31 டிச., 2011

ஒரு துயரப்பாடலின் இறுதி வரிகள்...


வருடத்தின் 
இறுதி நாள் புனிதமானது 
அது 
மறு நாளைய துவக்கமாக இருந்தாலும் 
புதிய 
வருடத்தின் மகிழ்ச்சியை சுமந்து வருகிறது 
எல்லோரும் 
இந்த வருடத்தைவிடவும் 
வரும் வருடம் 
இன்னும் சிறப்பாக வாழ 
ஆசைப்படுகிறோம்
அவ்வண்ணமே 
அனைவரையும் வாழ்த்தவும் செய்கிறோம் 
மதுச்சாலைகளில் 
ஆலயங்களில் 
சபதங்களும், இலட்சியங்களும் 
நிரம்பி வழியும் 
வருடத்தின் இறுதி மணித்துளிகள் 
இன்னும் சில மணிகளில் 
நம் அருகே வந்து 
நம்மை கடந்து போகக்கூடும் 
எல்லா வருடங்களின் 
இறுதி நாட்களில் செய்வதைப்போலவே 
சபதங்கள் 
இலட்சியங்கள் 
மனதின் டையரில் எழுதப்பட்டு 
படிக்கப்படாது தூசிபடிந்துவிடுகிறது 
எனக்கும் உண்டு 
ஆசைகளும், இன்னபிறவும்
முதல் நாளுக்கு முதல் நாள் 
முன்பே
இலவச குறுஞ்செய்திகளை அனுப்பி 
வாழ்த்துகளை வாரி வழங்கும் 
வள்ளல்களால்
கூவிக்கொண்டிருக்கும் 
என் செல்பேசி 
எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது
மீதமிருக்கும் நண்பர்களை 
ஆனாலும் 
ஒரு துயரப்படலின் இறுதி வரிகளைப்போல 
விடிந்துகொண்டுதான் இருக்கிறது 
யாவருக்கும் பொதுவாக
ஒவ்வொரு இரவும்..

27 டிச., 2011

நீ...


எப்போதும் 
எனக்கு என்ன பிடிக்கும் 
பிடிக்காது என்பது அனைத்தையும் 
பார்த்து பார்த்து செய்பவள் நீ 
தினமும் 
நள்ளிரவு தாண்டி போதையில் 
கதவு தட்டும் என் இம்சையை 
எனது வக்கற்றத்தனத்தை 
என் ரசனையை 
வீட்டில் இருக்கும்போதெல்லாம் 
உன்னுடன் 
ஒரு வார்த்தைகூட பேசாமல் 
தோழிகளிடம் செல்போனில் 
மணிக்கணக்கில் அரட்டை அடிக்கும் 
என் அயோக்கியத்தனத்தை 
இன்னும் ஏராளமான என் இம்சைகளை 
பொறுத்துக்கொண்டு 
இப்போது நம் 
பிள்ளைகளையும் சேர்த்து 
எங்கள் மூவரையும் சுற்றி 
இயங்குகிற உன் உலகில் 
உனக்கு என்ன பிடிக்கும் என 
உனது முப்பத்தி இரண்டாவது 
பிறந்தநாளின் முதல்நாள் அன்று 
முதன்முறையாக கேட்டபோது 
உங்களைத்தான் 
அப்புறம் 
இப்போது நம் குழந்தைகளையும் சேர்த்து 
என்றாய் சிரித்துக்கொண்டே..

26 டிச., 2011

பேரறிவும், பெருந்துயரும்...


அந்தக் குற்றப்பத்திரிக்கை
அவர்கள் விருப்பம்போல் புனையப்பட்டிருந்தன 
நீ மறுக்க மறுக்க 
உன் விரல் ரேகை பதியப்பட்டு 
தயாரிக்கப்படிருந்த அந்த ஆவணம் 
நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது..

நீ குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிடினும் 
நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டு
ஒருவேளை 
உன்னை தூக்கிலிட
ஆணை பிறப்பிக்கப்படலாம்
உன் மரணத்திற்கான தேதிகள்
பலர் கை மாறலாம் 
நிராகரிக்கவோ 
ஆதரிக்கவோ 
அவர்களுக்கு பல காரணங்கள் தேவையாக இருக்கிறது 
ஒரு பழி வாங்கலாக 
ஒரு அரசியல் ஆதாயமாக 
சந்தர்ப்பங்கள் உனக்கு சாதகமாக 
அல்லது 
எதிராக முடிவெடுக்க வைக்கலாம்
அவர்களுக்கு தேவை 
அவர்களின் நலனே 
மேலும் 
அவர்களின் வாரிசுகள் நலனும் அதில் அடங்குகிறது..
ஒரு உண்ணாவிரதமோ 
மனிதச்சங்கிலியோ 
பெருந்திரள் ஆர்ப்பாட்டமோ 
உன் வாழ்நாளை நீட்டிக்க உதவலாம் 
நீ 
உன் சாவை எதிர்பார்த்துக் காத்திருப்பாய்
மரண நீட்டித்தல் என்பது 
மரணத்தை விடவும் கொடுமையான தண்டனை என்பதை
உன்னைத் தவிர யாருக்கும் புரியாது
அவர்கள் உன் மரணத்திற்கான 
தற்காலிக இடைவெளிக் கடவுள்களாக தங்களை கருதுபவர்கள்..

உன் தண்டனையை நிறைவேற்றுபவர்களுக்கு
உன் வாழ்வில் எந்த அக்கறையும் கிடையாது 
தன்னைக் கடிக்காத போதிலும் ஒரு எறும்பை 
நசுக்கிவிடுகிற மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள் 
எனவே 
உன்னை தூக்கிலிட கட்டளையிடுமாறு கூச்சல் போடுவார்கள்
அவர்கள் தலைவனை விடவும் 
வாழும் தலைவியின் மனம் குளிர்ந்தால் போதும் 
மனித இனத்தின் நீங்கா களங்கம் அவர்கள் 
பக்கத்தில் 
கூப்பிடும் தூரத்தில் அரங்கேறிய 
கற்பழிப்புகளை, 
கொலைகளை நியாயப்படுத்தியவர்கள் அவர்கள்..

இங்கு நியாயம் என்பதே வரையறைக்கு உட்பட்டதுதான் 
யார் வரையறை செய்யும் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதே முக்கியம் 
எனவே 
நீதி கேட்டு நெடும்பயணம் செய்து கலைத்துப்போவாள் உன் தாய் 
உன் தந்தை, சகோதரி, உறவினர் 
முகம் அறிந்த, அறியாத உன் நியாயம் உணர்ந்தோர் 
வெகு சொற்பமே 
அவர்களின் அழுகுரல் 
தொலைக்காட்சி நாடகங்களால் மறைக்கப்படும் 
இங்கு ஊடகங்கள் வியாபாரத்துக்கு மட்டுமே 
அவைகள்
இன்று உன்னையும்
நாளை வெறொன்றையும் வைத்து பிழைப்பு நடத்தும் 
முத்தமிழ் அறிஞரே மானாட, மயிலாட நடத்திப்பிழைக்கும்போது
ஊடகங்கள் உனக்கு துனைவராது..

சுமரியாதை என்பது எழுதுவதற்கு மட்டுமே 
குருடாகவும், செவிடாகவும் நடிப்பவர்கள் ஆளும் தேசத்தில் 
நாமெல்லாம் அடிமைகளே..

எனவே சகோதரனே 
இனி நீதிக்காக போராடாதே 
எல்லோரும் அம்மணமாக ஓடும்போது 
உனக்கேன் கோவணம் 
நிர்வாணம் பழகிக்கொள் 
இருக்கவே இருக்கிறது அருமருந்தாய் டாஸ்மாக் 
அரசாங்கமே நடத்துகிறது 
குடித்து, களித்து வாழ்வை நகர்த்து
கொஞ்சமாக கோஷமிடவும் கற்றுக்கொள் 
தி.மு.க வோ, அ.தி.மு.க வோ 
காங்கிரசோ, பி.ஜே.பி யோ
அல்லது 
ஏதாவது ஒரு லெட்டர்பேடு கட்சியிலாவது 
உறுப்பினராக மாறு 
ஒருபோதும் கம்யூனிஸ்டாக மாறிவிடாதே
அது மனதிற்கும் உடம்புக்கும் ஆகவே ஆகாது..

தமிழ் கோசம் இனி ஒன்றுக்கும் உதவாது
சமயங்களில் 
உயிரும் 
மயிருக்கு சமமாகப் போகும்..

காயடிக்கப்பட்டு வாழ்வதைவிட 
சாவே மேலென நினைத்தால் 
எழு, புறப்படு, கைதாகு 
அதன்பின் 
இந்தக் கவிதையின் முதல்வரியில் இருந்து 
துவங்கும் உன் வரலாறு.. 

25 டிச., 2011

பயோடேட்டா - எம்.ஜி.ஆர்...


பெயர்                                  : எம்.ஜி.ஆர் அல்லது புரட்சித்தலைவர் 
இயற்பெயர்                        : மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் 
தலைவர்                            : முன்னால் அ.தி.மு.க
துணை தலைவர்              : முன்னால் தி.மு.க
மேலும் 
துணைத் தலைவர்கள்  : ரசிகர்கள் மட்டும் (ஜெ. ஜெ அல்ல)
வயது                                :  தொப்பி, கண்ணாடியால் மறைத்தது
தொழில்                         : நடிப்பது (சினிமாவில் மட்டும்)
பலம்                                 : இரட்டை இலை
பலவீனம்                          : எதுவுமில்லை 
நீண்ட கால சாதனைகள்  படுத்துக்கொண்டே ஜெயித்தது 
சமீபத்திய சாதனைகள்   : இன்றும் மக்களின் மனதில் இருப்பது 
நீண்ட கால எரிச்சல்         : அன்று கருணாநிதி இன்று ஜெ
சமீபத்திய எரிச்சல்          : வாரிசுகள் கோலோச்சும் அரசியல் அவலம்
மக்கள்                                : ஏழ்மையில் இருந்து மீளவேண்டியவர்கள்
சொத்து மதிப்பு                : மக்களின் மனதில் நிற்பவர் 

நண்பர்கள்                          : யாரையும் நம்பாத குணம் கொண்டவர் 
எதிரிகள்                            : காணாமல் அடிக்கப்பட்டுவிட்டனர், 
ஆசை                                : தமிழீழம் 
நிராசை                              : கருணாநிதியின் சுயநலம் 
பாராட்டுக்குரியது          : ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்தது 
பயம்                                 : தாய் மூகாம்பிகை 
கோபம்                             : சாட்டையை சுழற்றும் அளவுக்கு 

காணாமல் போனவை   : ராமாவரம் தோட்டம்
புதியவை                        :  இன்றும் அ.தி.மு.கவை வாழவைப்பது
கருத்து                             : கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை எழுதியவை 
டிஸ்கி                              : இன்றைக்கு கருப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னை 
                                               சொல்லிக்கொள்ளும் ஒருவர் குடித்துவிட்டு 
                                               பொதுமேடைகளில் உளறுவதை பார்க்கும்போது 
                                               எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதை
                                               தடைவிதிக்கலாம் போல..

24 டிச., 2011

பயோடேட்டா - தந்தை பெரியார் ...


பெயர்                                  : தந்தை பெரியார் 
இயற்பெயர்                        : ஈ.வெ.ராமசாமி 
தலைவர்                            : திராவிட மக்கள் அனைவருக்கும்
துணை தலைவர்              : ------------------
மேலும் 
துணைத் தலைவர்கள்  : இப்போது இருக்கும் திராவிட காக்கைகள் அல்ல 

வயது                                :  நாத்திகத்தின் வயது 
தொழில்                         : அறியாமையை நீக்கிய ஆசான் 
பலம்                                 : நேர்மையும், துணிவும் 
பலவீனம்                          : மக்களின் பலவீனம் 
நீண்ட கால சாதனைகள்  தமிழகத்தில் சாதி வேர்களை வெட்டியது 
                                                          சாகும்வரை பிரச்சாரம் 
சமீபத்திய சாதனைகள்   : வீரமணியை வாரிசாக்கி 
                                                        நாத்திகத்துக்கு குழிதோண்டியது 
நீண்ட கால எரிச்சல்         : தேர்தல் அரசியல்
சமீபத்திய எரிச்சல்          : வீரமணியின் மகன் அடுத்த தலைவர்
மக்கள்                                : தன்மானத்துடன் வாழவேண்டியவர்கள்
சொத்து மதிப்பு                : பெரியார் சிந்தனைகள் மதிப்பற்றவை 

நண்பர்கள்                          : காங்கிரஸ்காரனுங்க இல்லை 
எதிரிகள்                            : கருணாநிதி போன்ற அரசியல் நடிகர்கள், மற்றும் 
                                               பிராமணர்கள்  
ஆசை                                : சாதிகளை ஒழிக்க 
நிராசை                              : இவரை மட்டும்தான் இன்னும் நாயக்கர் சாதியின் 
                                                தலைவராக்காமல்  இருக்கும் மக்கள் 
பாராட்டுக்குரியது          : சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு 
பயம்                                 : அப்படின்னா?
கோபம்                             : முட்டாள் திராவிடர்களின் கடவுள் பக்தி 

காணாமல் போனவை   : மக்களின் சிந்திக்கும் திறன்
புதியவை                        :  மஞ்சள் துண்டு வாரிசு
கருத்து                             : அது யாரும் கேட்க, பின்பற்ற விரும்பாத வஸ்து
டிஸ்கி                              : கடவுளை இல்லை, கடவுள் இல்லை, 
                                               கடவுள் இல்லவே இல்லை.
                                               கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் 
                                               கடவுளை நம்புகிறவன் முட்டாள் 
                                               கடவுளை பரப்புகிறவன் காட்டுமிராண்டி...

பெரியார் பற்றிய சுருக்கமான வரலாறு...
  

நான் - நீ - அவன் ...


நீ அப்படியே 
என்னைப்போல் இருந்தவன்
ஒரு சில 
மாற்றுக்கருத்துகள் தவிர்த்து
உனக்கும், எனக்கும் 
நிறைய ஒற்றுமைகள் உண்டு 
அவன் அப்படியல்ல 
நம்மிலும் வேறானவன் 
முரண்பாடுகளின் மூட்டை 
உனக்கு அவனை 
பிடிக்கவே பிடிக்காது 
எனக்கு அப்படியல்ல 
எதிராளியையும் ரசிப்பவன் நான் 
அவன் நம்பிக்கைகள் 
அவனுக்கு 
எனது கருத்துக்கள் எனக்கு 
ஆனாலும் 
உனக்குப் பிடிக்காத அவனை 
நான் அவனை நேசிப்பதால் 
நீ 
என்னையும் வெறுக்கத் துவங்குகிறாய்,
இப்படியாக 
யாவருக்குமே 
சிலரை சிலரால் 
வெறுக்கவோ, நேசிக்கவோ 
செய்யும்படி ஆகிறது..

23 டிச., 2011

விருதும்... விருந்தும் - ஈரோடு சங்கமம்...


"ஈரோட்டில் இருந்து ஜாபர் பேசுறேன் அண்ணே, என்னைத் தெரியுதா?" என்றார். 
"வணக்கம் ஜாபர், சொல்லுங்க" என்றேன்.
"அண்ணே ஈரோடு சங்கமத்துல சில பதிவர்களை பாராட்டி கவுரவிக்கலாம் என முடிவு செய்துள்ளோம், அதில் நீங்களும் ஒருவர்!, அதனால அவசியம் வந்துடுங்க" என்றார். கூடவே " சென்னையில் இருந்து கேபிள், ஜாக்கி, லக்கி, அதிஷா வருவதாக சொல்லியிருக்கின்றனர், எனவே நீங்களும் வந்தால் சந்தோசமாக இருக்கும்" என்றார். நான் வருவதாக உறுதியளித்துவிட்டு மாலை கேபிளை சந்தித்தபோது அவர் அன்றைய தேதியில் உடான்ஸ் பரிசளிப்பு விழா இருப்பதால் தன்னால் வர இயலாது என்றார். தேதியை மாத்திக்கலாமே என்றபோது, இல்லை தலைவரே அதனை முடிவெடுக்கும் அதிகாரம் ஆதியிடமும், பரிசலிடமும் இருக்கிறது. உடான்ஸ் சார்பாக நடத்தப்படுவதால் ஜோசப் இல்லை, அதனால் நான் இருந்தே ஆகவேண்டும் என்றார்.

தம்பிகள் மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், மோகன்குமார், ஆனா மூனா செந்தில், தம்பி ரமேஷ்குமார் என சனிக்கிழமை கோவை எக்ஸ்பிரசில் வண்டியேறினோம். வழியெங்கும் கலாட்டாவுடன் ஈரோடு வந்து சேர்ந்து ஒரு டாக்சி பிடித்து ராஜராஜேஸ்வரி லாட்ஜுக்குப் போனால், அங்கு யாருமே இல்லை. அங்கிருந்து ஜாபருக்கு போன் போட்டால், அண்ணே நேராக மண்டபத்துக்கு வந்துடுங்க என்றார். 

மண்டபத்தில் அபி அப்பா, விந்தைமனிதன், வாசு அண்ணன், மணிஜி, ஜாக்கி, செல்வம், மயில், சங்கவி என சிலர் இருந்தனர். சரக்கு தந்த உற்சாகத்தில் அபிஅப்பா எனக்கு ஒரு முத்தம் தந்தார், அது பலருக்கும் தொடர்ந்தது. விந்தைமனிதன் மிக உற்சாகமாக இருந்தார். அதன்பின் எல்லோரும் சாப்பிடப்போனோம். வழக்கமாக இம்மாதிரியான நிகழ்வுகளில் மெனுப்படிதான் பரிமாறுவார்கள். ஆனால் நாம் கேட்டதெல்லாம் கிடைத்தது. இட்லி, தோசை, முட்டை தோசை, ஆம்லேட், கலக்கி என ஹோட்டலில் இருப்பதுபோன்ற உணர்வை தந்தது மிகுந்த ஆச்சர்யம். இதுக்கே ஈரோட்டுக்காரர்களுக்கு ஒரு சிறப்பு வந்தனம். 

அன்று இரவு மீண்டும் லாட்ஜ் வந்து பிரபாவும், ஆனா முனாவும் தங்கள் உற்சாக பானத்தை தொடர் விரும்பியதால், நான் தனியாக ரூம் எடுத்துக்கொண்டேன்.  நால்வர் தாங்கும் அறையான அதில் மோகன்குமார், சிவகுமார், ரமேஷ் ஆகியோருடன் தங்கினோம். சிறிது நேரத்தில் ஆரூரான் வந்து நீங்கள் எப்படி பணம் கொடுக்கலாம் என சண்டைபோட்டு பணத்தை திருப்பித்தந்தார். அவர் அன்பை மறுக்கமுடியாமல் பணத்தை வாங்கிக்கொண்டேன். இரவு நெடுநேரம் சங்கவி எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார், நீண்ட நாள் பழகிய ஒரு நண்பருடன் பேசிய உணர்வைத் தந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விடவும் அதிகம்பேர் வருவதால் மறுநாள் நிகழ்வை சரியாக நடத்தவேண்டும் என்கிற கவலை அவரிடம் அதிகம் இருந்ததை உணர்ந்தேன். இரவே கார்த்திகை பாண்டியன், தருமி ஐயா உள்ளிட்ட மதுரை நண்பர்களும் வந்துவிட்டனர்.

மறுநாள் காலை எங்களை எழுப்பியது "வம்பை வெலைக்கு வாங்குவோம்" மணி( ஆனா ஆளு படு சாந்தம்) மற்றும்  நாய் நக்ஸ் ( இந்தப் பெயருக்கு ஒரு வரலாறு இருக்காம்) வந்து எழுப்பினார், அவருடன் தமிழ்வாசி பிரகாஷ் வந்திருந்தார். நாய் நக்ஸ் நக்கீரன் சரியான ஜாலி பார்ட்டி, தன்னைப் பற்றி எதை எழுதினாலும் லிங்க் கொடுக்காமல் போடக்கூடாது என கட்டளை போட்டார். வரவேற்பு அறைக்கு வந்தபோது ஜாக்கி, உ.த அண்ணன் இறங்கிவந்தனர். பின்னால் வந்த அபி அப்பாவும், விந்தைமனிதனும் செந்தில் இப்பத்தான் ஊரில் இருந்து இப்பத்தான் வர்றீங்களா எனக்கேட்டு எங்களை அதிர்சிக்குள்ளாக்கினர்(மொதநாள் இரவு அவ்வளவு மப்பு).

காலை மண்டபத்துக்குள் நுழைந்ததும் அதிஷா,லக்கி, அரவிந்தன், சீனா ஐயா  என வரிசையாக நண்பர்கள் வர ஆரம்பித்தனர். உடனே எல்லோரையும் சாப்பிட அழைத்தனர். முதல்நாள் இரவு போலவே காலையிலும் கேட்டதெல்லாம் கிடைத்தது. தாமோதர் சந்ரு, கதிர் அண்ணன், பாலாசி, சங்கவி, ஆரூரான், ஜாபர் என அனைவரும் பக்கத்தில் இருந்து உபசரித்தனர்.

அதன்பிறகு தமிழ்மண சூப்பர் ஸ்டார் சிபி.செந்திகுமார் வந்து சூறாவளியாக சுழன்று அனைத்து பதிவர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து தள்ளினார். அப்போது நான் அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டபோது கண்டுகொள்ளாமல் நழுவினார், ஆனால் விழா முடிந்தவுடன், சாரி தலைவரே சரியா கவனிக்கலை என புகைப்படம் எடுத்துக்கொண்டார். எப்படி தலைவரே இவ்வளவு எழுதித் தள்ளுறீங்க என கேட்டதும். அண்ணே என் வீட்டில் இணைய இணைப்பு கூட இல்லை. நான் செல்போனில் பதிவு செய்து சினிமா விமர்சனம் எழுதுவாக சொன்னார்கள், ஆனால் என் செல்போனை பாருங்கள் என அரதப் பழசான நோக்கியாவை காட்டினார். அவரின் எல்லாப் புகழுக்கும் மூலகாரணம் ஜாக்கிதான் எனச்சொன்னபோது சத்தமாக சிரித்தார் # ஜெய் ஜாக்கி. மேலும் வானம்பாடிகள், பாலபாரதி, தேனம்மை, காவேரி கணேஷ், ஷர்புதீன் என அறிமுகமான பலர் வந்திருந்தனர்.

விழா துவங்கும்முன் ISR செல்வகுமாரின் "யாதுமானவள்" குறும்படம் திரையிடப்பட்டது. விழா துவங்கியதும் ஆரூரனின் சங்கமத்துக்கான ஏற்பாடுகள் பற்றிய உரை மற்றும் வரவேற்பு உரை முடிந்தபின் கதிர் சிறப்பு விருந்தினரைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார். அதன்பின்பு வரிசையாக பாராட்டு பெறுபவர்கள் அழைக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகபடுத்தும் ஆடியோ, வீடியோ தொகுப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. விருது பெறுபவர்களை பற்றி கதிரும், அருள்மொழியும் செய்தி வாசிப்பினைப் போல அறிமுகப் படுத்திய விதம் மிக சிறப்பு. இந்த AV க்காக என்னிடமும் என்னைப்பற்றிய தகவல்களும் படங்களுக்கும் கேட்டிருந்தனர், என்னைப் பற்றிய தகவல்களை மட்டும் கொஞ்சமாக அனுப்பிவிட்டு போட்டோ அனுப்பவில்லை. அதற்கு காரணம் நான் சற்று தனிமை விரும்பி அதனால் நான் மட்டும் தனியாக அல்லது மற்றவர்களுடன் விரும்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதுவுமே என்னிடம் இல்லை. அதனை கதிரிடம் சொன்னதும் அவர் கண்டிப்பாக படம் தந்தே ஆகவேண்டும் என்றார். ஆனால் நான் தரவே இல்லை. ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவர்கள் என் படங்களை எங்கோ தேடிக் கண்டுபிடித்து ஒளி பரப்பினார்கள். என்னுடன் விருதுபெற்ற அனைவரையும் விடவும் நான் மிகச் சாதாரணமான ஆள். இந்த விருது சமூக வலைத்தளத்தில் என்னை இன்னும் சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தியிருக்கிறது. என்னோடு சேர்ந்து கவுரவிக்கப்பட்டவர்களின் விவரங்கள் இந்த இணைப்பில் காணலாம்.

சங்கமம்‘2011 ல் பாராட்டு பெற்ற 15 பேர்

விழா முடிந்தவுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. முதலில் அசைவப்பிரியர்களுக்கான பந்தி. மிக அருமையான வீட்டு சாப்பாட்டைப்போல் இருந்தது. வழக்கமாக மிக குறைவாக சாப்பிடும் நான் ஒரு செம கட்டு கட்டினேன். அதன்பிறகு சைவ பட்சிகளுக்கு, அதிலும் நேர்த்தியான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதன்பிறகு நண்பர்களுடன் முடிந்தவரை ஒவ்வொருவராக சந்தித்து அளவளாவினேன். நான் பேச விரும்பிய கோமாளி செல்வாவை சந்திக்கமுடியாத அளவு பிசியாக இருந்தார். நம்ம தலை வாலைப் பார்த்து நான் கே.ஆர்.பி என்றவுடன் போச்சு போங்க எனக்கு அறிமுகமா? என கட்டிப்பிடித்துக்கொண்டார். தல எல்லோருடனும் மிகுந்த சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார். 

அதன்பிறகு மோகன்குமார் அண்ணன் செல்வகுமார், அன்பழகன், உ.த அண்ணன் அனைவரும் காரில் சென்றுவிட, மணிஜி,வாசு,ஜாக்கி, மயில் என அவர்களும் தங்கள் வண்டியை பூட்டினர். நான் அரவிந்தன் அண்ணன், சிவக்குமார், ஆனா முனா , பிரபாகரன் அனைவரும் ஒரு சிறு ஷாப்பிங் முடித்துவிட்டு அறைக்கு வந்து சிறு உறக்கம் முடித்து ரயிலடி வந்து ஆனா முனாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு லைட்டாக சரக்கடிக்கலாம் என முடிவு செய்துவிட்டு வெளியில் வந்தால், அங்கு ஒரு இண்டிகாவை தள்ளிவிட சொல்லி ஒருவர் ரிக்வெஸ்ட்ட நாங்கள் அதனை சத்தமாக தள்ளிக்கொண்டுபோனபோது அருகில் இருந்த இட்லி கடையில் சுவாரஸ்யமாக டின்னரை லவட்டிக் கொண்டிருந்தது அபிஅப்பா, விந்தைமனிதன் & கோ. ரயிலுக்கு நேரம் குறைவாக இருந்ததால் திரும்பவந்து அவர்களை பார்க்கலாம் என கிளம்பினோம் ஆனால் திரும்பிவந்து பார்த்தபோது அவர்கள் எஸ்கேப். அதன்பிறகு பாருக்கு சென்று நான், ஆனா முனா, ரமேஷ் மூவரும் ஆளுக்கு ரெண்டு லார்ஜ் அடித்தோம், பிரபா தலைவலி என ஒதுங்கிக்கொள்ள, பக்கத்து ஓபன் ரெஸ்டாரண்டில் டின்னர் முடிந்ததும் ரயிலுக்கு நேரமாகவே, கிளம்பும் நேரத்தில் அவசரமாக தொத்திக்கொண்டோம். இரவு பத்தரைமணி வாக்கில் வாசு அண்ணன் தான் பத்திரமாக வீடு வந்ததாக குறுஞ்செய்தி அனுப்பினார். கேபிள் போனில் உடான்ஸ் விழா சிறப்பாக நடந்ததாக சொன்னார். விந்தைக்கு ஒரு போன் போட்டால் அவர் ரயில் நிலையத்தில் இருப்பதாக சொன்னார். அவருடன்  இந்தமுறை சரியாக அளவளாவ முடியவில்லை.

இரவு மேல் பர்த்ததில் படுத்தவுடன் மனம் ஒரு ரிவர்ஸ் கியர் அடித்து நிகழ்ச்சியை அசைபோட்டது. கிட்டத்தட்ட 240 பேரை வரவேற்று, தங்கவைத்து, உபசரித்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஈரோட்டு சகோதரர்களுக்கு என் வந்தனம். சிறப்பு அழைப்பாளர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்த விழாவுக்கு வரும்வரை இதை ஒரு வழக்கமான பாராட்டு விழாவாக நினைத்ததாகவும் ஆனால் ஆடியோ, வீடியோவை பார்த்து நெகிழ்ந்ததாகவும் சொன்னார். தொடர்ந்து அனுமதிக்கட்டணம் இல்லாமல் மிகச்சிறப்பாக ஈரோட்டில் புத்தக கண்காட்சியை நடத்திவரும் சாதனையாளரான அவர் எங்களை பாராட்டியபோது. நான் என்னை இன்னும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த ஒருவர் மகி என்கிற மகேந்திரன். இவரின் மனசு கோடியில் ஒருவருக்குத்தான் வரும். பாராட்டுக்கள் மகி.  

விழாவினை மிகச்சிறப்பாக தொடர்ந்து நடத்திவரும் ஈரோடு வலைப்பதிவாளர் குழுமம் விரைவில் அறக்கட்டளையாக மாறவிருப்பதாக கதிர் அறிவித்தார். வாழ்த்துக்கள் சகோதரர்களே...

22 டிச., 2011

முல்லைப்பெரியாறு அணையைக் காக்க சென்னையில் ஒன்றுகூடல்...


நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.

நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம்வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?

நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்..

இந்தப் பதிவினை அனைவரும் தங்களின் வலைப்பக்கத்தில் வெளியிடுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்,,,

21 டிச., 2011

இயக்கமொன்றை எப்படி ஆரம்பிக்கலாம் - டெரெக் சிவேர்ஸ்




20 டிச., 2011

கழிவிரக்கம்...

ஆற்றாமையாகத்தானிருக்கும்
எனக்கு..

கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..

அரசுப் பேரூந்தின் நடத்துனர்கள் 
ஏழை வயசாளிகளை 
ஒருமையில் விளிக்கும்போது
என்ன மனித நேயமென..

புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட 
பின்னும் 
முகாம்களில் தவிக்கும் 
சகோதரங்களை நினைத்து 
புத்தனும் செத்துப் போனான் என..

தெரு வண்டி வியாபாரியிடம் 
பத்து ரூபாய்க்கு கை நீட்டும் 
போலீஸ்காரன் நிலை நினைத்து 
இதுவா கடமை?  என..

கடவுளை 

இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..

ஓட்டுக்கு காசு வாங்கி 
தேர்தல் முடிந்தபின்னர் 
ஐயோகோ 
ஆட்சி சரியில்லை எனும் 
மக்களை நினைத்து 
உன் உரிமை இதுவா என..

தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..

17 டிச., 2011

அரசியல் பேசலாம் வாங்க...


சின்ன வயசுல கிராமத்து வாழ்க்கைல விவரம் அதிகம் தெரியாதபோது அப்பா காங்கிரஸ்காரர் என்பதால் எனக்கும் இந்திராகாந்தி, மற்றும் காங்கிரஸ்  கூட்டணியில் இருந்ததால் எம்.ஜி.ஆர் இருவரின் மேல் பிரியம் அதிகம். எங்கள் ஊருக்கு கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அரசியல் தலைவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். கலைஞர் தனது "நெஞ்சுக்கு நீதி" புத்தகத்தில் அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையின்போது எங்கள் ஊருக்கு வந்தபோது, எனது அம்மா வழி தாத்தா சாமியார் என்கிற ஜெகதீச தேவர் பணம் தந்து உதவியதாக குறிப்பிட்டு இருக்கிறார். 

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியினரின் ஆதிக்கம் நிறைந்த எங்கள் ஊர், திராவிட இயக்கங்கள் வளர ஆரம்பித்தபின் தி.மு.க அதிகமாகவும் பின்னர் எம்.ஜி.ஆர் பிரிந்தபின்னர் அ.தி.மு.க அதிகமாகவும் மாறிவிட்டது. அப்போதெல்லாம் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடக்கும் தி.மு.க கூட்டங்கள்தான் பெரும்பாலும் களைகட்டும் பெரும்பாலும் நாகூர் ஹனீபா கச்சேரியோடு துவங்கும் கூட்டம், நாகூர் ஹனீபாவின் கணீர்க்குரலில் "கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" என பாட்டு கேட்க ஆரம்பித்ததுமே கூட்டம் உற்சாகமாகிவிடும். ஆனாலும் நன்னிலம் நடராசன், வெற்றிகொண்டான் போன்றோர்தான் கலைஞரை  விடவும் ஸ்டார் பேச்சாளர்களாக வலம் வந்தனர். செந்தமிழ் அவர்கள் நாவினிலிருந்து பச்சை பச்சையாய் கொட்டும். எனக்குத் தெரிந்தவரை அவர்களைவிடவும் அசிங்கமாய் ஒரு சமயம் நாஞ்சில் சம்பத் பேசக் கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட கூட்டங்களினால் ஈர்க்கப்பட்டு நானும் ஜனதா கட்சியை சார்ந்து பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அணில் சின்னத்தில் போட்டியிட்ட வல்லத்தரசு மாமாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுபோக உதவியிருக்கிறேன். மைக் கிடைத்த சந்தோசத்தில் நோட்டீசில் கொடுக்காத வாக்குறுதிகளை நானே கொடுத்து மக்களை மாற்றி ஓட்டுப் போடவைக்க காரணமாக இருந்திருக்கிறேன். 

எங்கள் ஊரில் குடுமபத்தலைவர் சொல்லும் கட்சிக்குதான் மொத்த குடும்பமே ஓட்டுப்போடவேண்டும். ஆனாலும் கட்சிக்கு ஒருத்தர் என குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் பிரித்து வைத்துக்கொண்டு வெட்டு குத்து ஆன சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன. போலிஸ் நிலையத்தில் வைத்தே கொலை செய்யும் அளவுக்கு  முட்டாள்கள் நிறைந்த என் ஊரில் அரசியல் அடிதடிகள் இப்போதெல்லாம் நடப்பது இல்லை. சமீப காலமாக சீமானுக்கும், விஜயகாந்துக்கும் நிறையபேர் அதிலும் முப்பது வயதுக்கு கீழே இருக்கும் வெட்டிப்பசங்க ப்ளெக்ஸ் வைத்திருப்பதை பார்க்க முடிந்தது. ரஜினி ரசிகர் மன்றத்தினர் விஜயகாந்த் கட்சிக்கு மாறிவிட்டனர். கேப்டன் கட்சி ஆட்களைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்கள் தலைவனைப்போலவே பகல் குடிகாரர்களாக இருப்பதன் பொறுத்தம் ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால் தமிழ் உணர்வுகள் நிறைந்த இளைஞர்கள்தான் சீமானை ஆதரிக்கிறார்கள். 

இப்போது தி.மு.க, அதி.மு.க வுக்கு இளைஞர்கள் அதிகம் போவது இல்லை. தி.மு.க வை பொறுத்தவரை அது ஒரு தனியார் நிறுவனம். முதலாளிக்கு சேவகம் செய்யும் பண்ணையாட்களாய் இருந்தால் மட்டுமே அங்கு இருக்க முடியும். தலைவர் முதல் மாவட்ட, நகர செயலாளர்வரை வாரிசுகள் கோலோச்சும் மன்னர் வம்சம் அது. அ.தி.மு.க வோ அடிமைகள் மட்டுமே இருக்க முடிகிற கட்சி. அங்குள்ள மந்திரிகளுக்கே பதவி அந்தரத்தில் ஊசல் ஆடுகிறது. இதில் தொண்டன் நிலை படுமோசம். எங்கள் பகுதியில் சசிகலாவின் தம்பி திவாகரன்தான் எல்லாம். கட்சிக்காரர்கள் அனைவரும் அவரை "பாஸ்" என்றுதான் அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் சிவானந்தா பட்டறையில் நண்பர்கள் படைசூழ அரட்டை கச்சேரி நடத்திக்கொண்டிருப்பார். இப்போது திருவாரூர் மாவட்டத்தின் கல்வித் தந்தையாகிவிட்டார்.

இவருக்கு போட்டியாக களம் இறங்கியிருக்கிறார் டி.ஆர்.பாலுவின் புதல்வர் டி.ஆர்.பி.ராஜா இவர் இன்னொரு கல்வித் தந்தை. சென்ற ஒரு வருடத்தில் மட்டும் ஐநூறு ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். தற்போதைய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் இன்னொரு பியர் பாக்டரி ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கிறார். 'குடி'மகன்கள் வாழ்த்தட்டும்.   

இதனால் இப்போது கேப்டன் கட்சிக்கு தாவும் இளைஞர்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். கேப்டனும், அவரின் மனைவி, மச்சானோடு இன்னொரு தனியார் நிறுவனமாகவே அவர் கட்சியையும் நடத்திவருகிறார் என்பதை அறியாமல் அவர்தான் நாளைய விடிவெள்ளி என பேசுபவர்களை சுந்தர தெலுங்கில் திட்டுவதைவிட வேறு வழியில்லை. ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டம் இப்போது மாறிவிட்டது. காரணம் கம்யூனிஸ்டுகளின் பக்கபலமே அங்கிருக்கும் தலித் கூலித்தொழிலாளிகள்தான் அவர்களும் திருமாவளவன் பக்கம் பெரும்பாலும் திசைமாறிவிட்டதால் இப்போது அங்கிருக்கும் ஆதிக்கசாதி (அதாங்க நாங்கதான்) கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். தலித்துகளில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்படை கேப்டன் கொடி பறக்கவிட ஆரம்பித்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். 

பி.ஜெ.பி யை திருவாரூர் மாவட்டத்தில் வளர்த்த முன்னோடிகளில் நானும் ஒருவன், அந்த கட்சி நன்றாக வளர்ந்து இல.கணேசன் எனும் பார்ப்பன பண்ணையாரால் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இனி மத்தியில் பி.ஜெ.பி ஆட்சி ஒருவேளை வந்தால் பதவி பெருமைக்காக புதியதாக யாராவது சேரக்கூடும். இப்படியான அரசியல் நிகழ்வில் இப்போதெல்லாம் ஒரு வார்டு உறுப்பினராக போட்டியிடவே மூன்று லட்சமும், பஞ்சாயத்து தலைவராக போட்டியிட இருபது லட்சமும் செலவு செய்கிறார்கள். ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று கேட்டால் நூறு நாள் வேலை திட்டத்திலேயே செலவு பண்ணதை அள்ளிரலாம், மத்ததெல்லாம் லாபம்தான் என்கிறார்கள். இந்தமுறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சென்னையில்   போட்டியிடாமல் ஒதுங்கிய காரணமே அவர்கள் கட்சியின் வார்டு மெம்பர்கள்தான் காரணம் என்று நண்பர் சொன்னார். முன்னால் மேயர் மா.சு அவர்கள் எளிமையாய் எடுத்த நற்பெயரை வார்டு மெம்பர்கள் கெடுத்துவிட்டதாக நண்பர் சொன்னார்.

இப்படி முதல் போட்டு சம்பாதிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டபின் மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. மின்சாரம் இல்லையா? பொறுத்துக்கொள்கிறோம். பெட்ரோல் உயர்வா அதையும் பொறுத்துக்கொள்கிறோம், பக்கத்து மாநிலத்தான் தண்ணி தரவில்லையா அதனையும் பொறுத்துக்கொள்கிறோம். என பொறுத்துப் போக பழகிவிட்டனர். "பொறுத்தார் பூமி ஆள்வது" அந்தக்காலம். இப்போது "பூமி ஆள்வோரால் மக்கள் பொறுத்தார்" ஆகிவிட்டனர்.  இதில் மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, அன்னா அசாரே போன்ற காமெடியன்களை பார்க்கும்போது மக்களாட்சி இனி வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

வாழ்க ஜனநாயம்...

16 டிச., 2011

"பெண்கள்"...


ஆண்களுக்கு, பெண்கள் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் வசீகரமானவர்கள். ஆனால் பெண்களுக்கு, ஆண்கள் அப்படியல்ல பெரும்பாலும் அடிமைகளாகத்தான் பாவிப்பார்கள். அதாவது அடங்கிப்போகிற மாதிரி ஆளுமைக்கு மாறுவது. மிகச்சுலபமாக வரும். அவர்களின் கண்ணீர் சாதிக்க முடியாததையும் சாதித்துக்கொடுத்துவிடும். பாட்டியாக, அம்மாவாக, மனைவியாக, சகோதரிகளாக, தோழிகளாக, மகளாக எல்லா வடிவங்களிலுமே பெண்கள், ஆண்களை அரசாளப் பிறந்தவர்கள். ராகுல சாங்கிருத்யாயனின் "வால்காவிலிருந்து கங்கைவரை" படிப்பதற்கு முன்பாக நானும் பெண்களை ஆராதிக்கும் ஒரு சமகால ஆணாகவே இருந்தேன். என் காதல்களும் அப்படியானதுதான். நான்கு மூத்த சகோதரிகளுக்குப் பிறகு ஒரு அண்ணனும் அதன்பிறகாக நான் கடைக்குட்டியாக பிறந்ததால் அண்ணன் வரம் வாங்கி வந்தவனாகவும் நான் போனசாக கிடைத்தவனாகவும் கொண்டாடப்பட்டதில் நான்கு வயதுவரைக்கும் எனது நீண்ட முடிக்கு சடைபின்னி என்னையும் ஒரு சகோதரியாக பார்த்த என் அக்காள்களின் மனப்பான்மையே பிற்காலத்தில் என்னை பெண்களிடம் இருந்து தூரமாக வைத்தமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பொதுவாகவே என் காதல் தோழி கீதாஞ்சலி இறந்தபிறகு பெண்களுடனான எனது சிநேகம் இப்போதைய மலையாளிகள் தமிழர்களை பார்ப்பதுபோல் அவ்வளவு விரோதமாக இருந்தது. அதிலும் நண்பர்களுடன் பேங்காக் சென்று தங்கியபோது தங்கும் அறைகள் போதாமால் என் அறைக்குள் நண்பன் ஒருவன் அவன் இன்ஸ்டன்ட் காதலியை அழைத்துவந்து சல்லாபித்துக்கொண்டிருந்தான். வெளியில் பெய்த பேய் மழை  நான் அந்த முக்கல், முனகலை காதில் வாங்காமல் பார்த்துக்கொண்டதால், அறைக்கு வெளியே தாய்லாந்தின் சோம பானத்தில் திளைத்துக் களித்துக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்து கட்டிப்பிடித்தாள் ஒரு குட்டி. முழுவதுமாய் போதை ஆக்கிரமித்திருந்த அவள் மூளைக்கு அவளின் நிர்வாணம் அறியப்படாது போகவே அந்த திறந்த வராண்டாவில் என்னை வீழ்த்த நினைத்த அவளை செவுளில் ஓங்கி அறைந்தேன். தாய்லாந்தில் பெண்களை அதிலும், காமம் தின்பதற்கு கூட்டி வந்த அழகிகளை அடித்தால் நம்மை வெட்டி நெருப்பில் வாட்டி தங்களின் போதைக்கு சைட் டிஷாக ஆக்கிக் கொள்வார்கள் தாய்லாந்து மாமாக்கள். அவளுக்கு நான்  விட்ட அறையால் போதை ஒரு கோப இடைவெளியை அவளுக்குத் தரவே கத்தி கூப்பாடு போட்டாள். நல்ல வேளையாக மழையால் வீட்டுக்குப்போகாமல் காத்திருந்த என் தாய்லாந்து நண்பன் ஓடி வந்தான். அவன் அவளை விசாரித்துவிட்டு அவன் பங்க்குக்கு ஒரு அறை விட்டான். அவனுக்கு என்னைப்பத்தி தெரியும். நான் எப்போது பேங்காக் போனாலும் என் பயண நிரல்களை அவன்தான் பார்த்துக்கொள்வான். நான் அங்கு எப்போதும் அங்குள்ள பெண்களை தொட்டது கிடையாது. சோமபானம் மட்டும்தாம், அதிலும் வித விதமான சோமபானங்களையும், அங்கு பிரத்யோகமாக கிடைக்கும் உயிரின அவியல்களையும், வறுவல்களையும் விரும்புகிறவன். என்னோடு உடன் வருகிற நண்பர்களுக்கு மட்டும்தான் அழகிகள். கீதாஞ்சலியின் மரணத்துக்குப் பின் மற்ற பெண்கள் அனைவரும்  எனக்கு ஒரு சக உயிரினம் மட்டுமே.

இணையத்திற்குள் வந்துவிட்ட பின் ஆரம்பக் காலங்களில் கிடைத்த தோழிகளும் என பண்றே?, என்ன சாப்பிட்டே?, இப்ப என்ன கலர்ல டிரெஸ் போட்டுருக்கே என தேச வளர்ச்சிக்கான கேள்விகளை சலிக்காமல் கேட்டு என்னை கதற விட்டதால் மொத்தமாகவே ஒரு பெரிய கும்பிடாக நெடுஞ்சாண்கிடையாக கம்பியூட்டர் முன் விழுந்து வணங்கி யாருடனும் பேசக்கூடாது என தீர்மானம் இயற்றிவிட்டேன். இதில் சாட்டில் வரும் ஆண்களும் விதிவிலக்கல்ல கேள்விகள்தான் மாறும், அவிங்கலுக்கு சரக்கு போடப் போகலியா?, என்ன படம் பார்த்தே?, நீயும் வினவு ஆளா?, கேபிளோடு டெய்லி எப்புடி தண்ணி அடிக்க நேரம் கிடைக்குது? மாதிரியானதும் இன்னும் சில சிக்கலான பெண்கள் பற்றிய கேள்விகளுமாக இருக்கும். அதனால் இணைய அரட்டைக்கு நான் முகமூடி(invisible) அணிந்து வந்தாலும் கண்டுபிடித்து கூப்பிடும் சிலர்வரை யார் வந்தாலும் பின்கால் பிடரியில்பட ஓடத்துங்கிவிடுவேன்.

ஆனால் நம்ம ஆட்கள் சுவாரஸ்யமானவர்கள் பெண்கள் பெயரில் யார் வந்தாலும், அவர் என்ன வயதாக இருந்தாலும் உடனே அங்கு சென்று சலாம் வைத்து அவர்கள் வீட்டு நாய்குட்டியாக மாற விண்ணப்பம் அனுப்புவார்கள். அப்புறம் சாட்டில் வழியும் ஜொள்ளு எதிர்முனை கணினியை மூழ்கடிக்க ஆரம்பித்து இவனும் போதையில் செல்போனில் ஸ்பீக்கரில் பேசி தன் பெருமையை நிலை நாட்டத்துவங்கும் நேரத்தில் அது ஊரெங்கும் பற்றி எரியும். உடனே இணைய நாட்டாமைகள் தங்கள் சொம்புகளுடன்(ஒரிஜினல் சரவணா ஸ்டோர் சொம்புகளுக்கு மட்டும்தான் அனுமதியே) வந்து பிரச்சினையை பெரித்தாக்க, அந்த பெண்களின் கணவன்மார்களின் நிலைதான் தில்லாலங்கடியாக மாறும். அவனும் ஒவ்வொரு மொபைல் அழைப்புகளாக நோண்ட ஆரம்பித்து கணவர்கள் மாறும் அளவுக்கு போகும். இது ஒரு சிறிய உதாரணம் என்றாலும். இம்மாதிரியான அதாவது சாரு மாதிரியான புனித ஆத்மாக்கள் செய்யும் விசயங்களால் ஒட்டுமொத்தமாக நன்றாகவே எழுதும் பெண்கள் கூட சில காலங்களுக்குள் எழுதுவதை நிறுத்திவிட்டு சமையல் குறிப்புகளுக்கு மாறிவிடுகிறார்கள். எழுதுவதில்கூட நாம் அவர்களை அடுக்களை தாண்டி வெளியேவர விடுவதில்லை. 

"நீ ஏன் எப்போதும் பெண்களை மட்டமாகவே நினைக்கிறாய்!" என்பார் எனது சிங்கப்பூர் தோழி. "நான் உன்னை எப்போதாவது குறைத்துப் பேசியிருக்கேனா?" என்றால், இல்லை என்பாள். "பொதுவாகவே பெண்களுக்கு ஆண்கள் தங்களை ஒரு படி மேலே உயர்த்திப் பார்க்கவேண்டும் என்பதுதான் உங்களின் இயற்கை குணம். அதற்காகத்தான் இத்தனை அலங்காரமும். ஆனால் பெண்களை என் சக மனிதர்களாக பார்ப்பவன் நான். அதனால்தான் தாலி கட்டாத சுயமரியாதை திருமணம் செய்தேன் எனபது உனக்கும் தெரியுமே!, மேலும் என் மனைவிக்கும் நான் அலுவல் நிமித்தம் சந்திக்கும் பெண்களுக்கும் நான் அளிக்கும் மரியாதையும் உனக்கு தெரியும்!!. அப்புறம் ஏன் கேட்க்கிறாய்" என்றபோது, "இல்லைப்பா பொதுவாகவே நீ ஏன் பெண்களை சகோதரி என அழைக்கிறாய்? அதனால்தான் கேட்டேன்" என்றாள். உண்மைதான் பதின்ம வயதில் ஏற்பட்ட பாலியல் தொடர்புகள் வீட்டுக்கு தெரிய ஆரம்பித்தபோது, எனது தயார் என்னை அழைத்து "தம்பி நீ சிகிரெட் பிடிக்கிறே அது உன் உடம்பை மட்டும்தான் பாதிக்கும், தண்ணி அடிப்பதாக கேள்விப்பட்டேன் அது நண்பர்களையும் சேர்த்து பாதிக்கும், ஆனால் சமீபமாக பெண்கள் விசயம் பத்தி கேள்விப்பட்டேன், வேண்டாம்பா அது ரெண்டு குடுமபத்தை பாதிக்கும், அதன்பிறகு வாழ்நாள் முழுதும் நீ வருந்த வேண்டியிருக்கும்" என்றார். அதுதான் அன்றைய தினமே என்னை சிந்திக்கவைத்தது, அதுதான் இப்போதுவரை சந்திக்கும் பெண்களை சகோதரிகளாக பார்க்க வைத்தது. சகோதரி என்று சொல்லியவுடன் அவர்களுக்கு சில விஷயங்கள் தாண்டி என்னுடன் பேசுவது இல்லை. ஒரு சகோதரனாக என்னை மரியாதையான எல்லைக்குள் வைத்துப்பழக ஆரம்பித்து விடுவதால். பெண்களால் எனக்கும், என்னால் அவர்களுக்கு பிரச்சினை வருவதேயில்லை.

இன்னும் நிறைய சொல்லலாம்... இன்னொரு நாள் இன்னொரு கட்டுரையில் பேசுவோம்... 

15 டிச., 2011

வாழ்வும்,, வாழ்வும்...


நீலமும், பழுப்பும் 
கலந்த நிறம் கொண்ட 
மீன்கொத்திப் பறவையொன்று 
நீண்ட காத்திருப்பின் முடிவில் 
சரேலென 
பாய்ந்து கவ்விச்சென்றது
ஒரு சிறு மீனை
குளத்தில் 
திடீரென 
ஒரு பறவையின் வாழ்வுக்காய்  
கிளம்பிய வட்ட அலைகள் 
ஒரு மீனின் வாழ்வைப்போல் 
சிறியதாகி 
கரையில் முடிந்தது..

14 டிச., 2011

பயோடேட்டா - முல்லைப் பெரியாறு ...


பெயர்                                  : முல்லைப் பெரியாறு
இயற்பெயர்                        : பெரியாறு
தலைவர்                            : ஜான் பென்னிகுயிக்
துணை தலைவர்கள்       : தமிழக அரசு மற்றும் கேரள அரசு
மேலும் 
துணைத் தலைவர்கள்    : அனைத்து அரசியல்வாதிகளும் (மக்கள் அல்ல)
வயது                                :  117 வயது 
தொழில்                         : இயற்கையின் கொடை 
பலம்                                 : கல்லணையின் பலம் 
பலவீனம்                          : மலையாளிகள் 
நீண்ட கால சாதனைகள் தேனி,திண்டுக்கல்,மதுரை ,சிவகங்கை, 
                                                 ராமநாதபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை தந்தது 
சமீபத்திய சாதனைகள்   : தமிழகத்தின் ஒற்றுமை
நீண்ட கால எரிச்சல்         : மலையாளிகளின் அயோக்கியத்தனம்
சமீபத்திய எரிச்சல்          : DAM 999, தமிழர்களை தாக்குவது
மக்கள்                                : பொறுத்தால் தண்ணீர் பெறமுடியாது 
                                                  என்பதை அறியத்துவங்கியவர்கள்
சொத்து மதிப்பு                : 
999 வருடம் நமக்கே சொந்தம் 
நண்பர்கள்                          : கருணாநிதி ஆதரிக்கும் மத்திய அரசு அல்ல 
எதிரிகள்                            : எப்போதும் மலையாளிகள் 
ஆசை                                : அணையை உடைக்க 
நிராசை                             : தமிழகத்தில் இருந்துதான் உணவுப்பொருட்கள் 
                                                 வரவேண்டும் என்பதால் அவர்களின் போராட்டம் 
                                                 நீண்டநாள் தாங்காது.
பாராட்டுக்குரியது            : தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமை 
                                                       (இந்த விசயத்தில் மட்டும்) 
பயம்                                 : தமிழகத்தில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான
                                                மலையாளிகள்  
கோபம்                             : எப்போதும் தமிழர்களின் மீது காட்ட விரும்புவது 

காணாமல் போனவை    : படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் 
                                                        என்கிற பெருமை
புதியவை                        :   படம் காட்ட முயற்சி செய்வது (DAM 999)
கருத்து                             : அவர்களுக்கு தண்ணீர் தேவையில்லை. 
                                                மின்சாரத்துக்குதான் இத்தனை போராட்டமும்.
                                               அதனால் அவர்களுக்கு அதிக மின்சாரம், 
                                                நமக்கு அதிக தண்ணீர் என்கிற கலாமின் கருத்து 
                                                ஏற்றுக்கொள்ளக்கூடியது
டிஸ்கி                              : மலையாளிகளின் தமிழர் துரோகம் ஈழத்தில் 
                                              துவங்கி தமிழகத்தில் வந்து நிற்கிறது. வாலை 
                                              நறுக்காவிட்டால் அவர்களுக்கு திமிர் குறையாது.