என் குடும்பம் பரம்பரை காங்கிரஸ் குடும்பம் , அப்பா வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தவர், அம்மாவின் அப்பா பஞ்சாயத்து தலைவராக இருந்தவர், அம்மாவின் சித்தப்பா சேர்மன்ஆக இருந்தவர்,வீட்டில் காங்கிரஸ் தவிர மாற்று கட்சிக்கு ஓட்டுபோட மாட்டார்கள்.. அப்பா ஊரில் அனைத்து கட்சி விவசாய சங்க தலைவராக இருக்கிறார்.
நான் இருபத்தியோரவது வயதில் பி.ஜெ..பி யில் சேர்ந்தேன் அப்போது எங்கள் ஊரில் நானும் நண்பன் கணேசும் மட்டுமே அதன் அதிகாரபூர்வ உறுப்பினர்கள், எங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சித்தப்பா மட்டுமே சீனியர் உறுப்பினர்.
என்னுடைய தகப்பனார் என்னை கூப்பிட்டு கண்டித்தார், நம் குடும்பம் காங்கிரஸ் குடும்பம் நமக்கு அதெல்லாம் ஆகாது, அதனால் பி.ஜெ .பி யில் இருந்து விலகிவிடச்சொன்னார் ஆனால் நான் மறுத்துவிட்டேன்,
ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது என் தந்தை அன்று நாள் முழுவதும் யாருடனும் பேசவோ சாப்பிடவோ இல்லை. எங்கள் வீட்டில் ராஜிவ்காந்தியின் பெரிய படம் ஒன்று இடபுறம் மாட்டியிருக்கும் அதற்க்கு வலதுபுறம் அதே அளவுள்ள பிரபாகரன் படம் மாட்டியிருக்கும் ,
ராஜிவ்காந்தி இறக்கும்வரை எத்தனையோ காங்கிரஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கின்றனர் அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லாத அவர்கள் ராஜீவ்காந்தி மரணத்துக்குப்பின் என்ன தலைவரே பிரபாகரன் படத்த தூக்கிப்போடுங்க, அதுவும் தலைவர் படத்துக்கு பக்கத்துலயே இருக்கிறது என்னமோ போல இருக்கு என சொல்வார்கள் , ஆனால் பையன் அவர் மேல ரொம்ப பிரியமா இருப்பான், அதனால் ஒன்றும் சொல்வதில்லை என்பார்,
எனக்கு சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் திரு. லீ குவான் யு மற்றும் திரு.பிரபாகரன் இருவர் மட்டுமே ரோல் மாடல்கள். முன்னவர் ஒரு மீன்பிடி கிராமத்தை உலகிற்கே முன் மாதிரியாக மாற்றியவர், பின்னவர் தன் இனத்துக்காக உயிரை பணயம் வைத்தவர் .
சில நாட்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது நான் வாழ்நாள் முழுதும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க போவதில்லை என்று சொன்னேன். அதை மௌனமாக கேட்டுகொண்டிருந்துவிட்டு அது அவன் விருப்பம் என்றார் .
இந்தியாவில் சேகுவேரா படத்தை எப்படி வேண்டுமானால் பயன்படுத்தலாம் மற்ற புரட்சியாளர்களைகூட (முஸ்லீம் புரட்சியாளர் தவிர்த்து ) எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம், ஆனால் தமிழ்நாட்டில் கூட பிரபாகரன் படத்தை செய்திக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்,இவ்வளவிற்கும் தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர்கள் என்று பார்த்தால் ஒரு ஐந்து விழுக்காட்டினர் மட்டும்தான் இருப்பார்கள், ஆனால் இன்று தமிழகத்தின் குடுமி அவர்கள் கையில் இருக்கிறது,

விடுதலைபுலிகள்தான் ராஜிவ்காந்தியை கொன்றார்கள் என்பதற்கு இன்னும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இதில் நம் அரசியல் தலைவர்கள் பெயரும் அடிபடுகிறது, என்ன உண்மை என்பது பிரபாகரனுக்கே தெரியுமா?
இந்த இக்கட்டான நேரத்தில் கலைஞர் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியை திருப்தி படுத்த வேண்டிய கட்டாயம் , ஆனால் மக்கள் மத்தியில் அவர் தமிழின தலைவர் என்ற நாற்காலி எப்போதோ அகற்றப்பட்டுவிட்டது.
இப்போதுகூட நேரம் கடந்துவிடவில்லை, தி.மு.க , ம.தி.மு.க . பா.ம க, விடுதலை சிறுத்தைகள் , பி.ஜெ .பி , வலது மற்றும் இடது சாரிகள் எல்லோரும் ஒருங்கிணைந்து மத்திய அரசை வலியுறுத்தினால் இலங்கையில் நல்லது நடக்கும் இல்லையேல் விடுதலைப்புலிகளால் மட்டுமே இதற்கு விடைகான முடியும் .
இங்கு சோனியா ஒருவரின் விருப்பு வெறுப்பின் பேரில்தான் காங்கிரஸ் இயங்குவதால் சிங்கள அதிகார வர்க்கத்துக்கு மட்டுமே மத்திய அரசாங்கம் உதவிசெய்யும், எனவே மத்திய அரசை எதிர்பார்ப்பது வீண்.
ராஜீவ்காந்தி ஒன்றும் கடவுளின் அவதாரம் அல்ல, இந்திரா காந்தி மற்றும் மகாத்மா போன்ற தலைவர்களுடன் ஒப்பிட்டால் ராஜீவ் காந்தியின் மரணம் ஒன்றுமே இல்லை, ஆனால் பிழைப்புவாதிகளின் உலகத்தில் ''வல்லான் வகுத்ததே வாய்கால் '' நியாயம், நேர்மை , எல்லாம் நம்மைப்போல் நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே,
இலங்கையில் தமிழன் சாவது அவன் தலைஎழுத்து என்று விட்டுவிடுவோம் ...
ஜெய் சோனியா மாதா கி ஜெ .....
3 கருத்துகள்:
இதில் சோனிகாந்தியைவிடவும் அதிகம் கண்டிக்கவேண்டியவர்கள் நம் தமிழின தலைவர் என்று நம்மை ஏமாற்றும் கோஷ்டியனரும் தமிழக காங்கிரஸ் கோமாளிகளும்தான். ராசிவ் காந்தியை கொன்றவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்று உறுதியாக சோனியா நம்பினால் ஏன் நளினியையும் ரங்கநாத்தையும் பார்க்க பிரயத்தனப்படவேண்டும். சோனியாவின் குடும்பம் ராசிவ் கொலையை மறந்தாலும் நம் தமிழக காங்கிரஸ் ஓட்டுப்பொறிக்கிகள் அதை மறக்கவிடமாட்டார்கள். இவர்களுக்கு ஓட்டு வாங்க யாரையாவது காட்டி அனுதாபம் பெறவேண்டும். இவர்கள் சோனியா குடும்பத்தை பிடித்து இன்னும் தொங்கிக்கொண்டிக்கும் காரணமும் அதுதான். இவர்களுக்கு தம் கொள்கைகளையோ சாதனைகளையோ சொல்லி ஓட்டு கேட்க என்றுமே திராணி இருந்ததில்லை. இவர்களுக்கு தேர்தலை சந்திக்க ஏதாவது ஒரு கவர்ச்சி முகம் வேண்டும். இப்போது இருக்கும் காங்கிரஸ் தலைவர்களின் முகத்தைக்காட்டி ஓட்டுக் கேட்டால் ஒரு நாய் கூட சீண்டாது. இல்லையென்றால் நூறு வருட பாரம்பரியம் உள்ளது என்று பறைசாற்றிக்கொள்ளும் ஒரு கட்சி ஒரு வெளிநாட்டவரிடம் தலைமைப்பதவியை ஓப்படைத்துவிட்டு இப்படி மானம்கெட்டு கிடக்குமா? சோனியாவையும் ராசீவையும் இவர்கள் இந்த தாங்கு தாங்குவது அந்த குடும்பத்தின் மீது உள்ள பாசத்தினால் அல்ல.எல்லாம் இவர்களின் சுயலாபத்துக்காகத்தான். பிரியங்காவை இழுக்க என்னென்னவோ செய்தார்கள்.அந்தம்மா கல்யாணம் காட்சி குழந்தை குட்டி என்று செட்டிலாகிவிட்டது. இப்போது ராகுலை இழுக்கப்பார்க்கிரார்கள்.இன்று இவர்கள் புலிகளை எதிர்ப்பது ஏதோ ராசிவ் மீதி கொண்ட காதல்லால் அல்ல. அதன் மூலமாக சோனியாவின் அருட்பார்வையை தம்மேல் இழுத்து அதன் மூலமாக பதவிப்பலனை அடையத்தான்.
இதில் தமிழினத்தலைவரின் நாடகம்தான் ஹைலைட். இந்த மாதிரி ஈனப் பிழைப்பு நடத்துவதற்குப்பதில் இவர்கள்.............................
மத்தியில் எந்த அரசு வந்தாலும் இதே நிலை தான். நீங்கள் ஆதரிக்கிற பி.ஜே.பி. உள்பட எந்த அரசும் ஈழத்தில் நிகழ்கிற அவலத்தைத் தட்டிக் கேட்கப் போவதில்லை. கருணாநிதி மீதான மக்களின் அதிருப்தியை அறுவடை செய்வதற்காக ஈழ விடுதலை ஆதரிப்பார்களே ஒழிய தேர்தலுக்குப் பின் ஒருபோதும் இதற்கான தீர்வுகளை முன்னெடுக்கப் போவதில்லை. நீங்கள் காங்கிரஸ் இயக்கத்தைக் கைகழுவியது போலவே பி.ஜே.பியையும் கைகழுவும் நாள் வரும். தமிழருக்கான தீர்வு வந்தே ஆகவேண்டும் என்கிற உங்கள் உணர்வுக்குப் பாராட்டுகள். நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
நான் பி.ஜெ.பி யை விட்டு வந்து ஆறு வருடங்களுக்கு மேலாகிறது ..
ஒருமுறை இல.கணேசன் நாம் முதலில் R.S.S அப்புறம்தான் பி.ஜெ.பி என்று சொன்னார். அந்த நிமிடமே அவர்களின் உள்நோக்கம் புரிந்து வெளிவந்ததுவிட்டேன் , தற்சமயம் எந்த அரசியல் அமைப்பிலும் நான் இல்லை ,
ஈழ பிரச்சினையில் நாளை பி.ஜெ.பி ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் சொன்னது நடக்கலாம், ஏனெனில் தற்போது இந்திய அரசாங்கம் அமெரிக்கா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறது , ஆனால் மறுபடியும் திரு. ஜார்ஜ் பெர்ணன்டஸ் ராணுவ அமைச்சராக வந்தால் நிலைமை தமிழர்களுக்கு சாதமாக இருக்கும் .
கருத்துரையிடுக