30 நவ., 2011

அன்பின் இலையுதிர்க்காலம்...

உன் துரோகங்களை மன்னிக்க முடியாதபடி 
உன் அன்பையும் நிராகரிக்க முடியாதபடி 
கடந்து போகின்றது காலம் 
உன் துரோகங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம் 
உன் அன்பு உன்னை மன்னிக்கும்படியும்
உன் அன்பு நினைவுக்கு வரும்போதெல்லாம் 
உன் துரோகங்கள் உன்னை நிராகரிக்கும்படியும் 
அந்தந்த தருணங்களில் 
உன்னை நேசித்தும் 
நிராகரித்தும் 
கடந்து போகின்றது காலம் 
நம் இருவரில் 
நீதான் முதலில் அன்பையும் 
நீதான் முதலில் துரோகத்தையும் வழங்கினாய் 
முதலில் அன்பாய் இருந்த நான் 
துரோகங்களின் பின்னர் உன்னை விலக்கி வைத்தாலும் 
நம் நண்பர்களிடம் 
என்னைபற்றி நீ பெருமையாக சொல்லும்போது 
பெருமிதமாகவும் 
தப்பாக குற்றம் சுமத்தியதை அறிந்து 
அவநம்பிக்கைக்ளுடனும்
கடந்து போகிறது காலம் 
உன் வெற்றியின் எக்காளச் சிரிப்பில் 
எரிந்து போனது ஒரு காதல் 
இப்போதும் 
என்னைக் கடந்து செல்லும் 
உன் மனைவியின் வறண்ட புன்னகையில் 
கடந்து போகிறது 
நம் அன்பும் 
உன் துரோகங்களும் 
எங்கள் காதலும்...

6 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

மண்ணிகும்படியும்

மாற்றிவிடுங்க செந்தில்.

Unknown சொன்னது…

//மண்ணிகும்படியும்//

நன்றி அண்ணே ! மாற்றிவிட்டேன் !!

பெயரில்லா சொன்னது…

ஒரு காதல் கதையை சொல்லியிருக்கு கவிதை..

Unknown சொன்னது…

nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

//இப்போதும்
என்னைக் கடந்து செல்லும்
உன் மனைவியின் வறண்ட புன்னகையில்
கடந்து போகிறது//


இந்த வரிகள் இந்த கவிதை காதலர்களுக்கானதா/நண்பர்களுக்கானதா என்று சந்தேகம் வருகிறது.

பெயரில்லா சொன்னது…

அண்ணே..எங்கே செல்லும் இந்தப்பாதை.