10 டிச., 2011

இருளர்களின் நான்கு பெண்மக்கள்...


பாம்புகள் விஷமானவை 
நாங்கள் 
அதனை மிகக்கவனமாய் கையாளுவோம் 
கொடியதாக இருந்தபோதும் 
அவை தீண்டினால் 
பாதுகாத்துக்கொள்ளும் அறிவும்,திறனும் 
எங்களிடம் நிரம்ப உண்டு..

மனிதர்களை நாங்கள் நம்புவோம் 
பாம்புகளைப் போல் அல்லாமல் 
மனிதர்கள் அறிவானவர்கள் 
படித்தவர்கள் 
எங்களுக்கு வாழ்வளிப்பவர்கள் 
என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது..

அவர்களும் மனிதர்கள்தான் 
காக்கி உடை அணிந்த 
மனிதர்களின் காவலர்கள் அவர்கள்
எங்கள் பெண்கள் அப்பாவிகள் 
காவலர்களின் 
அம்மா 
மனைவி 
சகோதரி
மகளைப்போலத்தான் 
எங்கள் பெண்களும் 
ஆனாலும் அப்பாவிகள்..

அவர்கள் 
உங்களை நம்பி வந்தார்கள் 
காவலர்கள் நீங்கள் 
கேவலமாக நடந்தீர்கள் 
மேல்தட்டு மக்கள் என்றால் 
முகம் மறைக்கும் ஊடகங்கள் 
எங்கள் பெண்களை 
அப்படியே காட்டினர்..

நாங்களும் உங்களைப்போலத்தான் 
எங்களுக்கும் 
மானமும் 
சுயகவுரவமும் நிறைய உண்டு
வெறும் ஐந்து லட்சத்துக்கு
விலைபோனதாக சொல்லும் 
உங்கள் அறிவிப்பில் 
எங்களுக்கான நீதி 
கரன்சிகளால் மறுக்கப்படுகிறது
காவலர்களுக்கும் 
மனைவி உண்டு 
அவர்களை ஐந்து லட்சத்துக்கு
அனுப்புவார்களா?..

நாங்கள் விலங்குகளை புரிந்துகொண்ட அளவு 
இன்னும் 
மனிதர்களை புரியாது வாழ்கிறோம்..

உங்கள் விசாரணைக் குழுமம் 
எங்கள் பெண்களின் மானத்தை 
மீட்டுத்தரப் போவதில்லை 
நீங்கள் நாகரீகமானவர்கள் 
நாங்கள் பாம்பாட்டிகள்..

பாம்புகள் ஒருபோதும் எங்களை
ஏமாற்றியதே இல்லை 
மனிதர்கள் நீங்கள்தான் 
எப்போதும் எங்களை 
ஏறி மிதிக்கிறீர்கள்
ஆனால் 
என்றாவது ஒருநாள் 
நாங்கள் பாம்பாக மாறினால் 
கேவலம் மனிதர்கள்தானே நீங்கள் 
அப்போது 
நீங்கள் ஓடித்தான் ஆகவேண்டும்..


6 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

வேதனையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

SURYAJEEVA சொன்னது…

புரட்சி ஒன்றே வாச்சாத்தி போன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டப் போகிறது

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஒடுக்கடும் மக்களின் உள்ள குழுறர்..

கோவமான கவிதையில்

சத்ரியன் சொன்னது…

//காவலர்களுக்கும்
மனைவி உண்டு
அவர்களை ஐந்து லட்சத்துக்கு
அனுப்புவார்களா?..//

இந்தக் கருத்தை எழுத நினைத்து , பி சிந்தித்து பார்த்து அவ்வெண்ணத்தை கை விட்டு விட்டேன்.

காரணம்,

இந்த காவல் நாதாரிகள் செய்த இழிசெயலுக்கு அவர்களின் மனைவியரோ, மகள்களோ, சகோதரிகளோ ... என்ன செய்வார்கள்?

அந்த இருளர் குல தெய்வங்கள் அஞ்சு லட்ச பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டு

குற்றவாளிகளின் “குஞ்சுமணியை” கொய்து விடச் சொல்லலாம்.

Unknown சொன்னது…

மைனர் குஞ்சுவை சுட்டுவிட்டேன்
என்னது?
அதான் தண்டனை!!!!!!!

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

விடிவு இல்லை