15 அக்., 2010

அரசியலுக்கு வருகிறார் ரஜினி...

இப்ப வருவார்.. அப்ப வருவார் .. வரவே மாட்டார் என பலகாலமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய வதந்திகள் வந்துகொண்டே இருக்கும். குறிப்பாக தன் படங்கள் ரிலீசாகும் சமயங்களில் இது சற்று பலமாக இருக்கும். ஆனால் சமீபத்தில் எந்திரன் வெளியானபோது இத்தகைய செய்திகள் ஒன்று கூட வெளிவரவில்லை. மேலும் தன் இரண்டாம் மகள் திருமனத்திற்கு ரசிகர்களுக்கு தனியாக விருந்து வைப்பேன் என்று சொன்னவர் இன்றுவரை செய்யவும் இல்லை. ஆனால் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என நண்பர் சில விசயங்களை சொன்னார். நம்புவதற்கு கடினமான விசயமாக இருந்தாலும் அவர் சொன்ன சில விளக்கங்களை கேட்டபின் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

ரஜினி..
ரஜினி பெங்களூரில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடியபோது இத்தனை உயரமாக வளர்வார் என அவரே நம்பவில்லை. சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்தால் போதும் என நினைத்தவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர்கள் தமிழ் ரசிகர்கள். சாதாரணமாக நடிப்பை தரும் நமக்கு இத்தனை சிறப்பு கிடைத்தது கடவுள் அருளால்தான் என தீவிரமாக நம்புகிறவர் ரஜினி. அதே போல் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஆவலும் அவருக்கு நிரம்ப உண்டு. ஆனால் மக்களே தன்னை அரசியலுக்கு அழைக்க வேண்டும் என விரும்புகிறார். அதாவது தான் சம்பாதித்த பணத்தை செலவழிக்காமல் மக்களின் பணத்தை அவர்களுக்கு நியாயமான வழியில் செலவழிக்க விரும்புகிறார். எந்திரன் படம் கலாநிதி சகோதரர்களோடு ஒரு பெரிய நெருக்கத்தை ஏற்படுத்த அவரின் அரசியல் பிரவேசமும் தயாராகி விட்டது. அதைப்பற்றி பார்க்கும் முன் இப்போதைய அரசியல் நிலவரத்தை பார்ப்போம்..

தி.மு.க 
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிற வேலையில் கூட்டணியை தக்கவைத்துக்கொள்ளும் நெருக்கடிக்கு கட்சி தள்ளப்பட்டு விட்டது. காரணம் காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் போக்கு, அவர்கள் அ.தி.மு.க கூட்டணியை விரும்புகின்றனர். சோனியா, ஜெ யுடனான கூட்டணியை விரும்ப மாட்டார் என்றாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போதைக்கு தி.மு.க வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது ஆனால் கூட்டணி மாறினால் ஆட்சியும் மாறும். கலைஞரின் இன்னொரு முக்கிய தலைவலி குடும்பத்தினரை திருப்திபடுத்துவது. ஸ்டாலினுக்கு அதிகாரத்தை முழுவதுமாக அளிப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை அடுத்த ஆட்சியும் தி.மு.க வே வெற்றிபெற்று கலைஞர் முதல்வர் பதவியை தொடர்ந்து வகித்தால் இப்போதைய நிலையே நீடிக்கும் ஆனால் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கொடுத்தால் கட்சியின் தலைமை பொறுப்பை அழகிரிக்கு கொடுக்க வேண்டும், இது ஸ்டாலினுக்கு சிக்கல். இப்படி இருக்க கலைஞர் ஒருவேளை இறக்க நேரிட்டால் அப்போது ஒரு பெரிய அரசியல் குழப்பம் நிச்சயம் ஏற்படும் அப்போது இரு சகோதரர்களையும் சமாதனம் செய்யும் அளவுக்கு கட்சியில் யாரும் இல்லாததால் நிச்சயம் இரு கோஷ்டியாக மாறுவார்கள். அப்போதும் ஸ்டாலின் கட்டுபாட்டில் கட்சி வந்தால் மாறன் சகோதரர்கள் அமைதி காப்பார்கள். அவர்களும் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பார்கள். ஒரு வேலை கட்சி அழகிரியிடம் சென்றால் அப்போதுதான் நான் மேலே சொன்ன ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழும், அதுவும் மாறன் சகோதரர்கள் பின்னணியோடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு ரஜினி வருவார். 

அ.தி.மு.க 
இந்த முறை தி.மு.க பொறுப்பேற்றபோது ஜெ க்கு எதிராக எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இன்றைக்கு வரைக்கும் டாஸ்மாக்கிற்கு மிடாஸ் தொடர்ந்து சரக்குகளை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் தயாநிதி. இவர்தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான இறுக்கத்தை குறைக்க உதவி செய்தவர். தொழில் என்று வந்தால் மாறன் சகோதரர்கள் அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அரசியலில் தி.மு.க வில் இருந்தாலும் தங்கள் சேனலில் எல்லா கட்சிகாரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாறன் சகோதரர்களைப் பொறுத்தவை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் பெரிதாக பாதிப்புகள் வராது. ஜெயை பொறுத்தவரை தனக்கான எல்லா விசயங்களும் இந்த ஆட்சியில் கிடைத்தாலும் இதை தக்கவைக்க ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதற்காக எப்பாடு பட்டாவது காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க கூட்டணியை ஏற்படுத்திவிட்டால் ஏற்கனவே ம.தி.மு.க, கம்யுனிஸ்டுகள் பலத்தோடு பெரும்பான்மை கிடைத்து கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும். அதற்கான சில தியாகங்களுக்கும் அவர் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. 

தே.மு.தி.க 
தமிழகத்தில் கணிசமான ஓட்டு வங்கியை தன்னிடம் வைத்திருக்கும் விஜயகாந்த் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை என்றால் தேர்தல் கமிசனில் தகுதியை இழந்துவிடும். மேலும் இவருக்காக கைக்காசை போட்டு உழைத்த தொண்டர்கள் வேறு கட்சிக்கு மாறிவிடுவார்கள். இரண்டு திராவிட கட்சிகளையும் விடுத்து காங்கிரஸ், பா.ம.க , மற்ற உதிரிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத்தான் இவருக்கு ஆசை. ஒரு வேளை இந்த கூட்டணி ஜெயித்தால் விஜயகாந்துக்கு முதல்வர் பதவி காங்கிரசுக்கு ( யாருக்கு கொடுப்பார்கள்) துணை முதல்வர் பதவி என்றொரு பேச்சு அடிப்பட்டது. ஆனால் மத்தியில் காங்கிரசுக்கு தேவையான பலம் திராவிட கட்சிகள்தான் தரமுடியும் என்பதால் இந்த கூட்டணி நிறைவேற வாய்ப்பில்லை. எனவே அ.தி.மு.க கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடும் நிலைமைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் இக்கூட்டணியில் சேரும் பட்சத்தில் இவருக்கான சீட்டுகள் குறைந்து பெட்டிகள் அதிகரிக்கலாம். 

காங்கிரஸ் 
அடுத்த பிரதமர் கிட்டத்தட்ட ராகுல்தான் என உறுதியாகிவிட்ட நிலையில் ராகுல் காந்தியின் யோசனைகள்தான் காங்கிரசில் முக்கியத்துவம் வகிக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் கட்சி, திராவிட கட்சிகளின் வருகைக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இப்போது காணாமல் போய்விட்ட நிலையில் அதற்கு புத்துயிர் ஊட்டி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டம் ராகுலிடம் இருக்கிறது. இப்போதிருக்கும் கோஷ்டி பூசலே பழைய தலைவர்களால்தான் என்பதால்  புதிய ரத்தம் பாய்ச்ச இளையவர்களை பதவிக்கு கொண்டு வந்து திராவிட கட்சிகளுக்கு இணையாக மாற்ற ஆலோசனைகள் அவருக்கு பறந்து கொண்டிருக்கின்றன. சோனியாவிடமும், ராகுலிடமும் கலைஞரை விடவும் மாறன் சகோதர்களுக்கு நெருக்கம் அதிகம். இந்த நெருக்கம்தான் மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஆட்சியை கலைப்போம் என தயாநிதியை உள்துறை செயலாளரிடம் கோபப்பட வைத்து. சோனியா தி.மு.க வுடன்தான் கூட்டணியை விரும்புகிறார் என்றாலும். 2016 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் என்ற ராகுலின் கனவையும் அவர் மதிக்கவே செய்கிறார். இதற்க்கு முன்னோட்டமாக பீகார் அரசியல் களத்தை பயன்படுத்த போகிறது காங்கிரஸ். பீகாரில் மூன்றாம் இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலை தனித்தே சந்திக்கவிருக்கிறது, அங்கு தனக்கு கிடக்கும் செல்வாக்கினை கணக்கில் வைத்து தமிழகத்திலும் தன்னை நிலை நிறுத்தும் எண்ணத்தில் அது இருக்கிறது.

மாறன் சகோதரர்கள்
கலைஞரின் மூளை என்று சொல்லப்பட்டவர் முரசொலி மாறன். இவருக்கு பிறந்த பிள்ளைகள் எப்படி இருப்பார்கள், இன்று தொழில் உலகில் மிகப்பெரிய இடத்தை தொட்டிருக்கும் மாறன் சகோதரர்கள் முதலில் நேசிப்பது தொழிலைத்தான் அதற்கடுத்துதான் குடும்பம், அரசியல் இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் நினைத்த நேரத்தில் சந்திக்கும் வல்லமை இவர்களுக்கு உண்டு. இவர்கள் நினைத்தால் மொத்த தமிழக எம்.எல்.ஏ க்களையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வர முடியும், ஆனாலும் தாம் ஒரு தி.மு.க காரனாகவே இருப்பதை விரும்புகிறவர்கள். இவர்களுக்கு கட்சியில் இருக்கும் ஒரே தலைவலி அழகிரி மட்டுமே. எதிர்காலத்தில் கட்சி அழகிரியின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால் தமக்கென்று ஒரு செல்வாக்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்போது இவர்கள் ரஜினி என்கிற ஆயுதத்தை கையிலெடுப்பார்கள் அப்போது காங்கிரஸ் கட்சியும் இவர்கள் பின்னால் நிற்க 2016 தேர்தலில் இவர்கள்தான் முக்கியத்துவம் வகிப்பார்கள். ரஜினியும் இப்படிப்பட்ட ஒரு அரசியல் பிரவேசத்தைதான் விரும்புவதால் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை பொறுப்பு மாறன் சகோதரர்கள் பின்னணி என இவர் முதல்வராக பொறுப்பு ஏற்பது என்பது மிக சரியாக சொன்னால் வரும் தேர்தகளில் தி.மு.க ஜெயித்து அதன்பின் கலைஞர் எடுக்கும் முடிவோ அல்லது அவர் மறைவுக்குப்பின் தி.மு.க வின் நிலைமை பொறுத்தோ அமையும். 

இன்றைய தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மாறன் சகோதரர்கள் மட்டுமே..



41 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

செந்தில் ரொம்பவே ஆச்சரியப்படுத்திட்டீங்க.

சில விசயங்கள் படிக்க சுவராஸ்மாய் இருக்கு. ஆனால்???

தமிழ்நாட்டில் மட்டும் தேர்தலின் கடைசி நாள் வரைக்கும் மக்கள் மனதில் என்ன இருக்கும்? என்று கண்டு கொள்ளவே முடியாது. இதை சொன்னது நான் அல்ல. நம்ம முத்தமிழ் அறிஞ்ர்.

அப்புறம் அஞ்சா நெஞ்சன் பற்றி குறைவாக எடுத்துக்கொள்ள கூடாது. சொன்னது சொல்லதது செய்ய நினைப்பது செய்ய வேண்டியது என்று அத்தனை விசயத்தில் கெட்டிக்காரர். உடன் இருந்தவர் சொல்லிய ஆருடம் இது.

இது போல தொடர்ந்து எழுதுங்களேன்.

Radhakrishnan சொன்னது…

படிக்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//இன்றைய தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மாறன் சகோதரர்கள் மட்டுமே..//

!!!!!! :))

ராஜவம்சம் சொன்னது…

பக்காவான கனிப்பா இருக்கு.

NaSo சொன்னது…

//இன்றைய தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மாறன் சகோதரர்கள் மட்டுமே..//

இதுதான் உண்மை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இவங்க முதலமைச்சர் ஆயிட்டா சன் டிவி ல நொடிக்கொருதரம் கலாநிதி மாறன் முதலமைச்சர் 50 தாவது நாள்(running successfully) அப்டின்னு போடுவாங்களா ?

சௌந்தர் சொன்னது…

நீங்க சொல்றது எல்லாம் நல்லா இருக்கு...ஆனா நடக்குமா பார்ப்போம்

சிவராம்குமார் சொன்னது…

ரஜினி விசயத்தில் ஆண்டவன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல அலசல் அண்னே! ஆனா பொறுத்திருந்துதான் பார்க்கனும்

கலைஞர் இறந்தால் திமுக தவிடுபொடியாவது மட்டும் உறுதி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கணக்கு சரியாத்தான் இருக்கு! ஆனால் மக்கள் சமயங்களில் ஆச்சர்யப் பட வைப்பார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்!

vinthaimanithan சொன்னது…

தேசம் தழுவிய அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு,இடதுசாரிய, பெரியாரிய அரசியலை முன்னெடுக்கப் பிரச்சாரம் செய்யவும், விளக்கவும் வேண்டியதே ஓரளவாவது நுண்ணரசியல் தெரிந்த உங்களைப்போன்றவர்களின் கடமை.

ஏன் தேவையின்றி ரஜினி என்கிற பலூனை ஊதிப் பெருக்கவேண்டும்? அவருக்கு இருந்த செல்வாக்கு தொன்னூறுகளின் இறுதியிலேயே சரியத் துவங்கி விட்டது.

GSV சொன்னது…

//தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மாறன் சகோதரர்கள் மட்டுமே..//

ஹா ஹா ஹா ஹா

பெயரில்லா சொன்னது…

ஒரு நல்ல அலசல் அண்ணா..
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு :)

க ரா சொன்னது…

திரைக்கதை நல்லாதான் இருக்கு.. படம் ரிலிஸ் ஆகுதான்னு பாக்கலாம் :)

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

அரசியல் ஆருடமா தலைவரே? பொறுத்திருந்து பார்ப்போம்..!

Anisha Yunus சொன்னது…

//சில விசயங்கள் படிக்க சுவராஸ்மாய் இருக்கு. ஆனால்???

தமிழ்நாட்டில் மட்டும் தேர்தலின் கடைசி நாள் வரைக்கும் மக்கள் மனதில் என்ன இருக்கும்? என்று கண்டு கொள்ளவே முடியாது.//
Repeat!!!

Chitra சொன்னது…

Present, Sir!

GSV சொன்னது…

//அதைப்பற்றி பார்க்கும் முன் இப்போதைய அரசியல் நிலவரத்தை பார்ப்போம்..//
kadaisi varaikkum parkkave illaiye !!!
Ohhh...Innoru pathivu irukku pola...

எல் கே சொன்னது…

எதுவும் நடக்கலாம்

Jay சொன்னது…

நல்ல அருமையான கணிப்பு.

இன்றைய சூழ்நிலையில் நாம் 2011 பற்றி தான் நினைக்க முடியும்.

2016 இல் எதுவும் நடக்கலாம்.

ரஜினி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பதிலாக தனி கட்சி தொடங்கினால் சிறிது நிம்மதியாக இருக்கலாம்.

//
இன்றைய தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மாறன் சகோதரர்கள் மட்டுமே..//

பணம், அதிகாரம் மட்டும் போதாது.

திமுக உடைந்தால் அது ஜெயலலிதா விற்கே நன்மை. காங்கிரஸ்-கு அல்ல.

ராஜ நடராஜன் சொன்னது…

செந்தில்!உங்களுக்கு பின்னூட்டம் போடலாமென்றுதான் வந்தேன்.நீண்ட கருத்துப் பின்னூட்டம் காரணமாக இடுகையாக உங்களுக்கான பின்னூட்டம்.

ராஜ நடராஜன் சொன்னது…

அது யாரு?முதல் பின்னூட்டம்:)

மதுரை முதல்வர் மகன் என்ற ஒரு hype மட்டுமே என நினைக்கிறேன்.

அழகிரி சார்!உங்கள் மீது காழ்ப்புணர்ச்சியெதுவும் எனக்கு கிடையாது.ஆட்டோ எதுவும் அனுப்பிடாதீங்க:) இதுவும் கூட சொல் கேள்விதான்.உங்கள் சுயம் வேறாக கூட இருக்க கூடும்!

யதார்த்தங்களை மட்டுமே நான் பகிர்ந்து கொள்கிறேன்.

IKrishs சொன்னது…

///பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
கணக்கு சரியாத்தான் இருக்கு! ஆனால் மக்கள் சமயங்களில் ஆச்சர்யப் பட வைப்பார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்!

மக்கள் மக்கள் நு அடிக்க்டி சொல்றோமே... அப்ப நீங்களும் நானும் யாருப்பா?
பிரபல பதிவரா ஆகிட்டா இப்படித்தான் யோசிக்க தோணுமோ..? :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///கிருஷ்குமார் கூறியது...
///பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
கணக்கு சரியாத்தான் இருக்கு! ஆனால் மக்கள் சமயங்களில் ஆச்சர்யப் பட வைப்பார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்!

மக்கள் மக்கள் நு அடிக்க்டி சொல்றோமே... அப்ப நீங்களும் நானும் யாருப்பா?
பிரபல பதிவரா ஆகிட்டா இப்படித்தான் யோசிக்க தோணுமோ..? :)///


ங்ணா..என்னங்ணா இது? ஏன்னங்ணா இப்பிடி பிரபல பதிவரு அது இதுன்னு நம்மல வெச்சி காமெடி பண்றீங்க? ஏதோ ஒரு பேச்சுக்கு எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் அப்பிடி சொல்லிட்டேனுங்ணா, விட்ருங்னா!

Prathap Kumar S. சொன்னது…

யாரு யாரு கூட கூட்டணி வச்சாலும், ஜெயிக்கப்போறது என்னவோ யாரு காசு அதிகம் கொடுக்கறாங்களோ அவங்கதான். ஆட்சியை நிர்ணயிப்பது பண்ம் மட்டுமே.....

ராவணன் சொன்னது…

வரும் தேர்தலில் கருணாநிதி தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் திமுக வெற்றி பெறாது.

YUVARAJ S சொன்னது…

இதை ஒரு யூகம் என்று சொல்லலாம், கணிப்பு அல்ல. என்னை பொறுத்த வரை இந்த யூகம் உண்மை ஆவதற்கு வாய்ப்பு மிக, மிக குறைவே!

ரஜினி அரசியலுக்கு வருவுது அவருக்கு மட்டுமே லாபமாக இருக்க முடியும். தன்னை ஆளாக்கின ரசிகனுக்கே ஒரு வாய் சோறு போட வக்கில்லை, இதுல மக்களுக்கு என்ன கிழிக்க போறாரு. அவரை ஒரு காலத்தில் தலைவராக ஏற்றுகொண்ட பலர் (என்னையும் சேர்த்து) எப்போவோ அந்த தகுதி இல்லை என்று தெரிந்து அவரை தூக்கி எறிந்து விட்டார்கள். ரஜினிக்கு தமிழக முதல்வர் பதவி என்பது கேட்பதற்கு கேலிகூத்தாக தான் இருக்கிறது.

சாதாரண பதிவுக்கே அல்லக்கைகளின் சத்தம் (ஜல், ஜிக்) அதிகமாக இருக்கும். இதுல ரஜினி, அரசியல்.... போன்ற சமாசாரம் வேற!!!. அல்லக்கைகளின் சவுண்ட் தூக்கலா இருக்கும்னு எதிர் பார்த்தேன். கொஞ்சம் கம்மிய இருக்கு. மக்களுக்கு commonsense வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது.

ஜெயந்தி சொன்னது…

சில நேரங்கள்ல மக்கள் என்ன முடிவெடுக்கறாங்கன்னு புரியவே மாட்டேங்குது. போன தேர்தல் அதுக்கு நல்ல உதாரணம்.

ராஜ நடராஜன் சொன்னது…

இப்ப படித்து விட்டு மீண்டுமொரு பின்னூட்டம்.எல்லாம் சரி!தமிழகத்தில் எந்த காங்கிரஸ் ஆட்சி!சிரிப்பு வருது:)

கருடன் சொன்னது…

Present sir!!!

ஜெயசீலன் சொன்னது…

நல்ல அலசல்

ஜோதிஜி சொன்னது…

அழகிரி சார்!உங்கள் மீது காழ்ப்புணர்ச்சியெதுவும் எனக்கு கிடையாது.ஆட்டோ எதுவும் அனுப்பிடாதீங்க:) இதுவும் கூட சொல் கேள்விதான்.

உங்கள் சுயம் வேறாக கூட இருக்க கூடும்! இதுவும் உண்மை தான் நடராஜன். இவர் ஆட்டோ அனுப்பி சாதிக்கிற நிலையிலா இருக்கிறார்.

அதையும் தாண்டி புனிதாமானவர் தான். என்னுடைய பார்வையில் இவரைப் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவை என்பேன்.

dheva சொன்னது…

சூழ் நிலைகள் எல்லாவற்றையும் கலைத்துப் போடும் என்றாலும்.......


ரஜினி அரசியலுக்கு வரும் மனோ நிலையில் இல்லை என்பது முழு உண்மை.

எதிர்காலத்தில் என்னவாகும்.........ம்ம்ம்ம் செந்திலின் கணிப்பு படியும் இருக்காலாம்.....சாத்திய கூறுகள் உள்ளன என்பது மட்டும் உண்மை.

காமராஜ் சொன்னது…

பித்தகோரஸ் தேற்றம்,
மிகு- மிகாப்பின்னங்கள்,
கெப்ளர் விதி,
மால்தூசியன் தியரி ஆப் பாப்புலேசன்.

இந்த வரிசையில்
குழப்புகிறது
இந்தக்கணிப்பும்.
ஆனால் தம்பி செந்தில்
கணக்கில் புலிபோலத்
தெரிகிறது.

Unknown சொன்னது…

//மேலும் தன் இரண்டாம் மகள் திருமனத்திற்கு ரசிகர்களுக்கு தனியாக விருந்து வைப்பேன் என்று சொன்னவர் இன்றுவரை செய்யவும் இல்லை.//

இன்னொரு அரசியல்வாதி ரெடி!

//அதாவது தான் சம்பாதித்த பணத்தை செலவழிக்காமல் மக்களின் பணத்தை அவர்களுக்கு நியாயமான வழியில் செலவழிக்க விரும்புகிறார்//

கொழப்புறயே மாப்ளே... மக்களின் பணத்தத்தானே அவர் சம்பாதிச்சுகிட்டு இருக்காரு?

மத்ததெல்லாம் யூகங்கள்தான். நம்மக்கள் ஆட்டு மந்தைகளாக இருந்தாலும் அப்பப்போ அதிரடியக் குடுப்பாங்க. பொறுத்திருந்து பார்க்கலாம்.

//அடுத்த பிரதமர் கிட்டத்தட்ட ராகுல்தான் என உறுதியாகிவிட்ட நிலையில் ராகுல் காந்தியின் யோசனைகள்தான் காங்கிரசில் முக்கியத்துவம் வகிக்கிறது.//

இவ்வளோ பெரிய நாட்டில், ஒரு குடும்பத்தைத் தவிர நாட்டை ஆளுவதற்கு வேறு யாருக்கும் தகுதி இல்லையென நம்புவதைக் காட்டிலும் வேறு தேசிய அவமானம் எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் காங்கிரஸ் தலையெடுக்கவே கூடாது. தமிழகத்தில் இருக்கும் 4325 கோஷ்டிகளின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

காமராஜ் சொன்னது…

பிளாகர் தஞ்சாவூரான் கூறியது..

//தமிழகத்தில் இருக்கும் 4325 கோஷ்டிகளின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.//

சிரிச்சு முடியல. ஆமா மொத்த உறுப்பினர்களி எண்ணிக்கையும் அதுதானே?.

ராஜன் சொன்னது…

நீங்கள் சொல்வது போல நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு .ரஜினி முதல்வர் ஆக சான்ஸ் இல்லை.

Tirupurvalu சொன்னது…

Senthil you are 100% right.Maran brothers take over Tamil nadu we will grow like Singapore.Only thing all other T.V channels will close .

ஜானகிராமன் சொன்னது…

நல்ல விரிவான அலசல். ஆனா தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைச்சாத் தான் பயமாயிருக்கு

ஜானகிராமன் சொன்னது…

நல்ல விரிவான அலசல். ஆனா தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைச்சாத் தான் பயமாயிருக்கு

பெயரில்லா சொன்னது…

ஹாய் செந்தில்

மாறன் சகோதரர்களைப் பற்றிய கருத்துக்களில் மறுசிந்தனை தேவை

அவர்கள் திமுகவிலிருந்து ஒரு போதும் விலக மாட்டார்கள்
மக்களை எப்படி குழப்பினால் எப்படி மீன் பிடிக்கலாம் என்பதை மிகத்தெளிவாய் கற்று வைத்திருக்கிறார்கள்