8 அக்., 2010

தோற்றம்.. மறைவு ...

பார்வைகள் தீண்டிகொண்ட 
ஒரு நொடியின் மரணத்தில் 
உயிர்த்தது நம் காதல்..

பறிமாறிக்கொண்ட அனைத்திலும் 
மேன்மையானது
மின்தூக்கி தனிமையின்
முதல் எச்சில் வினாடிகள்..

அன்னிய தேச அலுவல் நிமித்தம் 
அனுப்பப்பட்டோம் - அங்கு 
அதிகப்படியான  இரவுகளை   
ஆதி மனிதர்களாய் கடந்தோம்..

வாழ்வியல் கடமைகள் 
திருமண ஒப்பந்தத்தை 
தள்ளி வைத்து நகர்ந்த காலத்தில் 
ஊடாக வந்த நட்புகளால் 
சந்தேக சங்கடம் ..

நிலவை தொலைத்த 
நாளின் நள்ளிரவில் 
உரத்த குரலெடுத்து கதறிய காதல்
மறுநாள் அதிகாலை,
பார்வைகள் 
தீண்டத் தயங்கிய கணத்தில்  
மரித்துப்போனது.

20 கருத்துகள்:

எல் கே சொன்னது…

தேர்ந்தெடுத்த வரிகள் .. கவிதை அருமை

தமிழ் உதயம் சொன்னது…

தோற்றம்... மறைவு... எல்லாவற்றுக்கும் உண்டு. காதல் மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன. மனம் கவர்ந்த கவிதை, வரிகள்.

அம்பிகா சொன்னது…

நிஜமாவே காதலுக்கு மறைவு உண்டா? அது நிஜமென்றால்....,

ஜெயந்தி சொன்னது…

புரியிர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.

பவள சங்கரி சொன்னது…

நல்லாயிருக்குங்க.....வாழ்த்துக்கள்.

vasu balaji சொன்னது…

/நள்ளிரவில் உரத்த குரலெடுத்து கதறிய காதல்மறுநாள் அதிகாலை,பார்வைகள் தீண்டத் தயங்கிய கணத்தில் மரித்துப்போனது/

அது காதல்?

வினோ சொன்னது…

கவிதை அருமை..

அண்ணே, மறைந்து,மரித்துபோகும் காதல் இருக்கா ?

Unknown சொன்னது…

பார்வைகள் தீண்டிய நொடியின் மரணத்தில் பூத்த காதல்...பார்வைகள்
தீண்டத் தயங்கிய கணத்தில் மரித்துப்போனது.
நல்லா இருக்குண்ணே...

vinthaimanithan சொன்னது…

எக்ஸெலண்ட்!

எல்லாவற்றையும் பகுத்துப் பார்க்கும் தத்துவ அறிவியல் புனிதம் என்று எதனையும் பீடத்தில் ஏற்றிவைக்க மறுக்கிறது. காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?!

தோன்றும் அனைத்தும் மறைவதும், உருமாற்றம் கொள்வதும் இயற்கையின் இயங்கியல்விதி... காதல் உட்பட...

மேலும் நிபந்தனைகளற்ற நேசம் அல்லது காதல் என்பது ideal ஆக வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம், practical ஆக அல்ல என்பது என் கருத்து

பனித்துளி சங்கர் சொன்னது…

////நிலவை தொலைத்த
நாளின் நள்ளிரவில்
உரத்த குரலெடுத்து கதறிய காதல்
மறுநாள் அதிகாலை,
பார்வைகள்
தீண்டத் தயங்கிய கணத்தில்
மரித்துப்போனது./////

உண்மைதான் இந்தக் காதல் வந்துவிட்டால் நிலவு என்ன இந்த உலகம் கூட காணாமல் போய்விடும் என்பது உண்மைதான் . மிகவும் அருமையான காதல் ரசனை நல்ல இருக்கிறது கவிதை வாழ்த்துக்கள் நண்பரே

Chitra சொன்னது…

அருமை. அருமை. அருமை.

Bibiliobibuli சொன்னது…

முதல் தடவை படித்தபோது "ஆஹா" என்று வாய்பிளந்தேன்.

இரண்டாவது தடவை படித்தபோது, "காதல் அதுவாகத்தான் இருக்கிறது. கண்டு, கேட்டு, உய்த்தறிந்து நாம் தான் விதவிதமாய் விளக்கம் கொடுக்கிறோம்" என நினைத்துக்கொண்டேன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

// புரியிர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. //

முழுமையா புரிஞ்சுட்டா அதுக்கு பேர் காதலா??!!

காமராஜ் சொன்னது…

//நிலவை தொலைத்த
நாளின் நள்ளிரவில்
உரத்த குரலெடுத்து கதறிய//

அழகான வலி.
அப்புறம் அதென்ன செந்தில் மிந்தூக்கித்தனிமை.கலக்குறீங்கப்பா.

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை அண்ணே...
Super!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

காதலுக்கும் மறைவா!! சொல்லிய பாணி நல்லா இருக்கு.

செல்வா சொன்னது…

வருகைப்பதிவு அண்ணா .,
எனக்கும் கொஞ்சம் தான் புரிஞ்சது ..

VELU.G சொன்னது…

நல்ல கவிதை நண்பரே

கமலேஷ் சொன்னது…

அருமையான கவிதை.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

காதலுடன் சேர்ந்த கவிதை...அருமை தலைவரே