விருப்பம் இல்லை என்றாலும்
வாங்கத்தான் வேண்டியிருக்கிறது
யாரிடமாவது கடனாக..
பாறைகள் சாலைகளாகவும்
வீடுகளாகவும்
சமயங்களில் கடவுளாகவும்..
கோவிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள்,
கருவறையில் ஏமாற்றுக்காரர்கள்,
நடுவே சுயநலக்காரர்கள்..
நாம் அவர்களையும்
அவர்கள் நம்மையும்,
சகித்துக்கொண்டுதான் வாழ்கிறோம்..
பணக்காரர்கள் சிலர்,
கடவுள்களும் சிலரே,
மற்றெல்லோரும் ஏழைகளே..
மிகப்பெரிய உலகம்
மிகப்பெரிய மனிதர்கள் கூட்டம்
மிகச்சிறிய மனது..
குல தெய்வத்துக்கு
இரண்டு கெடா, சாராயம், சுருட்டு
சாப்பிடும்போது தகராறு..
காக்கும் சாமியின் கோவிலுக்கு
பாதுகாப்பாய்
ஒரு காவலாளியும், மூன்று பெரிய பூட்டுகளும் ..
உதிர்கிற இலை ஒவ்வொன்றின்
மரணத்திலும்
வளர்கிறது ஒரு காடு..
30 கருத்துகள்:
கடைசி வரி சிலிர்ப்பு தலைவரே..
கவிதையும் படமும் நன்றாகவே இருக்கிறது.மிக,மிக..../
/ காக்கும் சாமியின் கோவிலுக்கு
பாதுகாப்பாய்
ஒரு காவலாளியும், மூன்று பெரிய பூட்டுகளும் .. /
/ உதிர்கிற இலை ஒவ்வொன்றின்
மரணத்திலும்
வளர்கிறது ஒரு காடு.. /
அண்ணே அருமை.. நிறைய யோசிக்க வைக்கிறது
அசத்தல்!!!!
இறுதி வரிகளில் அவிழும் கண்ணி ருசியேற்றுகிறது கவித்துவம் கடந்தும்
கடைசி வரிகள் கவிதையை கடந்த வரிகள் அருமையான சிலிர்ப்பு
உயிரோட்டமுள்ள வரிகள்
//பாறைகள் சாலைகளாகவும்
வீடுகளாகவும்
சமயங்களில் கடவுளாகவும்..
///
ஆமாம் அண்ணா , உண்மை ..!!
ஒவ்வொரு கவிதையும்.... உண்மையான வரிகள்
கலக்கல்
/காக்கும் சாமியின் கோவிலுக்கு
பாதுகாப்பாய்
ஒரு காவலாளியும், மூன்று பெரிய பூட்டுகளும் ../
Good one Senthil.
அடேங்கப்பா!!
irukkattum
ஒரு காவலாளியும் மூன்று பெரிய பூட்டுக்களும் யாருக்கு ...
கடவுளுக்கா ?பிறகெப்படி அவர் எங்களை,வாழ்க்கையை,உயிரை,
மனிதத்தை,பண்புகளை......
எல்லாம் காக்க !
//காக்கும் சாமியின் கோவிலுக்கு
பாதுகாப்பாய்
ஒரு காவலாளியும், மூன்று பெரிய பூட்டுகளும் ..//
காரணம் கூற முடியாத உண்மை,
செல்வச்சிறை, பக்திசிறை, அறியாமைச்சிறை இதில் ஏதாவது ஒன்றினுள் எங்களை அடைத்துவிட்டு ஜாலியாய் காலம் தள்ளவேண்டியது தான். மீள்வது பற்றி யோசிச்சுப் பார்த்தா "எங்கே செல்லும் இந்தப் பாதை" என்று உங்கள் முகப்பு தான் கண் முன்னே தெரிகிறது.
செந்தில், தயவு செய்து ஒரு பயோடேட்டா போடுங்களேன்.
கோவிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள்,
கருவறையில் ஏமாற்றுக்காரர்கள்,
நடுவே சுயநலக்காரர்கள்..///
CLAPS.........!!!!!!!!
I Love the whole poems senthil....lovely!
செமயான கவிதை.எனக்குப்பிடித்த வரிகள் >>>
உதிர்கிற இலை ஒவ்வொன்றின்
மரணத்திலும்
வளர்கிறது ஒரு காடு....>>>>
வாழ்த்துக்கள் சார்.
//கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள்,
கருவறையில் ஏமாற்றுக்காரர்கள்,
நடுவே சுயநலக்காரர்கள்..//
முற்றிலும் உண்மை செந்திலண்ணா...இறைவனை அடைந்துவிட துடிக்கும் எல்லா ஜீவன்களுக்கும், அவ்விதமானவர்களை அடைந்துவிடவும், கறக்க முடிந்தவரை கறந்துவிடவும் துடிக்கும் ஜென்மங்கள் பற்பல. அவற்றிற்கெல்லாம் மதமும் ஒரு பொருட்டல்ல....மனிதாபிமானமும் ஒரு பொருட்டல்ல. நல்ல கவிதை. அருமையான கரு. வாழ்த்துக்கள்!
/////உதிர்கிற இலை ஒவ்வொன்றின்
மரணத்திலும்
வளர்கிறது ஒரு காடு..////
இந்தப் பதிவில் ஒவ்வொரு வரிகளும் அழுத்தம் அதிலும் இந்த இறுதி வார்த்தைகள் அசத்தலோ அசத்தல் . அருமை நண்பரே உண்மையும் உணர்வுகளும் வார்த்தைகளில் வெளிப்பட்டு இருக்கிறது
விருப்பம் இல்லை என்றாலும் வாங்கத்தான் வேண்டியிருக்கிறது யாரிடமாவது கடனாக..//
எல்லாமே இப்படி தான் உள்ளது. விருப்பமில்லாமல் வாழுவது, மணம் முடிப்பது என்று. ஆனாலும் வாழ்கிறோம். அருமையான கவிதை.
//கோவிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள்,
கருவறையில் ஏமாற்றுக்காரர்கள்,
நடுவே சுயநலக்காரர்கள்..//
நல்ல வரிகள்.
\\காக்கும் சாமியின் கோவிலுக்கு
பாதுகாப்பாய்
ஒரு காவலாளியும், மூன்று பெரிய பூட்டுகளும் ..// இது ஒன்னே போதும்! சூப்பர்@
கவிதை அருமையா வந்திருக்கு தல! வாழ்த்துக்கள்!
//காக்கும் சாமியின் கோவிலுக்கு
பாதுகாப்பாய்
ஒரு காவலாளியும், மூன்று பெரிய பூட்டுகளும் ..
உதிர்கிற இலை ஒவ்வொன்றின்
மரணத்திலும்
வளர்கிறது ஒரு காடு..//
இந்த அசத்தல் வரிகள் சொல்லும் அர்த்தங்கள்தான் தல , அத்தனை மேல் வரிகளும்..!
எங்கயோ போய்ட்டீங்க! கலக்கல்! :)
//உதிர்கிற இலை ஒவ்வொன்றின்
மரணத்திலும்
வளர்கிறது ஒரு காடு..//
அருமை மாம்ஸ் இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறேன் உங்களிடம்...
அசத்தல்
அருமை அண்ணா!
கடைசிவரில கவிதையின் பெருங்கதவு ஒன்று திறந்து கொள்கிறது!
செந்தில் கடவுள்களை கடைசியில்
பணக்காரர்களோடு சேர்த்த விதம்
அருமை.
எல்லாமும் அருமை தோழா.
//நாம் அவர்களையும்
அவர்கள் நம்மையும்,
சகித்துக்கொண்டுதான் வாழ்கிறோம்..//
சிலபோதுகளில் நாம் நம்மையும்கூட....
ம்ம்ம்.... இப்படியெல்லாம் கவிதை எழுதுனா என்னாவுறது சின்னூண்டு மனசு?!
அருமையான கவிதை. கோவில் என்ற ஏமாற்று அமைப்பு பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள்.
கருத்துரையிடுக