12 ஜன., 2012

அவர்களுக்கு வீடென்று ஒன்றும் இல்லை...


மழைதான் தொல்லை
வெயில்கூட பரவாயில்லை 
குளிர் மோசம்
குலம் பெருக்கித்தொலைக்கிறது
திறந்தவெளியில் புணர்கையில்
உச்சம் 
கூச்சம் கலைத்து 
வழிச்செல்வோரை 
மகிழ்வூட்டும்
தடம் மாறிய 
லாரிகள்
உடல் மீதேறி
பரதேசம் அனுப்பும்
பிள்ளைகள்
பள்ளி அறியாது
ரேசன் அட்டை 
மின்சாரம்
குடிநீர் 
எந்த வசதியும் தேவைப்படாது
போலீஸ் அடிக்கும்
போக்கிரிகள்
எம் பெண்டுகளை
தூக்கிச்செல்வான்
அல்லா
ஜீசஸ்
கிருஷ்னா
சிவன்
இலவச உணவுக்கு மட்டுமே
அன்றாடம் வேலை
அளவற்ற குடி 
தெருவோர அடுப்புச் சாப்பாடு
நவ நாகரீக மாந்தர் மத்தியில்
விலங்கு வாழ்க்கை
எப்போதும்
எங்கள் முகவரி
C/O : பிளாட்ஃபார்ம்..

2 கருத்துகள்:

வில்லவன் கோதை சொன்னது…

அற்புதமான எளிய நடை..வாழ்த்துக்கள் !
பாண்டியன்ஜி

ஹேமா சொன்னது…

அவர்களுக்காகப் பாவப்படுறமாதிரியும் இருக்கு.கோவப்படுறமாதிரியும் இருக்கு!