24 ஏப்., 2011

ஆச்சார்யா - The Christ Conspiracy...


கிருத்துவம் பற்றியும் இயேசு கிருஸ்த்து நிறைய சர்ச்சைகள் எப்போதும் உலாவரும். இந்தியாவில் தொன்மையான ஆன்மீக விசயங்கள் இருந்திருக்கின்றன. இன்றுவரை அவைகளில் நிறைய தொடரவும் செய்கின்றன. ஆன்மீகம், மதம் இவைகள் அனைத்துமே தத்துவங்களால் கட்டமைக்கப்பட்டவை. வாழ்வின் அதீத பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தன் ஆற்றாமைகளை கொட்டித்தீர்க்க இவைகள் உதவும் நோக்கில் யாரோ ஒரு சிந்தனையாளன் ஒவ்வொரு மதத்தையும், தத்துவத்தையும் படைத்திருக்க வேண்டும் என ஆன்மீக அன்பர்களும், அதெல்லாம் சுத்த பேத்தல் தனி மனித துதிபாடல்கள்தான் பின்பு மத ரீதியான கொள்கைகளாக மாறிவிட்டன. மூட நம்பிக்கைகளை விதைப்பதுதான் மதங்களின் அடிப்படை எனவும் அதனை வைத்து வியாபாரம் செய்பவர்கள்தான் மத குருமார்கள் என்று நாத்திக வம்பர்களும் தங்கள் தரப்பு வாதங்களுக்கு ஏதோ ஒரு சரித்திர பக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.

தொன்ம தெய்வங்களையும், இயற்கையும் வணங்கிய இந்தியர்களை கைபர், போலன் கணவாய் வந்த ஆரியர்கள் தங்கள் கட்டுக்கதைகளால் புதிய தெய்வங்களைப் படைத்து ஒட்டு மொத்த இந்தியர்களின் குறிப்பாக திராவிடர்களின் பாரம்பரிய தெய்வங்களையும், கலாசாரத்தையும் மாற்றி சாதிகளை உட்புகுத்தி சுயலாபம் பார்த்துவிட்டனர் என இந்து மதத்தை அந்த மதத்தில் உள்ள சிலரே சாடுகின்றனர். குறிப்பாக பெரியார் இதனை முழு மூச்சாக பிரச்சாரம் செய்தார். அவரின் வழிவந்த திராவிடக்குஞ்சுகள் மஞ்சள் வண்ணம் பூசிய ஒயிட் லெக்கான் கோழிகளாக மாறிவிட்டாலும் இன்னும் பாரம்பரிய கடவுள்களுக்கு கெடாவெட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்து மதத்தில் இருக்கிற ஒரே நல்ல விசயம் விமர்சனகளை ஏற்றுக்கொள்வது. ஏன் அவர்கள் விமர்சனத்தை ஏறுக்கொள்ள வேண்டியிருக்கிறது? இப்படி சோப்ளாங்கியாய் எல்லாத்துக்கும் தலையாட்டுவதற்க்கு காரணமே அது கட்டமைத்த புராணக்கதைகள். பொதுவெளியில் முலை என்கிற ஒற்றை தூய தமிழ் வார்த்தையை பயன்படுத்தினால் பொங்கி எழும் கலாச்சார ஆ'சாமி'கள் ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த ஐயப்பனுக்கும் , அழுக்கு திரட்டியாக பிறந்ததாக சொல்லப்படும் பிள்ளையாருக்கும் தோப்புகரணம் அல்லது ஒரு பிள்ளையார் சுழியோடு துவங்கும் நம்பிக்கைகளை பற்றி எப்போதாவது ஆராய்வார்களா? என்பது அவர்கள் பேரறிவுக்கு எட்டாமல் போனாலும் சிற்றறிவுக்காவது எட்டாதது ஆச்சர்யமான விசயம்தான். 

முசல்மான்களின் மார்க்கம் எல்லோருக்கும் பொதுவானதாக நபிகளால் எழுதப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இன்னும் யார் ஒரிஜினல் முஸ்லீம், யார் டூப்ளிகேட் என அவர்களுக்கும் குழப்படிதான்!. பாகிஸ்தான், இந்தியா முஸ்லீம்களை அரபிகளும், மலாய்க்காரர்களும் வேறுபடுத்தித்தான் பார்க்கிறார்கள். அதிலும் சியா, சன்னி பிரிவுகளில் இன்னும் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை.

புத்தர் கொள்கைகள் இந்தியாவைத்தவிர உலகெங்கும் வியாபித்து இருந்தாலும், பக்கத்து நாடான இலங்கையில் ஒரு இனத்தையே அழித்து மதம் பரப்புகிறவர்கள் பிக்குகள்தான். இன்றுவரைக்கும் கருவறைக்குள் பிராமணன் அல்லாதோர் போகமுடியாது. சாமி தீட்டு பட்டுரும் என அதிமுக்கியமான காரணங்கள் இதற்கிருந்தாலும் தேவநாதன் முதல் ஊடகங்களால் அறியப்படாத ஆயிரம் களியாட்டங்கள் கருவறைக்குள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கருவறைன்னு சொல்லிட்டு இத பண்ணாம இருக்க முடியாது போல.

மதங்கள் வந்து படுத்துவது பத்தாதுன்னு ரோட்டோரம் இருக்கிற வேப்ப மரத்திற்கு குங்குமம் வைத்து குறி சொல்லுபவன் முதல் ஆசிரமம் கட்டி ஆன்மிகம் செய்கிற நித்யானந்தா, ஜக்கி மற்றும் தனது ஆன்மீக வாரிசை உலகிற்கு அடயாளம் காட்டிய( அரசியல்வாதி, சினிமாக்காரன்தான் வாரிசை கொண்டு வரணுமா?) மருவத்தூர் நாயக்கர் வரைக்கும் கடவுள் அவதாரம் எடுத்து மக்களை சொஸ்த்தப்டுத்தி கல்லா கட்டுகின்றனர். இந்தக்கட்டுரை எழுதிகொண்டிருந்த நேரத்தில் சாயிபாபா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க அவர் குணமாக அவரிடமே பிரார்த்தனை செய்த அதிசயம் நடந்தேறியது. கூடிய விரைவில் செத்தபின் சொத்துக்கு அடித்துக்கொண்டு புதிய சாயிகள் அவதாரம் பூசுவார்கள்.

தலைப்பை விட்டுவிட்டு எங்கெங்கோ பயணித்தமைக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்க்காரம் போட்டுவிட்டு தலைப்புக்கு வருகிறேன். ஆச்சார்யா என தனது திருநாமத்தை மாற்றிக்கொண்ட ஒரு அமெரிக்க வரலாற்று மித்தாலஜி ஆசிரியர் ஒரு புதிய உண்மையை உலகுக்கு அறிவித்திருக்கிறார். அதன்படி இயேசு மற்றும் பைபிளில் கூறப்பட்ட அனைத்துமே இந்துமதத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டு இருக்கின்றன. கிருஷ்ணர்தான் இயேசு. கிருஷ்ணர் என்பதுதான் கிறிஸ்துவம் ஆனது என ஏகப்பட்ட ஆதாரங்களையும், ஒற்றுமைகளையும் முன்வைக்கிறார். மாயா இனமே இந்தியாவின் தமிழர்கள்தான் என்றும் மாயன் இன மக்கள் குறிப்பிடும் சிலம்பல்லம் தமிழ்நாட்டின் சிதம்பரம் என்றும் சொல்லும் அவர். அதன் தொடர்பான விசயங்களை தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார்.

//The Mexican civilization resembles not only the Semitic, which is one reason it is clearly not an outgrowth of it. The Maya have much in common with the Indians as well. As to the similarities between the Mayan and Hindu religion and language, Hinduism Today says, “Chacla in Mayan refers to force centers of the body similar to the chakras of Hinduism. K’ultanlilni in Mayan refers to the power of God within man which is controlled by the breath, similar in meaning to kundalini. Mayan chilambalam refers to a sacred space, as does Tamil Chidambaram. Yok’hah in Maya means ‘on top of truth,’ similar to yoga in Sanskrit.”mlxvi The Maya also had the same goddess Maya, mother of the gods and man, as in India. mlxvii Furthermore, the legendary founder of the Maya was the god Votan or Wotan, a name identical to the god of Teutonic tribes. There are many such correspondences between the Old and New Worlds//

எகிப்துக்கும். இந்தியாவுக்கும், மெக்சிகோவுக்கும் இருக்கும் தொடர்புகளை ஆராயும் இந்தப்புத்தகம் இன்னொரு குழப்படியை எனக்குள் உண்டு பண்ணியதால், யாம் பெற்ற குழப்படியை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்காவிடில் ஊழ்வினை இப்பிறப்பில் மட்டுமே தாக்கினாலும் தாக்கும் என்ற பயத்தால் இதனை பகிர்ந்துகொண்டுள்ளேன். எளிமையான ஆங்கிலத்தில் இருக்கும் இதனை எல்லோரும் படித்து இன்புற அதன் இணைப்பையும் கொடுத்துள்ளேன். இதற்குமேல் எழுதினால் உண்மைத்தமிழன் அண்ணாச்சி தான் அனுதினமும் வணக்கும் முருனிடம் சொல்லி அவன் வேலால் என் கண்ணை குத்தும் அபாயம் இருப்பதால் இத்துடன் முடித்துகொள்கிறேன்.

இந்துமதம்தான் உலகின் ஆதாரமதம் என சொல்லிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்புத்தகம் ஒரு புதிய கீதாபைபிளாகக் கடவது - கிருஷ்ணா ஆமென்.

இணைப்பு:

7 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

present

பனித்துளி சங்கர் சொன்னது…

இதுவரை அறியாத ஒன்றுதான் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

Unknown சொன்னது…

இங்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்......
கடவுளை நாம் தான் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம்...அவன் இருக்கிறான் இல்லை என்பது வேறு விஷயம்....முடிந்தவரைஅடுத்தவரின் நம்பிக்கையை உடைக்க நினைப்பதை விட பாவம் ஏதும் இல்லை தலைவரே!

வெள்ளிநிலா சொன்னது…

left handers also living in this world senthil!

Sivakumar சொன்னது…

God bless you!

மார்கண்டேயன் சொன்னது…

// . . . வந்த ஆரியர்கள் . . . //

செந்தில், ஆரியர்கள் இதுலே, நிறைய குளறுபடி இருக்கு, அப்படின்னு நான் சொல்லல்லே, கீழே இருக்குற காணொளிகள பாருங்க,

1. http://www.youtube.com/watch?v=Hb37fqE55cs
2. http://www.youtube.com/watch?v=FzFTEF8CmY8
3. http://www.youtube.com/watch?v=4w1QBCnF5B4

நீர் மட்டும் தான் குழப்படி செய்வீரோ, எங்களின் பங்கு தான் மேலே உள்ளது,

நட்புடன்,
மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.com

// . . . யாம் பெற்ற குழப்படியை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்காவிடில் //

david santos சொன்னது…

Happy Easter!