நிரம்பி வழியும் உரையாடலில்
கவனிக்காமல் விட்டுவிட்ட சொற்கள்
காற்றை தழுவுகின்றன...
விதிப்படி நடக்கட்டுமென
விட்டு வைத்திருந்த வாழ்வை
மிதித்து சென்றது சமூகம் ...
என் குறைகளை
உன் மனக்கண்ணாடியில்தான்
உலகம் பார்க்கிறது ...
உன்னை ஏற்றுக்கொண்டதற்கு
ஒரு காரணம்
விலக்கி வைப்பதற்கு ஆயிரம் சம்பவங்கள் ...
நீ என் உயிருக்கு நேராய் இருந்தாய்
நேற்று வரைக்கும் ...
நண்பர்கள் அதிகம் கொண்ட எல்லோருக்கும்
எதிரிகளும் அதிகம்...
திட்டமிட்டு பழகவில்லை நாம்
திட்டமிட்டுதான் பிரிகிறோம் ...
என் வாழ்வை கிழித்து தொங்கவிட்டது
சில நட்பு,
அதிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தது
சில நட்பு...
ஒரு நட்பிலிருந்து
இன்னொருவருக்கு சுலபமாக தாவுகிறோம்
சிரமப்பட்டு அறுக்கிறோம் ...
யாருக்கும் துணிவில்லாத போது
சாகத் துவங்கியது நீதி.
31 கருத்துகள்:
உண்மையான வரிகள்.
வேறு வழியில்லை. நினைக்க தெரிந்த மனமே. உனக்கு மறக்க தெரியாதா என்று பாடுவதை தவிர.
எல்லா ஆரம்பமே முடிவை நோக்கி தானே.
//ஒரு நட்பிலிருந்து
இன்னொருவருக்கு சுலபமாக தாவுகிறோம்
சிரமப்பட்டு அறுக்கிறோம் ...
யாருக்கும் துணிவில்லாத போது
சாகத் துவங்கியது நீதி.//
Super..
"வாழ்தலின் பயணத்தில்'னு தொடங்குற லீனா மணிமேகலை கவிதைய ஞாபகத்துக்குக் கொண்டு வருது... உதிர்க்கத் தான் நேர்கிறது உறவுகளை... அவ்வப்போது!
"பூ- உதிரும் என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்கள் மலரும் என்பதும் உண்மை" - இது 'யுகசந்தி' சிறுகதைத் தொகுப்பில் ஜெயகாந்தன் சொன்னது!
உண்மையை சொல்ல பூச்சுவேலைகள் தேவையில்லை! கவிதை உண்மையைப் பேசுகிறது
என்னதான் புதிதாய் தோன்றினாலும் தழும்பும் வலியும் அப்படியேதான் இருக்குமே செந்தில்:)
உண்மை
/ திட்டமிட்டு பழகவில்லை நாம்
திட்டமிட்டுதான் பிரிகிறோம் ... /
பல நேரம் இது கொடுமை அண்ணே..
அட..அட.. என்ன அற்புதமான வரிகள்! அண்ணாச்சி அருமை! அருமை! வரிகளில் கவிதைத் தாண்டவம் ஆடுகிறது. வாழ்த்துக்கள்!
///யாருக்கும் துணிவில்லாத போது
சாகத் துவங்கியது நீதி./////
வெகு நேரம் பிடித்தது முழுவதும் உள் வாங்குவதற்கு இந்த வரிகளை ! இதுதான் உண்மை . அருமை நண்பரே .
தலைப்புக்கேற்ற படம் பிடித்தது. ஆயிரம் வார்த்தைகள் தேவையில்லை.
அப்புறமா, உடுக்கை இழந்தவன் கைபோல.... நட்புக்கும் கற்பு உண்டு, உன் நண்பர்கள் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்.... இப்படி எல்லாம் கூட சொல்கிறார்களே???
எனக்கு பாடசாலை நாட்களில் நட்பு வட்டம் இருந்ததோடு சரி. இப்போ நான் நட்பு என்று கருதுவது "பதிவுலகம்" தான். H..m..m...m..பார்க்கலாம்....!!!
//திட்டமிட்டு பழகவில்லை நாம்
திட்டமிட்டுதான் பிரிகிறோம் ...//
//ஒரு நட்பிலிருந்து
இன்னொருவருக்கு சுலபமாக தாவுகிறோம்
சிரமப்பட்டு அறுக்கிறோம் ... //
உண்மைதான், யதார்த்தமான வரிகள்
யாருக்கும் துணிவில்லாத போது
சாகத் துவங்கியது நீதி.
நீதி சாவதில்லை,. செத்தால் அது நீதியுமல்ல,.
அருமையான கவிதை செந்தில்
அண்ணே என்ன சொல்ல.. ஒரு பெருமூச்சுதான் விட முடியுது கவிதய படிச்சு முடிச்ச உடனே
//என் வாழ்வை கிழித்து தொங்கவிட்டது
சில நட்பு,
அதிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தது
சில நட்பு..//
நட்பைப் பிரிந்தவர்களுக்கு புரியும் இந்த வலி..
பிரிந்த பின்பு சில சமயம் அதிகமாய் இனித்தும் தொலைக்கிறது..
//திட்டமிட்டு பழகவில்லை நாம்
திட்டமிட்டுதான் பிரிகிறோம் ...//
நட்பிற்குள் ஈகோ இருக்ககூடாது தான் , சில நேரம் பிரிவிற்கு அதே காரணமாகி விடுகிறது.
பின் பிரிவிற்கான திட்டமிடுதலும் சேர்ந்தே போட படுகிறது. காலம் கடந்த பின் தான் பலரும் நல்ல நட்பை இழந்ததை புரிந்து கொள்கிறார்கள்....
யதார்த்தமான வரிகள். நன்றி.
நல்ல வரிகள் செந்தில்
உங்கள் சிந்தனை தொடரட்டும் எங்கள் வாழ்த்துகளுடன்.....
பூ....நட்பூ......மணக்கிறது
present sir
//அதிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தது
சில நட்பு...//
இது உடுக்கை இழந்தவன் கைபோலன்றி வேறென்னவாம்? :(
செந்தில்...@ நட்பினை பற்றிய எதார்த்த விளக்கம்...அருமை!
///ஒரு நட்பிலிருந்து
இன்னொருவருக்கு சுலபமாக தாவுகிறோம்
சிரமப்பட்டு அறுக்கிறோம் ...///
இதை நான் உணர்ந்த தருணத்தை மீண்டும் இப்பொழுது உணர்கிறேன்.உண்மை கவிதை
ஹ்ம்ம்ம்ம்ம்.... ரைட்டு!
நான் பஞ்சாயத்து ஆணியே புடுங்க வரல, மாப்ள!! :)
திட்டமிட்டு பழகவில்லை நாம்
திட்டமிட்டுதான் பிரிகிறோம் ...
நெஞ்ச தொட்டுடிங்க நண்பா
நல்ல வரிகள்...
//நிரம்பி வழியும் உரையாடலில்
கவனிக்காமல் விட்டுவிட்ட சொற்கள்
காற்றை தழுவுகின்றன...//
கவிதை அருமை!
படத்தை எங்குபிடித்தீர்கள்!கவிதைக்கு உறையிட்டது போல், கச்சிதம்!
அண்ணே செம சூப்பர்!
"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...
நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..
உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது
உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....
முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......
//என் வாழ்வை கிழித்து தொங்கவிட்டது
சில நட்பு,
அதிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தது
சில நட்பு...//
எல்லோர் வாழ்விலும் இப்படி ஒரு கட்டம் வருவது உண்மை போல.
அருமையான வரிகள். நல்ல நட்புகள் நிழலைப் போல தொடர் வாழ்த்துக்கள் செந்தில் ண்ணா.. :)
super senthil.......
thodarattum umm pani.....
vaaztthukkal aayiram umakku.....
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
//ஒரு நட்பிலிருந்து
இன்னொருவருக்கு சுலபமாக தாவுகிறோம்
சிரமப்பட்டு அறுக்கிறோம் ...
//
இது உண்மை அண்ணா ..!!
கருத்துரையிடுக