29 மே, 2012

பெட்ரோல் விலங்குகள்...


நகரத்தின் சாலைகளில் 
வரிசை கட்டுகிறோம்
தேர்ந்த எறும்புகளை 
படிக்காத ஞானம்
வரிசை பிசகி 
அவசரத்தை காரனமாய் கற்பிக்க 
நிரம்பி வழியா
மினரல் பாட்டில்கள்
தண்ணீருக்கானது மட்டுமல்ல
நாம் ஓட்டு போட்டோம்
அவர்கள் ஆள்கிறார்கள்
அல்லக்கை அதிகாரிகள்
சதுர, செவ்வக பெட்டிகளின் வழியே
இயலாமை நடிப்பை 
திறம்பட நடிக்க
மாநில முதலாளி
மத்திய முதலாளியை கைகாட்ட
மதியத்தின்
தார் சாலைகளாய் கொதிக்கும்
மனங்கள்
தொடர் சாபங்களை வீச
தண்ணீர் போச்சு
பால் 
பாக்கெட்டாச்சு..
மின்சாரம் காலி
விவசாயம் செத்துப்போச்சு
இப்படித்தான் 
இனிமேன்னா
தமிழனுக்கு,
IPL பாத்தா போதும்
தலைவனை
தலைவியை
கட் அவுட்டில் உயர்த்தி வை
மனுசங்களாடா நீங்க
விலங்கினும் கீழாய் வைத்தீர்
வெந்ததை தின்னு
விதியால் சாகும்
சீரியல் பஞ்சாயத்து
இல்லத்து சிங்காரிகள்
டாஸ்மாக் இருக்க 
ஒனக்கென்ன கவலை
குவட்டர போடு 
குப்புறடிச்சு படு
நகரத்து சீமான்கள்
நாங்கள்டா...
நாங்கள்டா...
பேய்கள் அரசாண்டால்
பினந்தின்னும் சாத்திரங்கள்...

6 கருத்துகள்:

யுவகிருஷ்ணா சொன்னது…

சாரி பாஸ். மொக்கையான கவிதை. அப்பப்போ நல்லாதானே எழுதறீங்க. எதுக்கு இந்த திடீர் விஷப்பரிட்சை எல்லாம்? :-)

யுவகிருஷ்ணா சொன்னது…

சாரி பாஸ். மொக்கையான கவிதை. அப்பப்போ நல்லாதானே எழுதறீங்க. எதுக்கு இந்த திடீர் விஷப்பரிட்சை எல்லாம்? :-)

MARI The Great சொன்னது…

போட்டு தாக்குங்க ..,

sellvaraj.blogspot.com சொன்னது…

கவிதைய விட அதுக்கு போட்டிருக்குற போட்டோ நல்ல செய்தி சொல்லுது சார்,

முன்பெல்லாம் நூற்றில் ஒரு பைக் தெரியும், இப்போது ஆயிரத்தில் ஒரு சைக்கிள் கூட இல்லையே பிறகு எப்படி பெட்ரோல் விலை ஏறாமல் இறங்கும்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதைக்கான படம் அருமை...

உங்கள் ஆதங்கம் கவிதையில் தெரிகிறது...

பார்ரா... அண்ணன் வரிசையா கோவத்தையெல்லாம் வரியாக்கி கவிதை ஆக்கிப்புட்டாரு.

ஹேமா சொன்னது…

இப்பிடி எழுதியாச்சும் கோவத்தைக் கட்டுப்படுத்துங்கோ செந்தில் !