20 ஆக., 2011

ஒரு கவிதை ... மூன்று கோணங்களில்...


சாதாரணமாய்..

இரா முழுதும் பரவிய தனிமையில் 
போதுமானதாக இல்லை வாங்கி வந்த சரக்கும்,
பைத்தியக்காரத்தனமான முடிவெடுத்து விட்டான் என நண்பர்களும் 
போய்ச்சேர வேண்டியவன்தான் என வெறுப்பவர்களும் 
அய்யோ போயிட்டியே ராசா என பெத்தவளும் 
இன்னும்..
இன்னும் ..
அத்தனை பேச்சுக்கும் தீனி போட 
செத்து விடலாம்தான்..?

அசாதாரணமாய்...

இராத் தனிமைக்கு 
போதுமானதாயில்லை அரை நெப்போலியன்.
வெற்றாக வாழ்வதிலும் 
விரக்தியின் உச்சம் என்னைத் 
'தொங்கிரு'... எனத் துரத்த 
கோட்டி புடிச்ச பய 
சாவுக்கு வந்த கேடுன்னு ஊர் சனம் பேச 
விழுந்தடிச்சு அழுவா பெத்தவ....

பின் நவீனத்துவமாய்....

நீளும் இரா 
கிலேசக்கிறுகிறுப்பில் அமிழ்ந்த மனம்
துரத்தும் ஒப்பாரி வீச்சில்
பிரேதக்களை பொருந்திய முகங்கொண்ட தாய்...
மனப்பிறழ்வின்  வீச்சம் சுமக்கும் காற்றில் சொற்களின் நடனம்
மயானத்திலும்...

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

சாதாரணமாய் சொன்னதே கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் தான் இருக்கிறது.

Unknown சொன்னது…

ஒவ்வொரு அடுக்கினும் கவிதை காட்டும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் "சுதி"யேறுகிறது.

வார்த்தைகளின் எண்ணிக்கை அடுத்தடுத்து கூட,கூட.., கவிதைக்காரனின் தனிமை தடுமாற வைக்கிறது.

விரக்தி மதுவின் தாக்கத்தால் தற்கொலை வரை நீள்கிறதா அல்லது மது தான் தற்கொலைக்கு தூண்டுகிறதா என்று கவிதையாக்கம், யோசிப்பை இழித்துச்செல்கிறது.

நிரூபன் சொன்னது…

இரவுத் தனிமையினைப் போக்க உதவும் சரக்குப் பற்றி, வித்தியாசமான முறையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
எனக்கு பின் நவீனத்துவப் பாணி தான் பிடித்திருக்கிறது.

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை

'பரிவை' சே.குமார் சொன்னது…

மூன்றும் அருமை...
ரொம்ப அழகாய்... சாதாரணம், அசாதாரணம், பின் நவீனத்துவம்.

SURYAJEEVA சொன்னது…

நீங்க சொல்றத வச்சு கவிதைகளை வாசிக்கும் பொழுது கவிஞன் இருந்த நிலை தெரிந்து விடும் போலிருக்கே.. சாதரணமாய் = cutting
அசாதாரணமாய் = half
பின் நவீனத்துவமாய் = full

காந்தி பனங்கூர் சொன்னது…

புரிந்துகொள்ளும் அளவிற்கு திறனில்லை. தயவுசெய்து யாராவது விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

நாராயணா.. நாட்ல இந்த நடுராத்திரி குடிகாரங்க தொல்ல தாங்க முடியலப்பா..

பெயரில்லா சொன்னது…

//நீளும் இரா
கிலேசக்கிறுகிறுப்பில்//

ஹல்லோ...ப்ளீஸ் ஸ்டாப் இட்...நாக்கு சுளுக்கிருச்சி!!

நேசமித்ரன் சொன்னது…

தலைவரே ...:)