பிரிவின் வேதனை சுடுகிறது
என்பவனுக்கு
பிரிவின் பின்னர்தான்
திளைக்க திளைக்க
நினைவில் நனைகிறேன்
என்பதை எப்படி புரியவைப்பேன்..
நிராகரித்தலின்
வேதனையை அனுபவித்ததுண்டா
என்பவனிடம்
எப்படி பகிர ..
ஒரு
நிராகரித்தலின் பின்தான்
திகட்ட திகட்ட
அன்பை சுவைப்பதை...
எனக்கு மட்டும்
ஏன்
இப்படியெல்லாம் நிகழுது
என்றவனுக்கு
எல்லாவற்றிலும் மீண்டஅனுபவத்தை
எப்படி விளக்குவேன் ..?
ஐய்யகோ!..
புலிகளை அழித்துவிட்டனரே..!
கதறி துடித்த தோழனுக்கு
தெரியவில்லை
பதுங்கி பாய்வதுதான்
புலிகளின் குணமென்று....!!!
கொத்து குண்டுகள்
மொத்தமாய் போட்டவனுக்கு
யாரும் சொல்லவில்லையா
நியூட்டனின் மூன்றாம் விதியை..?
4 கருத்துகள்:
மிக அழகான கவிதை...
வாழ்த்துக்கள் நண்பரே..
நீங்கள் இதை நீங்கள் tamilish.com - ல் இணைத்து உள்ளீர்களா..???
நண்பருக்கு நன்றி
thamilish ல் இணைத்திருக்கிறேன்
ரொம்ப நாளுக்கு பிறகு உங்க ப்ளாக் பார்க்கிறேன். கவிதை அருமை....
ஆனாலும் புறக்கணிப்பின் வலி...!!!
'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'
படத்துல ஒரு வசனம் வரும்.... "மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது"... அதான் ஞாபகம் வருது
எங்கன்ன பாத்து நாள் ஆகிடுச்சு...இன்னும் போஸ்ட் எதுவும் போடல ரொம்ப பிசியா...புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...
கருத்துரையிடுக