11 அக்., 2010

போங்கடா வெண்ணைகளா !

துரோகங்களை சந்திக்க நேர்கிற 
போதெல்லாம் 
தவறாது வந்து விடுகிறது 
ஆலோசனைகள் இலவசமாய்..

நான் அப்பவே சொன்னேன் 
இவன்தான் கேக்கலை என்றவன் 
கையூட்டு வாங்குபவன்..

உனக்கு யார் யார் கூட 
பழக்கம் வைத்துக்கொள்வது தெரியவில்லை 
என குறைபட்டுக் கொண்டவன்
பொய்க்கணக்கு எழுதுபவன்..

சுய புத்திதான் இல்லை 
சொல் புத்தி கூடவா இல்லை என்றவன் 
ஜாமீனில் வெளியே வந்தவன்..

உனக்கு நல்லா வேணும் என்றவன் 
மனைவியை அடிப்பவன்..

அவன போட்டுறலாம் மாப்ள என்றவன்
பங்காளியை வெட்டியவன்..

இனிமே கூட்டாளியே வச்சுக்காதே என்றான் 
வீட்டிற்கு 
ஒரு பிள்ளையாய் பிறந்தவன்..

போங்கடா வெண்ணைகளா!

45 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

ஒண்ணு தலைப்பு வெக்கணும்... இல்ல படத்த போடணும்... ஏன் ஒரு கவிதைக்கு ரெண்டு தலைப்பு???

எல் கே சொன்னது…

அண்ணே என்ன கோபம்

ராஜ நடராஜன் சொன்னது…

இடுகை தலைப்பைக் கொஞ்சம் கடனா கொடுங்க!

ராஜ நடராஜன் சொன்னது…

இடுகை தலைப்பைக் கொஞ்சம் கடனா கொடுங்க!

Unknown சொன்னது…

தலைப்பு ( படம் ) எடுத்துக்குங்க ராஜா அண்ணே...

Unknown சொன்னது…

தலைப்பே ஒரு கவிதையா தெரியுது!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//போங்கடா வெண்ணைகளா!//

:))

அருண் பிரசாத் சொன்னது…

நிதர்சனம்

நேசமித்ரன் சொன்னது…

ராஜாராமனை வழி மொழிகிறேன்

பொன் மாலை பொழுது சொன்னது…

எல்லாம் சரிதான். அந்த படத்தை வேண்டுமென்றுதானே போட்டீர்கள்?
தலைப்புக்கு ஏற்ற படம் தான். இந்த கூத்தெல்லாம் கிராமத்தில் சிறுவயதில் பார்த்தது.
எல்லா ஊரிலும் இதுபோல காத்து வாங்கும் தாத்தாக்கள் உண்டுதானே!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//சுய புத்திதான் இல்லை
சொல் புத்தி கூடவா இல்லை என்றவன்
ஜாமீனில் வெளியே வந்தவன்..
//

ha ha haa

செம

படம் குசும்பு...!

a சொன்னது…

ada ada..........

வினோ சொன்னது…

யாராருமேல கோவமோ?

ஹேமா சொன்னது…

செந்தில்....!

vasu balaji சொன்னது…

:)) top to bottom toppu=))

பெயரில்லா சொன்னது…

ரொம்ப கோவமாண்ணே!

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

வானம்பாடிகள் சார், ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நக்கலு.

சௌந்தர் சொன்னது…

கோபம்...........y

ஜோதிஜி சொன்னது…

அய்யோயோயா

செந்தில் பக்கத்தில் நீங்க இருந்தா அப்படியோ வாயில் வாய் வைத்து..........

ச்சீசீ படத்தை போல கொஞ்சம் வெட்கமாயிருக்கு.........

படத்துக்கு ஏற்று வார்த்தைகள். வார்த்தைகளுக்கேற்ற நிகழ்கால வாழ்க்கைகள்.

Unknown சொன்னது…

ஏன் மாப்ளே இம்புட்டு கோவம்?

//ஒண்ணு தலைப்பு வெக்கணும்... இல்ல படத்த போடணும்... ஏன் ஒரு கவிதைக்கு ரெண்டு தலைப்பு??? //

அதானே?? :)

இளங்கோ சொன்னது…

படமும் வார்த்தைகளும் அருமை.

AKM சொன்னது…

திரு. செந்தில் பொதுவாகவே நீங்கள் வைக்கும் படங்கள் நன்றாய் இருக்கும்.. அதிலும் இந்த படம்..
என்ன வேனா சொல்லிக்குங்க போங்கடா வெண்ணைகளா..!
இதை விட வேறு எதுவும் சொல்லி விட முடியாது-- வாழ்த்துக்கள்
அன்புடன்
ஏகேஏம்

RK நண்பன்.. சொன்னது…

போங்கடா வெண்ணைகளா!......

செந்தில் அண்ணா யாருக்காவது மறைமுக தாக்குதலா...??

தலைப்பு & புகைப்படம் சூப்பர்..

தமிழ் உதயம் சொன்னது…

இதில் யாராவதாக நாமும் இருந்து விடப்போகிறோம்.

க.பாலாசி சொன்னது…

இதுதாங்க உலகம்..

சசிகுமார் சொன்னது…

சாட்டையடி பதிவு.

Thamira சொன்னது…

குட் ஒன்.

ம.தி.சுதா சொன்னது…

படம் ரொம்ப அருமைங்கோ....

vasan சொன்னது…

கையூட்டு வாங்குபவன்..
பொய்க்கணக்கு எழுதுபவன்..
ஜாமீனில் வெளியே வந்தவன்..
மனைவியை அடிப்பவன்..
பங்காளியை வெட்டியவன்
ஒரு பிள்ளையாய் பிறந்தவன்..
கே.ஆர்.பி.செந்தில், இவ‌னுக‌ளைத் த‌விற‌ வேறெவ‌னு‌ம் அப்புற‌ம் வ‌ந்தானா?

Assouma Belhaj சொன்னது…

wooow 4to is very Hot friend
more hot Photos cum 2 our blog
thank u
http://funage16.blogspot.com/2010/10/is-emma-watson-bad-girl-photos.html

எஸ்.கே சொன்னது…

இதாங்க உலகம்!

சிவாஜி சங்கர் சொன்னது…

:)

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

அண்ணே,
படமே கவிதை..!

Bibiliobibuli சொன்னது…

Social Deviation!!! படம், கவிதை இரண்டுமே.

Unknown சொன்னது…

படம்.......... இந்தியாவிற்க்கு ராஜபக்க்ஷே காட்டினமாதிரி இருக்கு.

Radhakrishnan சொன்னது…

அறிவுரை சொல்ல வந்துவிடும் உலகம் பற்றிய பார்வையும் தார்மீக கோபமும் அட்டகாசம்.

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் அண்ணே
//துரோகங்களை சந்திக்க நேர்கிற
போதெல்லாம்

தவறாது வந்து விடுகிறது
ஆலோசனைகள் இலவசமாய்..//

என்ன அண்ணே ஆறுதல் சொல்ல ஒரு நண்பன்கூட இல்லையா.......
அறுதல் அண்ணே ஆலோசனை அல்ல

தினேஷ்குமார் சொன்னது…

நம்ம பக்கம் கொஞ்சம் வந்துபோங்கன்னே ஆறுதலா இருக்குமில்லையா

ALHABSHIEST சொன்னது…

"படம்.......... இந்தியாவிற்க்கு ராஜபக்க்ஷே காட்டினமாதிரி இருக்கு."
டக்கருண்ணே.

பெயரில்லா சொன்னது…

செம தூள் ணே

பெயரில்லா சொன்னது…

தலைப்பு படம் இதுக்கே செம யோசிப்பு போலிருக்கு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இந்தியாவுக்கு ராஜபக்ஷே காட்டினது மாதிரி இருக்கு//
உண்மை எழுதிய கமெண்ட்ஸ் சூப்பர், அதில் ஒரு மாற்றம்,
சோனியாவுக்கு ராஜபக்ஷே காட்டின மாதிரி எனக்கு தெரியுது......
யோவ் செந்திலு எங்களை எல்லாம் விட்டுட்டு போயிராதீரும் ஓய்..............போனா மதுரை அண்ணனுக்கு போனை போட்ருவேன்......

Anisha Yunus சொன்னது…

//இனிமே கூட்டாளியே வச்சுக்காதே என்றான்
வீட்டிற்கு
ஒரு பிள்ளையாய் பிறந்தவன்..//

அது சரி! ஒன்னும் சொல்றதுக்கில்ல!! :)

ரோஸ்விக் சொன்னது…

நித்தியானந்தாவும் என் கனவுல வந்து இந்த கவிதையை சொன்னாரு... ;-)

பட்டாசுண்ணே!!!

செல்வா சொன்னது…

//தவறாது வந்து விடுகிறது
ஆலோசனைகள் இலவசமாய்..
//

இது எல்லா இடத்திலுமே வருது அண்ணா ..