25 செப்., 2010

ஐயா திலீபன் எங்கையா போகின்றாய்...

நாளை (26.09.2010) தியாகி திலீபனின் நினைவு தினம் அவருக்கு என் வீரவணக்கம்....

வீரமறவன் நீ... 
தியாக தீபமாய் தன்னையே 
எரித்துக் கொண்டவன் நீ...
அகிம்சை தேசத்துக்கு உன்னையே 
கோரிக்கையாய் வைத்தவன் நீ...

நீ புலி ...
பசி துறந்து பலியான புலி ...

திலீபா நீ விதைக்கப்பட்டாய் 
எம் மனங்களில்,
இந்திய தேசத்தின் மீது மாறாத 
நம்பிக்கை கொண்டவன் நீ,
அன்றைக்கும், இன்றைக்கும், 
என்றைக்கும் உதவாது இந்தியா,

அன்று உன்னை மட்டும் இழந்தோம்,
இப்போது லச்சங்களில் இழந்தோம் 
இன்னும் 
இன்னும் 
இழப்பதற்கு 
தயாராய் இருக்கிறோம்,
ஒன்றை இழந்தே ஒன்றை பெரும் விதி 
ஒருநாள் உண்மையாகும்.

இத்தாலி அன்னையை 
ஏற்றுக்கொள்ளும் அடிவருடிகள்..
ஈனப் பிறவிகள் இப்போது மகிழலாம்,
முள்ளிவாய்க்கால் 
முடிவல்ல ஆரம்பம்..

ஈழம் நிச்சயம் வந்தே தீரும்..
திலீபா உனக்கு என் வீரவணக்கம்.

திலீபனின் வீர உரை ...


காசி ஆனந்தன் இரங்கல் கவிதை .....

18 கருத்துகள்:

மைந்தன் சிவா சொன்னது…

மாறாத நம்பிக்கை கொண்டவன் நீ,அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் உதவாது இந்தியா,
அன்று உன்னை மட்டும் இழந்தோம்,இப்போது லச்சங்களில் இழந்தோம் //
உண்மை தான்..பதிவிட்டமைக்கு நன்றிகள் செந்தில் அண்ணே

என்னது நானு யாரா? சொன்னது…

கண்டிப்பாக ஒரு நாள் அமைதி பூமியா, பூலோக சொர்கமாக இலங்கை மறுபடியும் மாறத்தான் போகிறது.

அந்த நல்ல காலம் வரும்வரை பொறுத்திருப்போம் அண்ணாச்சி!

வீடியோக்களைப் பார்த்தேன். உணர்ச்சிப் பிழம்பாய் கவிதை வரிகள். பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்!

விந்தைமனிதன் சொன்னது…

ஈழம் என்கிற எமது தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் கனவை என்றும் இழந்துவிடாதிருப்போம். நம் தளை அற்று வீழும் ஒருநாள்! அன்று விருட்சமாகும் எம் கனவின் விதை!

திலீபனுக்கும், ஈழத்திற்காய் களமாடி மரணித்த மாவீரர்களுக்கும், ஈழப்போரில் மாண்ட எம் உறவுகளுக்கும் எம் வீரவணக்கங்கள்!

காமராஜ் சொன்னது…

தியாகி திலீபனுக்கு அஞ்சலிகள்.உலகில் எங்கு அநீதி நடந்தாலும் தட்டிக்கேட்டால் நீ தோழன்.

அலைகள் பாலா சொன்னது…

எரிமலை மேலே தண்ணீர் ஊற்றுகிறார்கள். வெடிக்கும் போது மேலே நின்று நீர் ஊற்றுபவர்களும் சிதறி விடுவார்கள். அந்த நாளை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Ramesh சொன்னது…

http://velicham007.blogspot.com/

ithap paaru...

வானம்பாடிகள் சொன்னது…

நினைவு கூர்ந்தமைக்கு நன்றி செந்தில்

கும்மி சொன்னது…

வீரப்போராளிக்கு வீரவணக்கங்கள்!

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

வீர வணக்கம்.

அன்பரசன் சொன்னது…

வீரவணக்கங்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பதிவிட்டமைக்கு நன்றி

யாதவன் சொன்னது…

நல்லூர் முன்றலில் இருந்து கவிதை கேட்ட நினைவுதான் வருது
தீலீபன் அண்ணா எங்கு சென்றாய்

கும்க்கி சொன்னது…

என்ன சொல்ல...திலீபா...

வார்த்தைகளில்லை..

கையாலாகாத எம் புலம்பல்கள் சரி செய்யவியலாது உன் தியாகத்தை...

இனவெழுச்சிக்கான முதல் தீ உரசலே உன்னுயிர்தான்....

தீப்பிடித்த மனதினை வெளிக்காட்டாமல் சூழ்நிலை கருதிய சுயநல அடையாளங்களுக்காய் எம் இதயத்தை இயங்கப்பெற்றிருக்கிறோம் நாங்கள்...

கையாலாகாததும்..,
பழம் பெருமை பேசித்திரிவதும்..,
ஊடக வெளியில் சுயம் தொலைத்ததுமான..,
இலவசங்களில் ஆட்பட்டுவிட்டதுமான
ஒரு மொன்னை சமூக வழி பிறப்பில்.,
கூனிக்குறுகி சுயமிழந்ததுமில்லாமல்..,


சற்றும் பொருத்தமில்லா அய்ரோப்பிய வாழ்நிலைகளை கைக்கொள்ளும் உத்வேகத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் எமது வாழ்நிலையில் உனது பெயர் இன்னமும் எத்தனை காலம் நினைவிலிருக்குமென்ற அய்யமும் சேர்ந்தே என்னைக்கொல்கிறதே திலீபா...
திலீபா...
சிறு பூச்சியினும் கேவலமாய் உணர்கிறேன் இந்தக்கணம் என்னை...

ஹேமா சொன்னது…

ஈழத் தமிழர்களின் சார்பில் கைகோர்த்த நன்றி செந்தில்.
மறக்கமுடியுமா
திலீபன் அண்ணாவை !

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

இவரைப் பற்றி படித்ததுண்டு.. இன்று தான் காண்கின்றேன்.. பகிர்வுக்கு நன்றி..

முகிலன் சொன்னது…

திலீபனுக்கு வீர வணக்கம்..

muthu சொன்னது…

வீர வணக்கம்.... வீர வணக்கம்....

திலீபனுக்கு வீர வணக்கம்..

வீர வணக்கம்.... வீர வணக்கம்....

களமாடிய மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

தஞ்சாவூரான் சொன்னது…

திலீபனின் தியாகத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஈழக்கனவு நனவாகும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையுடன் ...

தஞ்சாவூரான்