5 மே, 2012

நீ கடந்துபோன என் வாழ்வின் மிச்சம்...


அறியாமல்
தேனியின் கூட்டுக்குள்
கைவிடுவது மாதிரி 
என்னைக் 
காதலில் தள்ளியது
உன் புன்னகை
கொட்டும் வரை பயம்
என்றாலும் சுகமான 
வலி
வலி
வலி
காதல் வலி
வலியது விதி என்பதால்
வீட்டுக்கு தெரிய வர
அவர்கள்
ஆசைப்படும் வரைக்கும்
அல்லது 
கோபம் தீரும் வரைக்கும்
அடித்து தீர்த்தார்கள்
நீ மன்னிப்பு கோரினாய்
ஆனாலும் 
காதலை மறுத்தாய்
உனக்கு தயாராக இருந்தான்
மாமன் மகன்
நான் அப்படியே
அதே காதலுடன்
வருடங்கள் விரைந்தோட
ஆல் போல் தழைத்தது
உன் குடும்பம்
நான்
ஒரு நைந்த துனியைப்போல்
கோவில் வாசலில் கிடக்க 
கடந்து போன நீ
கருனையோடு வீசிப்போன
ஒற்றை ரூபாய்
நெற்றியில் இருந்தது 
மறுநாள்..

10 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கோவில் வாசலில் கிடக்க
கடந்து போன நீ
கருனையோடு வீசிப்போன
ஒற்றை ரூபாய்
நெற்றியில் இருந்தது
மறுநாள்..////

காதலின் ஆத்மா சாந்தியடையட்டும்..

ஆமென்

MARI The Great சொன்னது…

பாவத்தின் சம்பளம் மரணம் ..., இல்லையில்லை காதலின் மிச்சம் மரணம் ..!

Unknown சொன்னது…

ஒரு நைந்த துனியைப்போல்
கோவில் வாசலில் கிடக்க
கடந்து போன நீ
கருனையோடு வீசிப்போன
ஒற்றை ரூபாய்
நெற்றியில் இருந்தது
மறுநாள்..
//////////

அடப்பாவமே!

Philosophy Prabhakaran சொன்னது…

கவிதைக்கும் தென்னங்கீற்றுக்கும் என்ன சம்பந்தம்ன்னு சொல்லிடுங்கண்ணே...

ஹேமா சொன்னது…

காதலின் வலியை இதைவிட எப்படிச் சொல்ல முடியும் !

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...
அவளின் கை பட்ட ஒத்த ரூபா உங்க கூட வந்ததே... அது போதுமே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கவிதை !

vasan சொன்னது…

இது வாழ்வைத் தோற்ற‌வ‌ன் புல‌ம்ப‌ல்,
உங்க‌ளின் சல‌ம்ப‌ல் துள்ள‌ல் இல்லை இதில்.
அந்த‌ ஒத்த‌ ரூபாயை சுண்டிப் பிடித்து
தொடங்கு‌ங்க‌ள் புதுக் க‌விதையை, ம‌க்கா.

உணவு உலகம் சொன்னது…

காதல் வலி, கவிதையில் எதிரொலிக்கிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

காதலுக்காக தாடி வைக்கும் ஆண்களைப் போல் காதலுக்காக மௌனம் காக்கும் பெண் ஊமைகளும் இருக்கவே செய்கிறார்கள்.

பேசப்படுவதென்னவோ தாடி மட்டுமே:)