9 ஜூலை, 2011

கோப்பையில் மிதக்கும் நாட்கள்...

சனி இரவு 
டாஸ்மாக் உபயத்தில் 
கொரியர் நெப்போலியன் மயக்கத்தில் 
செட்டியார் மெஸ் இட்லியுடன் 
கழிகிறது..

வழி மறித்த
போலீஸ்காரனின் 
கைகளில் திணித்த 
நூறு ரூபாயுடன் 
முடிந்தது நிதி நிலைமை..

நேற்று 
அதற்கு முதல் நாள் 
அதற்கும் முதல் நாள் 
போலவே 
நாளை இரவும் கழியக்கூடும்..

இன்னொரு 
கூரியர் நெப்போலியன் 
அல்லது மேக்டவலுடன்
விந்தை மனிதனோ 
கேபிளோ 
அல்லது வேறு யாருடனோ...

13 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்..

பெயரில்லா சொன்னது…

கொஞ்ச நேரம் பேசலாம்னு வந்தா நீங்க மூணு பேரும் தண்ணி அடிக்க ஓடிடறீங்க. அதுவும் கேபிள் வந்தார்னா சபைய கலச்சிட்டு பைக்கை கிளப்பிட வேண்டியது. பேட் பாய்ஸ்!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

லைவ் கவிதைங்களா? (இல்ல இப்ப சனிக்கெழம நைட்டுங்களா அதான் கேட்டேன்....!)

ராஜ நடராஜன் சொன்னது…

சாரு கோட்பாடுக்கு மாற்று கோட்பாடா:)

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் , கலக்குங்க :)

சக்தி கல்வி மையம் சொன்னது…

தலைவரே ரொம்ப நாளைக்கப்புரம் வந்திருக்கீங்க..

Unknown சொன்னது…

தலைவரே நண்பர்களுடன் என்றாலே கலக்கல்தான்னே!...அதும் அடிச்சத்துக்கப்புரம் தானே தத்துவமா வரும் ஹிஹி!

Unknown சொன்னது…

கலக்குங்க! :-)

கூடல் பாலா சொன்னது…

சாராயம் குடிச்சாத்தான் ...............ஹே.......

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

செந்தில்...அப்போ ஒவ்வொருநாளும் 100 ரூபா உங்க கணக்கில லஞ்சம் குடுக்கிறீங்க !

சசிகுமார் சொன்னது…

குடிக்கறத கூட மேடை ஏறி வீரமாக கூறி கொள்ளும் செந்தில் அண்ணன் வாழ்க. உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே ஹி ஹி

ரோஸ்விக் சொன்னது…

//கூரியர் நெப்போலியன்
அல்லது மேக்டவலுடன்
விந்தை மனிதனோ
கேபிளோ //

எல்லாம் பிராண்டடாவுல இருக்கு... :-)