யாரோ ஒரு
அனானி பிவிஆர் சினிமாவுக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக சொல்லி படத்தை
திரையிடவில்லை என படத்தின் இயக்குனர் சொல்லியிருந்தார். ஆனால் தமிழ்
அமைப்புகள் தடைகள் எதுவும் கேட்காத போதே, அவர்கள் மேல் கடுமையான
விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ் ஸ்டுடியோ அருண் 22 மணி நேர
போர்கால முயற்சியில் நேற்று மாலை வடபழனி ஆர்.கே.வியில் தன் சொந்த செலவில்
திரையிட்டார்.
படத்தின் கதை: சிங்கள கிராமங்கள் சூழ்ந்த ஒரு மலையகத் தமிழ் கிராமத்தில்(தகவல் - வ.ஐ.ச. ஜெயபாலன்) அடகுக் கடை நடத்தி வருகிறார் சிங்கள இளைஞர்? ஒருவர். அவர் கடைக்கு தன் நகைகளை அடகு வைக்க வரும் தமிழ்ப்பெண் மீது அவர் காதல் வயப்படுகிறார். யாழ்பாணத்தை சேர்ந்த அந்தப்பெண் போரினால் குடும்பத்தை இழந்து உறவினர் வீட்டில் அடைக்கலமானவள், அவளின் உறவினர்கள் அவளை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு கட்டிவைக்க முடிவு செய்துள்ள நிலையில் அடகுக் கடை வைத்திருப்பவர் வீட்டில் சமையல் வேலை செய்யும் தமிழ்ப் பெண்மணி உதவியால் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். நாயகனின் பெற்றோர் குறித்து நாயகி விசாரிக்கும்போது அவன் தனக்கென யாரும் இல்லை என்றும் பழசு எதையும் கிளற வேண்டாம் எனவும், அதைப்போல் தானும் அவளின் கதை பற்றி அறிய விரும்பவில்லை என்று சொல்கிறான். மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் வாழும்போது. நாயகனின் நண்பன் வீட்டுக்கு வருகிறான். அவன் மூலம் நாயகன் முன்னாள் சிங்கள ராணுவ வீரன் என நாயகிக்குத் தெரிய வருகிறது. நாயகி இதை ஏன் என்னிடம் மறைத்தாய் என அவனிடம் கோபப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறாள். இந்நிலையில் நாயகன் தன் பழைய கதைகளை அவளிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கிறான். ஆனால் நாயகியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படாமல் போகவே தன் அடகுக் கடையை விற்றுவிட்டு அவளுக்கு விருப்பமான இந்திய பயணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். ஆனால் நாயகி மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். அதன்பின் நாயகியின் நினைவுகளுடன் அவன் வாழ்வதாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.
இதில் மேலோட்டமாக ஒரு சினிமாவாகப் பார்த்தால் அபத்தமான ஒரு படம் அவ்வளவுதான். ஆனால் இதில் பின்னால் பேசப்படும் அரசியல் வெகு ஆபத்தானது.
முதலில் யாழ்பாணத்தில் போரால் பாதிக்கப்பட்டவள் எப்படி ஒரு சிங்களவனை நம்புவாள். அடுத்து எதோ ஒரு தேவைக்காக அவள் திரும்பத் திரும்ப அடகுக் கடைக்கு வருகிறாள். அது எதற்காக என விளக்கம் இல்லை. வேலை தேடும் அவளை ஏன் தோட்ட வேலைக்கு போகக்கூடாது? என அவள் உறவினர்கள் சொல்கிறார்கள். படித்த மேல் தட்டு பெண்ணை ஏன் அவர்கள் தோட்ட வேலைக்கு செல்ல நிர்பந்திக்கவேண்டும். படத்தில் அவர்கள் வீட்டில் விஜய் படத்தை தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். நாயகன் நாயகியை திரையரங்கிற்கு அழைத்துச்செல்லும் படமும் விஜய் படம்தான். படத்தில் சாலைக் காட்சிகளில் பின்னனி இசையாக தமிழ் படத்தின் பாடல்கள் வீடுகளில் ஆட்டோக்களில் ஒலிப்பதாக காட்டப்படுகிறது. மேலும் அதிகாலையில் ஊர் முழுக்கவே பக்திப்பாடல் ஒலிபரப்பப்படுவதாகவும் காட்டப்படுவது அங்குள்ள தமிழர்கள் ஒரு இணக்கமான அமைதியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பதை திணிக்க பயண்படுத்தியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் தேவாலயத்தில் இருந்து திரும்பும் நாயகியிடம் உன் கடவுள் உன்னைக் காப்பாற்றாது. நான்தான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்கிறான் நாயகன். ஆனால் அவன் தினமும் புத்தரை வணங்கிவிட்டுத்தான் தன் அன்றாட வேலைகளை துவங்குகிறான்.
நாயகன் முன்னாள் ராணுவத்தினன் என்பதாலேயே நாயகி அவனை வெறுக்கிறாள். ஆனால் சாதாரன சிங்களவர்களிடம் அவளுக்கு வெறுப்பில்லை என்று காட்டப்படுகிறது. இதற்காக ஒரு படுக்கையறை காட்சி ஒன்று காட்டப்படுகிறது. ராணுவத்திலும் நல்ல சிங்களர்கள் இருக்கிறார்கள் குற்ற உணர்சி மிகுந்த நாயகன் பாத்திரம் அதைத்தான் காட்ட பயண்பட்டிருக்கிறது.
தமிழர் தரப்பு நியாயங்களையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். நாயகன் நாயகியிடம் உன் சகோதரர்கள் புலித்தீவிரவாதிகள் என்று நான் சொல்லவில்லையே என கேட்கிறார். அதற்கு நாயகி அவர்கள் பள்ளி சிறுவர்கள் என்றும் தன்னைக் காப்பாற்றுவதற்காகவே ராணுவத்தினருடன் சண்டை போடும்போது சுடப்பட்டனர் என்று சொல்கிறாள்.
படம் முழுவதும் ஒரு அடகுக்கடை, ஒரு வீதியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக நகரும் திரைக்கதை, திரும்பத் திரும்ப காட்டப்படும் காட்சிகள் என திரையங்கிற்கு வந்தால் சில காட்சிகள் கூட ஓடாத இப்படத்தை ஏன் வேண்டுமென்றே ஒரு வதந்தியைப் பரப்பி 22 மணிநேரம் போராடி இயக்குனரை அழைத்து படத்தை இலவசமாகக் காட்டுகிறார்கள். இதனால் அங்குள்ள தமிழர்களுக்கு நல்லது எதாவது நடந்து விடுமா? ஒரு சிங்கள இயக்குனருக்காக இப்படி தீவிரமாக வேலை செய்யும் இவரகள் ஏன்? முடங்கிப்போன தமிழ்ப்படகளுக்காக வேலை செய்யவில்லை. தொடர்ந்து சிங்களர்களுக்கு டாய்லெட் கழுவத்தயாரக இருக்கும் இவர்கள்தான் தமிழ் அமைப்புகளை தீவிரவாதிகள் என தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகிறார்கள்.
இன அழிப்பு நடைபெற்று இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற இத்தனை ஆண்டுகளில் அதனை ஒருமுறை கூட கண்டிக்கத் துப்பில்லாத சாரு, எஸ்.ரா போன்றவர்கள் இந்தப் படத்தின் திரையிடலுக்கு வந்திருந்தார்கள். படம் முடிந்ததும் வ.ஐ.ச. ஜெயபாலன் படத்தின் இயக்குனருக்கு சத்தமாக நன்றி சொன்னார். அவர் இந்தப்படத்தை எதற்காக ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது இயக்குனர் இந்தப்படத்தை எடுத்ததன் மூலம் அங்கு போருக்குப் பின் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. ஆனால், தமிழர்கள் இன்னும் ராணுவத்தின் மேல் மட்டும் (அதில் சில நல்லவர்கள் இருந்தாலும்) வெறுப்பாக இருக்கின்றனர். என சொல்கிறார். 13வது திருத்த சட்டத்தையே அமல்படுத்த மாட்டோம் என பகிரங்கமாக சொல்லும் சிங்கள அரசாங்கத்தை விமர்சனம் செய்ய துப்பில்லாதவர்கள்தான் இங்கு இலக்கியம் ஊடக சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழிய பேசுகிறார்கள். இனத்துக்காக போராடுகிறவர்களை இவர்கள்தான் ஈழவியாபாரிகள் என்று கொச்சைப்படுத்துகின்றனர். இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் குடும்பத்துக்காக இனத்தை விற்பவர்கள். அவர்களை போற்றும் அடிமைகளிடம் இருந்து நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.
அரங்கு நிறைந்து வழிந்தது. படம் முடிந்தவுடன் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர் சிலர். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சினிமா அடிமைகள் என்பதைத்தான் படத்தில் இயக்குனர் பலமுறை காட்டியுள்ளார். அது உண்மைதான் என நேற்று தெரிந்தது. தங்கள் எதிர்கால முதல்வரை இன்னும் வெள்ளித்திரைகளில்தான் தமிழன் (மொத்த இந்தியனும்) தேடிக்கொண்டிருக்கிறான். இவன் இப்படி இருக்கும் வரைக்கும் வெறும் ஒன்றரை கோடி பேர் இருக்கும் இலங்கை. 120 கோடி பேருக்கு மேல் இருக்கும் இந்திய மீனவனை என்ன வேண்டுமானாலும் செய்வான். ஏனென்றால் உதைபடும் மீனவன் பற்றிய நியாயத்தைவிட உதைக்கும் சிங்களனுக்கான நியாயத்தை கைக்காசு போட்டு விளக்க முயலும் தமிழ் ஸ்டூடியோ அருண் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
சிங்களர்களுக்காக கூட இங்கு குரல் கொடுக்க ஆட்கள் இருக்கின்றனர். சினிமாவை வெறும் சினிமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்கிறாகள். ”வாழ்க ஜனநாயகம்” ஆனால், அது தமிழச்சிகளின் பெண் குறிகளின் மேல் நிலைநாட்டப்படுகிறது. அதுவும் இங்கிருக்கும் அவர்களின் ரத்த உறவுகளினால் என்பதுதான் வேதனை.