17 ஆக., 2011

பயோடேட்டா - அன்னா அசாரே ...


பெயர்                 : அன்னா அசாரே 
இயற்பெயர்      : கிசான் பாபுராவ் ஹசாரே  
தலைவர்           : ஜன லோக்பால் 
துணைத் தலைவர் : ஊடகங்கள் 
மேலும் 
துணை தலைவர்கள்
 : ஊழலை எதிர்க்கும் அனைவருமே 
வயது                  : 74 வயது இளைஞர் 
தொழில்             : முழு நேர தேசியவாதி 
பலம்                    : மக்களின் கோபம் 
பலவீனம்    :  ஒருங்கிணைப்பு இல்லாதது 
நீண்ட கால சாதனைகள்  : தன் சொந்த ஊரின் தண்ணீர் தேவையை 
                                                        பூர்த்தி செய்தது 
சமீபத்திய சாதனைகள்    : விடாக்கண்டனாக மூன்றாவது முறையும் 
                                                       உண்ணாவிரதம் இருப்பது 
நீண்ட கால எரிச்சல்   : லஞ்ச லாவண்யம் மற்றும் ஊழல் 
சமீபத்திய எரிச்சல்             : காங்கிரஸ்காரர்கள் 
மக்கள்                            : எரிச்சலில் இருப்பவர்கள் 
சொத்து மதிப்பு   : காங்கிரஸ்காரன் கிட்டதான் கேக்கணும் 
நண்பர்கள்                      : கிரண் பேடி, சாந்தி பூஷன் உள்ளிட்ட 
                                             அனைத்து ஆதரவாளர்களும் 
எதிரிகள்                         : ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் 
ஆசை                               : ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது 
நிராசை   : அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் 
பாராட்டுக்குரியது   : இந்த வயதிலும் இருக்கும் போராட்ட குணம் 
பயம்   : கூட இருப்பவர்களின்மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் 
கோபம் : பிரதமர் உள்ளிட்ட காங்கிரசாரின் பூசி மெழுகும் பேச்சின் மீது 
காணாமல் போனவை : அரசின் கட்டுப்பாடுகள் 
புதியவை                          : பெரும்பான்மை மக்கள் இவரை ஆதரிப்பது 
கருத்து                               : கருத்து சுதந்திரம் அரசால் முடக்கப்படுகிறது 
டிஸ்கி : இவரின் குழுவினரையும் சேர்த்துக்கொண்டு அனைத்து அரசியல் 
                 கட்சிகள் உள்ளிட்ட ஒரு லோக்பால் வரைவை உருவாக்க காங்கிரஸ் 
                 அரசு தயக்கம் காட்டுவது ஏன்?.
                 

18 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

சொத்து:
ஏப்ரல் 15 2011 இல்
டெக்கான் குரோனிகல் இதழில் வெளியான செய்தி, அன்ன ஹஜாறேவுக்கு 68,688 ரூபாய் பணம் வங்கியில் இருப்பதாக வெளியிட்டுள்ளது...

http://www.deccanchronicle.com/channels/nation/north/activist-members-lokpal-panel-declare-assets-507

இன்று ndtv இனைய தளத்தில் வெளியான செய்தி அவருக்கு வங்கியில் பணமே இல்லை என்று கூறியுள்ளது..

http://www.ndtv.com/article/india/hazares-possessions-a-plate-a-bed-111022

முரண்:

தப்பு செய்யவே, பிரதமரை லோக் பால் மசோதாவுக்குள் கொண்டு வரக் கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது..

தப்பு செய்யவே, அரசு அல்லாத அமைப்புகளை லோக் பால் மசோதாவுக்குள் கொண்டு வரக் கூடாது என்று அண்ணா ஹஜாரே கூறுகிறார்..

எது எப்படியோ ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்..

Unknown சொன்னது…

மடியில் கனம் இருப்பவனுக்குதான் வழியில் பயம் இருக்கும், இதிலிருந்தே தெரிகிறதே காங்கிரஸ் அரசின் லட்சணம்

சக்தி கல்வி மையம் சொன்னது…

இந்த காங்கிரஸ் காரனுங்க இதை ஏன் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாதா அண்ணே..

jothi சொன்னது…

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் சட்டவரம்புக்குள் வரவேண்டும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

காங்கிரஸ்காரனுக்கு அடிமடியில் கனம்... அதனால் பயம்.
எதிர்க்கட்சிக்காரன் எப்படியும் காங்கிரஸ் இந்த விசயத்தில் வெற்றி பெறும் என்பதாலே ஆதரவு கொடுக்கிறான்.
எப்படியோ போராடும் இளைஞனை போட்டுப் பார்க்க இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பலவீனம் : ஒருங்கிணைப்பு இல்லாதது .

ஜெயசீலன் சொன்னது…

//பாராட்டுக்குரியது : இந்த வயதிலும் இருக்கும் போராட்ட குணம்//
நிஜமாகவே பாரட்டுக்குரியது தான்...

Admin சொன்னது…

annavin thairiya paratirkuriyathu.

Mi anna azare aahe.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்கள் பாணியில் சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த போராட்டத்திற்க்கு வலுவான ஆட்கள் ஆதரவு என்று இல்லாமல் கூடவே இருந்தால் இப்போராட்டம் வெற்றியடையும் என நம்புகிறேன்...

Anand சொன்னது…

Also please read http://www.vinavu.com/2011/08/17/lokapal-v2/

சசிகுமார் சொன்னது…

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

ராஜ நடராஜன் சொன்னது…

செந்திலண்ணா!எங்கே போயிட்டீங்க? காணமல் போனவர்கள் லிஸ்ட்ல நிறைய தலைகள் இருக்குறாங்க.அந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டீங்களா:)

தானும் செய்யாம செய்பவனையும் நொள்ளை பேசுபவர்களை விட நம்ம பாசிட்டிவ் அப்ரோச் நல்லாவே இருக்குது.எழுத்தளவிலாவது அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தருவோம்.நானும் பதிவு போட்டிருக்கேன்.

பயலுகடேட்டா தொடரட்டும்:)நன்றி.

Sabarinathan Arthanari சொன்னது…

Who is Anna Hazare ?

http://timesofindia.indiatimes.com/india/Who-is-Anna-Hazare/articleshow/9644794.cms

http://en.wikipedia.org/wiki/Anna_Hazare

/In the early 2000s Anna Hazare led a movement in Maharashtra state which forced the state government to pass a stronger Maharashtra Right to Information Act. // வெற்று கூச்சல்களையும் , நொட்டை சொல்வதை விடவும் மக்கள் விழிப்புணர்வு பெறச்செய்தவரின் பணிகள் உயர்ந்தவை தான்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

Riyas சொன்னது…

வழமை போல் கலக்கல் செந்தில் சார்

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

எத்தனை பேருடன் போராட்டம் தொடாங்கினாரோ இல்லையோ இவ்வளவு விரைவில் இத்தனை மக்கள் ஆதரவை தந்துள்ளனர்.வெற்றி பெற வேண்டும்.

Sivakumar சொன்னது…

எங்கே அன்னாவிற்கு எதிராக தங்கள் பயோடேட்டா இருக்குமோ என்று படிக்க ஆரம்பித்தேன். நீங்களும் அவரை ஆதரிப்பது மகிழ்ச்சி. நன்றி அண்ணா/அன்னா!!