31 டிச., 2011

ஒரு துயரப்பாடலின் இறுதி வரிகள்...


வருடத்தின் 
இறுதி நாள் புனிதமானது 
அது 
மறு நாளைய துவக்கமாக இருந்தாலும் 
புதிய 
வருடத்தின் மகிழ்ச்சியை சுமந்து வருகிறது 
எல்லோரும் 
இந்த வருடத்தைவிடவும் 
வரும் வருடம் 
இன்னும் சிறப்பாக வாழ 
ஆசைப்படுகிறோம்
அவ்வண்ணமே 
அனைவரையும் வாழ்த்தவும் செய்கிறோம் 
மதுச்சாலைகளில் 
ஆலயங்களில் 
சபதங்களும், இலட்சியங்களும் 
நிரம்பி வழியும் 
வருடத்தின் இறுதி மணித்துளிகள் 
இன்னும் சில மணிகளில் 
நம் அருகே வந்து 
நம்மை கடந்து போகக்கூடும் 
எல்லா வருடங்களின் 
இறுதி நாட்களில் செய்வதைப்போலவே 
சபதங்கள் 
இலட்சியங்கள் 
மனதின் டையரில் எழுதப்பட்டு 
படிக்கப்படாது தூசிபடிந்துவிடுகிறது 
எனக்கும் உண்டு 
ஆசைகளும், இன்னபிறவும்
முதல் நாளுக்கு முதல் நாள் 
முன்பே
இலவச குறுஞ்செய்திகளை அனுப்பி 
வாழ்த்துகளை வாரி வழங்கும் 
வள்ளல்களால்
கூவிக்கொண்டிருக்கும் 
என் செல்பேசி 
எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது
மீதமிருக்கும் நண்பர்களை 
ஆனாலும் 
ஒரு துயரப்படலின் இறுதி வரிகளைப்போல 
விடிந்துகொண்டுதான் இருக்கிறது 
யாவருக்கும் பொதுவாக
ஒவ்வொரு இரவும்..

10 கருத்துகள்:

Paleo God சொன்னது…

2010 விருதுகளுக்காக இன்னும் கும்பிட்டுக்கொண்டு இருக்கும் உங்களுக்கு 2012 புத்தாண்டு வாழ்த்துகள்! :))

SURYAJEEVA சொன்னது…

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

சசிகலா சொன்னது…

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் செந்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் !

பெயரில்லா சொன்னது…

கவுண்டர்: "இடுக்கண் வருங்கால் நகுக"ன்னு அவ்வையார் சொல்லி இருக்காங்க

செந்தில்: "எனக்கு கடுக்கண பத்திதான் தெரியும்".

கவுண்டர்: "அதத்தான் நெறைய பேரு காதுல இருந்து கழட்டிட்டு போயிருக்கியே.."

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சபாஷ்....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ஜோதிஜி சொன்னது…

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பட்டுக்கோட்டையான் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே....


அன்புடன் ப.பழனிவேலன்