21 ஜன., 2012

நானும், நள்ளிரவு பிசாசுகளும்...


நள்ளிரவு தாண்டிய பொழுதுகளில்
வழக்கமாக வழிமறித்து 
பணம் வாங்கும் 
பிசாசுகள் இரண்டு 
நேற்று நள்ளிரவிலும் கை காட்டியது 
பைக்கை ஓரம்கட்டி
இன்று என்னிடம் பணம் இல்லை
மொத்தப் பணமும் குடித்தாகிவிட்டது
மேலும் டிப்ஸ் தராமல் கடன் சொல்லிவிட்டுத்தான் 
வந்தேன் என்றேன்
எனது பர்சை வாங்கி நோண்டிய பிசாசொன்று
சக பிசாசிடம் பணம் இல்லாததை உறுதி செய்தது
இன்றைக்குப் பார்த்து வருமானமே இல்லை என்றும்
குறைந்த வருவாயை மேலதிகாரப் பிசாசுகளிடம்
கொண்டு சென்றால் அவைகள் தன் பரம்பரையை திட்டும் எனவும்
ஒரு பிசாசு மிகுந்த வருத்தத்துடன் சொன்னது
இன்னொரு பிசாசோ
இனி நான் வீட்டுக்குப் போகும்போது
குறைந்த பட்சம் ஐம்பது ரூபாயாவது 
வைத்திருக்க வேண்டும் என 
வேண்டுகோள் வைத்தது
இன்னொரு முறை 
இவ்வழியே வரும்போது சேர்த்துத் தருகிறேன் என 
அவைகளிடமே ரூ.50 கடன் வாங்கி 
வீடு வந்தேன்..

8 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

உங்கள் சாமார்த்தியம் அருமை

பட்டுக்கோட்டையான் சொன்னது…

அண்ணே முன்டிந்தவரையில் தண்ணி அடித்துவிட்டு வன்டியோட்டுவதை தவிர்கபாருங்கள் .

ஹேமா சொன்னது…

என்ன சொல்ல உங்களை !

Philosophy Prabhakaran சொன்னது…

பயங்கர மொக்கை... எனக்கு கோவமே வரலை...

Rathnavel Natarajan சொன்னது…

குடி குடியைக் கெடுக்கும்.

சிராஜ் சொன்னது…

/* பயங்கர மொக்கை... எனக்கு கோவமே வரலை... */

மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா ???? பயபுள்ள பொழச்சு போகட்டும், விட்ருங்க பிரபா...

சகோ KRP ,

பிரின்ஸ் அண்ணனும் நீங்களும் ராசி ஆகிட்டீங்கள்ள????

சிராஜ் சொன்னது…

குடி குடியை கெடுக்கும்....

குடிப்பது தவறு என்று தெரிந்தும், பகுத்தறிவாளர்கள் அதைச் செய்வது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

அக்கப்போரு சொன்னது…

பரவால்லையே உங்க ஏரியா பிசாசுங்க நெம்ப நல்லதுங்க போல. எங்க எரியாளையும் இருக்குதுங்களே...