7 மார்., 2013

நாட்டு நடப்பு 07.03.2013...

Photo : KRP Senthil
சமீப காலமாக வெறுமனே மொபைலில் சகலரின் கல்வெட்டுகளையும்(பதிவுகள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஸ்டேட்டஸ்) படித்து மகிழ்ந்து வெறுப்பாகி இன்னும் பலப்பல அவஸ்தைகளால் நொந்து உப்புமாவாகி எதுக்கு எழுதனும் என என் நெற்றிக்கு நேராக சுட்டுவிரலை(என்னுடையதுதான்) கேள்வி கேட்டபோது, நாமலும் அதே உப்புமாவைத்தானே கிண்டப்போகிறோம் என சகல ஒலகப் படங்களையும் (நெஜமாகவே) பார்த்து கேபிளுடன் தமிழ் சினிமாவை ஏன் குப்பைகளாகவே தருகிறார்கள்? எனக்கேட்டு அவரின் எக்கச்சக்க செல்பேசும் நண்பர்களுடனான அலையாடல்களின் ஊடே அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மணி ஒன்னுக்குப் போயிருக்கும் (நள்ளிரவு). அதன்பின் வீடு வந்து சேர்ந்து மறுபடி ஒலக சினிமா, ஒலக அரசியல், உள்ளூர் மற்றும் ஒலக யாவரம் என கலந்து கட்டி முடிக்க அதிகாலை ஐந்தரைக்கு படுக்கைக்கு சென்றால் மறுபடி காலை பத்தரை மணி முதல் எனது லவ்கீக வாழ்க்கை துவங்கும். அப்புறம் ஏண்டா திரும்ப எழுத வந்துருக்கே? என்று முனகவேண்டாம். இதுவரைக்கும் ஏன் எழுதாம இருக்கீங்கன்னு? ஒரு பய,புள்ளை கூட மெயிலோ, மடலோ, அட்லீஸ்ட் குறுஞ்செய்தியோ அனுப்பாத கடுப்பில் மீண்டும் அதே உப்புமா!!
.................................
சமீபமாக தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அவர்தம் அடிபொடிகளும் ஈழம் வாங்குவதற்காக சோறு, தண்ணி (டாஸ்மாக் தண்ணிதான்) இல்லாமல் நடுவீதிக்கு வந்து போராடும் தங்களை கைது செய்யாமலிருக்கும் அரசாங்கத்தை நோக்கி அறைகூவல் விடுக்கிறீர்கள். அதைக்கண்டு தமிழக மக்கள் அனைவரும் அதானே, போன தடவ நீங்க ஆட்சில இருந்தபோது ஈழம் என்கிற வார்த்தையை கேட்டாலே ஜாமீனில் வரமுடியாத அளவுக்கு தேசவிரோத குற்றங்களில் கைது செய்து உள்ளே அடைத்தீர்கள். அந்த வள்ளல்தன்மை இப்போதைய ஜெயலலிதா ஆட்சிக்கு இல்லாமல் போய்விட்டதை அறிந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என, பகல் கனவு கானும் டெ’ஷோ’ அப்பாடக்கர்களே கரண்டே கொடுக்காம ஜெயலலிதா எங்களை படுத்தினாலும்  ஒங்க நாடகத்தை நம்பி ஓட்டு மட்டும் போடவே மாட்டோம். இணையத்தில் புழங்கும் சில புளியங்கொட்டைகள் நமத்துபோன பட்டாசுகளை கொளுத்தி எங்களை நகைச்சுவை வெள்ளத்தில் நீந்த வைக்கிறார்கள். நீங்கள்லாம் மொதல்ல நாடகக்கொட்டகையில் இருந்து வெளில வாங்க தம்பிகளா!!
.....................................................
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக ராமதாசும், சமீபமாக வைகோ, தமிழருவி மணியன், இப்ப பெரியவர் சசி பெருமாள் என பலரும் போராட ஆட்சியில் இருக்கும் ஜெயா அரசோ எதனையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போதே கருணாநிதி மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அறிக்கை விடுகிறார். மதுவிலக்கு ஏன் வேண்டும்? அரசு தயங்கும் காரனம் என்ன? பின்னால் இயங்குவது யார்? என புதுவலசை எனும் வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியிருக்கின்றனர். நேரமும், பொறுமையும், ஆர்வமும் இருப்பவர்கள் இணைப்பில் சென்று படித்துக்கொள்ளுங்கள் : மகாத்மாவின் கனவான மதுவிலக்கு நிறைவேறுமா?  ஆனாலும் என் போன்ற சாரு போன்ற மொத்த குடிமகன்களின் கோரிக்கை தரமான மதுவை கொடுங்கள் என்பதுதான். தமிழகத்தில் விற்கப்படும் எந்த சரக்கும் தரமே இல்லை. அருகில் இருக்கும் பாண்டியில், கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் ஒரிஜினல் சரக்கு அடித்து பழகி தமிழகத்தில் சரக்கு அடிப்பதை நிறுத்திவிட்டேன். இதுல டாஸ்மாக்ல வேலை பார்க்கும் பிச்சைக்காரர்கள் தனக்கான பிச்சைகளை எங்கள் அனுமதியை கேட்காமலே எடுத்துக்கொள்கிறார்கள். ஏன்றா? இப்படியென கேபிள் போல ஆட்கள் கேட்டால் அதிகாரி பிச்சைக்காரர்கள் வரை பங்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என புலம்புகிறார்கள்.  மான்புமிகு தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அம்மா என ஏகப்பட்ட பட்டங்களை தாங்கியிருக்கும் ஜெயலலிதா இதற்காக ஆவன செய்யவேணும் என குடிமகன்கள் சார்பாக விண்ணப்பம் வைக்கிறேன் ( சரியாத்தான் சொல்லிருக்கேனா).
.............................
சென்னையின் மலிவுவிலை மாநகராட்சி உணவகத்தில் சமீபத்தில் நானும், சிவாவும் சென்று சாப்பிட்டோம். அதனை சுவையாக சிவாவே எழுதியிருக்கிறார் : அம்மா ஸ்பெஷல் மீல்ஸ்.
...........................................
லவ்கீக வாழ்வின் சுமை காரனமாக சொந்த ஊர் பக்கம் போயிடலானு யோசிச்சிங். பின்ன என்னங்க பெரிய பெரிய (ரெண்டு பெரியதான்) ப்ராஜக்டுதான் செய்வேன்னு அடம்புடிச்சி மூன்றரை வருஷம் ஓடிடுச்சு. கடன்கொடுத்த வள்ளல்கள் எப்ப கழுத்துல துண்டு போடுவாங்கன்னு தெரியல. இதுல என்கிட்ட வாங்கின மொத்த கோடீசுவரர்களும் நான் திருப்பிக்கேட்டா மட்டும் ஒடம்புக்கு முடியாம குடும்பத்தோட ஆஸ்பிடலுக்கு போனதா சொல்றாங்க. சமீபத்துல வெறுப்புல இருந்த என்கிட்ட தனவந்தர் ஒருத்தர் ஒங்களப்பத்தி கேள்விபட்டிருக்கேன் நல்ல ப்ராஜக்டா ஒன்னு சொல்லுங்கன்னு  கேட்டார். கொட்டாங்கச்சில இருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கிற ப்ராக்ஜக்ட் ஒன்னு இருக்குன்னு சொன்னேன்.  நெஜமாவே சாத்தியங்களான்னு ரொம்ப அப்பாவியா கேட்டார். பாவம் ஈமு கோழில முதலீடு போட்டவரா இருக்கும்போல!!
..........................................
கடேசியா ஒரு கவித:

விதிக்கப்பட்ட வாழ்வை,
வாழ்வதாக
சொல்லிக் கொண்டிருக்கிறோம்
சபிக்கப்பட்டிருந்தாலும்..

2 கருத்துகள்:

butterfly Surya சொன்னது…

Welcome Back..

கலக்கல்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

திமுக நடத்தும் ஈழநாடகத்தை விளக்கியமைக்கு நன்றி! சுவையான பகிர்வு! நன்றி!