6 மார்., 2013

நல்லதோர் வீணை செய்தே...

Photo : KRP Senthil
யானே கள்வன்
யானே அரசன்
ஒரு பரம்பரையின்
கடைசி முகம்
என்னுடையதாக இருக்கட்டும்
உணர்ச்சிகளை
உடைத்துப்போடுகிற
சுயநல
பிசாசும் நானே
மீதமிருக்கும் மணித்துளிகள்
கடவுள் வேஷம் கலைத்து
என்னை
சாத்தனாக மாற்றுகிறது
ஒரு சுடெரென
மலர்ந்த அறிவு
கொள்ளிவாய் பிசாசின்
கண்களென தகிக்க
முடிவான இடம் தேடி
முடிவற்ற
கேள்விகளை விட்டுச்செல்கிறேன்
நம்பிக்கை துரோகங்களால்
பழக்கப்பட்ட நாய்க்குட்டியாய்
நான் இருந்தேன்
கைவசம் அவைதான் மிச்சமிருப்பதால்
உங்களிடத்தும்
அதனையே கொடுத்துச்செல்கிறேன்
நம்பிக்கைகளை வர்ணங்களாய்
மாற்றும் வித்தை
கைவரப்பெறாதவனுக்கு
எப்போதும் நிரம்பாது
வாழ்வு..


2 கருத்துகள்:

தினேஷ்குமார் சொன்னது…

நம்பிக்கைகளை வர்ணங்களாய்
மாற்றும் வித்தை
கைவரப்பெறாதவனுக்கு
எப்போதும் நிரம்பாது
வாழ்வு..///

உண்மை.......

Unknown சொன்னது…

தன்முனைப்பு கவிதை . நன்றி