடிக்குமோ....

tommoy சொன்னது…

தோள் கொடுப்போம்.. அதே நேரத்தில் நீர்த்து பொய் விடுமோ என்ற பயமும் உள்ளது .. இந்தியாவின் சாபக்கேடு அது.. ஒரு பரபரப்பு செய்து மற்ற முட்க்கியமான செய்தியை காலப்போக்கில் மறைத்துவிடுகிறது. ஊடகங்களின் லட்சணம் இப்படி தானே உள்ளது .. போலி சாமியாருக்கு கொடுத்த பப்ளிசிட்டியில் 10% கூட ஹன்சரிக்கு இல்லாது போனது தானே நிஜம்..
அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை.. மக்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.. மக்களுக்கும் சுயபரிசோதனை தேவை.. அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நினைத்தால் மட்டுமே இங்கே ஊழலை வளர்த்துவிட முடியாது.. விதைப்பவர்கள் அவர்களாக இருக்கலாம்.. ஆனால் நீர் விட்டு வளர்ப்பது மக்களாகிய நாமே என்பது நிதர்சனம்.

வாகனம் ஓட்ட தெரியாத எத்துனை பேரிடம் வாகன ஓட்டும் லைசென்ஸ் இருக்கிறது?
எத்துனை முறை பிளாக்கில் டிக்கெட் எடுத்து படம் பார்த்திருப்போம்?
எத்துனை முறை ஒன் வே மற்றும் நோ என்றயில் சென்றிருப்போம்? (கையால் ௨௦ ரூ இருக்கும் தைரியத்தில்)
எதனை முறை சிவப்பு சிக்னல் கடந்திருப்போம்

வீடு நிலம் விற்கும் போது - வரி ஏய்ப்பு செய்ய மதிப்பை குறைத்து ஸ்டாம்ப் பேப்பர் வாங்கியது நம் கைகள் தானே?
இரண்டாவது தலத்தில் குடியிருப்போம், மழையினால் ஒரு சிறு பாதிப்பு இல்லாவிட்டாலும் , குடிசையில் வாழும் கூட்டத்தோட முண்டி
அடித்து வெள்ள நிவாரணம் வாங்கிவர்கள் தானே நாம்

நமக்கு தேவை எனும் பொது கூச்சமே இல்லாது காசு கொடுத்து பல விஷயங்களை சாதித்து கொண்டவர்கள் தானே நாம்
எல்லாவற்றிற்கும் மேலாக 100 க்கும் 200 க்கும் விலைமதிப்பில்லா நம் வாக்குகளை விற்றவர்கள் தானே நாம் .. என்ன தகுதி இருக்கிறது குறை சொல்ல..

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வு!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தக்க சமயத்தில் வந்திருக்கும் நல்ல பதிவு.

Unknown சொன்னது…

Deepakcbe

அன்ன ஹசறேவுக்கு அதரவாக நடந்த கூட்டத்தில் கோவையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Unknown சொன்னது…

raghuji

ஜன்லோக்பால் ஏற்கப்படவில்லையெனில் சிறைநிரப்பும் போராட்டம் என்கிறார் ஹசாரே. ஏற்கப்பட்டுவிட்டாலும் சிறை நிரம்பிவிடும் போலிருக்கிறதே.