|
போட்டோ: சுரேஷ் குமார் - சிங்கப்பூர் |
எப்போதும் போலவே இவ்வுலகம் சேவல் கூவியபின் விடிகிறது!. அதிகாலை 4 ம்ணிக்கே டீக்கடை கும்பல் கொஞ்சம் கொஞ்சமாய் கூடத்துவங்குகிறது. நான் தினசரி அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். கொஞ்சமாய் தியானம், கொஞ்சமாய் யோகா முடித்து படிக்க ஆரம்பித்தால் சரியாக ஆறு மணிக்கு மது எழுந்து காபி கலக்கித் தருவாள். அப்போதிலிருந்து எனது நிமிடங்கள் பரபரப்பாகிவிடும். என்னெனில் சரியாக 8 மணிக்கு அலுவலக வண்டி வந்துவிடும். இதெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் நான் ஒரு தீவிர வாசகி என்பதை நீங்கள் அறிய வேண்டாமா? அதற்குத்தான்.
எல்லா இலக்கியவாதிகளையும் படித்திருக்கிறேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படிப்பேன். படிப்பதில் எனக்கு பாகுபாடு கிடையாது. ஆனால் இலக்கியவாதி என்று தன்னை விடாமல் மார்க்கெட் செய்யும் ஒருவரால் ஒரு சம்பவம் நடந்தது. இதனை ஒரு சிறுகதையாகவோ, புணைவாகவோ நீங்கள் எடுத்துக்கொள்வது உங்களின் விருப்பத்தைப் பொருத்தது. இதன் தலைப்பே யார் அந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். பிரச்சினைக்கு காரனம் அவர் இல்லை. அவரை நான் இதுவரைக்குமே பார்த்தது கிடையாது. ஏன் ஒரு தொலைபேசி அழைப்போ, பாராட்டுக் கடிதமோ, திட்டியோ கூட எழுதியது கிடையாது. அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரம் அவர் தன் சகல பெண் தோழிகளைபோல் என்னையும் கொண்டாடி எழுதியிருப்பார்!. காரனம் என் பெயரும் கூட. பல நேரம் என் கல்லூரித் தோழிகள் சிலர் அவரை சும்மா அதிகம் பெண் தோழிகள் இருப்பதாக புளுகுகிறார் என்று சொல்வதுண்டு. ஆனால், எனக்குத் தெரியும் பெண்கள் நிறைய பேர் அவரை விரும்பிப் படிக்கிறார்கள் என்று. இப்போது அதெல்லாம் எதற்கு. என் பெயர் நிவேதிதா. இதுதான் இந்தக் சம்பவத்தை நீங்கள் படித்துக் கொண்டிருப்பதற்கான காரனமே.
இன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் முன்பு ஒரு மதிய உணவு வேலைக்குப் பின் எனது மேலதிகாரி என்னை அழைத்து ஒருவரை அறிமுகப் படுத்தினார். அவர் பெயர், என்ன வேலை, அவருக்கு நான் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என பட்டியலிட்டார். அவரை அழைத்துக்கொண்டு என் கேபினுக்கு வந்தேன். அவர் என்னைவிடவும் உயர் பதவிக்காக வந்திருப்பவர். அவருக்கு முன்னர் எனது தோழியும் இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை வாங்கித் தந்தவளுமான மது அந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள். முதல் பத்தியில் எனக்கு காப்பி கலக்கித் தந்த அதே மதுதான். இதைவிட அதிக சம்பளம் கிடைத்ததால் வேறு கம்பெனிக்கு அவள் மாறிப்போக தற்காலிகமாக நான் அவள் பார்த்த வேலையையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
“Hi என் பேர் சங்கர் நாராயணன்”
“Hi sir, I am நிவேதிதா”
“sweet name நிவேதிதா”
“thanks sir”
அதன்பிறகு வேலை பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது என் மேஜையில் கிடந்த அந்த புத்தகத்தை எடுத்தப் பார்த்தார்.
“இந்தப் புத்தகம் நீங்கள் எழுதினதா!?”
அவர் அப்படி கேட்டதும் தமிழ்நாட்டில் ரஜினியை தெரியாமல் கூட ஒருத்தன் இருப்பான் போல என நினைத்துக் கொண்டேன்.
“இல்லை சார், அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர்!”
“இல்லை உங்க பேர் போட்டிருந்தது. அதான் கேட்டேன்”
அது நம்ம தலைவன் எழுதிய மிகச்சிறந்த நாவலான ”0 டிகிரி” அதனை நான் பலமுறை படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் ஒருமுறை வாசிக்க எடுத்து வந்தபோதுதான் அவர் கண்ணில் பட்டிருக்கிறது.
“Sir, உங்களுக்கு புக் படிக்கிற பழக்கம் இருக்கா?”
“Yah, I read only Business magazines, அப்புறம் அப்பப்போ என் அம்மா படிக்கிற குமுதம், விகடனை சும்மா புரட்டுவேன் அவ்வளவுதான்”
நீ அந்தக் கேசா என மனதில் சிரித்துக்கொண்டேன். அதற்கப்புறம் அவன் கேட்டதுதான் கொடுமை.
” இந்த புக்க கொடுங்களேன் படிச்சு பாக்குறேன்”
”இல்ல Sir, அது கொஞ்சம் தீவிரமான இலக்கியம்”
“அது என்னங்க இலக்கியத்துலயே தீவிர இலக்கியம்?”
இதென்னடா குமுதம் படிக்கிறவனுக்கு எதுக்கு இந்த மாதிரி புத்தகமெல்லாம் என்று நினைத்தேன். ஆனால் நம்ம எழுத்தாளரே அந்த குப்பையிலும் எழுதியவர்தானே என்பதால்,
“இது உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை?, அதனால்தான்!....” என்றேன்.
“கொடுங்க படிச்சுத்தான் பாக்குறேனே” என என் அனுமதிக்கு கூட காத்திராமல் எடுத்துக் கொண்டான்.
அதன்பிறகு ஒரு வாரத்திற்குள் அவன் வேலை பழகிக்கொண்டான். அதன்பிறகு எனக்கு வேறு செக்சனுக்கு மாற்றி விட்டார்கள். கிட்டதட்ட ஒரு மாதம் போயிருக்கும். ஒரு நாள் தற்செயலாக அவனை கேண்டீனில் பார்த்தேன். பரஸ்பரம் விசாரித்துவிட்டு
“Sir, அந்த புக் படிச்சிட்டீங்களா”
“ Oh, Sorry அதை நான் படிக்காமயே வச்சிருந்தேன். என் நண்பன் ஒருவன் படிச்சுட்டு தருகிறேன் என வாங்கிப்போனான். இன்னும் தரல, ரொம்ப முக்கிமான புத்தகமா?”
“இல்லை Sir, பரவாயில்லை அவர் திருப்பிக்கொடுத்தவுடன் கொடுங்கள்”
அப்புறம் நான் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் என் வீட்டில் எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள். அதில் ஒரு மாப்பிளை வீட்டுக்காரன் என் அலுவலகத்திற்கு வந்து விசாரிக்கவும் அப்போது என் மேலதிகாரி சங்கரை கைகாட்டவும், அவன் சொன்ன விசயத்தால் அந்த வரன் போனதுடன் என் வீட்டிலும் எனக்கு செமத்தியாக டோஸ் விழுந்தது.
அவன் சொல்லியிருக்கிறான் “ அவளையா பெண் பாக்குறீங்க!, அவ அலுவலகத்தில் வச்சே செக்ஸ் புக் படிக்கிறா!, என்கிட்டயே வேற படிக்க கொடுத்தா!, நல்லவேளை நான் அந்த மாதிரி ஆள் இல்ல!, அதனால அவ செக்சன கூட மாத்தி விட்டுட்டேன்னா பாத்துகங்க, இந்த மாதிரி பொண்ணாலதான் மொத்த I.T ல வேலை பாக்குறவங்களுக்கும் கெட்ட பேரு வருது!” னு சொல்லவும்.....
இதனை கேட்டவுடன் மாப்பிளை வீட்டார் என் அப்பாவிடம் சொல்லி என்னை கண்டிச்சு வளக்க சொல்லி அறிவுரையெல்லாம் சொல்லிவைக்க, அப்பா அம்மாவிடம் ”அவளை இனிமே வீட்டுல வச்சு புத்தகம் படிக்க சொல்லு” என சொன்னதாக அம்மா சொன்னார், நல்லவேளை அப்பாவும், அம்மாவும் நிறைய புத்தகம் படிப்பவர்கள் என்பதால் என்னைப் புரிந்துகொண்டனர். இதை மதுவிடம் சொன்னதும் அப்படி என்னதாண்டி இருக்குது அந்த புத்தகத்துலன்னு நச்சரிச்சு எங்கெங்கோ தேடி இன்னொரு பிரதி வாங்கிக் கொடுத்தேன். பிரச்சினை என்னன்னா படிச்சிட்டு அவளும் என்னை திட்ட ஆரம்பிச்சா.
” எவெண்டி அவென் உம்பேர பின்னாடி வச்சுருக்கான், அவனுக்கும் ஒனக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?” அது, இதுன்னு தினசரி அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிடுவா.
ஏன்னா இவ இருக்காளே இவ one only ரமணி சந்திரன் புத்தகம் மட்டும்தான் படிப்பாள். வேறு புத்தகம் எதுவும் தொடவே மாட்டா!. நானும் ரமணி சந்திரனோட சில நாவல் படிச்சிருக்கேன். ஆனா அத்தனையும் டெம்ளேட்டா ஒரே மாதிரியா இருக்கும். திரும்பத் திரும்ப இயக்குனர் விக்கிரமன் அவர் சகா எஸ்.ஏ. ராஜ்குமார் மாதிரி ஒரே மேட்டர். நோ மசாலா. டீவி சீரியல் கணக்கா ஒரே பிரமாண்ட நாவலாகூட எழுதிறலாம. ரமணி சந்திரன் படிக்கிறவளுக்கு தலய எப்படி புரியும்!.
அதுக்கப்புறம் இனி அவர் எழுதின எல்லா புத்தகத்தையும் படிச்சவனைத்தான் நான் திருமணம் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன்.
அவருக்கு மிஸ்கின் புடிக்காம போனாலும் எனக்கு ரொம்பப் புடிக்கும் ஆனா இப்ப பாருங்க அந்தா ஆளும் தன்னை ஒலகப் பட இயக்குனருக்கு சமமா சொல்லிக்கிட்டு திரியுது. பாலா இப்படித்தான் டெம்ளெட்டா “அவன் இவன்” பன்னினர். பாருங்க தலக்கும் புடிக்கல. எனக்கும் கூட புடிக்கல. இப்ப முகமூடி போறதுக்கு டிக்கெட் எல்லாம் புக் பன்னிட்டேன். ஆனா தல சொன்னபிறகு அத பாத்து தலவலி வர்றத காட்டிலும் குப்புற படுத்துகிட்டு “எக்ஸைல” இன்னொரு வாட்டி படிச்சி புரிஞ்சிக்க முயற்சி பன்னலாம்.
இப்ப தலக்கு “அன்பே வா” ரொம்பப் புடிக்குமாம். எனக்கு அந்தப்படம் கூட ரமணி சந்திரன் நாவல் படிக்கிறது மாதிரிதாங்க. சரோஜா தேவியின் ஓவர் மேக்கப்பும், எம்.ஜி.ஆர் இருவது வயது பையனாட்டம் கையை பின்னாடி கட்டிக்கிட்டு டான்ஸ் ஆடுவதும் பாக்க சகிக்காது. இத எப்புடி திரும்பத் திருமப் பாக்கிறாருன்னு தெரியல. ஒருவேளை நாகேஷ், மனோரமா நடிப்பு கவர்ந்திருக்கலாம்!.
மேலும் அவருக்கு இன்னைக்காவது ஒரு mail தட்டி உடலான்னு இருக்கேன்.
நீங்களே சொல்லுங்க “ அவர் எத்தனை சாத்தான் கிட்ட இருந்து என்னை காப்பாத்திருக்காரா? இல்லையா?...